ஹஜ்ஜை முடித்துவிட்டு மதினாவுக்கு ஸியாரத் செல்வோர் கவனிக்க வேண்டிய ஏராளமான வழிகாட்டல்கள் உள்ளன ஒன்று மதினாவுக்கு ஜியாரத் செல்வோர் அங்கு நபியவர்கள் நிர்மாணித்த மஸ்ஜிதுக்கு சென்று தொழ வேண்டும் என்பதையே தனது நிய்யத்தாக வைத்துக் கொள்ள வேண்டும் நபியவர்கள் கூறுகின்றார்கள் எனது இந்த மஸ்ஜிதில் ஒரு தொழுகை தொழுவது ஏனைய மஸ்ஜிதுகளில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதை விட சிறந்ததாகும் மக்காளத்தில் தொழுவதை தவிர அங்கு தொழும் ஒரு தொழுகை ஏனைய இடங்களில் தொழும் ஒரு லட்சம் தொழுகையை விட சிறந்ததாகும் புகாரி முடியுமானவர்கள் நபியவர்களுடைய கப்ருக்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதியாகிய ரௌவா பகுதியில் தொழுவதும் சிறப்பாகும் நபியவர்கள் கூறியுள்ளார்கள் எனது வீட்டுக்கும் மென்பொருளுக்கும் இடைப்பட்ட பகுதி சுவர்க்கப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலியாகும் நூல் முஸ்லிம் நெறியவர்கள் நிர்மாணி நபியவர்கள் நிர்மாணித்த அல் மஸ்ஜித் அன்னவவியல் தொழச் சென்று அந்த வணக்கத்தை முடித்துக் கொண்டவர்களுக்கு அங்கிருக்கும் மற்றும் சில முக்கிய இடங்களையும் தரிசித்து ஜியாரத் செய்வது நபி வழியாகும் அவைகளாகவே
நபியவர்கள் முகத்தாகி அடக்கம் செய்யப்பட்டு இருக்கும் புனித கௌபா ஷரீஃபில் ரோம்பா ஷரீஃபை சென்று நபி அவர்களுக்கு சலாம் கூறி அவர்களின் பேரில் ஸலவாத்தும் உழைப்பது சுன்னத் ஆகும் அவ்வாறே நபியவர்களுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டிருக்கும் முதலாம் கலீபா அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் இரண்டாம் கலீபாவானே உமர் அல் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இரு சஹாபாக்களுக்கும் ஸலாம் கூறி பிரார்த்திப்பதும் சுன்னத்தாகும் இக்காலப் பகுதியில் முடிந்த அளவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலவாத்து சொல்வதில் அதிக கவனம் செலுத்துவது விரும்பத்தக்கது நபியவர்களை தரிசிக்கச் செல்லும் போது புதிய ஆடைகளை தான் அணிந்து செல்ல வேண்டும் என்பது அவர்கள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று நம்புவது மார்க்கத்தில் இல்லாததாகும் இரண்டு நபியவர்களின் ஜியாரத்தை முடித்துக் கொண்டு அருகில் இருக்கும் அல்பி பொது மையவாடிக்குச் சென்று அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான முஸ்லிம்களுக்காக சலாம் கூறி துவா செய்து அவர்களின் ஹத்தில் பாவம் மன்னிப்பும் தேடுவது நபி வழியாகும் நபியவர்கள் அடிக்கடி அல் பகீர் மையவாடி ஜியாரத் செய்து அங்கிருப்பா அங்கு அடக்கம் செய்யப்பட்டு இருப்பவர்களுக்காக துவா செய்யுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டுள்ளதாக கூறி அவ்வாறே செய்து காட்டியுள்ளார்கள் பல்லாயிரம் இம்மையவாடியில் பல்லாயிரக்கணக்கான சஹாபாக்கள் தாபியீன்கள் உட்பட ஹிஜ்ரி ஒன்று சொட்டு இன்று வரை பல லட்சம் முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் மூன்று அடுத்தபடியாக மலையடிவாரத்துக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் உஹது சஹாபாக்களுக்கு ஸலாம் கூறி பிரார்த்திப்பதும் சுன்னத்தாகும் நபியவர்கள் உஹது சஹாபாக்கள் அடக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கு அடிக்கடி சென்று சலாம் கூறி பிரார்த்திக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் நான்கு மதீனாவின் தென்பகுதியில் பகுதியில் அமைந்திருக்கும் குபா நஸ்ஜீதுக்கு சென்று அங்கு தொழுவது சுன்னத்தாகும் நபியவர்கள் பிரதி சனிக்கிழமைகளில் குபா மஸ்ஜிதுக்கு நடந்து சென்று தொழுது விட்டு திரும்பும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள் அவ்வாறே குபா மஸ்ஜிதுக்கு நடந்து சென்று தொழுது விட்டு வருவது ஒரு உம்ரா செய்து விட்டு வருவதற்கு சமமாகும் என்றும் கூறியுள்ளார்கள் நூல் முஸ்லிம் மதீனாவில் தங்கி இருப்பவர்கள் நபியவர்கள் வாழ்ந்து நடமாடி மரணித்த மண்ணாகிய அந்நகரத்தின் புனிதத்தை உணர்ந்து கண்ணியமாகவும் ஒழுக்க விழுமியங்களை பேணியும் நடந்து கொள்ள வேண்டும் இவை தவிர அங்கு இருக்கும் பல்வேறு வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட செல்வது சுன்னத் என்ற வட்டத்துக்குள் அமையாது அதாவது அவ்விடங்களை பார்வையிடச் செல்வதால் நன்மைகள் ஏதும் கிடைப்பதில்லை அது ஒரு வணக்கமாகவும் கணிக்கப்படுவதில்லை எனினும் படிப்பினை பெறுவதற்காக அவ்வாறான இடங்களுக்குச் சென்று பார்வையிடுவது அனுமதிக்கப்பட்டதா கிபுலா திசை மாற்றப்பட்ட கிபுலத்தை பள்ளிவாயல் மஸ்ஜிதுல் ஜின் மஸ்ஜிது அலி தில் இது அல் கமாமா இவ்வாறான இடங்களை குறிப்பிடலாம் இவை தவிர இன்னும் சில இடங்கள் ஆதாரப்பூர்வமான வரலாற்று தகவல் ரீதியாக நிரூபிக்கப்படாத இடங்களாகும் அவ்வாறான இடங்களுக்கு செல்லாமல் இருப்பதே சிறந்தது அந்த நேரங்களை மஸ்ஜிதுன் நபவி இல் வணக்கத்தில் கழிப்பது மிகவும் ஏற்றமானதாகும்