லைலதுல் கத்ர் இரவின் சிறப்பு

லைலதுல் கத்ர் இரவில் வணங்குவதின் நற்கூலி

ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

லைலதுல் கத்ர் இரவை யார், ஈமானோடும், (நற்கூலியை) எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ, அவரது முந்தைய பாவங்கள் (குற்றங்கள்) மன்னிக்கப்படும்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழி).
 நூல்: புஹாரி 35

இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

லைலதுர் கத்ர் இரவை ஈமானோடும், (நற்கூலையை) எதிர்பார்த்தவராகவும் வணங்குவது என்பதின் அர்த்தம்: 

அல்லாஹ் இவ்வாறு (நின்று வணங்குவதை நமக்கு) மார்க்கமாக்கி இருக்கிறான் என்ற உறுதியுடனும், 

பிறரிடம் காட்டிக் கொள்வதற்காக அல்லாமல், 

உலக ஆதாயங்களுக்காக அல்லாமல் அல்லாஹ்விடமே நற்கூலியை எதிர்பார்த்தும் (அவனை) வணங்குவதாகும்.

ஹதீஸில் வந்ததுபோல் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமெனில்,

அவர் பெரும் பாவங்களை விட்டு விலகி இருக்க வேண்டும். 

ஏனெனில் பெரும்பாவங்கள் (யாவும்) தவ்பா செய்வதின்மூலமே மன்னிக்கப்படும். 

ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்:

إِن تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا

உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக் கொண்டால். 
உங்களுடைய (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதனை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம்.
சூரா அன்னிஸா (4:31).

நூல்: மஜ்மூஉல் ஃபதாவா (372/4), (427,431/15)


லைலதுல் கத்ர் பெயர்கான காரணம் மற்றும் அதனின் சிறப்பு:

நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை கண்ணியமிக்க (லைலதுல் கத்ர் எனும்) இரவில் இறக்கி வைத்தோம் 
சூரதுல் கத்ர் (97:1)

மேலும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

إِنَّا أَنزَلْتَهُ فِي لَيْلَةٍ مُّبَرَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ – فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

நிச்சயமாக நாம், 

இதனைப் (குர்ஆனை) பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம், 

நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம். 

அந்த இரவில் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் (பிரித்துத்) தெளிவு செய்யப்படுகிறது. 

சூரதுத் துஹ்கான் (44:3,4)

அப்துர் ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதி ரஹிமஹுல்லாஹ் தங்களது தஃப்ஸீரில் விளக்குகிறார்கள்:

இந்த இரவிற்கு லைலத்துல் கத்ர் (மகத்துவமான இரவு) என்று பெயரிடப்பட்டதற்கான காரணம்: 

அல்லாஹ்விடம் இந்த இரவிற்கு உயர்ந்த அந்தஸ்து மற்றும் சிறப்பு இருப்பதினாலும், 

மேலும் இந்த இரவில் வருடத்தின் (அனைத்திற்குமான) கால தவணை, 

வாழ்வாதாரம் மற்றும் (அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட நிகழ்வுகள் என அனைத்தும் நிர்ணயிக்கப்படுவதாலும் இதற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. 


தஃப்ஸீர் அஸ்ஸஃதி - சூரதுல் கத்ர் (97:1).
Previous Post Next Post