அடிப்படை சட்ட விதிகளை விளங்காத குழப்பம்

இஸ்லாத்தில் பொதுவான ஓர் விதிமுறை இருக்கின்றது அது தான் " الأصل في الأشياء الإباحة " அதாவது வணக்க வழிபாடுகள் அல்லாத வழமையான, பொதுவான விடயங்கள் யாவும் எப்பொழுதும் ஆகுமானதாகும் ஆகுமான ஒன்றை ஆகாது என்று கூறுவதற்கே ஆதாரம் தேவை. அல்லாஹ் கூறுகிறான்: "நபியே உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்குகின்றீர்"

இதற்கு மேலும் ஒன்றைக் கூறுவதாக இருப்பின் உதாரணமாக முருங்கைக்காய் ஹலால் என்பதற்கு ஆதாரம் தாருங்கள் என்று கேட்க முடியாது மாறாக அதனை நீங்கள் ஹராம் என்று கூறுவதற்கான ஆதாரம் என்ன என்றே கேட்கவேண்டும்.
வணக்க வழிபாடுக்களுக்குரிய விதிமுறைகளை "இபாஹாத்" நடைமுறை செயற்பாடுகளுக்கு உட்படுத்துவதினாலும் அது பற்றிய (القواعد الفقهية) அறிவீனமுமே இதற்குக் காரணம்.

வணக்க வழிபாடு ஒன்று அடிப்படையில் தடையானதாகும், அது ஆகுமாக இருக்கவேண்டுமெனில் அல்லது வணக்கமாக அடையாளம் காணப்பட வேண்டுமெனில் அதற்கு உரிய பலமான ஆதாரம் தேவையாகும், ஆக வணக்க வழிபாடுகளை உறுதிப்படுத்த நிறுவப்பட ஆதாரம் தேவையாகும், இன்ன வணக்கம் இல்லை என்பதற்கு ஆதாரம் கேட்கமுடியாது, மார்க்கதில் வணக்க வழிபாடுகளை ஏற்படுத்தியவர்கள் அல்லாஹ் மற்றும் ரஸூலாகும் அவர்கள் உருவாக்கியவை மாத்திரமே வணக்கங்களாக அமையுமே தவிர புதிதாக நாம் உருவாக்குபவை ஒருக்காலும் வணக்கமாகாது.

அதேபோன்று மார்க்கத்திற்கு முரணாகாத மக்களில் வழமையாக இருக்கும் நடைமுறைகள், செயற்பாடுகள், பழக்கவழக்கங்கள் யாவும் ஆகுமானதாகும், இவற்றிற்கு நாம் ஒரு போதும் ஆதாரம் கேட்க முடியாது, இவற்றில் ஒன்றை ஹராம் என்று கூறுவதாக இருப்பின் மாத்திரமே அதற்கு போதிய வலுவான ஆதாரம் தேவை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆக நாளாந்த பழக்கவழக்கங்களின் அடிப்படை ஆகுமானதாகும், அவை ஹராம் என்பதற்கு ஆதாரம் தேவை, அவ்வாறே வணக்க வழிபாடுகள் அடிப்படையில் தடுக்கபட்டவை, அவை வண்ணக்கத்திற்குரியவை என்று கூறப்படுவதாயின் ஆதாரம் தேவை.

வல்லவன் அல்லாஹ் அனைவருக்கும் போதிய தெளிவுகளைத் தந்து நேரான வழியில் இட்டுச்செல்வானாக! ஆமீன்

- நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா 

Previous Post Next Post