அத்வைதம் என்ற இறை மறுப்பு மற்றும் நாஸ்தீக கோட்பாட்டாளர்களுக்கு மறுமை நாளிலும் ஈடேற்றம் இருக்காது என்பதை பல அல்குர்ஆனிய உரையாடல்களிலும் காண முடிகின்றது.
அல்லாஹ்வை தனித்தவனாக வணங்கி வழிபடத் தகுதியானவனாகவும் மறுமையை நிராகரித்தவனாகவும் நரகில் தூக்கி வீசப்பட்ட நரகவாதிகள் நரகில் பரஸ்பரம் உரையாடி
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி உரையாடுவதில் இருந்து மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மாதிரிக்காக அல்முஃமின் (காஃபிர்) அத்தியாயத்தில் இடம் பெறும் நரகவாதிகள் தொடர்பான பின்வரும் நிகழ்வையுய் எடுத்துக் கொள்ளலாம்.
وَاِذْ يَتَحَآجُّوْنَ فِى النَّارِ فَيَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَـكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِيْبًا مِّنَ النَّارِ
அவர்கள் நரக நெருப்பில் இருந்து கொண்டு ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்வர் ; கீழ்வகுப்பினர் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி: “நிச்சயமாக நாம் உங்களைப் பின்பற்றுபவர்களாகவே இருந்தோம் - ஆகவே, எங்களுக்காக இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது பெறுப்பேற்பிப்பீர்களா ?” என்று சொல்லும் வேளையை (நீர் நினைவூட்டிக் கொள்வீராக!).
(முஃமின் :47).
قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُلٌّ فِيْهَاۤ ۙاِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَيْنَ الْعِبَادِ
(அப்போது:) பெருமை அடித்தவர்கள் “நிச்சயமாக நாம் எல்லோரும்தான் இங்கிருக்கின்றோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கிடையில் (நீதியாக) தீர்ப்புச் செய்து விட்டான் ” என்று கூறுவார்கள்.(முஃமின்:48)
மேற்படி உரையாடல் போதிக்க வருவது என்ன ?
இந்த உலகில் இறை மறுப்பாளன்? இறை நம்பிக்கையாளர் என்ற இரு சாரார் இருக்கின்றனர்.
அவர்கள் மனித இனத்தில் உள்ள இரு வேறு வர்க்கத்தினர். அவர்களில் இறை மறுப்பாளர்களான பெருமையடிப்போரும் ஒரு பிரிவாகப் பார்க்கப்படுகின்றனர். அவர்களை அவர்களின் வழிகேட்டில் காஃபிரான கீழ்த்தர வர்க்கம் ஒன்றும் பின்பற்றி நடக்கும். இருவரும் நரகில் நுழைவது இறை நியதியாகும்.
நாத்தீக அத்வைதம் பேசுவோர் குஃப்ரும் ஷிர்க்கும் ஒன்றே! உலகில் உள்ள அனைத்தும் அவனே, முருகனும் , சிவனும் அவனே மட்டுமின்றி; இந்த அண்ட சராசரம் முழுவதும் மொத்தமும் அவனே. அவனே இறைவன் என்று நம்புகின்றனர். போதிக்கின்றனர். அப்படியானால் மேற்படி காஃபிர்கள் ஏன் நரகம் சென்றனர். அது மாத்திரமின்றி, நரக வேதனையை உங்கள் இரட்சகன் குறைக்க எங்களுக்காக பிரார்த்தியுங்கள் என்று பின்வரும் வசனத்தில் வருவது போன்று அவர்கள் வானவர்ளை கெஞ்சி கேட்கும் அந்த இரட்சகன் யார்?
தொடர்ந்தும் வசனத்தை சிந்திக்கவும்.
وَقَالَ الَّذِيْنَ فِى النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ
“இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது) எங்களுக்கு இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று (நரக) நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலாளிகளை நோக்கி கூறுவார்கள்.( அல் முஃமின்:59)
நரக வேதனையை குறைக்க சக்தி உள்ள இரட்சகனே அவன் படைத்த நரகின் அதிபதியாவான்.
அந்த அதிபதிதான் அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ். அந்த அர்ஷானது ஏழு வானத்திற்கும் மேலால் உள்ளது. அதன் மீதே நமது இரட்சகன் உயர்ந்தவனாகி விட்டான். அந்த அர்ஷின் கீழ்தான் جنة الفردوس "ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்" இருப்பதாகக் கூறிய நபி (ஸல்) அதுவே சுவனங்களில் மிகவும் சிறப்பான சுவனம் என்று வர்ணித்தார்கள். (புகாரி, முஸ்லிம் )
அந்த அர்ஷின் இரட்சகனே மறுமையில் தீர்ப்பளிக்க அவனது அர்ஷை அதனை சுமப்போர் சுமக்க வருவான் என்றும், அந்த அர்ஷின் கீழ்தான் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் சுஜூதில் விழுந்து தனது சமூகத்தின் கஷ்டங்களை நீக்கிடவும் அவர்கள் சுவனம் புகவும் மன்றாடுவார்கள் என ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் விளக்குகின்றன.
எல்லாம் அவனனால் நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்து அந்த பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக பின்வரும் ஹதீஸில் குறிப்பிட்டு சொல்லிக்காட்டும் அர்ஷின் இரட்சகன் யார்?
பரிந்துரை பற்றிய பின்வரும் ஹதீஸைப் படியுங்கள்..
اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى مُحَمَّدٍ ﷺ. فيأتون مُحَمَّدًا ﷺ» .
وفي روايةٍ: «فَيَأتُونِي فَيَقُولُونَ: يَا مُحَمَّدُ أنتَ رَسُولُ اللهِ وخَاتَمُ الأنْبِياءِ، وَقَدْ غَفَرَ اللهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، ألا تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ؟ فَأنْطَلِقُ فَآتِي تَحْتَ العَرْشِ فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي، ثُمَّ يَفْتَحُ اللهُ عَلَيَّ مِنْ مَحَامِدِهِ، وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى أحَدٍ قَبْلِي، ثُمَّ يُقَالُ: يَا مُحَمَّدُ ارْفَعْ رَأسَكَ، سَلْ تُعْطَهُ، وَاشْفَعْ تُشَفَّعْ، فَأرْفَعُ رَأْسِي، فَأقُولُ: أُمَّتِي يَا رَبِّ، أُمَّتِي يَا رَبِّ، فَيُقَالُ: يَا مُحَمَّدُ أدْخِلْ مِنْ أُمَّتِكَ مَنْ لا حِسَابَ عَلَيْهِمْ مِنَ البَابِ الأيْمَنِ مِنْ أَبْوَابِ الجَنَّةِ، وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنَ الأبْوَابِ» . ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إنَّ مَا بَيْنَ المِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الجَنَّةِ كَمَا بَيْنَ مَكَّةَ وَهَجَرَ، أَوْ كَمَا بَيْنَ مَكَّةَ وَبُصْرَى» . متفق عَلَيْهِ.
நீங்கள் நான் அல்லாத வேறு ஒருவரிடம் செல்லுங்கள். நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள். மற்றொரு அறிவிப்பில் அவர்கள் என்னிடம் வருவார்கள் என இடம் பெற்றுள்ளது.
அப்போது மக்கள் என்னிடம் வந்து "முஹம்மதே! நீங்கள்
இறைத்தூதர்.
இறைத் தூதர்களில் இறுதியானவர்.
உங்களின் முன் பின் பாவங்களை உங்கள் இரட்சகன் மன்னித்துவிட்டான்.
எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள்.
நாங்கள் இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?"
என்று கேட்பர்.
அப்போது நான் இறைவனின் அர்ஷின் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) ஸஜ்தாவில் விழுவேன்.
பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய புகாழ் வார்த்தைகளையும் எனக்கு உதிக்கச் செய்வான். முஹம்மதே உமது தலையை உயர்த்தும்!
பரிந்துரையுங்கள்! அது தரப்படும்.
பரிந்துரைப்பீராக உமது பரிந்துரை ஏற்கப்படும்" என்று சொல்லப்படும்.
(இந்த நேரத்தில் நீயும் நானும் ஒன்று எனக் கூறாது)
அப்போது நான் என் தலையை உயர்த்தி எனது இரட்சகா ! என் சமுதாயம். எனது இரட்சகா ! என் சமுதாயம்" என்பேன்.
அதற்கு "முஹம்மதே! சொர்க்க வாசல்களின் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்வி கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தாரில் நுழையச் செய்யுங்கள், அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம்" என்றும் கூறப்படும்.
என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரண்டு பக்கங்களுக்கிடையேயான தூரம் "மக்காவிற்கும் (யமனிலுள்ள) "ஹஜர்" எனும் ஊருக்கும் இடையிலுள்ள அல்லது "மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள தூரமாகும்" என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் புகாரி: அபூஹுரைரா(ரலி) ஹதீஸ் எண் 4712, முஸ்லிம் )
இங்கு என் இரட்சகனே என இறைத் தூதர் பிரார்த்திக்கின்ற அந்த இரட்சகன் யாரோ?
யார் பரிந்துரைக்கப் பணிக்கின்றானே அவன் வேறு இறைத் தூதர் வேறு என்பது சூரிய வெளிச்சம் போல தெளிவாக இருக்க; இல்லை இல்லை எல்லாம் அவன்தான் என்பவன் எவ்வளவு பெரிய அறிவிலி அபதை நாம் உணரக் கடமைப் பட்டுள்ளோம்.
அல்லாஹ்வைப் பற்றி இறைஞானமற்ற அத்வைத சூஃபிகள்:
அர்ஷின் மீது இருப்பவனான அல்லாஹ் தன்னைப் பற்றி வர்ணித்திருக்கின்ற பெயர்கள், பண்புகளில்
அல்லாஹ், அர்ரஹ்மான்,
அர்ரஹீம்,
அல்மலிக்- அரசன்,
நித்திய ஜீவன், மரணிக்காதவன்,
தனித்தவன்,
முதலாமவன், அவனுக்கு முன்னால் யாரும் இருந்ததில்லை,
யாரின் தேவையும், துணையும் அற்றவன், தாய், தந்தை, மனைவி மக்கள் இல்லாதவன், ஈடு இணை அற்றவன் , நிகரற்றவன் போன்ற பெயர்கள், பண்புகள் அவற்றில் சிலவாகும்.
ஆதம் நபி (அலை) சொர்க்கத்தில் இருந்தபோது அல்லாஹ்வின் எவ்வாறான வழிகாட்டல் பிரகாரம் பூமியில் நடக்க வேண்டும் எனப் பணிக்கப்பட்டார்களோ அவ்வாறே இறைத்தூதர் நூஹ் (அலை) முதல் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த நபிமார்கள் இறை வழிகாட்டல்கள், கட்டளைகள் கொடுக்கப்பட்டார்கள்.
அவர்களில் ஒருவர் கூட எல்லாம் அவனே கோட்பாட்டைப் போதித்ததில்லை என்பதற்கு அவர்களின் போதனைகள் சாட்சியமாகும். அந்த போதனைகள் உள்ளடக்கிய உயிர்வாழும் வேதமான குர்ஆனிய வசனங்கள் அத்வைதிகளை அலறவிடும் மகத்தான நூலாகும்.
அத்வைதம் பேசும் சூஃபிகள் காணும் பொருள் எல்லாம் அவனே, அவனது வெளிப்பாடே எனக் கூறி, பாமர மக்களை வழிகெடுப்பது இப்னு அரபி, மன்சூர் அல்கல்லாஜ், அபூதாலிப் அல்மக்கி போன்ற பிற்கால வழிகேடர்களில் சிந்தனைக் கொள்கைகளையே தவிர, இறுதி நபியின் வழி வந்த ஸஹாபாக்கள், தாபியீன்கள், சுன்னத் ஜமாத் இமாம்கள், மற்றும் அவர்களின் வழி வந்த முஸ்லிம்களின்
கொள்கை கிடையாது என்பதற்கு குர்ஆனிய வசனங்கள் பலதோடு புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் மறுமை நாள் தொடர்பான பின்வரும் நபிமொழியும் ஒரு ஆதாரமாகும்.
أنَّ ناسًا قالُوا لِرَسولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: يا رَسولَ اللهِ، هلْ نَرَى رَبَّنا يَومَ القِيامَةِ؟ فقالَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ: هلْ تُضارُّونَ في رُؤْيَةِ القَمَرِ لَيْلَةَ البَدْرِ؟ قالوا: لا يا رَسولَ اللهِ، قالَ: هلْ تُضارُّونَ في الشَّمْسِ ليسَ دُونَها سَحابٌ؟ قالوا: لا يا رَسولَ اللهِ، قالَ: فإنَّكُمْ تَرَوْنَهُ ...
நபித்தோழர்களில் சிலர் 'இறைத்தூதர் அவர்களே! மறுமையில் நாங்கள் எங்கள் இரட்சகனைக் காண்போமா?' என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அப்போது நபி அவர்கள் 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?' என்று கேட்டார்கள். மக்கள் 'இல்லை; இறைத்தூதர் அவர்களே!'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் 'பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?' என்று கேட்டார்கள். மக்கள் '(சிரமம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!'' என்று பதிலளித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வாறுதான் மறுமை நாளில் உங்களுடைய இறைவனை நீங்கள் காண்பீர்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.(புகாரி) 6573
இதன் விளக்கம் என்ன?
பரிபூரணமான, குறைகள் அற்ற, நிரப்பமான, உயர்ந்த பண்புகளைக் கொண்டு வர்ணிக்கப்படும்
அல்லாஹ்வை முஃமின்கள் மறுமை நாளில்தான் காணமுடியுமே தவிர இந்த உலகில் காண முடியாது என்பதாகும்.
அவ்வாறிருக்க அவனது படைப்புக்களை அல்லாஹ் என்றும் அவனது வெளிப்பாடு என்றும் கூறி, அல்லாஹ்வின் தனித்துவமான பண்புகளில் குறையுள்ள அவனது படைப்புக்களை ஒப்பிட்டு, இணைத்துப் பேசுவது இணைவைப்பாகும்.
அந்த இணைவைப்பு, மரணித்த நபிமார்களை அல்லாஹ்வுடன் ஒப்பிட்டோ , அவ்லியாக்களை ஒப்பிட்டோ, அல்லது சிலை, சிலுவை , மரம் மட்டையாகவோ, அல்லது மரணித்த அவனது படைப்புக்கள் மீதுள்ள நம்பிக்கையாகவோ எதுவாகவும் இருக்கலாம்.
அல்குர்ஆனில்
ஷுஃபஆவு , شفعاء
சிபார்சு செய்வோர்,
ஷுரகாவு ,شركاء
இணையான தெய்வங்கள்,
அன்தாத் أنداد இணையாளர்கள்,
طاغوت
அல்லாஹ் அல்லாது பூமியில் வணங்கப்படும் தெய்வங்கள்,
போன்ற பொய்யான தெய்வங்களை மாத்திரமோ, அல்லது அவற்றை அல்லாஹ்வுக்கு துணையானவையாகவோ எடுப்பது பெரிய பாவமாக விளக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஹதீஸின் தொடர் இதனை மேலும் தெளிவுபடுத்துகின்றது.
كَذلكَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَومَ القِيامَةِ فيَقولُ: مَن كانَ يَعْبُدُ شيئًا فَلْيَتَّبِعْهُ، فَيَتَّبِعُ مَن كانَ يَعْبُدُ الشَّمْسَ الشَّمْسَ، ويَتَّبِعُ مَن كانَ يَعْبُدُ القَمَرَ القَمَرَ، ويَتَّبِعُ مَن كانَ يَعْبُدُ الطَّواغِيتَ الطَّواغِيتَ،، وتَبْقَى هذِه الأُمَّةُ فيها مُنافِقُوها،
அவ்வாறே அல்லாஹ் மனிதர்களை (மறுமை மன்றத்தில்) ஒன்று கூட்டி '(உலகத்தில்) யார் எதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அதைப் பின்தொடர்ந்து அவர் செல்லட்டும்''என்பான்.
அந்த அழைப்புடன், சூரியனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் (சூரியனைப்) பின்தொடர்ந்து செல்வார்கள்.
சந்திரனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்ந்து செல்வார்கள்.
ஷைத்தான்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் (அவற்றைப்) பின்பற்றிச் செல்வார்கள். இந்த உம்மத்தினரும் அவர்களில் உள்ள நயவஞ்சகர்களும் மீதமாக இருப்பார்கள்.... (புகாரி/6573).
மற்றொரு அறிவிப்பில்
إذا كان يوم القيامة أذن مؤذن : ليتبع كل أمة ما كانت تعبد . فلا يبقى أحد كان يعبد غير الله من الأصنام والأنصاب ، إلا يتساقطون في النار (( رواه أحمد ( 3 \ 16 ) ، والبخاري ( 7439 ) ، ومسلم ( 183) ، والنسائي ( 8 \ 112 - 113 )
மறுமை நாள் ஏற்படும்போது அழைப்பாளர் ஒருவர் "ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகத்தில்) தாம் வழிபட்டு வந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்'' என்று அழைப்பு விடுப்பார். அப்போது, அல்லாஹ்வை விடுத்து பிற தெய்வங்களையும் சிலைகளையும், விக்கிரகங்களையும் வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் கூட எஞ்சாமல் அனைவரும் நரக நெருப்பில் விழுவர் என அஹ்மத், புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.
பொய்யான இந்த தெய்வங்கள் அல்லாஹ்வின் வெளிப்பாடு என்றால் அவற்றை வணங்குவோர் ஏன் நரகில் விழ வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது? என சிந்தித்தாலே அழுகிய அத்வைத சிந்தனை இஸ்லாமிய சிந்தனை கிடையாது என்பதை உணரலாம்.
மறுமை நாளிலும் பொய்யாக்கப்படும் அத்வைதக் கொள்கை:
பின்வரும் ஹதீஸ் மறுமை நாளில் நபிமார்களிடம் முன்வைக்கப்படுகின்ற சிபாரிசு கோரிக்கை பற்றி தெளிவுபடுத்தும் நபிமொழியாகும். புகாரியில் 4476 வது இலக்கமாக அது இடம் பெறுகின்றது.
மறுமையிலும் அல்லாஹ் தனித்தவனே, படைப்புக்களோடு கலக்காதவனே என்பதை மிகத் தெளிவாக உணர்த்தும் நபி மொழிகளில் இதுவும் ஒன்றாகும்.
அது எல்லாம் அவனே என்ற அத்வைத நாஸ்தீக, இப்னு அரபியின் வழிகெட்ட சிந்தனையை முழுமையாகத் தகர்ப்பதோடு, தற்காலத்தில் தர்காக்களில் மன்றாடுவதையும் சுடுகாட்டிற்கு அனுப்புகின்றது.
தொடர்ந்து படியுங்கள்
--
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " يَجْتَمِعُ المُؤْمِنُونَ يَوْمَ القِيَامَةِ، فَيَقُولُونَ: لَوِ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا، فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ: أَنْتَ أَبُو النَّاسِ، خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ، وَأَسْجَدَ لَكَ مَلاَئِكَتَهُ، وَعَلَّمَكَ أَسْمَاءَ كُلِّ شَيْءٍ، فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا، فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ ذَنْبَهُ فَيَسْتَحِي، ائْتُوا نُوحًا، فَإِنَّهُ أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الأَرْضِ،
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் நம்பிக்கையாளர்கள் ஒன்று கூடி, (நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!) என்று பேசிக்கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து,
நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ் உம்மை அவனது கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த தூதர்களில் முதலாமவர் ஆவார் என்று சொல்வார்கள்.
فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ سُؤَالَهُ رَبَّهُ مَا لَيْسَ لَهُ بِهِ عِلْمٌ فَيَسْتَحِي، فَيَقُولُ: ائْتُوا خَلِيلَ الرَّحْمَنِ، فَيَأْتُونَهُ [ص:18] فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُوسَى، عَبْدًا كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ، فَيَأْتُونَهُ فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ، وَيَذْكُرُ قَتْلَ النَّفْسِ بِغَيْرِ نَفْسٍ، فَيَسْتَحِي مِنْ رَبِّهِ، فَيَقُولُ: ائْتُوا عِيسَى عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ، وَكَلِمَةَ اللَّهِ وَرُوحَهُ، فَيَقُولُ: لَسْتُ هُنَاكُمْ،
உடனே, அவர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் வருவார்கள். அப்போது அவரும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு,
நீங்கள் அர்ரஹ்மானாகிய அல்லாஹ்வின் உற்ற நண்பரான இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே, நம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் -அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்தையும் வழங்கிய அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள் என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள்.
பிறகு, நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவி டம் செல்லுங்கள் என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.
ائْتُوا مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَبْدًا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ، فَيَأْتُونِي، فَأَنْطَلِقُ حَتَّى أَسْتَأْذِنَ عَلَى رَبِّي، فَيُؤْذَنَ لِي، فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجِدًا، فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ، ثُمَّ يُقَالُ: ارْفَعْ رَأْسَكَ وَسَلْ تُعْطَهْ، وَقُلْ يُسْمَعْ وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَرْفَعُ رَأْسِي، فَأَحْمَدُهُ بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الجَنَّةَ، ثُمَّ أَعُودُ إِلَيْهِ فَإِذَا رَأَيْتُ رَبِّي مِثْلَهُ، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الجَنَّةَ، ثُمَّ أَعُودُ الرَّابِعَةَ،
உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும் போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன் விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் வார்த்தைகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும் போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன்.
فَأَقُولُ مَا بَقِيَ فِي النَّارِ إِلَّا مَنْ حَبَسَهُ القُرْآنُ، وَوَجَبَ عَلَيْهِ الخُلُودُ " قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: إِلَّا مَنْ حَبَسَهُ القُرْآنُ، يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى: {خَالِدِينَ فِيهَا} [البقرة: 162 )
(இறுதியாக) நான், குர்ஆன் தடுத்து, நிரந்தர நரகம் கட்டாயமாகி விட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை என்று சொல்வேன்.
அறிவிப்பவர் அனஸ் (ரழி) அவர்கள்.
அத்வைதிகள் சிந்திக்க சில கேள்விகள்.
(1) மறுமையில் கூட நபிமார்கள் உலகில் மன்னிக்கப்பட்ட தமது சாதாரண தவறுக்காக சிபாரிசு வேண்டுவதை தவிர்ப்பார்கள் என்பதன் நோக்கம் எப்படியானாலும் அவர்கள் தம்மை அல்லாஹ் என்றோ அல்லது அவனது வெளிப்பாடு என்றோ கூறினார்களா ? இல்லையே !
தாமும் தவறுக்கு உட்படும் மனிதர்கள் என்றே ஒப்புக் கொண்டுள்ளனர்.
அப்படி இருக்க; இந்த வஹ்ததுல் உஜூத் நாஸ்தீக கொள்கை எப்படி இஸ்லாமிய கொள்கையாகும்?
(2) குர்ஆனிய கட்டளைப்படி நிரந்தர நரகம் கடமையானோர் மறுமை நாளில் நரகில் இருப்பார்கள் என்றால் ? நரகவாதி எப்படி இந்த சொர்க்கவாதி போலவும் இறைவெளிப்பாடாகவும் போனான் என்ற கேள்வி சிந்திக்க வேண்டியதாகும்.
-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி