நபி (ஸல்) அவர்களின் பலதார திருமணங்கள் ஏன்? எதற்கு

  - அபூ உமர்

நபிகளார் மீது விமர்சனம் வைக்கும் பல மாற்று கருத்துடையவர்கள் எடுத்துரைக்கும் ஒரே குற்றச்சாட்டு நபிகளாரது திருமண விடயமே ஆகும். 

நபிகளார் மீது ஒழுக்க ரீதியாக எந்த குற்றச்சாட்டும் முன்வைக்க வழியில்லாமல் திணறும் சிலர் நபிகளாருடைய மனைவிகளின் எண்ணிக்கையிலும் அவர் மனைவிமார்களின்  வயதினையும் முன்வைத்து பெண்ணியம் பேசி பெண்விடுதலை பேசி விமர்சிக்க முற்படுவர்.

ஒரு உயர்ந்த மனிதர் விபச்சாரம் செய்தார் , களவு செய்தார் பொய் உரைத்தார் , மன்னராக இருந்த போது அந்தப்புரங்களை அமைத்தார் , பெண்கள் குழாமுடனான விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினார் என்று  ஆதாரத்தை கொண்டு விமர்சித்தால் நியாயம் உண்டு எனலாம்.

 ஆனால் நபிகளாரை பற்றி விமர்சிக்கும் போது நபிகளாரின் வாழ்வில் எந்த குறையும் காண முடியாதவர்கள் தான் திருமணம் செய்து நல் வாழ்வை நடத்திய மனைவியிடத்தில் இப்படி நடந்தார் அப்படி நடந்தார் என விமர்சிக்கின்றனர்.

இதில் வேடிக்கை நபிகளாரின் மனைவியர்கள் மற்றும் அவ் மனைவியர்களின் குடும்பம் ஏன் அக்காலத்தில் அப்பெண்கள் வாழ்ந்த சமூகம் அத்தனையும் தாண்டி அந் நேரத்தில் நபிகளாரின் எதிரிகள் கூட முன்வைக்காத  விமர்சனத்தை 1400 வருடத்திற்கு பின் ஆபாச படம் நடித்து கொண்டிருக்கும் சிலரும் , ஆபாசத்தை விரும்பும் உள்ளம் உள்ளவர்களும்  ,  கட்டிய ஒற்றை மனைவியிடம் கூட நற்பெயர் எடுத்து கொள்ள முடியாமல் விவாகரத்து பெற துடிக்கும் முன்னால் முஸ்லிம்களும் முன்வைப்பது வேடிக்கையானது. 

மேலும் புதிய வேடிக்கை யாதெனில் ஒரு சில நாஸ்த்திக சிந்தனையுள்ள அறிவாளிகள் போன்று நடிப்பவர்கள் தாங்கள்  பெண்கள் பாலியல் தொழில் செய்வதை ஆதரிப்போம், ஓரினச்சேர்க்ககையை சரி காண்போம், திருமணத்திற்கு முந்திய ஆண் பெண் வாழ்க்கையை ஊக்குவிப்போம், பெண்கள் ஆடைகுறைப்பிலும் ஆபாச நடனத்தையும் ரசிப்போம்    இத்தனையும் பெண் விடுதலை  ஆனால் நபிகளார் மனைவிகளிடத்தில் நல்லறம் நடந்தியது தவறு என அவதூறு கூறி நியாயம் கேற்போம்  வாருங்கள் என கதருவர்.

நபிகளார் காம உணர்வு கூடியவர் என்ற கருத்தை தவிர வேறு இஸ்லாத்திலோ நபிகளாரிலோ முன்வைக்க தனக்கு அறிவு இல்லாத போது  இக் கருத்தை மாத்திரம் கொண்டு தனது காமகண்ணோட்டத்தை நபிகளார் வாழ்வில் திணிக்க முற்படுகின்றனர். 

அத்தோடு  நபிகளார் பற்றிய அறிமுகம் இல்லாதவர்களிடத்தில் , நபிகளார் பற்றிய இவ் அவதூரான  பொய் பிரச்சாரத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட தவறான புரிதல் உள்ள மனம்  காணப்படவும் வாய்ப்புண்டு.  

ஆக இவ் இரு சாரார்களுக்குமான  பதிலாக இத்தொடர் இடம் பெற இருக்கிறது . 

இதற்கு பதில் தேடும் ஒருவர் நபிகளாரது மனைவிமார்களது விபரங்கள் அவர்களது சூழல் எச்சூழலில் நபிகளார் அவர்களை திருமணம் செய்தார்கள் என்பதை பற்றிய சரியாத தகவல் அவர்களுக்கு தேவையாகிறது.  

 அந்தவகையில் நபிகளாரது மனைவிமார் மற்றும் அவர்களது திருமண முந்திய பிந்திய வாழ்க்கை பற்றி முதல் அறிந்து கொள்வோம். 

நபிகளாரது முதல் திருமணம்......

ஒரு காம எண்ணம் மிகைத்த எந்த மனிதனும் தனது இளம் பராயத்தில் ( 25 வயதில்) தன்னைவிட வயது கூடிய மற்றும் ஏற்கனவே 2 திருமணமான குழந்தைகளை உடைய பெண்ணை திருமணம் செய்திட விரும்புவானா? என்றால் நிச்சயம் இல்லை

அதிலும் நபிகளாரது முதல் திருமணத்திற்காக நபிகளார் தன்னை விரும்பிய வயது மூத்த திருமணமான மற்றும் 3 குழந்தைகளை உடைய விதவை பெண்ணை தேர்ந்தெடுத்தார்கள்.

கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் நபிகளார் அப்பெண்ணை தேர்ந்தெடுக்கவில்லை நபிகளாரின் நற்பண்புகள் நாணயம்  , உண்மையை உணர்ந்த அப்பெண் நபிகளாரை தேர்ந்தெடுத்தார். ( அபூதாவுத் )

 அப் பெண்ணின் பெயர்தான் கதீஜா(ரலி) அவர்கள்.

அன்னை கதீஜா(ரலி) அவர்கள் கி.பி 556ம் ஆண்டு பிறந்தவர்கள். இவர்களுக்கு தாஹிரா (பரிசுத்தமானவள்) என்ற பெயரும் உண்டு.

கதீஜா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களைத் திருமணம் முடிப்பதற்கு முன்னர் அபூ ஹாலா பின் ஸுராரா என்பவரையும்,அவருக்குப்பின் அதீக்பின் ஆயித் என்பவரையும் திருமணம் முடித்திருந்தார்கள்.

 அவர்களிருவரும் மரணித்த பின் கதீஜா (ரலி) அவர்கள் விதவையாக வாழ்ந்து வந்தனர்.   நபியவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் கதீஜா (ரலி) அவர்கள் ஏற்கனவே முடித்திருந்த அபூஹாலா மூலமாக  ஹிந்த்,ஹாலா ஆகிய இரு பெண்களுக்கும், அதீக் என்ற கணவர் மூலமாக ஹிந்த் என்ற பெண் பிள்ளைக்கும் தாயாக இருந்தார். (அல் முக்தஷர்)

செல்வ சீமாட்டியாக விளங்கிய இவர்களின் வியாபாரம் சிரியா வரை விரிந்து பரந்து இருந்தது. தனது வியாபாரத்தை நல்ல முறையில் நடத்திய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை மணமுடிக்கிறார்கள்.அப்போது அவர்களின் வயது 40, நபி(ஸல்) அவர்களுக்கு வயது 25. (ஸூனன் அபூதாவுத், புகாரி, முஸ்லிம்)

நபிகளார் இஸ்லாத்தை விபரித்ததும்  ஏற்ற முதல் மனிதர்  ஹதீஜா (றழி)தான். (முஸனது அஹமது, புகாரி)

நபி(ஸல்) அவர்களுக்கும் கதீஜா(ரலி) அவர்களுக்கும் பிறந்த குழந்தைகள்

(1)  காஸிம், நபித்துவ வஹி வருவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்
(2)  அப்துல்லாஹ்(தாஹிர், தையிப்) இவர்களும் நபித்துவ வஹி வருவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள்
(3)  ருகையா(ரலி) – ஹிஜ்ரி 2ம் ஆண்டு மரணித்தார்கள்.
(4)  ஜைனப்(ரலி) – ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு மரணித்தார்கள்
(5)  உம்மு குல்ஸூம்(ரலி) ஹிஜ்ரி 9ம் ஆண்டு மரணித்தார்கள். மேற்கண்ட அனைவரும் நபிகள் நாயகம்(ஸல்) உயிரோடு இருக்கும் போதே மரணித்துவிட்டார்கள்
(6)  பாத்திமா(ரலி) – இவர்கள், நபி(ஸல்) அவர்கள் மரணித்து ஆறுமாதம் கழித்து மரணித்தார்கள். (முஸனது அஹமது, அபுதாவுத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை)  ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].

கதீஜா(ரலி) அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறினான்.

ஜிப்ரில்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லஹ்வின் தூதரே! இதோ கதீஜா, அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும், அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்” என்று கூறினார்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்:புகாரி3820, முஸ்லிம் 4817)

கிபி 621ல் – கதீஜா(ரலி) அவர்கள் மரணித்தார்கள். அப்போது அவர்களின் வயது65. நபி(ஸல்) அவர்கள் வயது 50. அதாவது 25 ஆண்டுகள் வாழ்ந்த இந்த காலங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேறு திருமணம் எதுவும் செய்து கொள்ளவில்லை.
 
இப்படியான நபிகளாரின  முதலாவது திருமணத்தில் உங்களது விமர்சணம் எங்கிருந்து வந்தது? 

பெண் விடுதலை பற்றி பேசும் நியாயமான மனிதர்கள் நபிகளார் தனது முதல் திருமணத்தை தன்னை விட வயது மூத்த குழந்தைகளுடன் வாழ்ந்த ஒரு விதவையுடன்  புரிந்தார்கள் .  என்பதையும் அதுவும் அப்பெண்னே அவரை விரும்பி திருமணம் செய்ய தேர்ந்தெடுத்து  கொண்டது  என்பதையும் புரட்சியாக அல்லவா பார்க்க வேண்டும்.

அது மாத்திரமன்றி முதல் திருமணத்தின் மணமகளான அவ்  விதவைக்கு   20 மாடுகளை மஹராக (திருமண கொடையாக ) கொடுத்து திருமணம் செய்தார் நபிகளார் என்பதை பெண் விடுதலைக்கு அத்திவாரம் என்றல்லவா  கூறுவர்.

தன் கணவன் இறந்தால் உடன் கட்டை ஏற வேண்டும் என்ற கலாச்சாரம் இருந்த காலப்பகுதியில் விதவையை திருமணம் செய்ததுடன் விதவைப் பெண் கூட தான் விரும்பிய ஆணை தெரிவு செய்து அவள்  பொருந்திய தொகையை திருமணத்திற்காக அவ் ஆணிடம் இருந்து பெரும்  உரிமை உண்டு என்று வரதட்சனையை எதிர்த்த இவ் புரட்சியை எப்படி உண்மையான பெண்ணிய வாதிகள் மறுப்பர்? 


மேலதிக தகவலுக்கு





நபிகளார் தனது இளமையான வயதில் (25) தன்னை விரும்பிய ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளுடன்  விதவையாக வாழ்ந்த ஒரு பெண்ணை அதுவும் தன்னை விட மூத்த 15 வயதுடைய பெண்ணை 25 மாடுகளை மணக் கொடையாக மணமகளுக்கு கொடுத்து மணமுடித்திருந்தார் .

மேலும் நபிகளார் தனது வாலிபம் கிட்டத்தட்ட  முடியும் 50 வயது வரை கதிஜா அம்மையாரை தவிர வேறு யாரையும் திருமணம் முடிக்கவில்லை. என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண் விடுதலை ,விதவை மறுவாழ்வு, வரதட்சனை எதிர்ப்புக்குரலுக்கு நபியின் வாழ்க்கை வழிகாட்டல் ஒரு முன்மாதிரியன்றி வேரில்லை... 

வாயால் புரட்சி முழக்கத்தை முன்வைத்து ஆயிரம் திட்டங்களை பெண்களுக்காக பேசுபவர்கள்  இப்படி தனது திருமணத்தை இளவயதில் செய்ய இன்றாவது முன்வருவார்களா? அல்லது அவர்கள் பெண்ணியவாதிகளாக அடையாளப்படுத்தும் தலைவர்கள் யாராவது வரலாற்றில் இப்படி வழிகாட்டியதுண்டா? ஆனால் 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்தே காட்டினார் முகம்மது எனும் உயர் மனிதர்.

சரி இனி நபிகளாரின் இரண்டாவது திருமணம் பற்றி பார்ப்போம். 

மாற்று கருத்துடைய சிலரும், பகுத்தறிவாளராய் தன்னை காட்டி கொள்ள முற்படும் சில முன்னால் முஸ்லிம்களும் விமர்சிப்பது போன்று நபிகளார் ஒரு காம உணர்ச்சி மிகுந்த மனிதர் என்றால் குறைந்தபட்சம் தனது முதல் மனைவி இறந்ததும் அடுத்த மனைவியை தேடிக்கொள்ளும் வழியை கண்டறிந்து இளம் துணையை அடைந்திருப்பார்கள். 

ஆனால் நபிகளார் தன் முதல் மனைவி இறந்த பிறகு தனது 50 வது வயதில் இரண்டாவது திருமணத்திற்காக யாரை தேர்ந்தெடுத்தார்கள் தெரியுமா? மீண்டும் தன்னை விட 5 வருடம் மூத்த ஐந்து குழந்தைகளை உடைய ஒரு விதவையை ...
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரழி ) ,அஹ்மத் 2774)

அவர்தான் அன்னை ஸவ்தா(ரலி) அவர்கள். 

ஆம்..  அன்னை ஸவ்தா(ரலி) அவர்களை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மணமுடித்த போது அன்னை அவர்களுக்கு வயது 55. நபி(ஸல்) அவர்களுக்கு வயது 50. அன்னை கதீஜா(ரலி) வபாத்தாகி ஒருமாதம் கழித்து ஒரு ரமளான் மாதத்தில் இந்த திருமணம் நடந்தது. திருமணத்திற்காக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கொடுத்த மஹர் நானூறு திர்ஹம்.

(அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி )
நூல்கள் : பைஹகீ 13526 தப்ரானீ , பாகம் 24 , பக்கம் 30)

இத்திருமணத்தின் போது ஒரு கைக்குழந்தை உற்பட ஸவ்தா (றழி) க்கு 5 குழந்தையும் நபிகளாருக்கு 4  குழந்தையும் இருந்தது.

அதாவது தனது 4 குழந்தையுடன் 5 குழந்தையையும் மற்றும் தாயையும் தனது பராமரிப்புக்கு பொறுப்பெடுத்து கொண்டார் நபிகளார். 

இத்திருமணமா காமத்துக்காக நடைபெற்றது என்று விமர்சிக்கிறீர்?

நபிகளாரை விடுங்கள்   பெண்ணியம் பேசும் நீங்களே 55 வயது 5 குழந்தையின் தாயை காமத்துக்காக நபிகளாருடன் இணைந்தார் என்று  கூறுவீர்களானால் உங்கள் சிந்தணை மற்றும் சித்தாந்தத்தை என்னவென்பது?

சரி ஸவ்தா(ரலி) அவர்களின் வரலாற்றை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்று இருந்த அன்னை ஸவ்தா(ரலி) அவர்கள். மக்காவில் இஸ்லாமிய எதிரிகளின் கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தனது கணவர் ஸக்ரான் பின் அம்ர் (ரலி) அவர்களுடனும், மேலும் தனது குடும்பத்தினருடனும் ஒட்டு மொத்தமாக அபிஷீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்கிறார்கள்.

 அங்கேயும் அவர்கள் சொல்லொனா துன்பத்திற்கு உள்ளாகிறார்கள்.

அன்னையவர்கள் அபிசீனியாவில் வாழ்ந்த நாட்களில் இருமுறை ஒரே அர்த்தத்தை பிரதிபலிக்கும் கனவை காணுகிறார்கள், ஒருநாள் அண்ணல் அவர்கள் அன்னையின் இல்லத்தில் நுழைந்து, அவர்களின் கழுத்தைப் பற்றிப் பிடிப்பது போலக் கனவு கண்டார்கள். இன்னுமொரு சமயத்தில், அன்னையின் மடியில் நிலவு வந்து இறங்குவது போன்றும் கனவு கண்டார்கள்.

தான் கண்ட கனவைத் தனது கணவரிடம் எடுத்துரைத்த பொழுது, நான் இறந்தவுடன் நீ இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்வாய் என்று அந்த கனவுக்கு அவரது கணவர் விளக்கமளித்தார். மேலும் எனது மரணம் நெருங்கி விட்டது. எனது மரணத்திற்குப் பின் நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை பகர்கிறார். இவ்வாறு கூறிய சில நாட்களிலேயே நோய் வாய்ப் பட்டு ஸக்ரான் (ரலி) அவர்கள் தம் மனைவி ஸவ்தா (ரலி) அவர்களை விதவையாக விட்டு விட்டு மரணமடைந்து விடுகிறார்கள். 

தனது கணவர் இறந்தவுடன் கைக்குழந்தைகளுடன் மக்காவிற்கு திரும்பி விடுகிறார்கள் ஸவ்தா அவர்கள். அன்னையவர்களின் தோழியரில் ஒருவரான கவ்லா பின்த் ஹகீம் (ரலி) என்பவர்கள் அன்றைய மக்களிடத்தில் அதிக நன்மதிப்பை பெற்றவர்களாயிருந்தார். இவர்கள் கண்ட கனவினை குறித்து அறிந்து இருந்ததால், நபி(ஸல்) அவர்களை சந்தித்து, ‘நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ள கூடாது? “ என்று வினவ, அதற்கு நபி(ஸல்) அவர்கள் “என்னை யார் திருமணம் செய்து கொள்வர்? என் பிள்ளைகளை யார் கவனித்து கொள்வார்?” என்று கேட்க, அன்னை அவர்கள் கண்ட கனவு குறித்து எடுத்து கூறி, சம்மதம் பெற்று,  அன்னை அவர்களின் சம்மதத்தையும் பெறுகிறார்கள். “ஏற்கனவே நான்கு குழந்தைகளுடன் இருக்கும் அவர்கள், ஐந்து பிள்ளைகளுடன் இருக்கும் என்னை எவ்வாறு திருமணம் செய்வார்கள்”? என்று, வினவி, பின்பு சம்மதிக்கிறார்கள்.

(அஹ்மத் 24587 , ஸர்கானி, பாகம் – 03, பக்கம் – 599)

இங்கே நாம் ஒரு விசயத்தை கவனித்தோமானால். பிள்ளைகளை பராமரிப்பதற்காகவே இத்திருமணம் நடைபெற்று இருக்கிறது என்பது புரிய வருகிறது. அத்தோடு இத்திருமணம் நடைபெற மூல காரணம் கவ்லா பின்த் ஹகீம் (ரலி)  ஆகும். நபிகளார் தேடி சென்று இத்திருமணத்தை முடிக்கவில்லை, வந்த திருமணத்தை குழந்தை வளர்ப்பிக்காகவும் தனது மார்க்கத்தை ஏற்ற பெண் ஆதரவற்று அவலப்படுகிறார் என்பதையும் உணர்ந்து நபிகளார் ஆதரவளித்தார்.

பிற்காலத்தில் வயோதிபத்தை அடைந்த ஸவ்தா (ரலி),  நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் பிரியமாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்தவர்களாக, ஒருநாள் நபிகளாரிடம் வந்து ” அல்லாஹ்வின் தூதரே! எல்லோருக்கும் வழங்கியது போல எனக்கும் ஒரு நாள் குடும்ப வாழ்க்கைக்கு ஒதுக்கியிருந்தீர்கள். அந்த ஒரு நாளை ஆயிஷாவுக்கு வழங்குவதில் பெருமிதம் அடைகிறேன் என்றார்கள். (புகாரி 2593,2688,5212)

ஸவ்தா(ரலி) அவர்கள் விடயமாக ஹிஜாபுடைய வசனம் அருளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (புகாரி 5237)

இவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் ஆதாரபூர்வமான ஐந்து நபிமொழிகளை உலகிற்கு வழங்கி ஹதீஸ் வரலாற்றில் பெருமையைச் சேர்த்து இருக்கிறார்கள்.அவை அபூ தாவூது, நஸாயீயில் பதிவாகியுள்ளன. இவர்கள் தெரிவித்த நபிமொழிகளை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி),யஹ்யா இப்னு அப்துல்லாஹ் அல் அன்ஸாரி போன்றோர் அறிவித்துள்ளனர்.

ஸவ்தா (ரலி) அவர்கள் முஆவியா(ரலி) ஆட்சிக்காலத்தில் ஹிஜ்ரி 21 ஆம் ஆண்டு ஷவ்வால் மாதம் மதீனாவில் மரணமடைந்தார்கள்.

இவ்வாறு நபிகளாரின் இரண்டாவது திருமணத்தில் இணைந்த இவ் வாழ்க்கையில் என்ன காமத்தை கண்டீர்கள்? 

உண்மையான பெண்ணியவாதிகளும் பகுத்தறிவாளர்களும்  பின்பற்ற  தகுந்த சிறந்த வாழ்க்கை முன்மாதிரி முகம்மது நபிதான் என்பதை நடுநிலையாக சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வர்.

அடுத்த பதிவில் நபிகளாரின் அன்பு மனைவி ஆயிஷா றழி அவர்களது வாழ்க்கை குறித்து பார்ப்போம்.


மேலதிகமாக..

ஸவ்தா (ரலி) பற்றி ஆயிஷா (ரலி) கூறுகிறார் - 1 கூர்மையான அறிவும் , திடமான மனமும் கொண்ட ஸவ்தா பின்த் ஸம்ஆ ( ரலி ) அவர்களைத் தவிர வேறு எந்தப் பெண்ணைப் பார்த்தும் அவராக நான் இருக்கவேண்டும் என்று நான் விரும்பியதில்லை " என்று ஆயிஷா ( ரலி ) கூறினார்கள்.
(முஸ்லிம் 2899)


இதற்கு முன் நபிகளார் தனது இள வயதில் (25) தன்னை விரும்பிய ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகளுடன்  விதவையாக வாழ்ந்த  பெண்ணாகிய கதீஜா (றழி)யை மணமுடித்து 25 வருடங்கள் வாழ்ந்தார் என்பதை பற்றி விபரமாக  பார்த்திருந்தோம்

அடுத்து தனது 50 வயதில்  முதல் மனைவி இறந்த பின் தன்னை விட 5 வருடம் மூத்த ஐந்து குழந்தைகளை உடைய  விதவையாகிய அன்னை ஸவ்தா(ரலி) அவர்களை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மணமுடித்ததன் நோக்கத்தையும் விபரித்திருந்தோம்.

இனி நபிகளாரின் 3வது மனைவியான  அன்னை ஆயிஷா (றழி) அவர்களை பற்றி பார்ப்போம்.

இஸ்லாத்தின் எதிரிகள் நபிகளாரை விமர்சிக்க இத்திருமணத்தை தவிர வேறு எதையும் அதிகம் பயன்படுத்தியதில்லை.  அவர்களது பிழையான புரிதலுக்கும் சரியான வழிகாட்டலாக  இந் நீண்ட பதிவு இருக்கும் என நம்புகிறேன்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை மணந்த போது அவர்களின் வயது 53. அன்னையரின் வயது ஆறு. 500 திர்ஹம் மஹராக கொடுத்து ஷவ்வால் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்  .( புகாரி,திர்மிதி)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர் அபூபக்கர்(ரலி) அவர்களின் அன்பு மகளே அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள்.

திருமணத்திற்கு பிறகு அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் தனது தந்தை வீட்டிலேயே தங்கி இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களுடன் இல்லறம் நடத்தவில்லை. மக்காவைவிட்டு மதினாவிற்கு ஹிஜ்ரத் சென்ற பிறகுதான் அவர்கள் பருவ வயதை அடைந்தார்கள், அதன் பின்னர்தான், அவர்கள் நபி(ஸல்) அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அப்போது அன்னையாருக்கு வயது 9.
(புகாரி 5133, திர்மிதி  1109,தபரி பக்கம்157  ,ஸஹீஹுல் புகாரி 3894  , ஸஹீஹுல் புகாரி 3896)

இத்திருமணத்தில் சிலருக்கு கேள்விகள் எழலாம் அதில் ஒன்றுதான் இஸ்லாத்தில் சிறுவர்  திருமணம் குர்ஆனின் 4:21 படி தடைசெய்யப்பட்டிருக்க  நபிகளார் தனது 53 வயதில் பருவ வயதை அடையாத 6 வயது  சிறுமியை திருமணம் செய்தது (பாலிய விவாகம்) ஏற்புடையதா? என்று அதற்கான பதிலை பார்த்து நகர்வோம்.

இஸ்லாமிய ஆரம்பகாலத்தில் மது போதையுடன் இருந்த சிலர் முஸ்லிமாக மாறிய பின்னரும் மது போதையுடனே இருந்தார்கள். அதன் பிறகு மது தடுக்கப்பட்டு இறைவசனம் வந்ததும் மதுவை ஹராமாக்கினார்கள். அது போலவே, சிறுமிகளை திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டதாகவே ஆரம்பத்தில்  இருந்தது. 

 உதாரணமாக

முஆவியா பின் அபூ சுப்யான் தனது மகளை அப்துல்லாஹ் பின் அமிர் பின் குரைழுக்கு திருமணம் செய்து வைக்கும் போது வயது 9 . (தார் அல் பக்ர் பாகம் 70 பக்கம் 188)

ஹிஜ்ரி 122 ல் பிறந்த அபூ அல் ஹாஷிம் கூறுகிறார் அவருடைய தாய் அவரை விட 12 வயது தான் அதிகம். ( அபூ அல் ஹாஷிம் தாரிஹ் அல் தமிஷ்க் பாகம் 24 பக்கம் 358-361)

லதி பின் சாதுடைய எழுத்தாளர் அபூ சாலிஹ் குறிப்பிடுகிறார் அவரிடம் ஒரு வர் கூறியதாக அவருடைய பத்து வயது மகள் கர்ப்பமாக உள்ளார் என்று (அல்-காமி பீஃ அல் தஉபா அல் ரிஜ்ஜால் பாகம் 5 பக்கம் 343)

அல் ஷாபி கூறுகிறார் அவருக்கு தெரிந்த பெண் பெயர் திஹாமா 9 வயதில் வயதுக்கு வந்ததாகவும் மேலும் அவருக்கு தெரிந்த ஒரு பெண் 21 வயதில் பேர்த்தியை கண்டதாகவும் அதாவது 21 வயது பெண் தனது பிள்ளையுடைய பிள்ளையோடு இருந்துள்ளார் என ஷாபி ரஹ்மதுல்லாஹ் கூறுகிறார் (சூனன் அல் ன- குப்ரா பாகம் 1 பக்கம் 476)

இத்திருமண முறைகள் அரபுகளின் பொதுவான வழக்கத்தில் இருந்தன.

மேலும் இமாம் ஷாஃபிஈ கூறினார்கள்: நான் யமன் தேசத்தில் தங்கியிருந்தபோது அங்குள்ள சிறுமிகள் அதிகமானோர் ஒன்பது வயதிலேயே முதல் மாதவிடாயை அடைவதுண்டு. (சியர் அஃலாமுல் நுபலா பாகம் 10, பக்கம் 91)

இமாம் பைஹகீ அவர்களும் இமாம்ண ஷாஃபிஈ அவர்களின் வார்த்தைகளை அறிவித்துள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: நான் (யமனில் உள்ள) சன்ஆ நகரில் ஒரு பாட்டியைக் கண்டேன். அவருடைய வயது 21 ஆகும். அவர் ஒன்பது வயதில் பருவமடைந்து பத்து வயதில் குழந்தையும் பெற்றுவிட்டார். (சுனன் அல்பைஹகீ அல்குப்றா 1/319)

இப்னு உகைல் மற்றும் உஃபத் அல்மஹ்ல்பை ஆகியோரிடமிருந்து இப்னுல் ஜவ்ஸி அறிவிக்கிறார்கள். அப்பாத் இப்னு அப்பாத் அல்முஹ்லபி கூறுகிறார்கள்: முஹ்லபா கூட்டத்துப் பெண் ஒருவர் பதினெட்டு வயதிலேயே பாட்டியானதை நான் கண்டிருக்கிறேன். அவர் ஒன்பது வயதில் தமக்கு மகளைப் பெற்றார். அவருடைய மகளும் ஒன்பது வயதில் ஒரு மகளைப் பெற்றெடுத்தார். ஆக, பதினெட்டு வயதில் இவர் பாட்டியாகிவிட்டார். (தஹ்கீக் ஃபீ அஹாதீஸ் அல்கிலாஃப், பாகம் 2, பக்கம் 267)

மிக முக்கியமாக  ஆயிஷா ரழி அதே ஆறு வயதில் வேறு ஒரு நபருக்கு திருமணம் முடிக்க பேச பட்டிருந்தார் பேச்சு வார்த்தை அளவில் இருந்தது முஹம்மது நபி (ஸல்) பெண் கேட்டவுடன் முஹம்மது நபிக்கு அபூபக்கர் (றழி) திருமணம் செய்து கொடுத்தார்கள் 
(முஸ்னத் அஹ்மத் 25769)

எனவே இப்படியான திருமணங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன் அரபு தேசத்தில் சகஜம் என்பதால் இதை ஒரு விமர்சனமாக  ஆரம்ப காலங்களில் யாரும் பார்க்கவில்லை.

ஆனால் அதன் பின்னர் இதை தடுத்து "திருமணம் என்பதை வலுவான உடன்படிக்கை" என்று இறைவன் குறிப்பிட்டு வசனத்தை இறக்கியவுடன் பாலியவிவாங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 

மேலும் இஸ்லாத்தை தவிர  எந்த மதமும் வரலாற்றில் பாலிய வயது என்னவென்பதை தீர்மானிப்பதற்கு  படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மேலும்  ஏனைய மதத்திலும் பாலியல் விவாகம் பற்றிய தெளிவு இல்லை என்பதையும் ஏற்றாக வேண்டும்.

உதாரணமாக

King of Richard 2 தனது இரண்டாவது மனைவியான Isabella வை திருமணம் செய்யும் போது Isabella வுக்கு வயது 6 ஆகும்



சில ஹிந்து அறிஞர்கள் சீதாவை ராமர் திருமணம் முடிக்கும் போது சீதாவுக்கு 6 வயது என கூறுகிறார்கள்

 புகழ் பெற்ற பாரதியார் கண்ணம்மாவை திருமணம் முடிக்கும் போது கண்ணம்மாவிற்கு வயது 8 .

(வரலாற்றில் சிறு வயதில் திருமணம் முடித்த யூத கிறிஸ்த்தவ தலைவர்களை இறுதியில் சேர்த்திருக்கிறேன்.)

இவையல்லாம் இங்கு நினைவுக் கூறலாம்.  திருமண வயது 13 என்றும் 16 என்றும் 18 என்றும் 21 என்றும் மாற்றங்கள் நடந்தது கடந்த 25 - 30 ஆண்டுகளுக்குள் தான். 

ஆனால் இஸ்லாம் வயதையும் ஒரு ஆரோக்கியமான பெண்/ ஆண் பருவமடைந்தால் திருமணத்துக்கு தகுதியானவள் என்பதை உறுதி செய்து வழிகாட்டுகிறது..

பாலிய விவாகம் தவறு என்ற தடை குர்ஆன் ஊடாக வழங்கப்படாத  ஏன் தவறாகக்கூட கருதப்படாத - ஒரு காலத்தில் நடந்த திருமணத்தை 1400 வருடங்களுக்குப் பிறகு இருந்துக் கொண்டு ‘அது தவறு’ என்று விமர்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நாம் முதலாவதாக சிந்திக்க வேண்டும்.

ஒரு காரியம் தவறு என்று தெரிந்த பிறகு அந்தக் காரியத்தை செய்தால் தான் அது தவறு என்ற நிலையைப் பெறும். இறைத்தூதர் ஆயிஷாவை திருமணம் செய்தது தவறு என்றே கருதப்படாத மற்றும் இறைவனால் தடை வராத காலத்தில் நடந்ததாகும். மேலும் நபிகளார் வாழ்வதற்காக ஆயிஷா (றழி) பருவமடைந்த பிறகே வீட்டுக்கு அழைத்து கொண்டார் .  இது முதலாவது பதிலாகும்.

நபியவர்களை மணமுடித்துக் கொண்டது குறித்து ஆயிஷா (றழி)க்கு  ஒருக்காலும் அதிருப்தி அடையவில்லை.

ஆயிஷா(ரலி) அவர்களால் ஆயிரக்கணக்கான அறிவிப்புகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.  அவற்றில் ஓர் ஆச்சரியமான விஷயம் என்னவெனில்,  ஒரே ஓர் அறிவிப்பில் கூடநபியவர்களைத் திருமணம் செய்து கொண்டது குறித்து அவர்கள் அதிருப்தியாக எதையும் சொல்லவில்லை.  இதிலிருந்து அவர்களுக்கு இத்திருமணம் குறித்து எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை என்று தெரிகிறது.  உண்மை என்ன வெனில், ஆயிஷாவின் பல அறிவிப்புகள் வாயிலாக அவர்கள் நபியவர்களை மிகவும் நேசித்து வாழ்ந்ததை அறிய முடிகிறது.  எந்தளவு என்றால்,  மற்ற மனைவியர்கள் நபியவர்களுக்கு அருகில் இருந்த நேரங்களில் ஆயிஷா ரோஷம் கொண்டார் எனும் அளவுக்கு அவர்களின் நேசம் இருந்திருக்கிறது.  இத் திருமணத்தால் அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தார்கள் என்பதற்கு இந்த ஆதாரம் போதாதா?
 (ஆயிஷா அம்மையார் அவர்கள் நபிகளாரை எப்படி நேசித்தார் மற்றும் நபிகளாரை பற்றிய அவரது கருத்து  என்பவற்றை பார்க்க :ஸஹீஹ் புகாரி : 2581,ஸஹீஹ் புகாரி : 4939, ஸஹீஹ் புகாரி : 3818,ஸஹீஹ் புகாரி :  6024, 950,புகாரி 5189 முஷ்னத் அஹமத் 18394)

ஒரு ஆச்சரியமான செய்தி யாதெனில் நபிகளார் ஆயிஷா அம்மையாரை நோக்கி நீங்கள் விரும்பினால் என்னை விட்டு பிரியலாம் என்று கூறியதற்கு அவர் கூறிய பதிலே , ஆயிஷா றழி அவர்கள் நபிகளாரை மனதார ஏற்று கொண்டார் என்பதுற்கு சான்றாகிறது.

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார் :இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளித்திடுமாறு அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டளையிட்டப்பட்டபோது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: ‘(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) ‘நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும் வரை அவசரப்படவேண்டாம்’ என்று கூறினார்கள். என் பெற்றோர் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப்போவதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், ‘நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களின் வாழ்க்கைக்கே உரியதைக் கொடுத்து நல்லமுறையில் உங்களை விடுவித்து விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுஉலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்து வைத்துள்ளான்’ எனும் (திருக்குர்ஆன் 33:28,வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், ‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்’ என்று சொன்னேன். பிறகு நபி(ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்.

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(ஸஹீஹ் புகாரி : 4786.)

ஆயிஷா றழிக்கு  இத் திருமணத்தில் மிகப் பெரிய திருப்தி இருந்தது.  நபியவர்களிடமிருந்து இஸ்லாமை அதிகம் கற்றுக் கொண்டு அதற்கு மிகச் சிறந்த பக்கபலமாக இருந்தார்.  அவரது காலத்தில் ஏராளமான பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவரொரு மகத்தான ஆசிரியையாக விளங்கினார். அவரது பெற்றோர்கள் இத்திருமணத்தில் பூரண திருப்தி அடைந்தார்கள். ந பியவர்களின் காலத்தில் அவருடைய தோழர்களோ,  எதிரிகளோ,  யாராக இருந்தாலும் ஒருவர் கூட இத் திருமணத்தைக் கண்டு ஆச்சரியமோ,  ஆட்சேபணையோ வெளிப்படுத்தவில்லை. ஆனால் இவ் வரலாற்றில் அறிவால் , சமூகத்தால் உயர்ந்த பெண்ணை பெண்ணியம் பேசும் பெண்ணிய வாதிகள் , தனி மனித உரிமை பேசும் பொய் பகுத்தறிவாளர்கள் எப்படி  ஆதாரமற்று விமர்சிக்க முடியும். 

அடுத்து இத்திருமணத்தின் பாரிய பல நோக்கங்கள் புதைந்து கிடக்கின்றன 

அதில் ஒன்று உறவு முறையை வலுப்படுத்திக் கொள்ளுதல்.

மனதிற்கு பிடித்த நல்லவர்களுடனான உறவை பலப்படுத்திக் கொள்வதற்கு விருப்பமில்லாதவர் என்று உலகில் யாரும் இருக்க முடியாது. உறவை எந்த வகையிலெல்லாம் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களும் அதை நடைமுறைப் படுத்துபவர்களும் உலகில் ஏராளமாக உள்ளனர். உறவு முறையை வலுப்படுத்துவதில் உலகில் முக்கியப் பங்கு வகிப்பது திருமண பந்தமாகும்.

பல மாதங்களுக்குப் பின் - பல வருடங்களுக்குப் பின் நடக்கவிருக்கும் திருமணங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் செய்து வைக்கப்படுகிறது. பல இடங்களில் பிறந்தக் குழந்தையைக் கூட இன்னாருக்கு என்று முடிவு செய்யப்பட்டு விடுவதை பரவலாகப் பார்க்கலாம்.

‘அக்காவின்மகள் மாமனுக்குத் தான்’ என்ற ஹிந்து பாரம்பரியம் நீடிப்பதை நாம் கண்டு அனுபவிக்கிறோம். தம்பியோடு - சகோதரனோடு உள்ள குடும்ப உறவை மேலும் பலப்படுத்திக் கொள்ளவே இத்தகைய திருமண உறவுகள் இன்றய நவீன உலகில் நீடிக்கின்றன.  இவையல்லாம் சரி அல்லது பிழை  என்ற விவாத அர்த்தத்தில் பேசவில்லை மாறாக இவைகளையெல்லாம் மனதில் நிறுத்திக் கொண்டு ‘முஹம்மத் - ஆயிஷா’ திருமணத்தை அணுகுவோம்.

வேறு எவரும் மிஞ்ச முடியாத அளவிற்கு முஹம்மத் அவர்களின் மீது பாசத்துடன் இருந்தவர் அபூபக்கர் என்ற நபித்தோழர். சுக துக்கம் அனைத்திலும் தோளோடு தோள் நின்று இறைத்தூதரோடு தன் வாழ்க்கையைப் பகிர்ந்துக் கொண்டவர். இந்த உறவு இன்னும் வலுப்பட விரும்பியே தனது மகளை இறைத்தூதருக்கு மணம் முடித்துக் கொடுக்கிறார்கள்.

திருமணம் என்ற ஒப்பந்தத்துடன் அன்றைக்கு அது நடந்தாலும் இன்றைக்கு நிச்சயதார்த்தத்தின் நிலை என்னவோ இதேதான் அன்றைக்கு நடந்த அந்த திருமணத்தின் நிலையுமாகும். பெயருக்கு அது திருமணமாக இருந்தது. பருவ வயதை அடையும் வரை பெண் தாய் வீட்டிலேதான் இருந்தார்.

ஒரு பெண் பருவமடைதல் (வயதுக்கு வருதல்) என்பது அவள் தாய்மையடையும் பக்குவத்திற்குரிய அடையாளமாகும். அதன் பின்னரே நபிகளாருடன்  இல்லறம் துவங்கியது.

முஹம்மத் அவர்கள் முடித்த பல்வேறு திருமணங்களில் ஆயிஷா மட்டுமே கன்னிப் பெண். மற்ற அனைவரும் இறைத்தூதரின் வயதுக்கு ஒப்பவர்கள் - சிலர் அவர்களின் வயதை விட அதிக வயதை அடைந்தவர்கள். மற்றும் பல பிள்ளைகளை உடைய தாய்மார்கள் அதில் அதிகம், இப்படி ஒரு கன்னிப் பெண்ணுடன் அவர்கள் இல்லறத்தில் சேராமல் போயிருந்தால் அவர்களின் ஆண்மையில் கூட சந்தேகம் எழும். இந்த திருமணத்தின் வழியாக அத்தகைய சந்தேகம் எழாமல் போயிற்று.

இல்லறம் மட்டுமே குறிக்கோளல்ல.

என்னதான் தனது நண்பர் அபூபக்கர் விரும்பினாலும் சின்னப் பெண் என்பதால் முஹம்மத் இந்த திருமணத்தை மறுத்திருக்கலாமே.. என்ற சந்தேகம் கூட எழலாம். ஆயிஷா போன்ற ஒரு பெண் 
தேவை என்பதை முஹம்மத் அவர்கள் உணர்ந்ததால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

அந்தத் தேவை என்ன?

இறைவன் புறத்திலிருந்து மனித சமுதாயத்திற்காக வந்துக் கொண்டிருந்த தூதர்களில் இறுதியானவர் முஹம்மத் நபி அவர்கள். அவர்கள் மொத்த மனித சமுதாயத்திற்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. அதனால் அவர்களின் பணி விசாலமானதாகவும் - விரிவானதாகவும் இருந்தது. அவர்களின் முழு வாழ்க்கையும் அகில உலகின் முன்னும் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகியது. அவர்களின் வெளியுலக வாழ்க்கையை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் இருந்தார்கள். வீட்டிற்குள் வாழும் வாழ்க்கையை எடுத்துச் செல்ல வேண்டுமானால் மனைவி என்ற அந்தஸ்த்தில் வாழ்பவரால் மட்டும் தான் முடியும். அந்த வகையில் சுறுசுறுப்புமிக்க கண்காணிப்புத் திறனும், நினைவாற்றலும் - மிக்க மனைவி தேவைத்தான் என்பதால் அதற்கு பொருத்தமானவராக ஆயிஷாவை அவர்கள் கண்டதால் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார்கள்.

இவ் நோக்கத்தை அவரும் நிறைவேற்றினார் . அறிவுக்கூர்மை பெற்ற இவர்கள் குர்ஆனை மனப்பாடம் செய்தவர்கள் ஏறத்தாழ 2210 ஹதீஸ்களை இந்த உலகிற்கு தந்தவர்கள்.மேலும் மார்க்க சட்டதிட்டத்தில் கைதேர்ந்தவர்கள்.

முஹம்மத் - ஆயிஷா இவர்களுக்கு மத்தியில் நடந்த வாழ்க்கையை வெறும் திருமணம், இல்லறம் என்று மட்டும் பார்க்காமல் அதில் பொதிந்துள்ள இந்த உண்மைகளை விளங்கினால் அந்த உறவின் அவசியத்தில் யாரும் குறை காண முடியாது.

காரணம், இந்த உலகில் - நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடந்த தனது இல்லற வாழ்க்கையின் நல் அம்சங்களைக் கூட மனித சமுதாயத்திற்கு பயனளிக்கக் கூடிய வகையில் பகிரங்கப் பிரகடனம் செய்ய வேறு எந்தத் தலைவராலும் முடியாது. இறைவனின் இறுதித் தூதரைத் தவிர.

நபிகளாரை தவறாக அவதூறு விமர்சிக்கும் யாராவது அல்லது அவர்களின் எந்த தலைவராவது  தனது  தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை இவ்வளவு சிறந்தது என பகிரங்கப் படுத்த முடியுமா ?

பகிரங்கப் படுத்தினால் பலரது மனைவிகளது வாக்கு மூலங்களே அவர்களது போலி பெண்ணுரிமை பெண் விடுதலை தத்துவ கோசத்தை தோலுரித்துவிடும். 

ஆயிஷா றழிக்கு  குழந்தை இல்லை.

நபி(ஸல்) அவர்களின் கடைசிநாட்களில், அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் மடியில் தான் அண்ணலாரின் உயிர் பிரிந்தது. அன்னை ஆயிஷா(ரலி) அவர்களது இல்லத்திலேயே அண்ணலார் அடக்கம் செய்ப்பட்டார்கள். (புகாரி)

ஆயிஷா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மூன்றாவது மனைவியாக இருந்தாலும், ஏற்கனவே கதீஜா(ரலி) அவர்கள் வபாத்தானதால் இரண்டு மனைவிகள்தான். இதிலும் மதீனாவிற்கு சென்ற பின்புதான் ஆயிஷா(ரலி) அவர்களுடன் குடும்பம் நடத்தியதால் இரண்டாவது மனைவியான மூதாட்டி ஸவ்தா(ரலி) அவர்களுடந்தான் வாழ்ந்தார்கள்.

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ஹிஜ்ரி 58ல் ரமலான் மாதத்தில், மதீனாவில் வபாத்தானார்கள்.

மேலதிக தகவல்: 

சிறுவயதுடையோரை திருமணம் செய்த கிறிஸ்த்தவ யூத அறிஞர்கள்.

புனிதர் அகஸ்டின் (கி.பி.354-439): கிறித்துவ இறையியல் கோட்பாட்டை உருவாக்கியதில் பெரும்பங்கு புனிதர் அகஸ்டினுக்கு உண்டு.
 அவர் ஒரு பத்து வயது பெண்ணுடன் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு 31 வயதாகியிருந்தது. அப்பெண்ணின் உடல் முதிர்ச்சி அடைவதற்காக இரண்டு வருடங்கள் அவர்காத்திருந்தார். பிறகு அவள் புனிதர் அகஸ்டினிடம் பன்னிரண்டு வயதில் குடும்பவாழ்வைத் தொடங்கினாள்.
 கிறித்துவர்களால் மிகவும் புனிதப்படுத்தப்படும் அகஸ்டினே ஒரு பத்து வயது சிறுமியை மணந்திருக்கும் போது, எப்படி கிறித்துவர்கள் நபி முஹம்மது ஆயிஷாவைத் திருமணம் செய்ததைத் தாக்கிப் பேசுகிறார்கள்?

புனிதர்அக்னஸ்: இப் பெண்மணி கிறித்துவ உலகில் மிகப்பிரபலம். கற்புக்கரசி என்று இவரைப் போற்றுவர். இவருக்குத் திருமணம் நடந்த போது பன்னிரண்டு வயதுக்கும் கீழ் இருந்தார்.
 ஒரு விதத்தில் ஆயிஷாவின் வயதுக்குச் சமமானவயதில் இவரின் திருமணம் நடந்தது. உண்மை இவ்வாறிருக்க முஸ்லிம்களின் விவகாரத்தில் எப்படித்தான் கிறித்துவர்களால் மூக்குநுழைக்க முடிகிறது?

டொமஸ்டிக்சர்ச்டாட்காம் (Domestic-Church.com) கூறுகிறது: அக்னஸ் எனும் பெயருக்கு கிரேக்கமொழியில் கற்பு அல்லது தூய்மை என்றும், இலத்தீன் மொழியில் ஆட்டுக்குட்டி அல்லது பாதிக்கப்பட்டவர் என்றும்பொருள். அக்னஸை தூய்மைக்குக் காவல் பெண்ணாக திருச்சபை கருதுகிறது.  ஆரம்பக்காலத்தில், அதாவது கி.பி. 303 மார்ச் காலகட்டத்தில், தியோகிளிடேன் என்கிற மன்னன் கிறித்துவர்களை நசுக்கி அடக்கி முறை செய்தான். அவனால் கொல்லப்பட்டார் அக்னஸ். அவர் இறக்கும் போது பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயதுதான். (வயதில்கருத்து வேறுபாடும் உண்டு.) அவ்வளவு சிறியவயதிலும் அக்னஸின் அழகும் செல்வமும் ரோம் நகர சீமான்களை மிகவும் கவர்ந்து ஈர்த்தது.
 அவர்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள போட்டியிட்டார்கள்.(http://www.domestic-church.com/CONTENT.DCC/19980101/SAINTS/STAGNES.HTM)

ஆன்டெக்ஸை சேர்ந்த புனிதர் எட்விங்: அநாதைகளின் காப்பாளராக கிறித்துவர்கள் மிகவும் போற்றுவது புனிதர் எட்விகை.
 இப் பெண்மணி சிலேசியாவை ஆண்ட முதலாம் ஹென்ரிக்குப் பன்னிரண்டு வயதில் திருமணம் செய்விக்கப்பட்டார்.

காஸ்கியாவைச் சேர்ந்த புனிதர்ரிட்டா:  ஆதரவற்றவர்களின் காப்பாளராகக் கிறித்துவர்கள் போற்றும் இப்பெண்ணுக்கு ப்பன்னிரண்டு வயதில் பவ்லாமன்சினி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

இயேசுவின் சிலுவை மரணத்தின் போது இருந்தவராகச் சொல்லப்படும் புனிதர் மேரிக்குப்பதி மூன்றுவயதில் திருமணம் நடந்துள்ளது.

போர்த்து கீஸைச் சேர்ந்த புனிதர் எலிசபெத். இப் பெண்மணியைப் புனிதர் பிரான்சிஸ் உடைய மூன்றாம் கட்டளையின் காப்பாளர் என்பர். இவருக்கு ப்பன்னிரண்டு வயதில் திருமணம் நடந்துள்ளது.


மேலும் சிறு வயதினரை திருமணம் செய்தவர்கள்.

இரண்டாம்ரிச்சர்ட், இவர்தமது முப்பது வயதில் ஃபிரென்சு இளவரசி இசபெல்லாவை மணந்தார். அப்போது இசபெல்லாவுக்குவயது ஏழுதான். http://en.wikipedia.org/wiki/Isabella_of_Valois

மிலனின் டச்சசும், சாவாயின் பையின்காவும் பதிமூன்று வயதில் திருமணம் செய்துகொண்டார்கள். http://www.academia.edu/990174/Medieval_Marriage

தியோடோரா காம்னினா தமது பதிமூன்று வயதில் தம்மை விட இரண்டு மடங்கு வயதான மன்னர் மூன்றாம் பால்ட்வின்னை மணந்துகொண்டார். http://www.academia.edu/990174/Medieval_Marriage

மன்னர் முதலாம் அட்ரோனிகஸ்பைசாந்திய பேரரசின் மாமன்னர். அவர் தமது அறுபத்து நான்காம் வயதில் ஃபிரான்சைச் சேர்ந்த பன்னிரண்டு வயது அக்னஸைத் திருமணம் செய்தார். http://www.academia.edu/990174/Medieval_Marriage

போர்த்துகீஸைச் சேர்ந்த மன்னர் டெனிஸ் பன்னிரண்டு வயதான புனிதர் எலிசபேத்தை மணந்தார்.

இமோலா மற்றும் மோர்லியின் அரசர் கிரோலாமோ ரியாரியோ ஒன்பது வயதான கேட்டரின் ஸ்போர்சாவை மணந்தார்.

நவர்ரியின் மூன்றாம் ஜென்னி பதிமூன்றாம் வயதில் திருமணம் செய்துகொண்டவர். http://en.wikipedia.org/wiki/Jeanne_d'Albret

கியோவன்னி ஸ்போர்சா பதிமூன்று வயதான லுக்ரேசியா போர்கியாவை மணந்துகொண்டார். http://en.wikipedia.org/wiki/Giovanni_Sforza

நார்வேயைச் சேர்ந்த மன்னர் ஆறாம் ஹாகன் பத்து வயதான ராணி மார்கரேட்டை மணந்தார். http://en.wikipedia.org/wiki/Margaret_I_of_Denmark

எஸ்ஸெக்ஸைச் சேர்ந்த கவுன்ட் அக்னிசுக்கு மூன்று வயதிலேயே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. பன்னிரண்டு வயதில் திருமணம் நடந்தது. அப்போது மணமகனின் வயது சுமார் ஐம்பதாகும். http://en.wikipedia.org/wiki/Isabella_of_Angoul%C3%AAme

வேல்ஸ் நகரைச் சேர்ந்த இளவரசர் எட்வர்ட், ஃபிரென்ச் மன்னரின் மகள் இசபெல்லாவை மணந்தார். இசபெல்லாவுக்கு அப்போது வயது ஏழு.

இரண்டாம் ரோமனஸ் நான்கு வயதே ஆன பெர்த்தாவை மணந்துகொண்டார். பெர்த்தா இத்தாலியின் இளவரசியாவாள்.

செர்பியாவின் ஆட்சியாளர் ஸ்டீஃபன் மிலுட்டின் ஐந்தே வயதான சைமோனிஸ் என்ற சிறுமியை மணந்துகொண்டார். இச்சிறுமி பேரரசர் இரண்டாம் அன்ட்ரோனிக்ஸ் உடைய மகள். இவரை மணக்கும்போது ஸ்டீஃபனின் வயது ஐம்பதாகும்.

முதலாம் எட்வர்ட் ஒன்பது வயதான எலினாரை மணந்துகொண்டார்.

ஸ்ரெவ்ஸ்பரி சேர்ந்த ரிச்சர்ட், இவர் மன்னர் நான்காம் எட்வர்டின் மகன், நார்ஃபோல்க்கைச் சேர்ந்த ஐந்து வயதான அன்னி மவ்பிரேயை மணந்துகொண்டார். http://en.wikipedia.org/wiki/Richard_of_Shrewsbury,_1st_Duke_of_York

மேரி ஸ்டீவார்ட் தமது ஆறு வயதில் எட்டாம் ஹென்ரியைத் திருமணம் செய்துகொண்டார். http://en.wikipedia.org/wiki/Mary,_Queen_of_Scots


 
இஸ்லாத்தின் மீது வெறுப்பை விதைப்பதற்கு சிலரால் முன்வைக்கப்படும் விமர்சனங்களில் மிக முக்கியமானது நபிகளாரது திருமணம் பற்றியதாகவே இருக்கிறது. 

 தனி மனிதனாய் நின்று மிகப்பெரும் சாம்ராஜியத்தினை கட்டியெழுப்பிய ஒரு மா மன்னன் அவர், மற்றும் எதிரிகளிடம் இருந்து தனது கொள்கையை பாதுகாக்க யுத்தங்களை முன்நின்று நடாத்திய ஒரு போர்த் தளபதியும் ஆவார். இப்படிப்பட்ட மாமன்னனை பற்றி அன்றைய எதிரிகள் கூட அவரது ஒழுக்கத்தில் குறை கண்டது கிடையாது.  மாறாக அன்றைய எதிரிகள் கூட அவரது ஒழுக்கத்தை பின்பற்ற நினைப்பர்.

மா மன்னனாக வாழ்ந்த அவர் ஒரு பெண்ணையும் உரிமையின்றி தொட்டது கிடையாது, தவராக அனுகியதும் கிடையாது,  யாருடைய பொருளையும் அநியாயமாக அபகரித்தது கிடையாது , உண்மையை தவிர வேறு எதுவும் பேசியது கிடையாது, தனது உமிழ் 
நீரை துப்பும் போது  கூட அடுத்தவர்களை பாதிக்காவண்ணம் பார்த்து கொண்டவர், பெண் குழந்தைகள் பிறந்தால் கொண்று  புதைக்கும் தேசத்தின் பெண்களை அடிமைகளாக கையாண்ட சமூகத்தில் பெண்களுக்கு சொத்துரிமையை பெற்று கொடுத்தவர் , பெண்களுக்கு தனக்கு பிடித்த கணவனை தேர்ந்தெடுக்கும் திருமண உரிமையை உருவாக்கியவர், பெண்களுக்கு கனவன் பிடிக்கா விட்டால் விவாகரத்தை பெறும் உரிமை, கணவன் இறந்தால் மீண்டும் திருமணம் முடிக்கும் உரிமைகளை உண்டாக்கியவர், பெண்களுக்கான  கல்வியுரிமையை முகாமை செய்தவர் அந்த மாமனிதர் நபிகளார்.

 பெண்களுக்கான பாதுகாப்பையும் உலகுக்கு எடுத்து வைத்தவர். ஏன் தன்னை பின்பற்றுபவர்கள் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று அதற்கான சட்டத்தை ஏற்றியவர் அந்த மகத்தான மனிதர் நபிகளார். அவர்கள் மீது சுமத்தும் விமர்சனங்களில் ஒன்றே ஒன்று பலதார திருமணம் பற்றியது. 

அவ் நபிகளாரின் பலதார திருமணத்தை விமர்சிக்கும் பெண்ணியவாதிகள் நபிகளார் எந்த பெண்ணையாவது அப்பெண்ணின் விருப்பமின்றி மணந்தார் என ஒரு ஆதாரம் தரமுடியாது. ஆனால் ஆச்சரியம்  யாதேனில் அப் பெண்களில் ஒருவரேனும் நபிகளார் பற்றி சிறு விடயத்திலாவது தனக்கு அநீதி நடந்ததாக பதிவு செய்யவில்லை.

இப்படி இருக்க  நபிகளார் பலதார திருமணம் செய்தது பெண்ணியத்துக்கு எதிரானது என சிலரால் விமர்சிக்ப்படுகிறார்.   மேலும் அவர் காமத்தின் விளைவாகவே திருமணம் புரிந்ததாகவும் விமர்சிக்கின்றனர். 

அதற்கான பதிலை தொகுத்து பார்த்து வருகிறோம் . 

காமத்துக்காக மணம் முடித்ததாக அவதூறு சுமத்தும் அம்மனிதர் தனது 25 தொடக்கம் 50 வயது வரை தன்னை விரும்பிய ஏற்கனவே 2 திருமணமும் 3 குழந்தைகளுமுடைய கதிஜா எனும் விதவையுடன் வாழ்ந்தார் என்பது இவ் அவதூறுக்கு சம்மட்டி அடி அல்லவா?

சரி முதல் மனைவி இறந்ததும் இச்சையை அடக்க முடியாதவர் என இன்றைய போலி நவீன பெண்ணியவாதிகளாள் அவதூறு சுமத்தப்படும் அந்த மா மனிதர் தனது 50 வயதில் மீணடும் தன்னை விட மூத்த ஆதரவற்று இருந்த 5 குழந்தை உடைய விதவை பெண்ணுக்கு  தனது ஆதரவை வழங்கி மனதால் இன்னும் தான் உயர் மனிதன் என நிறுபித்து  காட்டினார்.

3ன்றாவதாக தனது மார்க்கத்தை இன்று எமது கையில் ஒப்படைக்க தான் ஒரு மிகச்சிறந்த  புத்திசாலி என நிரூபிக்க 3ம் திருமணத்தை ஆயிஷா அம்மையாருடன் செய்து தான் ஒரு தீர்க்கதரிசி என்பதை நிரூபித்தார்.

இதனை அடுத்து தனது 56 வது வயதில் நடந்த ஹப்ஸா(ரலி) எனும் மீண்டும் ஒரு விதவை மறுமணத்தை செய்து விதவைகளுக்கான உரிமை முழக்கத்திற்கு மீண்டும் வழிசமைத்தார் நபிகளார்.

  நபிகளாருடைய 4வது திருமணம் ஏன் எதற்கு என்பதை  விபரமாக பார்ப்போம்

அன்னை ஹப்ஸா(ரலி) அவர்களை பெருமானார் நபி(ஸல்) அவர்கள் மணந்தபோது அன்னையின் வயது 22, நபிகளாரின் வயது 56.

அன்னை ஹப்ஸா(ரலி) அவர்கள் இரண்டாவது கலிஃபாவும், நபிகளாரின் நெருங்கிய தோழருமான உமர்(ரலி) அவர்களின் மகளார் ஆவார்கள்.

நபிகளாருடைய மனைவிகளில் எழுத வாசிக்க தெரிந்த ஒரு சிறந்த ஆளுமையாக இருந்தார். ( அபுதாவுத் 3887)

அன்னை அவர்களின் கணவர் குனைஸ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) (புகாரி 5122). அவர்கள் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்று அபிஷீனியா மற்றும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்கள். பத்ரு மற்றும் உஹுது போரில் பங்கெடுத்தவர்கள். உஹுது போரில் கணவரும், மனைவியும் பங்கு கொண்டார்கள் என்பது சிறப்பு. உஹது போரில் ஏற்பட்ட காயம் காரணமாக சில நாட்களில் வபாத்தானார்கள். ஜன்னதுல் பக்கீயில் அடக்கம் செய்யப்பட்ட அவர்களுக்கு நபி(ஸல்) அவர்களே ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். அப்போது அன்னை ஹப்ஸா(ரலி) அவர்களின் வயது 21. தனது மகள் விதவையாக உள்ளாரே என்று கவலை கொண்ட தந்தை உமர்(ரலி) அவர்கள், உஸ்மான்(ரலி) அவர்களை சந்தித்து தனது மகளை திருமணம் செய்து கொள்ள கேட்டுக்கொண்டார்கள். அதற்கு அவர்கள் பிடி கொடுக்காததால், அபூபக்கர்(ரலி) அவர்களை சந்தித்து தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு கொண்டார்கள். அவர்களும் மெளனம் சாதிக்கவே, தனது நிலமையை நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். கவலை தேய்ந்த தனது நண்பரின் முகத்தை பார்த்த நபி(ஸல்) அவர்கள் தானே அவர்களை மணமுடித்து கொள்வதாக அறிவித்தார்கள். (புகாரி 4005)

 இச் செய்தியை கேள்வியுற்ற உமர்(ரலி) அவர்கள் சந்தோஷத்தின் விளிம்பிற்கே சென்றார்கள். தனது நன்றியை தெரிவிக்கும் முகமாக நபி(ஸல்) அவர்களின் கைகளை பற்றி முத்தமிட்டார்கள்.(தபகாதுல் குப்ரா)

இங்கு கவனிக்க வேண்டியது தனக்காக இஸ்லாத்தை ஏற்று அதனை தூக்கி நிறுத்த துணைநிண்ட மற்றும் தனது மரணத்திற்கு பின் துணை நிற்க போகின்ற  தோழர் உமர் தனது மகள் விதவையானதை நினைத்து கவலை கொள்வதை கண்டு அதற்கு ஆறுதலாக இத்திருமணம் நடைபெறுகிறது. இருந்த போதிலும் இத் திருமணத்தின் மூலம் உமர் (ரழி)யின் கவலை நீங்கியது மட்டுமல்லாது  நபிகளார் உமருடனான உறவை உறுதிப்படுத்தி கொள்கிறார்.  இது நபிகளாருடைய அரசியல்  ஞானம் எவ்வளவு முன்மாதிரி மிக்கது என்பது புலனாகிறது .

 மேலும் அன்னை ஹப்ஷா அவர்கள் வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்க கீழ் உள்ள காரணமும் முக்கியமானது . ஒன்று திரட்டப்பட்ட குர்ஆனின் பிரதிகள் அபூபக்கர்(ரலி) அவர்களிடம் இருந்தது, அவர்கள் மரணம் அடைந்ததும் உமர்(ரலி) அவர்கள் வசம் இருந்தது. அவர்கள் மரணம் அடைந்ததும் அவர்களது மகளாரும், நபி(ஸல்) அவர்களின் மனைவியுமான அன்னை ஹப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அதிகமாக நோன்பு வைப்பவராக  மக்களிடத்தில் பிரபலமானார்கள். 
'ஹப்ஸா (ரலி) அவர்கள் மரணமாகும் வரை நோன்பு நோற்றார்கள்" 
என்று நாபிஃ (ரஹ்) அறிவிக்கும் செய்தியை இமாம் இப்னு ஸஃத் 
(ரஹ்) தனது 'தபகாதுல் குப்ரா" எனும் நூலில் பதிந்துள்ளார்கள்
(பாகம் 8, பக்கம்: 287). 

இவர்களுக்கும் நபிகளாருக்கும் குழந்தை ஏதும் பிறக்கவில்லை.

தனது மகள் ஹப்ஸா(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களது இல்லத்தில் பார்க்கும் போது எல்லாம், உமர்(ரலி) அவர்கள், “ஹப்ஸாவே, நீங்கள் ஆயிஷா(ரலி) அவர்களுடன் போட்டி போடாதீர்கள். அவர்கள் உங்களை காட்டிலும் பலவகைகளில் சிறந்தவர்கள், மேலும் அவர்களுடன் அன்பாகவும், மரியாதையாகவும், பண்பாடாகவும் நடந்து கொள்ளுங்கள்” என்று,  அறிவுறுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அன்னை ஹப்ஸா(ரலி) அவர்கள் ஹிஜ்ரி 45ம் ஆண்டு வபாத்தானார்கள்.

இவர்கள் மூலம் 60 நபிமொழிகள் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அன்னையவர்கள் ஹிஜ்ரி 45இல் ஷஃபான் மாதம் தம்முடைய 65வது வயதில் நோன்பு நோற்ற நிலையிலேயே தம் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). ஹாகிம் மர்வான் இப்னு ஹகம் அவர்கள் ஜனாஸாத் தொழ வைத்தார்கள். ஜன்னத்துல் பகீஃகில் அன்னாரது புனித உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. ((நூல் : ஸர்கானி, பாகம் – 03, பக்கம் – 236, 238)

இப்படி வரலாற்றில் நபிகளாரை அன்னை திருமணம் முடிக்காவிட்டால் இத்தணை சிறப்புக்களும் கிடைத்து வாழ்ந்திருக்க மாட்டார். நபிகளாரின் மனைவி என்பதாலேயே இந்த அனறைய விதவை உலகம் அழியும் வரை அழியா சிறப்புக்கு சொந்தக்காரியாக மாறினார்.

நவீன பெண்ணியம் பேசி விமர்சிக்கும் உத்தமர்களே இத்திருமணத்தில் என்ன காமத்தை கண்டீர்கள்?


நபிகளாரின் 5 வது திருமணத்தில் உள்ள முன்மாதிரியை பற்றி புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

நபி(ஸல்) அவர்கள் அன்னை ஸைனப் பிந்த் குஸைமா அவர்களை  மணமுடித்த போது அன்னை அவர்களின் வயது 30. 

இஸ்லாம் முளைவிடத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் மக்காவில் இறை நிராகரிப்பாளர்களால் தொடுக்கப்பட்ட எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து இஸ்லாத்தில் இணைந்து கொண்ட முதன்மையானவர்களின் அணியில் அன்னையவர்களும் ஒருவராவார்கள்;.

மேலும் அன்னையவர்கள் அன்றே தர்ம சிந்தனையுடைவர்களாகத் திகழ்ந்தார்கள் இஸ்லாத்திற்குள் நுழைந்தப் பிறகு வாரி வழங்குவதில் இன்னும் அதிகமதிகமாக ஈடுபட்டார்கள். 

அன்னை ஜைனப் ரழி அவர்கள் அறியாமைக் காலத்தில் உம்முல் மஸாகீன் ( ஏழைகளின் தாய் ) என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டார்கள் . இவர்கள் ஏழை , எளியவருக்கு மற்றவர்களை விட அதிகம் உணவளிப்பவர்களாக இருந்ததால் இந்த சிறப்பு கிடைத்தது.
(நூல் : அல் இஸாபா 11230)

அன்னை அவர்கள் முதல் கணவர் துபை பின் ஹாரிஸ் – இவர்கள் திடீரென மரணம் அடைந்ததும், அவரது சகோதரர் உபைதா பின் ஹாரிஸ்(ரலி) அவர்களுக்கு மணம் முடித்து கொடுக்கப்பட்டார்கள் – அவர்கள் பத்ரு போரில் வீரமரணம் அடைந்து ஷஹீதானார்கள்.(அல் இஸாபா 11230)

 அதன் பிறகு அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ்(ரலி) அவர்களுக்கு மனைவியானார்கள் – இவர்களும் உஹது போரில் வீரமரணம் அடைந்து ஷஹீதானார்கள். மூன்று முறை திருணம் நடந்தும் மீண்டும் விதவை – அவர்களையே நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு புனித ரமழான் மாதத்தில் மணமுடித்தார்கள்.(அல் இஸாபா 11230)

வரலாற்றுப்பிரசித்திப் பெற்ற உஹது யுத்தத்தில் ஏராளமான இறைவிசுவாசிகள் (நபித்தோழர்கள்) கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள். இதனால் ஏராளமான இறைவிசுவாசிகளான பெண்கள் விதவையானார்கள். பலதாரமணம் மட்டும் அன்று நடைமுறையில் இருந்திருக்காவிடில் இறைவிசுவாச இளம் விதவைகளுடைய நிலையும் அவர்களுடைய குழந்தைகளின் நிலையும் மிகவும் பரிதாபகரமாக இருந்திருக்கும் .

அன்றைய காலத்தில் போர்க்களங்களில் ஷஹீதாக்கப்படுகின்ற போர் வீரர்களுடைய மனைவிமார்களை எஞ்சியிருக்கும் நபித்தொழர்கள் போர்வீரர்கள் மணமுடித்துக் கொள்வது வழமையாக இருந்து வந்தது அதனடிப்படையில் அண்ணலார் அவர்கள் உஹது யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் (ரலி) அவர்களுடைய அன்பு மனைவியும் ஆரம்பகால இறைவிசுவாசியுமாகிய அன்னை ஜைனப் பிந்த் குஸைமா(ரலி) அவர்களை மணமுடித்துக் கொள்ள முடிவு செய்தார்கள்.

ஹிஜ்ரி நான்காம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதத்தில் அன்னை அவர்கள் வபாத்தானர்கள் – அதாவது, எட்டு மாதங்கள் மட்டுமே நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் வாழ்ந்துள்ளார்கள்.(அல் இஸாபா 11230)

ஏற்கனவே  3 திருமணம் செய்த பெண்ணை ஒரு மாமன்னரான நபிகளார் விதவையான நிலையில் பொறுப்பெடுத்து கொண்டது அன்றைய சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தை உண்டுபண்ணியது. 

நபிகளாரை அன்றைய காலப்பகுதியில் அச்சொட்டாக பின்பற்றும் பல்லாயிரக்கணக்கான தனது தோழர்களிடத்தில் விதவைகள் மறுமணத்தின் தேவையை நபிகளார் மிக துள்ளியமாக தனது திருமண வாழ்வின் மூலம் எடுத்துரைத்தார்கள். 

பெண்களை உடலியல் தேவைக்காக மாத்திரம் பயன்படுத்திய சமூகத்தை பெண்களின் உரிமைக்காகவும் விதவைகள் மற்றும் விதவைகளின் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கான சமூகமாக மாற்ற முன்னெடுத்த முன்மாதிரி திருமணங்களே நபிகளாருடைய அனைத்து திருமணங்களும்.

மாதவிடாய் பெண்களை பார்த்தால் தீட்டு , அவர்களை தொட்டால் தீட்டு, கணவன் இறந்ததும் உடன் சாகும் பெண்களே கற்புக்கரசிகள் மற்றும்  திருமணத்திற்கு பெண்ணின் கன்னித்தன்மையே முக்கியம், பிள்ளைகள் உள்ள விதவைகள் திருமணம் முடிக்க தகுதியற்றவர்கள்,  கணவனை இழந்த பெண்கள் வாழ்வாதாரத்திற்கும் தனது உடல் தேவைக்கும் விபச்சாரம்தான் வழி, வயது முதிர்ந்த பெண்கள் திருமணம் முடிப்பது தவறு என இன்றைய நவீன காலத்தில் கூட நடைமுறையில் உள்ள பெண் அடிமைத்தனத்தை 1400 வருடங்களுக்கு முன் ஒரு சிறந்த தலைவன் அன்றைய அறியாமை சமூகத்தில்  உடைத்தெரிய தனது வாழ்வில் ஒருவரை (ஆயிஷா (றழி)) தவிர அனைத்து திருமணங்களையும்  குழந்தைகளை உடைய விதவைகளுடனே நடாத்தி காட்டி மிக மேலனா புரட்சிக்கு அடித்தளமிட்டார்.

ஆனால் தங்களை பெண்ணிய பாதுகாவலர்களாக காட்டி கொண்டு நபிகளாரை விமர்சிக்கும் ஒருவர் கூட அல்லது அவர்களது ஒரு தலைவர் ஒருவர்  கூட ஒரு விதவையை கரம்பிடித்தவர்களாக இருக்க மாட்டார்கள்.  மாறாக இவ் போலி பெண்ணிய வாதிகள் பெண்களின் ஆபாச உடைகளை பெண் உரிமை என்ற பெயரில் ஆதரவளித்து தனது ஆண் காமத்தை தீர்க்கும் உத்தியாக பெண்ணியத்தின் வார்த்தைகளை கொள்கையாக பேசிக் கொள்வர்?  ஆனால் அவர்களதூ செயற்பாட்டில் பெண்களை சமூக பட்டாம்பூச்சிகளாகவும் அழகு பொம்மைகளாகவும் மாற்றிக் ஆண்களுக்கு விருந்தாக்க பாடுபடுவர்.

இன்றைய உண்மையான பெண்ணியத்தை பேசும் பகுத்தறிவாளர்களுக்கு நபிகளாரை தவிர மிகச்சிறந்த ஒரு தலைமை யாரும் இருக்க முடியாது என்பது நபிகளாரது வாழ்வை முழுமையாக ஆராய்ந்து கற்றவர்களுக்கு புரியும். 

முஸ்லிம்களுக்கு 4 திருமணங்களே ஒரே காலப்பகுதியில்  அனுமதிக்கப்பட்டதாயிருக்கிறது. (கட்டாய கடமையல்ல மாறாக அனுமதி உண்டு) (குர்ஆன் 4: 3)  

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடுமின்றி திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக   கூறப்பட்டுள்ளது.  இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது.(குர்ஆன்(33:50))

இவ்வசனத்தை மேற்கோள் காட்டி அதிகமான பெண்களுடன் வாழ்வதற்காக அதாவது காம உணர்வுக்காக முஹம்மது நபி தமக்கு வசதியான இந்தச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டார் என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

இவ் விமர்சனத்திற்கான பதிலை பார்ப்போம்.

தனக்கு வசதியான சட்டங்களைத் தனக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள் என்ற வாதம் முற்றிலும் தவறாகும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சிறப்பாக இன்னும் பல சட்டங்கள் உள்ளன. அவை யாவும் அவர்களுக்கு மட்டும் அதிகச் சிரமத்தைச் சுமத்துபவையாக உள்ளன.

 ஜகாத் எனும் அரசுக் கருவூலத்திலிருந்து தேவையுள்ளவர்கள் உதவி பெறலாம் என்று சட்டம் கொண்டு வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும், தமது குடும்பத்தினரும் அரசுக் கருவூலத்தில் இருந்து எதையும் பெறுவது கூடாது என்ற விதியை ஏற்படுத்திக் கொண்டார்கள். 

மேலும்  தமது மரணத்துக்குப் பின் தமது வழித்தோன்றல்கள் யாரும் ஜகாத் நிதியில் உதவி பெறக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தார்கள்.

தமக்குச் சொந்தமான உடமைகள் அனைத்துக்கும் தமது வாரிசுகள் உரிமை கொண்டாடக் கூடாது; அரசாங்கத்தில் சேர்த்து விட வேண்டும் என்று தனக்குப் பாதகமாக சிறப்புச் சட்டம் போட்டார்கள்.

 தாமும், தமது பரம்பரையினரும் யாரிடமும் எக்காலத்திலும் தர்மம் பெறக் கூடாது என்பதும் அவர்கள் தமக்காகப் போட்டுக் கொண்ட சிறப்புச் சட்டங்களில் இன்னும் ஒன்றாகும்.

மற்றவர்கள் ஐந்து நேரம் தொழ வேண்டுமென்றால் தமக்கு மட்டும் நள்ளிரவில் தொழும் ஆறாவது தொழுகையை மேலதிகமாகக் கடமையாக்கிக் கொண்டார்கள்.

இரவு, பகல் 24 மணி நேரமும் மற்றவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்து விட்டு அந்தச் சிரமத்தைத் தமக்கு மட்டும் சுமத்திக் கொண்டார்கள்.

இப்படி பல விஷயங்களில் அவர்கள் தமக்கு மட்டும் சிறப்புக் சட்டமாக அறிவித்தவை சலுகைகளாக இருக்கவில்லை. அவர்களுக்குச் சிரமமானவைகளாகவே இருந்தன.

மேலும் தம்மை இறைவன் கண்டித்ததாக அவர்கள் அறிவித்த பல வசனங்கள் அவர்களின் கவுரவத்தைப் பாதிக்கும் வகையில் இருந்தன. அவை அனைத்தையும் மக்கள் மத்தியில் வைத்தார்கள்.

இப்படி வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகமான பெண்களை அனுபவிக்க தமக்கு வசதியான சட்டங்களைப் போட்டுக் கொண்டார்கள் என்று சொல்ல எந்த நியாயமும் இல்லை.

இறைவன் அவர்களைக் கண்டித்தால் அதையும் மக்களிடம் சொல்கிறார்கள். கூடுதல் சுமையை இறைவன் சுமத்தினால் அதையும் ஏற்றுக் கொண்டு மக்களிடம் சொல்கிறார்கள். அது போல் மனைவியர் விஷயத்தில் கட்டுப்பாடு இல்லை என்ற சட்டமும் இறைவன் புறத்திலிருந்து வந்ததால் அதையும் மக்கள் மத்தியில் சொல்லி விடுகிறார்கள்.

ஒரு நேர்மையான தூதுத்துவத்தை இறைவனுக்கும் மக்களுக்கும் இடையில் எடுத்துவைத்தார்.

மேலும் முஹம்மது நபியவர்கள் தமது வாழ்நாளின் கடைசி ஐந்து ஆண்டுகளில் உலகின் மிகப்பெரும் சக்தி வாய்ந்த வல்லரசின் அதிபராக இருந்தார்கள். 

அன்றைய சமூகத்தில் மன்னர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தது. பெயருக்கு ஓரிரு மனைவியரை வைத்துக் கொண்டு எண்ணற்ற பெண்களை வகைவகையாக அந்தப் புறத்தில் வைத்துக் கொண்டு மன்னர்கள் சல்லாபம் செய்தனர். அப்படிச் செய்திருந்தால் அன்றைக்கு யாரும் குறை சொல்ல முடியாது.

அப்படி நபிகளார் நடந்து கொள்ளவில்லை. முறைப்படி உலகறிய அறிவித்து விட்டு திருமணம் செய்தார்கள். மேலும் காம உணர்வு மேலோங்கியவர்கள் எந்தத் தரத்தில் உள்ள பெண்களை மணமுடிக்க விரும்ப மாட்டார்களோ அந்த நிலையில் உள்ள பெண்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) திருமணம் செய்தார்கள்.

இது பற்றிய முழு விபரத்தை அறிந்து கொள்ளும் ஒருவர் நபிகள் நாயகம் செய்த பல திருமணங்களைக் குறை சொல்ல மாட்டார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறியின் காரணமாக பல திருமணங்களைச் செய்யவில்லை என்று நிச்சயமாக நம்மால் சொல்ல முடியும். ஏனெனில், அவர்கள் பிறந்தது முதல் தம்மை இறைத்தூதர் என்று அறிவிக்கும் வரை சொந்த ஊரிலேயே வாழ்ந்தார்கள்.

எந்தவொரு மனிதனும், தன்னுடைய நாற்பது வயது வரை அப்பழுக்கில்லாமல் வாழ்வது சாத்தியக் குறைவானதாகும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாவது வயதில் தம்மை இறைத்தூதர் என்று மக்களிடம் சொன்ன போது, அதை நிரூபிப்பதற்கான முக்கியச் சான்றாக, தம்முடைய முந்தைய வாழ்க்கையைத் தான் முன்வைத்தார்கள்.

"உங்களுடன் பல ஆண்டுகள் நான் வாழ்ந்திருக்கிறேன். என்னிடம் தரங்கெட்ட எந்தச் செயலையாவது நீங்கள் கண்டதுண்டா? 40 ஆண்டுகள் கட்டுப்பாடான, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்த நான் பொய் சொல்வேனா?' என்ற அடிப்படையில் தான் தமது நம்பகத் தன்மையை மக்களிடம் நிரூபித்தார்கள். ( உதாரமாக ஷபா மலையில் நபிகளார் முதன் முதல் பகிரங்கமாக பொது மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து வைத்த போது தனது உண்மையையும் நேர்மையையுமே முன்னிருத்தினார்  (புகாரி ,முஸ்லிம் , திர்மிதி,பத்ஹூல் பாரி)

தம்மை ஆரம்பம் முதல் கண்டு வந்த அந்த மக்கள் மத்தியில் அந்த அளவு ஒழுக்கமான வாழ்வை நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்ததால் தான் இப்படி அவர்களால் அறைகூவல் விட முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையை ஏற்காதவர்கள் கூட, இஸ்லாம் புது மார்க்கம் என்பதற்காக எதிர்த்தார்களே தவிர, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடத்தையில் ஐயம் எழுப்பி யாரும் எதிர்க்கவில்லை.

பாலியல் குற்றங்களைச் செய்யத் தூண்டும் இளம் பருவத்தில் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்தவருக்கு, 60 வயதில் திடீரென்று பெண் மோகம் ஏற்பட்டிருக்குமா என்று சிந்தித்தாலே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்ததற்குக் காம எண்ணம்  காரணமல்ல என்பதை விளங்கலாம்.

இந்த உண்மையைக் கவனத்தில் கொண்டு மாற்றாரின் விமர்சனத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தையும் நாம் அலச வேண்டும்.

நபியவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் முதல் திருமணம் செய்தார்கள். இருபத்தைந்து வயதுக்கு முன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு அதிசயமான வாழ்க்கை. எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத பரிசுத்த வாழ்வு அவர்களுடையது. தன் வயதொத்த இளைஞர்களுடன் சேர்ந்து பெண்களைப் பற்றி விமர்சனம் கூட செய்துவிடாத தூய வாழ்வு அவர்களுடையது. பெண்களுடன் தகாத முறையில் சல்லாபம் செய்வது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்ட அந்த அறியாமைக் காலத்தில் அவர்கள் மட்டும் - அவர்கள் மட்டுமே - இந்த அற்புத வாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தார்கள்.

அவர்கள் தம்மை இறைத்தூதர் என்று பிரகடனம் செய்த போது முதல் ஆதாரமாக தமது அப்பழுக்கற்ற நாற்பதாண்டு கால தூய வாழ்வைத் தான் அவர்கள் முன்வைத்தார்கள்.

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

தம்மை இறைத்தூதர் என்று வாதிட்ட நாற்பதாம் வயது வரை அவர்கள் பெண்கள் விஷயம் உட்பட அனைத்திலும் குறை சொல்ல முடியாத வாழ்க்கை வாழ்ந்துள்ளதில் இருந்து அவர்கள் காமவெறி காரணமாகப் பல திருமணங்களைச் செய்தார்கள் என்பது அடிப்படை அற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கையைப் பிடித்து இழுத்தார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கடைக் கண்ணால் பார்த்தார்கள் என்ற அளவாவது அவர்களால் கூற முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. எதிரிகளாலும் விமர்சிக்க முடியாத பரிசுத்த வாழ்வு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையது.

தாய், தந்தையின்றி வளரும் குழந்தைகள் தறுதலைகளாகத் திகழ்வதுதான் இயல்பு. தாய், தந்தையின்றி வளர்ந்த நபியவர்களுக்கு கெட்டுப் போவதற்கான எல்லா வசதியும் அன்றைய சமூகத்தில் இருந்தது. அன்றைய சூழ்நிலை கெட்டுப் போவதற்கான எல்லா வாசல்களையும் திறந்து விட்டு வாய்ப்புக்களைத் தாராளமாக வழங்கியிருந்தது. இந்த நிலையிலும் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி கொண்டவராக இருந்தார்கள் என்ற விமர்சனத்தை இது பொய்யாக்கி விடுகின்றது.

தமது இருபத்தைந்தாம் வயதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து கொண்ட முதல் திருமணம் கூட அவர்கள் காம வெறி கொண்டவர்களாக இருந்ததில்லை என்பதை உணர்த்தும்.

இருபத்தைந்து வயதில் ஆணழகராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பருவத்தில் எவரும் ஆசைப்படக்கூடிய கட்டழகுக் கன்னியை மணக்கவில்லை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு விதவையாகவும், நபியவர்களை விட பதினைந்து வயது அதிகமாகவும் இருந்த நாற்பது வயது கதீஜா (ரலி) அவர்களை மணம் செய்து கொள்கிறார்கள்.

 காம உணர்வுக்காக பல திருமணம் செய்வது அவர்களின் நோக்கமாக இருந்தால் நாற்பது வயதுக்கு முன்னர் பல மனைவியருடன் வாழ்வதைத் தேர்வு செய்திருப்பார்கள். ஆனாலும் தமது ஐம்பது வயது வரை அறுபத்து வயதுப் பெண்ணுடன் மட்டுமே வாழ்ந்தார்கள் என்பதே அனைத்து விமர்சனங்களுக்கும் தக்க மறுப்பாக அமைந் துள்ளது.

காம உணர்வு மேலோங்கிய ஒருவர் தனக்கென ஒரு மனைவி இருக்கும் போது பல நாட்கள் ஊருக்கு வெளியே உள்ள ஒரு குகையில் போய் தனியாக தவம் இருப்பாரா? நாற்பதாம் வயதில் அவர்கள் தனிமையில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்ததும் அவர்கள் காம உணர்வில் மிஞ்சியவர்களாக இருக்கவில்லை என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

கதீஜா அவர்கள் மரணித்த பின் ஸம்ஆ என்பாரின் மகள் ஸவ்தா அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவரைப் பற்றிய முக்கியமான விபரங்களை அறிந்து

இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். 

ஆடுத்து தனது 56 வது வயதில் நடந்த ஹப்ஸா(ரலி) எனும் மீண்டும் ஒரு விதவை மறுமணத்தை செய்து விதவைகளுக்கான உரிமை முழக்கத்திற்கு மீண்டும் வழிசமைத்தார் நபிகளார்.

அன்னை ஜைனப் பிந்த் ஜஹ்ஷ்(ரலி)

இந்த திருமணத்தை குறித்து விளக்கமாக சற்று எழுத வேண்டியது அவசியம் உள்ளது.

காரணம் நபிகளார் தனது மருமகளையே திருமணம் செய்தார்கள் என்று சில அதி புத்திஜீவிகள் அன்னை ஜயினப் ரழியின் திருமணத்தை விமர்சிப்பதுண்டு.

மேலும் இத்திருமணத்தில் உள்ள ஆழ்ந்த ஞானம் பற்றி புரிந்து கொள்ள அன்றைய அரபிகளின் சமூக கட்டமைப்பில் பின்பற்றப்பட்ட தீண்டாமை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

அன்றைய அரபிகளிடத்தில் அடிமைகளாக மனிதர்களை பயன்படுத்தும் முறைமை வழக்கத்தில் இருந்தது. அரபியர்களிடத்தில் அரபியர்கள் அல்லாதவர்கள் இழிவாக பார்க்கப்பட்டனர் .  அது மட்டுமல்ல அரபிகளிடத்திலும் குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள கோத்திர ரீதியான தீண்டாமையும் பின்பற்றப்பட்டு வந்தது  . உயர் கோத்திரமுடையவர்களுக்கு சமூகத்தின் உயர் பொறுப்புக்களும்  பதவிகளும் வழங்கப்பட்டன. (பத்ஹூல் பாரி, இப்னு ஹிஷாம்)

 அரபிகள் நிறத்தினால் இழிவானவர்களாக கருப்பினத்தவர்கள் கருதினர் , அரபிய வம்சத்தில் இல்லாத அடிமைகளில் உள்ளவர்கள் அரபியர்களை திருமணம் செய்வது  கூட அவ் அரபியர்களின் வம்சத்திற்கு அச் சமூகத்தில் அந்தஸ்த்து குறைந்துவிடும் என்று கருதினர். இவ்வகையாக அன்று வேரூன்றி இருந்த நிற, அடிமைத்தன தீண்டாமையை இஸ்லாம் அடியோடு அழித்தது . 

கருப்பரை விட வெள்ளையரோ, வெள்ளையரை விட கருப்பரோ சிறந்தவர் அல்லர், அரபியர்களை விட அரபி அல்லாதவர்களோ அரபி அல்லாதவர்களை விட அரபியர்களோ சிறந்தவர்கள்  அல்ல (அஹ்மத் 22391)
 என முழங்கி தீண்டாமையை தகர்க்க முயற்சித்தது இஸ்லாம். 

வெறும் கருத்துக்களாக மாத்திரம் இல்லாமல் இவ் தீண்டாமையை ஒழிப்பதற்கான  வழியாக நடைமுறையில் நபிகளாருடைய வாழ்க்கையும் முன்மாதிரியாக்கப்பட்டது. அரபிகளிடத்தில் எந்த கருப்பு நிறத்தவர்கள் வெறுக்கத்தக்கதாக கருதப்பட்டனரோ அவர்களை கொண்டு  புனித கஃபா மேலேரி அதான் ஒலிக்கசெய்து  அரபியர்கள் கூட ஒரு கருப்பினத்தவரது குரலுக்கு செவிசாய்க்கும் புரட்சியை உண்டுபண்ணியது இஸ்லாம்.

அந்த தீண்டாமை ஒழிப்பின் அடுத்த மைல்களால்தான் நபிகளாருடைய இத்திருமணம். சரி விரிவாக பார்ப்போம் வாருங்கள்..

நபிகளாருக்கு தூதுத்துவம் இறைவனால் வழங்க முற்பட்ட காலப்பகுதியில் சிறுவனாக இருந்த ஜைத்(ரலி) அவர்களை கதீஜா(ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி, பின்பு நபிகள்(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அடிமையாக இருந்த அவர்களை நபி(ஸல்) அவர்கள் விடுவிக்க தயாராக இருந்தும், ஜைத்(ரலி) அவர்கள் போக மனமில்லாமல், நபி(ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்வதையே தனது பாக்கியமாக கருத தொடங்கினார்கள். தனக்கு ஆண் வாரிசு இல்லையே என்ற ஏக்கத்தில் இருந்த நபி(ஸல்) அவர்கள், ஜைத்(ரலி) மீது பாசத்துடன் இருந்து, அவர்களை தனது வளர்ப்பு மகனாகவே பார்த்து வந்தார்கள். அதனால், ஜைத் இப்னு முஹம்மது என்றே அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
(அல் இஸாபா, புகாரி 4782)

ஜைனப் பிந்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரி உமைமா என்பவரது மகள். அதாவது நபி(ஸல்) அவர்களுக்கு முறைப்பெண்,  தனது வளர்ப்பு மகனான, ஜைத்(ரலி) அவர்களை திருமணம் செய்து கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் கூறியதும் ஜைனப்(ரலி) மறுக்கிறார்கள். ‘அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டால் முஃமினான எந்த ஆணுக்கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் தங்கள் காரியங்களில் சுய விருப்பம் கொள்ள உரிமை இல்லை. யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருக்கிறார். (அல் குர்ஆன் 33:36). இந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஜைனப் (ரலி) அவர்கள் ஜைதை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னு ஜரீர், இப்னு கஸீர் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஹிஜ்ரி முதல் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது

ஜைத்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவி இருந்தாலும், உயர்ந்த குலத்தில் பிறந்த ஜைனப்(ரலி) அவர்கள், ஒரு முன்னால் அடிமையை திருமணம் செய்து கொள்வது என்பது ஒரு முக்கியமான விஷயமாக அப்போது கருதப்பட்டது. காரணம் அடிமைகளை எஜமான்கள் கரம்பிடிப்பது குலத்திற்கும் தான் சார்ந்த கோத்திரத்தினதுக்கும் இழிவானது என எண்ணினர்.   எனினும் அக் காலகட்டத்தில் இவ் தீண்டாமைக்கு எதிராக இத் திருமணம் நடைபெற்றது.

 ஜைத்(ரலி) அவர்கள் சற்று முன் கோபம் உடையவர்களாக இருந்ததாலும், இவர்களது திருமணம் நிலைக்கவில்லை. (இப்னு ஜரீர்)

ஜைத்(ரலி) அவர்கள், விவாகரத்து கோரி, நபி(ஸல்) அவர்களிடம் வந்த போது, நபியவர்கள் அதனை தடுக்கிறார்கள். இதனை குறித்தும் இறைவசனம் இறங்கி உள்ளது. (அல்குரான் 33:37) இவர்கள் விவாகரத்தும் நடைபெறுகிறது. 

ஜைனப்(ரலி) அவர்கள், தனது விவாகரத்திற்கு பிறகு தனது கடமையான இத்தாவையும் பூர்த்தி செய்கிறார்கள். 

இதன் பின் நபிகளாரை ஜைனப் றழி கரம்பிடிக்கிறார்கள்... ஆம் ஓர் அடிமையை திருமணம் செய்ததால் ஜைனப் றழி இழிவானவராகவில்லை,.

அரபியர்களிடத்தில் சமூகத்தில்  அடிமையானவரை திருமணம் முடித்தது விவாகரத்து பெற்றவர் என்று இழிவாக பார்க்கும் சூழலில்  தனது உரிமையின் பிரகாரம் விவாகரத்தை பெற்றதால் தாழ்ந்து போகவில்லை  அப் பெண்.

 மாறாக இறைத்தூதரின் மனைவியாக சகல முஸ்லிம்களின் தாயாக வரலாற்றில் இடம்பிடித்தார் அன்னை ஜைனப். 

நபிகளாரும் அடிமை தீண்டாமைக்கு எதிராக  திருமணம் செய்த  மற்றும் விவாகரத்தை பெற்ற ஒரு பெண்ணின் வரலாற்றை அவரது வாழ்வில் திருமணம் மூலம் உலகறிய செய்து  தீண்டாமை புரட்சிக்கு முன்மாதிரியாக தானும் வழிகாட்டினார் .

இத்திருமணத்தில் இன்னுமொரு கொள்கை புரட்சி இறைவனால் வடிவமைக்கப்பட்டது .  அதனை தெரிந்து கொள்ள மீண்டும் ஜைத்(ரலி) அவர்களின் விசயத்திற்கு வருவோம். இஸ்லாத்தில் சுவீகாரம் என்பது இல்லை. என்னதான் ஒரு பிள்ளையை தத்து எடுத்து வளர்த்தாலும், அந்த பிள்ளை, அந்த பிள்ளையின் தந்தை பெயர் கொண்டே அழைக்கப்பட வேண்டும். என்பது அல்லாஹ்வின் கட்டளை. (33:4-5)

அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசை நீட்டிக்கவில்லை. பிறந்த மூன்று ஆண்மக்களையும் சிறு பிராயத்திலேயே எடுத்து கொண்டான். இப்போது ஜைத்(ரலி) அவர்கள் சுவீகாரப்பிள்ளையானதால், அல்லாஹ் அதனையும் நீக்குகின்றான்.

“உங்களுடைய சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கிவிடமாட்டான்” (33:4-5)

“முஹம்மத் உங்களில் உள்ள ஆடவர் எவருக்கும் தந்தை இல்லை” (33:40)

இப்போது அல்லாஹ் தனது திருமறையின் மூலம் தெளிவாக கூறிவிட்டான், ஜைத்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் மகனாகவோ, வளர்ப்பு மகனாகவோ இருக்கமுடியாது. தற்போது, நபி(ஸல்) அவர்கள், ஜைனப்(ரலி) அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்போது அன்னையவர்களின் வயது 38, நபி(ஸல்) அவர்களின் வயது 56

ஆனால் அன்றைய சமூகத்தில் தத்தெடுக்கும் பிள்ளைகள் சொந்த பிள்ளைகள் போன்று பார்க்கப்பட்டனர்,  இக் கொள்கை இஸ்லாத்தில் இல்லை. (இது சரியா பிழையா என்பதையும் இவ் கொள்கையின் பின்னணி பற்றியல்லாம்  வேறு பதிவில் விரிவாக விவாதிக்க எண்ணியுள்ளேன் இன்ஷா அல்லாஹ் . )

இச்சமயத்தில் இஸ்லாம் அச்சமூகத்தில் நடைமுறையில் இருந்த சுவிகாரத்தை எதிர்த்து அதனை முற்றாக தடுத்து வழிகாட்ட நாடி அதனை வலுப்படுத்த நபிகளாரின் வாழ்வில் இத்திருமணம் இறைவனால் முடிவு செய்யப்பட்டது.

ஏன் இந்த திருமணம் நடைபெற்றது என்பதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகின்றான்.

“…..அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ‘ஜைது, அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம். ஏனென்றால் முஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் (அவர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக இது நடை பெற்றே தீர வேண்டியது அல்லாஹ்வின் கட்டளையாகும்’ (அல்குர்ஆன் 33:37)
இப்பொழுது தெளிவாக நாம் ஒருவிசயத்தை புரிந்து கொள்ளவேண்டும் இந்த திருமணம், அல்லாஹ்வால் தீர்மானிக்கப் பட்ட திருமணம்.

சதிதிட்டங்களாலும், போரினாலும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை தோற்கடிக்க முடியாது என்று உணர்ந்து, நபிகளாரின் தனிப்பட்ட வாழ்க்கையை களங்கபடுத்தி வெல்லவேண்டும் என்று, இத்திருமணம் குறித்து அன்றைய எதிரிகள் அவதூறு பரப்பினார்கள். அதே போல் இப்போதைய காவி கயவர்களும், மேற்கத்திய கயவர்களும், பொய்யான பெண்ணியவாதிகளும், முன்னால் முஸ்லிம் கோமாளிகளும் இத்திருமணத்தை பற்றி அதிகம் ஆதரங்களை சரிபார்க்காமல் அவதூரு பேசுகிறார்கள் . 

ஒரு அடிமையை திருமணம் செய்து  தீண்டாமையை எதிர்த்து நிண்ற புரட்சி பெண்,  மற்றும்  விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு தனது மனைவியின் அந்தஸ்த்தின் ஊடாக மொத்த முஸ்லிம்களுக்கும் அன்னையான ஜைனப் ரழிக்குயை திருமணம்  செய்ததற்கு “நபி(ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் ஜைனப்(ரலி) அவர்களை மணமுடித்தபோது கொடுத்தது போன்று சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள்”(அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்(ரலி), புகாரி, முஸ்லிம்.) என்ற அளவுக்கு மன நிறைவுடன் பிறரை ஊக்கப்படுத்தினார் நபிகளார்.

ஜைனப்(ரலி) அவர்கள் தர்மம் செய்வதில் சிறந்து விளங்கினார்கள்.

“ எனக்குப் பின் எனது மனைவிமார்களில் ‘கை நீளமான’ பெண்ணே என்னை முதன் முதலில் சந்திப்பார்” என்று நபிகள்(ஸல்) அவர்கள்  நவின்றார்கள். இவர்களைத்தான்  நபியவர்கள் கை நீளமான பெண் (தர்மம் செய்வதில்) என்று குறிப்பிட்டார்கள். நபியவர்கள் கூறியபடியே நடந்தது.ஹிஜ்ரி 20ல் அன்னையவர்கள் வபாத்தானர்கள். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு, முதலில் மரணம் அடைந்தவர் அன்னை ஜைனப்(ரலி) அவர்களே
(புஹாரி :1420)

உமர் (ரலி) அவர்கள் முன்னின்று அன்னையவர்களுக்கு இறுதித் தொழுகை நடத்தினார்கள். அன்னையவர்களின் நெருங்கிய உறவினர்களான, உஸாமா பின் ஸைத் (ரலி), முஹம்மது பின் அப்துல்லா பின் ஜஹ்ஸ் (ரலி), அப்துல்லா பின் அபீ அஹ்மது பின்ட ஜஹ்ஸ் (ரலி) மற்றும் முஹம்மது பின் தல்ஹா பின் அப்துல்லா (ரலி) ஆகியோர் சேர்ந்து அன்னையவர்களின் உடலை மண்ணறைக்குள் வைத்து ஜன்னத்துல் பக்கீயில் நல்லடக்கம் செய்தார்கள்.

உண்மையான தீண்டாமையை எதிர்க்கும் புத்திஜீவிகளும் , "ஒரு பெண் விவாகரத்தை தேர்ந்தெடுத்து மறுமணத்தை முடிக்க நாடினால் அது அவள் உரிமை வேண்டினால் செய்யலாம்" என முழக்கமிடும் பெண்ணியவாதிகளும் பின்பற்ற  மிக தகுதியான தலைமையே நபிகளார் என்பது இத்திருமணத்தின் வாயிலாக உண்மையாளர்கள் புரிந்து கொள்வர். 

-உம்மு ஸலமா (ரலி) 

முகம்மது  நபி அவர்கள்  அன்றைய அரேபிய சமூகத்தில் இருந்த மூட நம்பிக்கைகளையும் கேவலமான பல சித்தாந்தங்களையும், மற்றும் நிற, பிறப்பின் அடிப்படையான தீண்டாமை கொள்கையையும் அடியோடு இறை வழிகாட்டலைக் கொண்டு அழித்தொழித்தார்கள். அன்றைய சமூகத்தில் தலைவிரித்தாடிய பெண் அடிமைத்தனத்தையும் , பெண்ணிய வன்முறைகளையும்  கூடவே முன்னின்று தகர்த்தார்.

இன்று வரை நம்மில் சிலர் ஒருவரை தாக்குவதற்காக அவன் சார்ந்த பெண்களின் உறுப்புக்கள், நிறம் , கற்பு பற்றிய வாழ்க்கையை சர்வ சாதரணமாக பயன்படுத்துவதுண்டு. ஏன் பெண்ணுரிமை பேசும் சில பொய்மைவாதிகள் கூட இன்று வரை பெண்களது உறுப்புக்களை கெட்டவார்த்தைகளாகவும் பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது , இன்னும் அதிகமாக ஒரு ஆணை தாக்க அவ் ஆணின் தாய்,மனைவி சகோதரிகளை இழுத்து பேசி தாக்குவதுமுண்டு, 

அதே நேரம் பெண் ஒருவரை விமர்சித்து வீழ்த்த அப்பெண்ணின் கற்பொழுக்கத்தை விமர்சிக்கும் பல மனிதர்கள் இன்றைய சமூகத்தில் கூட புத்திஜீவிகளாக தன்னை காட்டி வாழ்கின்றனர்.

இன்று கூட நடைமுறையில் இருக்கும் இவ்வாறான பெண்சார் வன்முறைகள் 1400 வருடங்களுக்கு முன் பல மடங்கு கூடிய நிலையாகவே இருந்தது என்பதற்கு வரலாறு சான்றாகிறது. 

 பெண் குழந்தைகளை கொல்வதும், பெண்களுக்கான உரிமைகளை மறுப்பதும் அன்றைய அரபு சமூகத்தின் கலாச்சாரத்தில் இயல்பான ஒன்று . அதனை பெண்களுக்காக மிக நுனுக்கமாக சீர்திருத்த சட்டங்களை நாடினார் நபிகளார் .

*பெண் குழந்தைகள் வரம் என்று பரைசாற்ற செய்தார் நபிகளார். 

ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து அவர்களை ஆதரித்து, இரக்கம் காட்டி, பொறுப்புடன் வளர்த்தால் அவருக்கு நிச்சயமாக சொர்க்கம் கிடைத்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தாலும்தான்! என்று கூறினார்கள். அவர்கள் ஒரு பெண் பிள்ளையைப் பற்றி கேட்டிருந்தால் ஒரு பெண் பிள்ளை இருந்தாலும்தான்! என நிச்சயமாகக் கூறியிருப்பார்கள் என அக்கூட்டத்தில் இருந்த சிலர் கருதினர்.
(அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : அஹ்மத் 13729)

*பிற மனிதனை தாழ்வாகவும் தன்னை உயர் குலமாகவுமாக நினைப்பதை கூட இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. தீண்டாமையை அன்றே அழித்தது...

 யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும், மக்களைக் கேவலமாக எண்ணுவதும்தான்" என்று கூறினார்கள்.
முஸ்லீம் 131

மேற்காணும் நபிமொழியில் நபி(ஸல்)அவர்கள் பிற மனிதர்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதுவதே எவ்வளவு பெரிய பாவம் ,நான் உயர்ந்தவன் பிற மனிதன் தாழ்ந்தவன் என்ற நினைப்பு ஒரு முஸ்லீமுடைய உள்ளத்தில் இருந்தாலே அவன் சொர்க்கம் செல்லமுடியாது என்று கூறியதிலிருந்தே இஸ்லாத்தில் தீண்டாமை எவ்வளவு பெரிய பாவச்செயலாக உள்ளததென்பதை அறியலாம்.

*மேலும் சஹாபி ஒருவர் பிலால்(ரலி) அவர்களை ‘கருப்பியின் மகனே’ என்று ஒரு சந்தர்பத்தில் பேச்சு வாக்கில் சொல்லி விட்டார். இந்த விசயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது, உடனே அந்த சஹாபியை அழைத்து, “உங்களிடம் இன்னும் அறியாமைக் கால குணம் போகவில்லை” என்று கண்டித்தார்கள் (புகாரி -30)

இப்படியா ஒரு தனி மனிதனை விமர்சிக்கும் போது கூட வார்த்தைகளால் கூட அவ் மனிதனின் தாயையோ, அல்லது அவரின் நிற பிறப்பினாலான குலத்தையோ விமர்சிப்பதை தடைசெய்தார் நபிகளார்.

தனது கொள்கைகளை முன்வைப்பதுடன் பெண்களுக்கான விடுதலைக்காக தனது வாழ்க்கையில் பல முன் மாதிரிகளை முன்வைத்து வாழ்ந்து கிட்டிய மிக நேர்மையான தலைவரும் அவர்தான்.

விதவை மறு வாழ்வுக்காக பேசிய முகம்மது நபியவர்கள் தனது திருமணத்தினூடாக பலருக்கு விதவை மறுமணத்தை செய்வதற்கான முன்மாதிரயை உருவாக்கினார்.

ஒரு திருமணத்தை தவிர மற்ற அனைத்து திருமணமும் விதவைகளையே திருமணம் செய்தார்கள் நபிகளார். 

தான் ஒரு முன் உதாரணமாக இருந்து கிட்டத்தட்ட 20 க்கும் குறைவில்லாத தனது மனைவிமார்களின் குழந்தைகளை (பிறருடைய) பராமரிப்பில் எடுத்து கொண்டார்கள் . தான் மணம் முடித்த அத்தனை விதவை பெண்களுக்கான உரிமையும் , மதிப்பையும் உலக தரத்திற்கு உயர்த்தினார்கள்.

எந்தளவு அவ் விதவைகள் மதிக்கப்பட்டார்கள் எனின் தன்னை பின்பற்றும் இன்றுவரையான அனைத்து முஸ்லிம்களும்களுக்கும் அவ் விதவை பெண்கள் தாய்மார்கள் என்ற  சிறப்பும் வழங்கினார்கள்.

இப்படி விதவைகளை சிறப்பிக்கும் மற்றும் விதவைகளது மறுமணத்தை சமூகத்தில் பழக்கத்துக்கு கொண்டுவருவதற்காக மீண்டும் தனது வயோதிப வயதில் ஒரு முன் மாதிரியை நிலைநாட்டுவதற்காக  4 குழந்தையுடைய வயது முதிர்ந்த விதவை பெண்ணை நபிகளார் தனது வாழ்வில் தன்னுடன் இணைத்து கொண்டார்.

அவர்தான் உம்மு ஸலமா (ரலி) அன்னையவர்கள், வரலாற்று சிறப்புமிக்க வீரப் பெண்மணி ஆவார்கள். பல யுத்தங்களில் நேரடியாக பங்கெடுத்தவர்கள். அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பல போர்களுக்குச் சென்றுள்ளார்கள். பனீ முஸ்தலக் போர், தாயிஃப் போர், கைபர், ஹுனைன் மற்றும் மக்கா வெற்றியின் பொழுதும் அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பொழுதும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இன்னும் பைத்அத்தும் செய்து கொண்டார்கள்.  ஒரு பெண்ணாக இருந்தாலும், தனது குழந்தைகளுடன் மட்டும் தன்னந்தனியாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்கள். அல்லாஹ், உதுமான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் மூலம் பாதிவழியில் உதவுகிறான்.

அபூஸலமா(ரலி) – அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்களின் பாசத்திற்குரிய கணவர் மேலும், பெருமானாரின் போர்படைத்தளபதிகளில் ஒருவர். இஸ்லாமிய வரலாற்றில் நடந்த முதல் ஹிஜ்ரத் – அபிஸீனியாவிற்கு புறப்பட்ட 16 பேர் அடங்கிய குழுவில் இந்த கணவனும், மனைவியும் அடங்குவர். மக்காவில் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற தவறான தகவலை நம்பி மக்கா திரும்புகிறார்கள். மக்கா மாறவில்லை என்றதும், மீண்டும் மதினாவிற்கும் ஹிஜ்ரத் மேற்கொண்டவர்கள்.அபூ ஸலமா ஊடாக 4 குழந்தைகளை உம்மு ஸல்மா றழி பெற்று கொண்டார்கள்.
(அல் இஸாபா 12061)

அன்னை அவர்களின் கணவர் அபூஸலமா(ரலி) அவர்கள் பத்ரு போர் மற்றும் உஹது போரில் பங்கு பெற்று சிறப்பு பெற்றவர்கள். இதில் உஹது போரில் அவர்களுக்கு கடுமையான காயம் ஏற்படுகிறது, உஹது போருக்கு பின்னர் 2 மாதத்தில் நடந்த பனூ அஸத் குலத்தவர் மீதான போரில், அபூஸலமா(ரலி) அவர்களின் கைகளில் இஸ்லாமிய கொடியை கொடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 150 போர் வீரர்கள் கொண்ட படைக்கு தலமைதாங்கி  அனுப்பி வைக்கிறார்கள். வெற்றியுடன் அபூஸலமா(ரலி) அவர்கள் திரும்பி வருகிறார்கள். இதிலும் அவர்களுக்கு கடுமையான காயம் ஏற்படுகிறது. மரணப்படுக்கையில் இருந்த அவர்களை நபி(ஸல்) சென்று பார்க்கிறார்கள். அபூ ஸலமா (ரலி) அவர்களுக்கு மரணம் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபூ ஸலமா (ரலி) அவர்களின் மீது கையை வைத்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ ஸலமா (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள், இன்னும் அபூ ஸலமா (ரலி) அவர்களும் இறைவனிடம் பிரார்தித்தார்கள், இறைவா! என்னைப் போலவே என்னுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கவனித்துக் கொள்கின்ற ஒருவரை, துணைவராக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள். இன்னும் உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு கவலையையும், கடினமான வாழ்வையும் தராத ஒருவரை அவருக்கு துணைவராக ஆக்கி வைப்பாயாக..! என்றும் தனது மனைவிக்காகப் பிரார்த்தித்தார்கள்.

ஒரு முறை அபூ ஸலமா ( ரழி )  அவர்களுடன் அன்னை உம்மு  ஸலமா  ( ரழி ) அவர்கள் வாழ்ந்த போது ,” என்னுடைய கட்டளைக்கு நீ கட்டுப்படுவாயா ?”  என்று அபூ ஸலமா ( ரழி ) கேட்டார்கள்.”  உங்களுக்குக் கட்டுப்படத் தானே நான்  உள்ளேன் “ என உம்மு ஸல்மா ( ரழி )  கூறினார்கள்.
 “ அப்படியானால் நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும் “ என்று கூறிவிட்டு , “ இறைவா ! எனக்குப் பிறகு உம்மு ஸலமாவிற்கு அவரை கவலை கொள்ளச் செய்யாத அவரை நோவினை செய்யாத , என்னை விடச் சிறந்த ஒருவரைக் கொடுப்பாயாக !” என்று பிரார்த்தனை செய்தார்கள் . அவர்கள் இறந்த போது , ‘ அபூ ஸலமாவை விடச் சிறந்த மனிதர் எவர் இருக்கிறார் ‘ என்று நான் கேட்டுக் கொண்டேன் . அவருடன் இப்படி இப்படியெல்லாம் நான் வாழ்ந்தேன் என்று எண்ணிக் கொண்டேன் பின்னர் நபி ஸல் அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள்.
(நூல் : தபகாத் இப்னு ஸ அத் பாகம் 8 பக் 88 , அல் இஸாபா 11845)

இந்தப் பிரார்த்தனைக்குப் பின்பு, அபூ ஸலமா (ரலி) அவர்களை மரணம் வந்தடைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது கரங்களால் அபூ ஸலமா (ரலி) அவர்களின் கண்களை மூடினார்கள். அபூ ஸலமா (ரலி) அவர்கள் தனக்காகப் பிரார்த்தித்ததை அறிந்த உம்மு ஸலமா (ரலி) அவர்கள், அபூ ஸலமாவை விட மிகச் சிறந்த கணவர் யார்? என்று ஆச்சரியப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நான் எனக்காக இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

நீங்கள் உங்களுடைய மற்றும் அபூ ஸலமா (ரலி) அவர்களுடைய பாவ மன்னிப்பிற்காக இறைவனிடம் துஆச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும்படி இறைவனிடம் முறையீடு செய்து கொள்ளுங்கள் என்ற பிரார்த்தனையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவாறு நான் பிரார்த்தித்தேன், இறைவன் என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்.

கணவர் இறந்ததன் பின்பு முஸ்லிம் பெண்கள் அனுஷ்டிக்கக் கூடிய அந்த இத்தா என்ற காத்திருப்புக் காலம் முடிவடைந்தது.

அபூஸலமா(ரலி) அவர்களின் பிரார்த்தனையின் படியும், நபி(ஸல்) அவர்கள் அன்னைக்கு வழங்கிய ஆலோசனையின் பேரிலும் அவர்களுக்கு உரிய துணை வேண்டும் என்று அபூபக்கர்(ரலி) அவர்கள் அன்னை அவர்களை மணக்க சம்மதம் தெரிவிக்கிறார்கள். அன்னையவர்கள் மறுத்து விடுகிறார்கள். பின்பு, உமர்(ரலி) அவர்கள் மணக்க சம்மதம் தெரிவிக்கிறார்கள் அதற்கும் அன்னையவர்கள் மறுத்து விடுகிறார்கள். பின்பு, இறைதூதர் அவர்களே சம்மதம் தெரிவிக்குறார்கள். “நானோ வயதான பெண், நிறைய பிள்ளைகள் உள்ளவள், மேலும் இறைத்தூதரின் வேண்டுகோளை நிராகரித்தால் தான் சம்பாதித்த அத்தனை நன்மைகளும் பாழாகிவிடுமே” என்று, தன் அச்சத்தை நபி(ஸல்) அவர்களிடம் கூறுகிறார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நானும் வயதானவன் தான்” என்று கூறி, தங்கள் கணவரின் துவாவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான், தங்களுக்கு உரிய பாதுகாப்பு அவசியம்” என்று கூறுகிறார்கள். அதன்படி, ஹிஜ்ரி 4ம் ஆண்டு ஷவ்வால் மாதம், நபி(ஸல்) அவர்களுக்கும், அன்னையவர்களுக்கும் திருமணம் நடந்தது. (முஸ்னத் அஹ்மத் 15751)

 மேற்கண்ட அனைத்து செய்திகளும் உம்மு ஸலமா ( ரழி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் ( 25496 ) ( 25497 ) ( 25320 )

(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்;. முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான். (33:33)

நபி(ஸல்) அவர்களுக்கும், அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்களுக்கும் திருமணம் முடிந்து, அன்னை அவர்களின் வீட்டில் அண்ணலார் இருந்த போது, சூரா அஹ்ஸாப் ன் மேற்கண்ட இறை வசனம் இறங்கியது. சூரா அத் தவ்பாவின் பல வசனங்கள், மேலும் 9:102, 9:118, போன்ற வசனங்கள் அருள் அன்னையவர்களின் வீட்டில் இருந்தபோதுதான் அருளப்பட்டது.

சல்மான் அல் ஃபார்ஸி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உரையாடுவதற்காக வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு தஹிய்யா கல்பி (ரலி) என்ற தோழரும், இன்னும் அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அங்கிருந்தார்கள். பேசி முடித்த பின், சற்று முன் உரையாடி விட்டுச் சென்ற நபர் யார் என்று தெரியுமாக இருந்தால் கூறுங்கள் என்று கூறினார்கள்.

அவர் உங்களது மதிப்பிற்குரிய தோழர் தஹிய்யா கல்பி (ரலி) அவர்கள் என்று அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதன் பின், இல்லை..! வந்தவர் ஜிப்ரீல் (அலை) அவர்களாவார்கள், அவர் தஹிய்யா கல்பி (ரலி) அவர்களுடைய உருவத்தில் வந்திருந்தார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(புஹாரி : 3633 அபூஉஸ்மான் (ரலி).)

அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மார்க்க விசயங்களில் நல்ல கல்வி ஞானம் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழிகளில் 387 நபிமொழிகளை மனனமிட்டு வைத்திருந்தார்கள். இஸ்லாமிய சட்டங்களில் உறவு முறைகள் குறித்தும், தத்தெடுத்தல் மற்றும் மணவிலக்கு குறித்தும் நுணுக்கமான சட்டங்களை அறிந்து வைத்திருந்தார்கள். இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அன்னையிடம் வந்து கலந்தாலோசனை செய்து விளக்கம் பெற்றுக் கொள்வார்கள்.

மார்க்க அறிவை கேள்வியெழுப்பி நபிகளாரிடம் இருந்தே கற்று கொண்டார்கள் . நூல்: அஹ்மத் 25363)

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, தங்களுடன் கொண்டு வந்திருக்கும் பலிப் பிராணிகளைக் அறுத்துப் பலியிட்டு விட்டு, தங்களது தலைமுடியை சிரைத்துக் கொள்ளும்படி தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை உடனே செயல்படுத்துவதில் தோழர்கள் சற்று ஆர்வங்குன்றி இருந்தார்கள் என்பதோடு, யாரும் பலிப்பிராணிகளை அறுக்காமல் தாமதித்துக் கொண்டிருந்தார்கள்.

நிலைமையைப் புரிந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் இந்தப் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்று ஆலோசனை கலந்த பொழுது அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்,

நீங்கள் யாரிடமும் எதுவும் பேச வேண்டாம். முதலில் நீங்கள் சென்று உங்களது பலிப்பிராணிகளை நீங்கள் அறுத்துப் பலியிடுங்கள். நீங்கள் அதனைச் செய்த பின்பு, உங்களது தோழர்கள் உங்களுக்குக் கட்டுபட வேண்டியது அவசியமாகி விடும் பொழுது, அவர்கள் தானாகவே வந்து அவரவர் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட்டு விட்டு, முடிகளை சிரைத்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் என்று ஆலோசனை கூறினார்கள்.

அதன்படியே நடந்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கொடுத்த ஆலோசனை நன்கு வேலை செய்வதைப் பார்த்தார்கள். தனது தோழர்களும் இப்பொழுது தங்கள் பலிப்பிராணிகளை அறுத்துப் பலியிட ஆரம்பித்து விட்டதுடன், அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
(ஸஹீஹ் புகாரி 3:53:2731)

அன்னையவர்கள் ஹிஜ்ரி 61ல் வபாத்தானார்கள். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் இறுதியாக மரணமடந்தவர்கள் இவர்கள்.

இப்படி தன்னோடு தன் கொள்கையை ஏற்ற உற்ற தோழனின் மனைவி மற்றும் குழந்தைகள் ஆதரவற்று இருப்பதை உணர்ந்து விதவையாக இருந்த அப்பெண்ணுக்கு தனது ஆதரவை வழங்கியது மட்டுமல்லாது,  பெண்களுக்கான கல்வி மற்றும் ஆலோசனைக்கான அங்கிகாரம் போன்றவையை எவ்வளவு மதிப்புக்குறியதாக மாற்றி அமைத்தார் அம் மா மனிதர்.

பெண் விடுதலைக்கான சிறந்த நுனுக்கமான நகர்வாக அன்றைய அறியாமை சமூகத்தில் இத்திருமணம் முன்மாதிரியாக்கப்பட்டது.

இத்திருமணத்தை இன்றைய நவீன பெண் பித்தர்களை தவிர எந்த சிறந்த பெண்ணியம் பேசும் நபரும் விமர்சிக்கமாட்டான்.. என்பதை உங்கள் மனம் சொல்லும்.

அன்னை ஜுவைரியா (ரலி)

ஒருவருடைய வாழ்க்கை பலவாரான சமூக சீர்திருத்தத்தை முன்வைக்கிறது என்றால் அது நபிகளாருடைய வாழ்க்கையாகத்தான் இருக்கும். 

அதனால்தான் ஜி.ஜி. கெல்லட்  என்ற அறிஞர் நபிகளாரை பற்றி கூறும் போது
"இஸ்லாத்தின் நிறுவனரான நபிகளாரை   காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது" என கூறுகிறார். 

நபிகளாருடைய வாழ்க்கையை புரிந்து கற்பவர்கள் யாரும் நபிகளாரை முன் மாதிரியாக கொள்ளாமல் இருந்தது கிடையாது.

நீங்கள் பெண்ணிய வாதியாக இருந்தாலும் சரி , நேர்மையான பகுத்தறிவளனாக இருந்தாலும் சரி அவரை படித்தீர்களானால் உங்களது சிறந்த முன்மாதிரியாக நபிகளார் உங்கள் மனதில் குடி கொள்வார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

1400 வருடங்களுக்கு முன் மனிதன் தனது பாதுகாப்புக்காக  யுத்தத்தை மேற்கொள்வதும் அவனது ஆட்சியை உயர செய்வதும் இயல்பான ஒன்றாகவே இருந்தது. ஆனால் நபிகளார் அவர் எதிர் கொண்ட யுத்தங்கள் அனைத்தும் தற்பாதுகாப்புக்கானது என்பதை வரலாறு கூறி நிற்கின்றது. அப்படி எதிர் கொண்ட யுத்தத்தில் நபிகளார் கையாண்ட உத்தியும் நேர்மையும் இன்றையளவில் கூட உலகில் இஸ்லாம் பரவ காரணமாக இருக்கிறது.

நபிகளாருடைய திருமணத்திற்கும் யுத்தத்துக்கும் என்ன தொடர்பு என்றா சிந்திக்கிரீர்கள்? ஆம் தொடர்பு இருக்கிறது . அத் தொடர்பு பற்றியும் அந்த தொடர்பினால் விளைந்த அற்புதங்கள் பற்றியும் விபரமாக பார்ப்போம்.

நபிகளாரை கொள்கையில் எதிரியாக கொண்ட அன்றைய அரபிய எதிரிகள் நபிகளாரை கொன்று விட துடியாய் துடித்து யுத்தத்தை தொடர்ந்தனர். அப்படி தொடரப்பட்ட ஒரு யுத்தத்தில் நபிகளார் 700 க்குற்பட்ட எதிரிகளை  கைதியாக சிறைப்படுத்தினார். அப்படி சிறைப்படுத்திய எதிரிகளை தனது கொள்கையின் பக்கம் கவர்ந்திழுக்க ஒரு திருமணம் செய்தார்கள். அத்திருமணம் ஊடாக கைது செய்யப்பட்ட ஒரு குலத்து அனைத்து எதிரிகளும் உறவுகளாக மாறி பிற்காலத்தில் இஸ்லாத்தை உயர்த்த நபிகளாருடன் கைகோர்த்த ஆச்சரியம் நடந்தது. 

அப்படி நடந்த மிக நுணுக்கமான அரசியல் நகர்வுதான் நபிகளாரின் அன்னை ஜுவைரியா (ரலி) யுடனான திருமணம்.

சரி அன்னை ஜுவைரியா (ரலி) யுடனான திருமண பற்றிய செய்திகளை பார்ப்போம்.

பனூ முஸ்தலக் குடும்பத்தில் புகழ் பெற்றிருந்த ஹாரித் இப்னு அபீளர்ரார் என்பவரது மகளார் அன்னை ஜுவைரியா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்.

இஸ்லாத்தைத் தழுவ முன்னர் அதே கோத்திரத்தைச் சார்ந்த மஸாபிஃ இப்னு ஸப்வான் என்பவர் அன்னையரை மணம் முடித்திருந்தார்.

ஜுவைரியா அம்மையாரின் தந்தையும், கணவனும் இஸ்லாத்தை முழு மூச்சுடன் எதிர்த்து வந்தனர். ஒருமுறை ஹாரித் முஸ்லிம்கள் மீது போர்தொடுக்கவிருக்கிறார் என்ற செய்தி அண்ணலாருக்கு தெரிவிக்கப்படுகிறது.

எனவே ஹிஜ்ரி 05ஆம் ஆண்டு ஷஃபான் மாதத்தில் இஸ்லாமியப் படையினர் மதீனாவிலிருந்து புறப்பட்டு “முறைசிஃ“எனுமிடத்தில் தங்கினர். இஸ்லாமியப் படை வந்திருக்கிறது என்பதறிந்த ஹாரிதின் கூலிப்பட்டாளம் திசைக்கொன்றாக சிதறி ஓடியது. எனினும் முறைசிஃ நகரத்தார் முஸ்லிம்களோடு போரிட்டு தோற்றோடினர். இப்போரில் முஸ்லிம்கள் 600க்கு மேற்பட்ட எதிரிகளை கைது செய்தனர். அதில் ஜுவைரியா அம்மையாரும் இருந்தார். ஜுவைரியா அம்மையாரின் முந்தைய கணவர் முஸாஃபிஹ்  இவர் இந்தப் போரில் கொல்லப்பட்டார்.

அந்தகால போர்முறை படி, கிடைக்கும் போர் கைதிகளை பங்கிட்டு கொடுப்பார்கள். அதன் படி ஜுவைரியா அவர்கள், தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களுக்கு கொடுக்கப்பட்டார்கள்.

தனது தந்தை ஒரு குலத்தில் தலைவராக இருந்து, செல்வச் செலிப்பில் வாழ்ந்த அவர்களுக்கு, அடிமையாக இருக்க மனம் வரவில்லை. அதனால் தன்னை விடுவித்து விடுமாறு தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம் கேட்டு கொண்டார். அவரும் ஜுவைரியா அவர்கள் விடுதலை ஆக, 9 ஊக்கியா வெள்ளி நாணயம் நிர்ணயம் செய்தார்கள். “ பனூ முஸ்தலிக் சமுதாயத்தின் தலைவர் ஹாரிஸ் என்பவரின் புதல்வி நான், நான் அடிமையாக இருக்கவில்லை, நான் விடுதலை ஆக, 9 ஊக்கியா வெள்ளி நாணயத்தை தந்து உதவுங்கள்” என்று நபி(ஸல்) அவர்களை ஜுவைரியா(ரலி) கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ நான் அந்த தொகையை தருகிறேன் மேலும் உன்னையும் திருமணம் செய்து கொள்கிறேன்” என்றார்கள்..  
( மதாரிஜுன் நுபுவ்வத், அபுதாவுத்)

ஒரு குலத்தின் தலைமையில் இருந்தவரின் மகளை மணப்பதன் மூலம் அந்த குலத்தில் உள்ளவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கான வாய்ப்பை ரஸுல் (ஸல்) அறிந்திருந்தார்கள். ஜுவைரியா(ரலி) சம்மதிக்கிறார்கள். திருமணம் நடந்தது. அப்போது நபி(ஸல்) அவர்களின் வயது 59.
(இமாம் தஹபியின் சியார் ஆலம் நுபுலா என்ற நூல்)

அப்பெண்ணை நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்ட செய்தியை அறிந்த நபித்தோழர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த பனூ முஸ்தலி கூட்டத்தை சேர்ந்த அனைத்து அடிமைகளையும் விடுதலை செய்து விடுகிறார்கள். காரணம், நபியவர்கள் சம்பந்தம் செய்து கொண்ட கூட்டத்தை சேர்ந்தவர்கள் எப்படி அடிமையாக இருக்க முடியும் என்பதே அவர்களின் நோக்கம்.
(இப்னு ஹிஷாம், ஜாதுல் மாஆது)

 நபி(ஸல்) அவர்கள் எதிர்பார்த்தபடியே, ஜுவைரா(ரலி) அவர்களின் தந்தையும், தலைவருமான ஹாரிஸ் அவர்களும், அவரின் இனத்தவரும் நாளடைவில் இஸ்லாத்தை தழுவினார்கள்.

இப்படி தன்னை கொள்வதற்கு யுத்தத்திற்காக வந்த நபர்களில் விதவையான பெண்ணை மறுமனம் செய்து தனது படையால் கைது செய்யப்பட்ட எதிரிகளை மண்ணிக்கவும் தனது கொள்கையையும் உறுதிப்படுத்த மேற்கொண்ட இந்த நகர்வு நபிகளாரது அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் உயர் படிக்கல்லாகும்.

மேலும் அவ்வாறு திருமணம் செய்து கொண்ட அன்னை ஜுவைரியா (ரலி) அவர்கள் பிற்காலத்தில் பல சிறப்புக்களுடனான உயர் அந்தஸ்த்தை அச் சமூகத்தில் அடைந்தார்.

அவ் பெண்ணின் ஊடாக சில மார்க்க  விடயங்கள் மற்றும் , சட்டங்கள் முஸ்லிம்களுக்கு கிடைத்தது.  அதில் சில

ஒரு நாள் ரஸூல் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுது விட்டு ஜுவைரியா (ரலி) அவர்களின் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றார்கள். வெகு நேரம் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது அன்னை ஜுவைரியா (ரலி) அவர்கள் ரஸூல் ஸல் தொழுத இடத்திலேயே அமர்ந்து துஆ செய்து கொண்டிருந்தார்கள். “ நான் சென்றதிலிருந்து இதே இடத்தில் தான் அமர்ந்து இருக்கிறாயா ? “ என்று கேட்டார்கள். அதற்கு ஜுவைரியா (ரலி) “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

இதைவிட அதிக நன்மை தரக்கூடிய ஒன்றை நான் கூறுகிறேன் என்று பின் வரும் திக்ரை கூறினார்கள் سُبْحَانَ اللهِ وَ بِحَمْدِهِ عَدَدَ خَلقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَ مَدَادَ كَلِمَاتِهِ

பார்க்க: அஹ்மத்-26758 , 27421 , அல்அதபுல் முஃப்ரத்-647 , முஸ்லிம்-5272 , இப்னு மாஜா-3808 , திர்மிதீ-3555 , நஸாயீ-1352 , மேலும் பார்க்க: திர்மிதீ-3554 .

மற்றொருமுறை ஜுவைரியா (ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றிருந்தார்கள். இதனை அறிந்த ரஸூல் (ஸல்), “ நேற்று நோன்பு நோற்றாயா ? “ என்று கேட்டார்கள். அதற்கு “ இல்லை “ என்று பதிலளித்தார்கள். பின் “ நாளை நோன்பு நோற்பாயா ? என்று கேட்டார்கள். அதற்கும் “ இல்லை “ என்று பதிலளித்தார்கள். “ அப்படியானால் இன்றைய நோன்பை விட்டு விடு “ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.இந்த இரண்டு படிப்பினைகளும் அன்னை ஜுவைரியா (ரலி) வாயிலாக நமக்கு கிடைக்கின்றன. 

 அன்னையவர்கள் ஹிஜ்ரி 50ம் ஆண்டு வபாத்தானார்கள்.

நபிகளார் அரசியல் காரணத்திற்காக நடந்தேறிய இத்திருமணம் கூட விதவை மறு வாழ்வையும் பெண் வன்முறையையும் எதிர்த்து நிற்கும் சமூக சீர்திருத்தத்தை முன்னிருத்துகின்றதென்றால் ..

எந்த நேர்மையான பெண்ணியவாதிக்கும்  மற்றும் பகுத்தரிவு சிந்தனையுள்ள எந்த மனிதனுக்கும் நபிகளாரின் இத்திருமணத்தில் முன்மாதிரியை அன்றி எதையும் கண்டு கொள்ள முடியாது என்பதே உண்மை.

உம்மு ஹபீபா (ரலி) 

நபிகளார் எதிரிகளின் பார்வையில் வெரும் மார்க்க போதகராகவே தெரிகின்றார். ஆனால் வரலாற்றில் நபிகளார் ஓர் அரசியல் வாதி, ஒரு மா மன்னர் , ஒரு போர் தளபதி , மற்றும் ஓர் போர் வீரரும் கூட,மேலும் அவர் ஒரு தீர்க்கதரிசி, நல்ல குடும்ப தலைவன் என பலவாரான ஆளுமைகள் நிறைந்த தலைவன் அவர்.
 
பெண்களை சமூக பட்டாம்பூச்சிக்களாகவும், பெண்களின் ஆடை துறப்புக்கு பாடு படும் சில மூளை விலங்கிடபட்டவர்கள் நபிகளாரின் திருமணத்தை தவிர எதையும் விமர்சிக்க போதிய அறிவும்  ஆளுமையும் இல்லாத காரணத்தால் தனது அறிவுக்கு எட்டிய வதந்திகளை கொண்டு நபிகளாரின் திருமணத்தை விமர்சிப்பர்.

இன்னும் சில போலி பகுத்தரிவாளர்கள் திருமணத்துக்கு முன்னமும் பின்னமும் ஒரு பெண்ணோ,  ஆணோ அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் உடல் உறவை யாருடனும் எத்தனை நபர்களுடனும் பேணலாம்.. ஆனால் வற்புறுத்தல் கூடாது, திருமணம் அத்தியவசியமற்றது  போன்ற உயரிய புதிய சிந்தனைக்கு வக்காலத்து வாங்குவர், இன்னும் சொன்னால் ஓரினச் செயற்கை கூட அவர் அவர் உரிமை என முழக்கமிட்டு பேசுபவர்கள். இவர்கள்தான் நபிகளாரின் திருமணம்  ஒழுக்க கேடு என விமர்சிக்கின்றனர். இதனை என்னவென்பது?

உண்மையான பகுத்தறிவாளனும் , பெண்ணீயவாதியும் நபிகளாருடைய திருமணங்களின் வரலாறுகளை கற்கும் போது அத்திருமணங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு நுனுக்கமான பெண்ணிய உரிமை குரள் என்பதையும்,  மிக மிகச் சரியான நுன்னிய அரசியல் சமூக நலன் சார் நகர்வு என்பதையும் புரிந்து கொள்வர்.

1400 வருடங்களுக்கு முன் பெண் குழந்தைகளை பிறந்தவுடன் உயிருடன் புதைக்கும் காலத்தில் பெண்கள் எல்லாம் இறைவனின் அருள், பெண் பிள்ளைகளை வளர்ப்பது சுவனத்திற்கு இலகுவாக உங்களை கொண்டு சேர்க்கும் திறவு கோள் , மற்றும் பெண் குழந்தைகளை கொள்வது குற்றம் என முதல் முழக்கத்தை உறக்க வைத்தவர் நபிகளார். (புகாரி 1418, 2408,3828,5995 , முஸ்லிம் 5135)

விதவைகளை திருமணம் செய்வது உயர் பண்பு என தன் சார் சமூகத்தையும் தன்னை பின்பற்றும் அனைவரும் செய்யுங்கள் என ஊக்கமளித்து விதவை மருமணத்தை தானும் செய்து மொத்த சமூகத்திலும் பெண்களுக்கான உரிமையை பேசியவர் நபிகளார். கிட்டத்தட்ட நபிகளாரின் தோழர்களில் பெரும் பகுதியினர் விதவைகளை மருமணம் செய்திருப்பதை வரலாற்றில் காணலாம்.

அந்த வரிசையில் அடுத்த சமூக பெண்ணிய உரிமை அரசியல் நகர்வே அண்ணை உம்மு ஹபீபா (ரலி) அவர்களது திருமணம். 

இத்திருமணத்தின் வரலாறு மற்றும் அதன் பின்னனி பற்றி பார்ப்போம்.

இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்து, முஸ்லிம்களுக்கு எதிராக பல போர்களில் கலந்து கொண்டு, முஸ்லிம்களுக்கு மக்காவில் பல இன்னல்களை தந்த குரைஷியர் குலத்தலைவரான அபுசுஃப்யான் அவர்களது அன்பு மகள்தான் ரம்ளா என்ற உம்முஹபீபா(ரலி) அவர்கள். இவரின் சகோதரர்தான் முஆவியா(ரலி) அவர்கள்.

இஸ்லாத்தை கடுமையாக எதிர்ப்பவரின் மகளான இவர், தனது கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் என்வருடன் இஸ்லாத்தை தழுவி இருந்தார்கள். இதனால் பல இன்னல்களுக்கு ஆளாகி, அபிஷீனியாவிற்கு இருவரும் ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். அபிஷீனியாவிற்கு சென்ற இரண்டாவது குழுவில் இவர்கள் இருந்தார்கள். இவர்கள் இருவருக்கும் ஹபீபா என்ற பெண்குழந்தை பிறந்தது.அந்த குழந்தையின் பெயராலேயே ரம்ளா பின் அபுசுஃப்யான் என்ற அவர்கள் உம்மு ஹபீபா என்று அழைக்கப்பட்டார்கள்.

இஸ்லாத்தை ஏற்று இருந்த அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் அவர்கள், முதலில் குடி போதைக்கு உள்ளாகி பின்பு, இஸ்லாத்தைவிட்டு வெளியேறி கிறிஸ்தவராக மாறினார்.

ஒரு பக்கம் இஸ்லாத்தை மூர்க்கதனமாக எதிர்க்கும் தந்தை, மறுபக்கம் அபிஷீனியாவிற்கு அகதியாக வந்த இடத்தில் தன்னை நிர்கதியாய் விட்டு விட்டு மதம் மாறின கணவர், இருவருக்கும் இடையில் தான் கொண்ட கொள்கையில் மனம் தளராமல் இருந்தார்கள் அன்னை உம்முஹபீபா(ரலி) அவர்கள். தனது கணவரை மீண்டும் சத்தியமார்கத்திற்கு கொண்டு வர அன்னை அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. மாறாக, அவரையும் கிறிஸ்தவராக மாறும் படி அவர் வலியுறுத்தினார்.

எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்பதைவிட வேறு வழி இல்லை என்று அவர்கள் இருந்தார்கள். அதிகமாக குடித்ததன் காரணமாக அவரின் கணவர் அப்துல்லாஹ் இப்னு ஜஷ்ஸ் மரணம் அடைந்தார்கள். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில்  சுமார் 15 வருடங்கள் அவர்களது காலம் அபிஷீனியாவில் கழிந்தது. உம்மு ஹபீபா(ரலி) அவர்கள், இப்படி நிர்கதியாய் நிற்கும் செய்தி அறிந்த நபி(ஸல்) அவர்கள், அபிஸீனியா மன்னர் நஜ்ஜாஸிக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில், “உம்மு ஹபீபா விரும்பினால் நான் அவர்களை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக” எழுதி இருந்தார்கள். நஜ்ஜாஸி மன்னர் தனது அடிமை பெண்ணின் மூலம் அன்னையவர்களின் சம்மதத்தை கோரினார்கள். உம்முஹபீபா(ரலி) அவர்களுக்கு இச் செய்தி நம்பமுடியாத ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் தந்தது. தனது சம்மதத்தை தெரிவித்தார்கள். நஜ்ஜாஸி மன்னர் அவர்கள், அன்னையவர்களை மிகவும் மரியாதையுடனும், பாதுகாப்புடனும் மதினாவிற்கு அனுப்பிவைத்தார்கள்.

இங்கே நாம் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹபீபா(ரலி) அவர்களை பார்த்து இருக்க கூடும். 15 வருடங்களுக்கு பின்பு அவர்கள் உடலால் எவ்வாறு இருப்பார்கள் என்று நபி(ஸல்) அவர்களுக்கு தெரியாது. ஆனால், உள்ளத்தால் மாறாதா மூமினாக உள்ளார், நிர்கதியான அகதியாக உள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை நபி(ஸல்) அவர்கள் திருமனம் செய்து கொள்கிறார்கள். மேலும் இத்திருமணத்தினூடாக இஸ்லாத்தின் கடும் எதிரியான அபூஸூபியானுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி இஸ்லாம் ஓங்க வழி சமைத்தார். இத்திருமணம் நடந்த போது நபி(ஸல்) அவர்கள் வயது 59, அன்னையவர் 37 வயதான விதவை.

அன்னை உம்மு ஹபீபா பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவி ஆகி மதினாவில் வசித்த பொழுது அவரது தந்தை அபு சுப்யான் அவரைக்காண வந்திருந்தார். உம்மு ஹபீபா(ரலி) வீட்டில் ஒரு ஜமக்காளம் விரித்து இருந்ததின் மீது அபு சுப்யான் அமர யத்தனித்த பொழுது உம்மு ஹபீபா அவர்கள் அதனை அவசர அவசரமாக சுருட்டி வைத்து விட்டு தந்தை அமர ஒரு பாயை கொணர்ந்து போட்டார்.

இதனைக்கண்ட அபு சுப்யான் கோபத்துடன் “மகளே,இந்த ஜமக்காளம் நான் இருக்க தகுதி அற்றதா?அல்லது நான் இதில் அமர தகுதி அற்றவனா?அதனை ஏன் சுருட்டி வைத்து விட்டாய்?:”என்று வினவினார்.

அதற்கு உம்மு ஹபீபா அவர்கள்  “அது பெருமானார் (ஸல்) அவர்கள் பரிசுத்த திருமேனி அமரும் விரிப்பு.ஆதலால் நிராகரிப்பாவரான அபு சுப்யான் அமர தகுதி அற்றது”என்று தன் தந்தையைப்பார்த்துக்கூறினார்.

குரைஷிகள் தரும் தலைவர் என்ற கௌரவத்தினால் தன் தந்தை சத்திய மார்கத்தை ஏற்காமல் இருக்கிறாரே? என்று ஆதங்கப்பட்டு அவரிடமே எடுத்துரைத்தார்கள். மக்கா வெற்றியின் போதுதான் அபுசுப்யான் அவர்களும் அவர்களின் மகன்களும் அன்னையவர்களின் சகோதரர்களுமான முஆவியாவும், யஸீத் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றனர்.

அன்னையவர்கள் அளவில்லா ஆனந்தம் அடைந்தார்கள். அந்த சமயத்தில் கீழ்கண்ட வசனம் இறக்கியருளப்பட்டது.

“உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதியாயிருகின்றீர்களே, அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கிவிடக்கூடும். மேலும், அல்லாஹ் பேராற்றாலுடையவன், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன் மிக்க கிருபையுடயவன் (60:7) அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்

கூறுகின்றார்கள்: மேற்கண்ட வசனம் அன்னை உம்மு ஹபீபா(ரலி) அவர்களின் திருமணத்தின் காரணமாக இறக்கியருளப்பட்டது.

அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை ஜானுக்கு ஜான் பின்பற்றக் கூடிய பெண்மணியாக அன்னை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கியதன் காரணமாக, நபிமொழிகளை அறிவித்து இருக்கும் அன்னையவர்களின் வரிசையில் அன்னை உம்முஹபீபா(ரலி) அவர்கள் மூன்றாவது இடத்தை பெற்று இருக்கிறார்கள். முதல் இடத்தை அன்னை ஆயிஷா(ரலி), இரண்டாவது இடத்தை அன்னை உம்மு ஸலமா(ரலி), 65 நபிமொழிகளை அறிவித்து அன்னையவர்கள் மூன்றாவது இடத்தை பெற்று இருக்கிறார்கள்.

முஆவியா(ரலி) அவர்களது ஆட்சிகாலத்தில், ஹிஜ்ரி 44ல் மதீனாவில் வபாத்தானார்கள்.

இவ் அனைத்து செய்திகளும் ஸர்கானி : பாகம் – 03, பக்கம் – 242, மதாரிஜுன் நுபுவ்வத் :   பாகம் – 02, பக்கம் – 48 இல் குறிப்பிடப்பட்டுள்ளது .

தனது கொள்கையை ஏற்று அதற்காக நாடு துறந்து குடும்பம் துறந்து விதவையான அண்ணை உம்மு ஹபீபா (ரலி) அவர்களை பெண்களுக்கான முன்னுதாரணமாக நபிகளார் முத்திரை பதிப்பிக்க தனது மனைவி அந்தஸ்த்தை வழங்கினார். 

தனது சுய விருப்பத்துடன் யாருக்கும் அடிமையாக இல்லாமல் நாடு குடும்பம் துறந்த அவ் வீர  விதவை இன்று முஸ்லிம்கள் அனைவரது தாயாக உயர்த்தியதனூடு  பெண்ணியவாதிகள் மற்றும் சமூக சீர்திருத்த பகுத்தறிவாளர்களது முன்மாதிரிக்கு நபிகளார் வழிசமைத்தார்கள்.

ஸபிய்யா பின்து ஹுயய் (ரலி) 

இத்திருமணத்தை அதிகம் நபிகளாரை  விமர்சிக்க சில அறிவிலி ஜீவிகள் பயன்படுத்துவதுண்டு, நபிகளாரை ஏற்க மறுக்கும் இவர்களுக்கு இத்திருமணத்தின் பிண்ணனி தெரிய வாய்ப்பில்லை. இவர்கள்  நபிகளார் காமத்தின் நிமித்தமே இந்த திருமணத்தை செய்தார் என  ஆதாரமற்று அவதூரு சுமத்தி பேசி கடந்து செல்வர்.  ஆகவே சற்று விபரமாக வரலாற்றோடு இணைந்து உண்மையை அவர்களுக்கு எடுத்துரைக்க முயற்சிக்கிறேன்.

ஹுதைபியா உடன்படிக்கை நடந்து முடிந்த நேரம், நபி(ஸல்) அவர்கள் படையணியை கைபரை நோக்கி நகர்த்தி கொண்டு இருந்த தருணம். காரணம் மதீனாவிலிருந்த யூதர்களும், கைபர் பகுதியில் இருந்த யூதர்களும் தேச விரோதச் செயலில் ஈடுபட்டு வந்தனர். செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி மக்காவின் நபிகளாரின் எதிரிகளுக்கு நாட்டு இரகசியங்களைக் கூறி குழப்பம் செய்து வந்தனர்.

இதனால் போரை அறிவித்த இறைதூதர்(ஸல்) அவர்கள் பனூ நதீர் கோத்திரத்தின் ஒவ்வொரு கோட்டையாக கைபற்றி அவரது சொத்துகளையும், பலரையும் கைதியாக பிடித்தார்கள். அவ்வாறு பிடிபட்டவர்களில் ஒருவர்தான் அன்னை ஸபியா பின் ஹுயைய்(ரலி) அவர்களும், அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார்கள்.

ஸபியா பின் ஹுயைய்(ரலி) அவர்கள் ஹாரூன் வம்சா வழியில் உதித்த யூதக் குடும்பத்துப் பெண்மனியாவார். இவர் முதலில் ஸலாம் இப்னு மிக்‌ஷம் என்பவரின் மனைவியாக இருந்தார். (இவருடைய மற்றொரு மனைவி தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு விஷமூட்டப் பட்ட ஆட்டிறைச்சியை உண்னக் கொடுத்தார்.)

இதன் பின்னர் கினானா இப்னு அபில் ஹகீக் என்பவரை இரண்டாவதாக மனந்து கொண்டார்கள். ஸபிய்யாவும், அவரது கணவர் கினானாவும், அவருடைய தந்தை ஹுயய் என்பாரும் மதீனாவில் வசித்து வந்தனர். மேற்கண்ட போரில் அன்னையின் கணவனும் தகப்பனும் உயிர் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அத்தோடு அண்னை கைதியாகி இருந்தார்கள்.(ஸர்கானி, பாகம் – 03, பக்கம் – 256)

அன்றைய வழக்கப் படி கைதிகள் போர் வீர்ர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டனர். திஹ்யா என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தமக்கு ஒரு கைதியைத் தருமாறு கேட்டு ஸபிய்யாவை அழைத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த சிலர் அல்லாஹ்வின் தூதரே இந்தப் பெண் இந்த சமுதாயத்தின் தலைவருடைய புதல்வியாவார். எனவே தாங்கள் இவரை எடுத்துக் கொள்வதே சிறந்தது என்று அவர்கள் கூறினார்கள். இதன் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸபிய்யாவை விடுதலை செய்து அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். இது இத்திருமணத்தின் சுருக்கமான சரித்திரப் பின்னணியாகும்.
(நூல் : ஸர்கானி, பாகம் – 03, பக்கம் – 259)

யூதர்களின் அரச குடும்பத்து பெண் என்பதால் நபி(ஸல்) அவர்கள் இந்த முடிவினை எடுத்தார்கள். காரணம், இரு சமயத்தினருக்கும் உண்டான வெறுப்புனர்வை தணிக்கவும், போரின் பின்னான இரு சமூகத்தினரிடையே நல்லுறவு ஏற்படவுமே இத்திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பின் ஸஃபிய்யா (ரழி)க்கு இஸ்லாமைப் பற்றி எடுத்துக் கூற, அவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபியவர்கள் ஸஃபிய்யா (ரழி) அவர்களை உரிமைவிட்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவரை உரிமைவிட்டதையே அவருக்குரிய மஹராக” ஆக்கினார்கள். (ஜாதுல் மஆது)

இந்த திருமணம் ஹிஜ்ரி 7ம் ஆண்டு நடந்த போது நபி(ஸல்) அவர்களின் வயது 60, அன்னையவர்களோ, இரண்டு முறை திருமணம் ஆகி விதவையானவர்கள்.

நபி (ஸல்) மதீனா திரும்பும் வழியில் ‘ஸத்துஸ்ஸஹ்பா’ என்ற இடத்தில் ஷபியா(ரலி) துடக்கிலிருந்து தூய்மையடைந்தார்கள். உம்மு ஸுலைம் (ரழி) ஷபியாவை அலங்கரித்து இரவில் நபியவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். மறுநாள் பேரீத்தம் பழம், நெய், மற்றும் சத்துமாவினால் செய்யப்பட்ட ஒருவகை பாயாசத்தைக் கொண்டு நபி (ஸல்) வலிமா” விருந்து அளித்தார்கள். மூன்று நாட்கள் ஷபியா(ரலி) அவர்களுடன் நபி (ஸல்) தங்கினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஜாதுல் மஆது)

நபி (ஸல்) அவர்கள் ஷபியா(ரழி) உடைய கன்னத்தில் அடியின் வடுவைப் பார்த்து “இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்கள் ஊர் வருவதற்கு முன் முழுநிலா தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாகக் கனவு கண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களைப் பற்றிய எவ்விஷயத்தையும் நான் நினைக்கவில்லை. இக்கனவை எனது கணவனிடம் கூறியபோது எனது கன்னத்தில் வேகமாக அறைந்து, மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்? என்றார். அதன் காரணமாக ஏற்பட்ட வடுதான் இது” என்று கூறினார். (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

அத்தோடு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அளவற்ற எல்லையற்ற பேரன்பு பூண்டிருந்தனர். ஒருமுறை நபியவர்களுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது அதைப் பொறுத்துக்கொள்ளாதஸபிய்யா “இந்நோய் எனக்கு ஏற்பட்டிருக்கக் கூடாதா?“ எனக் கவலையோடு கூற அருகிலிருந்த மற்ற துணைவியர்கள், அன்னை ஸபிய்யாவை உற்றுப்பார்த்தனர். இவற்றைக் கவனித்த நாயகமவர்கள் சொன்னார்கள். ஸபிய்யா கூறியவை எதார்த்தமான வார்த்தைகள்.
(ஸர்கானி)

இதை ஊன்றிக் கவனிக்கும் அறிவுடைய எவரும் இத்திருமணத்திற்கு காம வெறியைக் காரணமாக கூற முன்வர மாட்டார்கள். இதில் கவனிக்க வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. அந்த அம்சங்கள் யாவும் எதிரிகளின் அடிப்படையற்ற அவதூறைத் தகர்த்து எறிகின்றன.

முதலாவது அம்சம் நபிகல் நாயகம் (ஸல்) அவர்களின் வயது. இது ஹிஜ்ரி 7ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது. ஹிஜ்ரி 7ம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயது 60 ஆகும். ஐம்பது வயது வரை ஒரேயொரு மணைவியுடன் இல்லறம் நடத்திய நபியவர்களுக்கு மரணத்திற்கு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தானா காம வெறி ஏற்பட்டிருக்கும்?

இரண்டாவது அம்சம் ஸபிய்யாவின் நிலை. ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு விதவையாகிப் போனவரைத்தானா காம வெறி கொண்டவர்கள் தேர்வு செய்வார்கள்?

மூன்றாவது அம்சம் இந்தத் திருமணம் நடந்த சந்தர்ப்பம். அதாவது கைபா; என்ற அந்நிய நாட்டுடன் போரிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி அடைந்துள்ள நேரம்! பெரும் தலைகள் எல்லாம் மண்ணில் உருண்டு கிடக்கும் நேரம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காம வெறி கொண்டவர்களாக இருந்திருந்தால் இந்தக் கட்டத்தில் எத்தனையோ கண்ணியரைக் கவர்ந்து கொண்டிருக்க முடியும். எவரும் அதைத் தடுக்க சக்தி பெற்றிருக்கவில்லை.

பொதுவாகவே அன்றைய உலகில் மன்னர்கள் வெற்றி அடையும் சமயங்களில் விரும்பிய கண்ணியரைக் கவர்ந்து கொள்வது சர்வசாதாரணமான ஒன்றாகத் தான் இருந்தது. போர் தர்மம் என்று இதற்கு நியாயமும் கூறப்பட்டு வந்தது.

இவ்வளவு சாதகமான சூழலிலும் எந்தக் கண்ணியரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்.0 காம வெறி கொண்டவர்கள் தேர்வு செய்யும் எந்த வழியையும் அவர்கள் கைக் கொள்ளவில்லை. இந்தக் கட்டத்தில் கூட இரண்டு கணவர்களுடன் வாழ்ந்த விதவையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் இதற்குக் காம உணர்வு எப்படி காரணமாக இருக்க முடியும்?

கடைசியாக கவனிக்கப் படவேண்டிய அம்சமும் முக்கியமானதாக உள்ளது. அதாவது ஸபிய்யாவும் மற்றவர்களும் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவுடன் அவர்களில் ஸபிய்யாவின் அழகில் மயங்கி மனந்து கொண்டார்கள் என்றும் கூற முடியாது. நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஸபிய்யா பற்றியோ மற்றவர்கள் பற்றியோ சிந்திக்கக் கூட இல்லை.

இதனால் தான் திஹ்யா என்பவர் ஸபிய்யாவை தமக்காக எடுத்துக் கொள்கிறார். அவர் எடுத்துக் கொண்ட சமயத்தில் கூட நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை.

பனூ குரைலாவுக்கும், பனூ நுழைர் கூட்டத்துக்கும் தலைமை வகித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சிலா; அடையாளம் காட்டிய பிறகு தான் அவரை நபி(ஸல்)அவர்கள் விடுதலை செய்து மணக்கிறார்கள்.

ஸபிய்யா அழகு படைத்தவராக இருந்தாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டதற்கு அதுவே காரணம் அல்ல. அழகு காரணம் என்றிருந்தால் எடுத்த எடுப்பிலேயே அவரை மணந்திருக்கலாம்.

யூதர்களின் அரச குடும்பத்துப் பெண் என்று காரணம் கூறப்பட்ட பின்பே அவரை மணந்து கொள்ளும் முடிவுக்கே நபியவர்கள் வருகிறார்கள்.

யூதர்களின் வெறுப்புணர்வைத் தனித்துக் கொள்வதும், இரு சமூகத்தினரிடையே நல்லுறவு ஏற்பட்டதும் இத்திருமணத்தினால் விளைந்த நன்மைகளாகும்.

இது போக ஏனைய திருமணங்களுக்குரிய பொதுவான காரணம் இத்திருமணத்திற்கும் பொருந்தும். அதாவது விதவைகளுக்கான மறுமணத்தை நபிகளார் இத்திருமணம் மூலமும் ஊக்குவித்தார்.

ஆக நபிகளார் காமத்துக்காக இத்திருமணத்தை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு இத்திருமணத்தில் மீணடும் செல்லுபடியற்றதாகிவிடுகிறது  . அத்தோடு நபிகளாரின் அரசியல் மற்றும் பெண்ணிய விடுதலை பற்றிய முன்னெடுப்பும் மனித குலத்திற்கு இத்திருமணம் மூலமும் முன் மாதிரியாகிறது.

[அன்னை மைமூனா(ரலி)

நபிகளாரை பற்றி விமர்சனம் முன்வைக்கும் பலரது எண்ணம் தவறானதாகவே இருக்கிறது.  நபிகளாரை அவமதித்திட கிடைத்த ஆயுதமாக நபிகளாரின் பலதார மணத்தை முன்வைக்கின்றனர் . ஆனால் நபிகளாரின் ஒவ்வொரு திருமணத்திற்கு பின்னும் பல புரட்சிகரமிக்க ஆழ்ந்த பின்புலம் இருக்கும். அந்த வகையில் நபிகளாரின் இறுதி திருமணமும் அதன் நோக்கங்களையும் வரலாற்றுடன் இணைந்து பார்ப்போம்

நபிகளார்  இறுதியாக திருமணம் செய்த அன்னை மைமூனா(ரலி) 
இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற குடும்ப பின்னனி கொண்டவர்கள்.

 அன்னையவர்களுடன் உடன் பிறந்தவர்களில் ஏராளமான பேர் நபித் தோழர் தோழியரில் உள்ளனர். 

அன்னை மைமுனாவின்  தந்தை ஹாரித் பின் ஹஸன் பனூ ஹலால் என்னும் கோத்திரத்தைச் சார்ந்தவராக இருந்தார். இவரது தாயாரின் பெயர் ஹிந்த பின்த் அவ்ஃப் என்பதாகும். இவருக்கு உம்மு அல் பழ்ள் லபாபா குப்ரா, லபாபா ஸஹ்ரா, அஸ்மா மற்றும் உஸ்ஸா ஆகிய சகோதரிகளும் இருந்தார்கள்.

உம்முல் பழ்ள் லபாபா குப்ரா என்ற சகோதரி பிரபலமான நபித்தோழரான அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இவர், கதீஜா (ரலி) அவர்களுக்குப் பிறகு, இஸ்லாத்தைத் தழுவிய இரண்டாவது பெண்மணி என்ற கௌரவத்தைப் பெற்றுக் கொண்டவராவார்.

லபாபா ஸஹ்ரா வலீத் பின் முகீரா அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள், இவரது மகனான காலித் பின் வலீத் (ரலி) அவர்களால் இஸ்லாமிய சரித்திரம் போற்றும் மாபெரும் வீரராகவும், போர்ப்படைத் தளபதியாகவும் திகழ்ந்வராவார்.

அஸ்மா பின்த் ஹாரித் அவர்கள் உபை இப்னு கலப் க்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இன்னும் உஸ்ஸா அவர்கள் ஸைத் பின் அப்துல்லா பின் மாலிக் என்பவருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இன்னும் தாயாரின் வழியாக, அஸ்மா பின் உமைஸ், ஸலமா பின் உமைஸ், ஸலாமா பின்த் உமைஸ் ஆகியோர்கள் சகோதரி உறவு முறைகளுக்குரியவராவார்கள்.

அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் முதலில் ஜாபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள். இவரின் மூலமாக மூன்று மகன்களைப் பெற்றுக் கொண்டார்கள், அவர்களாவன : அப்துல்லா, அவ்ன், முஹம்மத் ஆகியோர்களாவார்கள். ஜாபிர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் உயிர்த்தியாகியாக ஆனதன் பின் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களை மணந்து கொண்டதன் பின், முஹம்மது பின் அபூபக்கர் என்ற மகவைப் பெற்றுக் கொண்டார்கள். அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் மரணமடைந்ததன் பின்னாள், அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை மணந்து கொண்டு, யஹ்யா என்ற மகவைப் பெற்றெடுத்தார்கள். ஸலமா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் ஹமஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். அன்னையவர்களின் மூன்றாவது சகோதரி ஸலாமா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அப்துல்லா பின் கஃப் (ரலி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள்.

எனவே, இதன் மூலம் அன்னையவர்களின் தாயாரான, ஹிந்த் பின் அவ்ஃப் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மாமியார் என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாது, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் முதல் கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கும், ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களுக்கும், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களுக்கும், ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்கும், அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுக்கும் மாமியாராக ஆன மாபெரும் நற்பேற்றுக்குரியவராகத் திகழ்ந்தார்கள்.

இன்னும், இவருடைய பேரர்களுள் ஒருவரான அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி), அவர்கள் இஸ்லாமிய போர்ப்படை வரலாற்றில் மிகப் பெரும் போர்வீரராகத் திகழ்ந்த நற்பேற்றுக்குரியவராகத் திகழ்ந்தார்கள். இவர் இறைவசனங்களுக்கு விரிவுரை வழங்குவதில் தனிச்சிறப்பு மிக்கவராகத் திகழ்ந்ததோடு, நபிமொழிகளில் நல்ல ஞானம் உள்ளதோடு, ஃபிக்ஹூ இஸ்லாமியச் சட்டக்கலையிலும் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இன்னுமொரு பேரரான லபாபா ஸுஹ்ரா வினுடைய மகனுமான இஸ்லாமியப் போர்ப்படைத் தளபதிகளுள் தனிச்சிறப்பு மிக்கவராகத் திகழ்ந்தவருமான காலித் பின் வலீத் (ரலி) அவர்களும், இவருக்கு பேரர் முறையாகும்.(அல்பிதாயா பாகம் 11 )

எனவே, அன்னை மைமூனா (ரலி) அவர்கள் மிகச் சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்டதோடு, இஸ்லாமிய உயிர்த்தியாகிகளையும், போர் வீரர்களையும், அறிஞர் பெருமக்களையும் கொண்டதொரு பாரம்பர்யத்தில் உதித்தவருமாவார்.

அன்னையவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணமுடிக்கு முன்பாக, மசூத் பின் அம்ர் பின் உமைர் தகஃபீ என்பவரை மணந்திருந்தார்கள், இருவருக்குமிடையே ஏற்பட்ட மனப் பொருத்தமின்னை காரணமாக விரைவிலேயே அவர்களது மணவாழ்வு முடிவுக்கு வந்தது. அதன் பின் இரண்டாவது கணவராக, அப்துர் ரஹம் பின் அப்துல் உஸ்ஸா ஆம்ரி குரைஷி என்பவரை மணந்து கொண்டார்கள். திருமணமான சில நாட்களிலேயே இவர் இறந்ததன் பின், இளமையிலேயே விதவையான சோகத்துக்கு ஆளானார்கள் மைமூனா அவர்கள்.

ஹிஜ்ரி 7 ம் வருடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் மக்காவிற்கு உம்ரா செய்யும் நிமித்தமாகச் சென்றார்கள். அப்பொழுது மைமூனா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து அதற்கு பொறுப்பாளியாக தனது சகோதரியின் கணவர் அப்பாஸ்(ரலி) அவர்களை நியமித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் தனது சம்மத்தை தெரிவித்தார்கள். (ஜாதுல் மஆது)

உம்ரா முடிந்து, தனது கூடாரத்தில் நபி(ஸல்) ஓய்வெடுத்து கொண்டு இருக்கும் போது,  மைமூனா (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, தன்னையும் அறியாமல், ”இந்த ஒட்டகமும், இந்த ஒட்டகத்தை ஓட்டி வருபவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அற்பணமாகட்டும்” என்று சந்தோஷத்தில் கூறி விட்டார்கள்.எனவே, இதன் மூலம் தன்னையே அன்பளிப்பாக இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு, அற்பணித்துக் கொண்டவர்கள் தான் அன்னை மைமூனா (ரலி) அவர்கள். திருமண ஏற்படுகள் நடந்து கொண்டு இருந்த நேரத்தில், மக்கத்து குரைஷிகள் நபி(ஸல்) அவர்களை சந்தித்து, 

ஹுதைபியா உடன்படைக்கையின் பிரகாரம், உம்ரா முடிந்தவுடன் மக்காவை விட்டு கிளம்பிவிடவேண்டும், என்று நபி(ஸல்) அவர்களை வற்புறுத்தவே, அங்கிருந்து புறப்பட்டு, மக்காவிலிருந்து 9 மைல் தொலைவில் உள்ள ஸரஃப் என்ற இடத்தில் கூடாரம் அமைத்து தங்கினார்கள்.  பரா என்ற பெயரை மாற்றி மைமூனா என்ற பெயர் சூட்டி அவர்களை அங்கு வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். வலிமா விருந்தும் நடைபெற்றது.(ஜாதுல் மஆது)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களைத் தான் இறுதியாக மணந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்பொழுது அன்னைக்கு 26 வயது தான் ஆகி இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவை அடைந்தவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகே ஒரு குடில் அன்னையவர்களுக்காக கட்டப்பட்டு, அங்கே அன்னையவர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மற்ற மனைவியர்கள், அன்னையவர்களை அன்புடன் வரவேற்றார்கள். (ஜாதுல் மஆது)

அன்னையவர்கள், தனது தொழுகையை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் வைத்து நிறைவு செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். ஏனெனில், மக்கா ஹரம் பள்ளியைத் தவிர்த்து, ஏனைய பள்ளிகளில் தொழுவதைக் காட்டிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் தொழுவது ஆயிரம் மடங்கு சிறந்தது என்ற காரணத்தினால், அவ்வாறு செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். ”ஒரு முஸ்லிம் கடன் வாங்கி, அதனை அடைப்பதற்கு அல்லாஹ் நிச்சயமாக உதவுவான் என்று முழுமையாக நம்பிக்கை கொண்டானெனில், அல்லாஹ் நிச்சயமாக (அந்தக் கடனை அடைப்பதற்கு) எதிர்பாராத விதத்தில் இருந்து ஏற்பாடு செய்து தருவான்”. இந்த நபிமொழியை அறிவித்தவர் அன்னைமைமூனா(ரலி) அவர்கள்.(அபு தாவுத்)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நோய் முற்றி இறுதி நிலைக்குத் தள்ளப்பட்ட அந்தக் கணத்தில், மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் இருந்தார்கள். பின்பு, தனது அனைத்து மனைவிமார்களையும் அழைத்து, தான் தனது இறுதி வாழ்வை ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்தில் கழிக்க விரும்புவதாகக் கோரினார்கள். அனைவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களை அன்னாரது மனைவிமார்கள் முழுமையாகத் திருப்தி கொண்ட நிலையிலேயே ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்தில் அவர்களது மடியில் படுத்திருக்கும் நிலையிலேயே மரணத்தையும் தழுவினார்கள்.(புகாரி, அபூ தாவுத்,முஸ்லிம்)

முஆவியா(ரலி) அவர்களது ஆட்சிகாலத்தில் ஹிஜ்ரி 51ம் ஆண்டு, அன்னையவர்கள் மக்காவில் மிகவும் நோய்வாய்பட்டார்கள். மரணதருவாய்க்கும் சென்றார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள் கூறிய முன்னறிவிப்பு ஒன்று அவர்களது ஞாபகத்திற்கு வந்தது, “நீ மக்காவில் இறக்கமாட்டாய்” என்பதுதான் அது. அப்படியானால், எப்படியாவது மதினா சென்றுவிடவேண்டும் என்று கூற, அவர்களது உறவினர்கள் அன்னையவர்களை அழைத்து செல்கிறார்கள். மக்காவில் இருந்து 9 மைல் தொலைவில் இருந்த ஸராஃப் என்ற இடத்தை அடைந்ததும் அன்னையவர்களின் உயிர் பிரிகிறது. எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களை திருமணம் செய்தார்களோ அதே இடம். அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தலைமையேற்க அன்னையவர்களுக்கு, இறுதி (ஜனாஸா) தொழுகை நிறைவேற்றப்பட்டு, கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
(புகாரி ,  இப்னு கசீர்)

மொத்தமாக வரலாற்றுடன் பார்த்தால்  அன்னை மைமூனா(ரலி) அவர்கள் சிறந்த குடும்ப பிண்ணனி உடையவராகவும் முக்கிய கோத்திரத்தை சார்ந்தவராகவும் திகழ்ந்ததால் நபிகளாரது அழைப்புக்கு இத்திருமணம் ஒரு உதவியாக அமைந்தது. 

மேலும் விதவை மறுமணமும் இத்திருமணத்தினூடு சமூகத்துக்கு எடுத்துவைக்கப்பட்டதுடன். நபிகளார் அன்னை மைமூனா(ரலி) அவர்களை தெரிவு செய்யவில்லை மாறாக அன்னை மைமூனா(ரலி) அவர்களே நபிகளாரை தெரிவு செய்தார்.

எனவேதான் விமர்சிக்கும் புண்ணியவான்கள் இத்திருமணத்தில் எங்கு காம உணர்வு நபிகளாருக்கு மேலோங்கி இருந்தது என்பதை பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.

நபிகளார் மீது வைக்கும் விமர்சனத்தின் பதில்கள் தொகுப்பு

நபிகளார் இறை தூதராக இறைவனால் அனுப்பப்பட்டதன் நோக்கம் அகில மக்கள் அனைவருக்கும் ஒரு முன் மாதிரியான வாழ்வை அமைத்து காட்டவே ஆகும். 

எப்படிப்பட்ட முன்மாதிரி என்றால்  மனிதன் வாழ்வில் செய்யக்கூடிய அனைத்திற்குமான முன்மாதிரியாய் வழிகாட்ட இறைவனால் தெரிவு செய்யப்பட்டிருந்தார் நபிகளார்.

தான் வீட்டைவிட்டு வெளியில் நடைபெரும் செயற்பாடுகளும் வீட்டுக்குள் நடைபெரும் செயற்பாடுகளும்  என்று எல்லாமே எந்த ஔிவு மறைவின்றி சமூகத்திற்கு வெளிப்படுத்தி வாழ்வின் சகல அம்சங்களுக்குமான முழுமையான வழிகாட்டளை மனித குலத்துக்கு வளங்க வேண்டிய கடமையை இறைவன் நபிகளார் மீது சுமத்தி இருந்தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஏராளமான நபித்தோழர்கள் வழியாகத்தான் முஸ்லிம்கள் அறிந்து கொள்கின்றனர். அதன் படி நடக்கின்றனர். ஒவ்வொரு நபித்தோழரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அறிவிக்கின்றனர்.அதனை பதிவித்தும் இருக்கின்றனர். அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில், இல்லற வாழ்க்கை நடத்தியது, உண்டது, பருகியது, இரவு வணக்கம் செய்தது போன்ற செய்திகளை நபித்தோழர்களால் அறிந்து கொள்ள முடியாது.

அவர்களுடன் வீட்டில் குடும்பம் நடத்திய மனைவியரால் மட்டும் தான் அறிய முடியும். எனவே அவர்களது மனைவியர் மூலமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் உலக மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இறைவனின் தூதர் என்ற அடிப்படையில் இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்றே கருத முடியும்.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த செய்திகளை அறிவித்தால் அதில் நம்பகத் தன்மை குறையும். அவர் தவறான தகவலைக் கூறிவிட்டால் அதைச் சான்றாகக் கொண்டு முஸ்லிம்கள் நடக்கும் நிலை ஏற்படும்.

பல மனைவியர் இருந்ததால் எந்த மனைவியும் கூடுதல் குறைவாகச் சொல்வதற்கான சந்தர்ப்பம் இல்லாமலாகிறது. ஒருவர் தவறாகச் சொல்லி மற்றவர்கள் அதை மறுத்து உண்மையை விளக்குவார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தார்கள்.

பொதுவாக காமவெறி கொண்டவர்களை மதிப்புக்கு உரியவராக மக்கள் கருத மாட்டார்கள். ஆன்மிகத் தலைவரிடம் காமவெறி இருப்பதை அறிந்தால் அவரை நஞ்சென வெறுப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்களைச் செய்வதை தமது கண்களால் பார்த்த மக்கள் மனிதர்களின் பொதுவான இந்த இயல்பின் படி நபிகள் நாயகத்தை எடை போடவில்லை.

அவர்களுடன் இருந்தவர்களில் ஒருவர் கூட இந்தக் காரணத்தைக் கூறி மதம் மாறியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் திருமணம் செய்த கடைசி ஐந்து ஆண்டுகளில் தான் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றார்கள். ஏறக்குறைய ஒட்டு மொத்த அரபுலகும் அவர்களை ஏற்றுக் கொண்டது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காமவெறி பிடித்தவர் என்றால் அதைக் கண்ணால் கண்டவர்கள் இஸ்லாத்தை வெறுத்து ஒதுக்கி இருப்பார்களே? ஏன் அப்படி நடக்கவில்லை? இதுவும் சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

வரலாறுகளைப் படிப்பவர்கள் ஒன்பது மனைவிகள் என்று மட்டும் தான் பார்க்கிறார்கள். அதன் முழு விபரத்தைப் பார்க்காமல் முடிவு செய்து விடுகிறார்கள்.

அந்த வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்தவர்கள் நபியின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் பார்த்தார்கள். 

அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களின் நிலையையும் பார்த்தார்கள். ( இத் தொடரின் இப் பதிவுற்கு முந்திய  தொடரில்  இதனை வரலாற்று செய்திகளுடன் ஆதாரங்களை கொண்டு பதிவித்திருந்தேன் பார்க்க)

இதுபோன்ற வயதுடைய பெண்களை நாமே மணக்க மாட்டோமே அப்படியானால் இதற்குக் காமவெறி காரணமாக இருக்க முடியாது என்பதையும் அவர்கள் கவனித்தார்கள்.

அதனால் தான் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர்.

இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல திருமணங்களைக் குறித்து கேள்வி கேட்பவர்கள் நபிகளின் காலத்தில் வாழ்ந்தால் காமவெறி காரணம் அல்ல என்பதை விளங்கி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டிருப்பார்கள்.

பொதுவாக வெளிஉலகில் நல்லவராகக் காட்சி தரும் சிலர் உண்மையில் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களைப் பற்றி அவர்களின் மனைவியர் மட்டுமே அறிவார்கள்.

தம் கணவன் நல்லவனா? அல்லது பகல் வேஷக்காரனா? ஒவ்வொரு பெண்ணும் அறிவாள். ஆனாலும் மிகப் பொரும்பாலான மனைவியர் தம் கணவனின் அந்தரங்க வாழ்வைப் பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தாலும் அதை அம்பலப்படுத்த மாட்டார்கள். தனது வாழ்க்கை அவனுடன் பின்னிப் பினைந்துள்ளதாலும் அவனைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலைமை நிலவுவதாலும் கணவனின் கபட நாடகத்தை வெளி உலகுக்கு அம்பலப்படுத்த மாட்டாள்.

ஆனால் ஒரே ஒரு சமயத்தில் மட்டுமே பெண்கள் தம் கணவரின் பலவீனங்களை அம்பலப்படுத்தத் துணிகின்றனர். தனக்குப் போட்டியாக தன் கணவன் மற்றொருத்தியை மணந்து கொள்ளும் போது தான் கணவனின் அந்தரங்க வாழ்க்கை மனைவியால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படும். பரவலாக இதை நாம் காண்கிறோம். பெண்களின் இயல்பை அறிந்தவர்களுக்கு இதைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.

இரண்டு மனைவியரைப் பெற்று விட்டாலே ஒருவனது சாயம் வெளுத்துப் போய்விடும் என்றால் இரண்டுக்கு மேல் பல மனைவியரை அடைந்தவன் தன் நாடகத்தை தொடர்ந்து நடத்த முடியாது. பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் பல மனைவியரைப் பெற்று விட்டால் அவனது உண்மை சுயரூபம் வெளிப்பட்டே ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையையும், நேர்மையையும், நல்லொழுக்கத்தையும் உலக மக்களுக்குப் போதனை செய்தார்கள். இவையெல்லாம் உண்மையிலேயே அவர்களிடம் இருந்தனவா? என்பதை நிரூபித்துக் காட்ட அவர்களின் பலதாரமண்ம் மிகச் சிறந்த அளவு கோலாகும்.

பல திருமணங்கள் செய்ய இறைவன் அவர்களுக்கு மட்டுமே அனுமதியளித்து அத்தனை பேரிடமும் நல்லவராகவும் நடக்கச் செய்து அவர்களிடம் இரண்டு வாழ்க்கை இருந்ததில்லை என்பதை நிரூபித்துக் காட்டினான்.

பல்வேறு வயதினராகவும், பல்வேறு பகுதியினராகவும், பல்வேறு குணாதிசயங்களைப் பெற்றவர்களாகவும் அவர்களின் மனைவியர் இருந்தனர். எல்லா பெண்களுக்கிடையிலும் ஏற்படக் கூடிய ரோசத்துடனான சன்டைகள் அவர்களுக்கிடையேயும் நடந்ததுண்டு. அவர்களுக்குள்ளே தான் அந்தச் சண்டைகள் நடந்தனவே அன்றி அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பற்றி விமர்சனம் செய்யப்பட்டதே இல்லை. 

விமர்சிக்க துணியும் யாரும் நபிகளாரின் ஒரு மனைவி சரி நபிகளாரை சிறு விடயத்திலாவது அநீதமாய் நடந்தார் என குற்றம் சுமத்திய சான்று ஒன்றையேனும் தர முடியுமா? நிச்சயமாக இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைவரிடமும் சமமான முறையில் நடந்து கொண்டாலும் அவர்களையும் மீறி ஆயிஷா (ரலி) என்ற ஒரு மனைவி மீது மட்டும் அதிக அன்பு செலுத்தினார்கள். இதனால் மற்ற மனைவியருக்கு ஆயிஷா மேல் பொறாமை இருந்தது. அப்படி இருந்தும் கூட அவர்களின் அந்தரங்க வாழ்வில் எந்தக் குறையும் இருந்ததாக அவர்கள் விமர்சிக்கவில்லை. விமர்சனம் செய்ய முடியாத அளவுக்கு பரிசுத்த வாழ்க்கையாக அவர்களின் வாழ்க்கை இருந்தது.

இறையச்சம் பற்றி வெளி உலகுக்குப் போதனை செய்து விட்டு வீட்டிற்கு வந்தால் அந்த இறையச்சத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க நபிகள் நாயகம் அவர்கள் நள்ளிரவில் இறைவனை வணங்க ஆரம்பித்து விடுவதைக் கண்ட பின் அவர்கள் எப்படி நபியவர்களைக் குறை கூற முடியும்?

இம்மையின் நிலையாமை பற்றி போதித்து விட்டு வீட்டுக்கு வந்தால் அதைச் செயல்படுத்தும் விதமாக பல சமயங்கள் பட்டினியோடும், காய்ந்த ரொட்டியுடனும் இரவு பொழுதைக் கழித்த நபியின் உண்மையான வாழ்வை அவர்களால் விமர்சிக்க முடியுமா என்ன?

ஆடம்பரங்களை வெறுத்து ஒதுக்குமாறு மக்களுக்குச் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து, கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கி கயிற்றின் வரிகள் அவர்களின் முதுகில் ஆழமாகப் பதிந்ததைக் கண்ட பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வை அவர்களால் குறை கூற முடிந்திருக்குமா?

மதீனத்து மாமன்னராக ஆன பின்பும், அவர்களின் குடிசையில் செல்வங்கள் வந்து குவிக்கப்பட்ட பின்பும் அவற்றை மக்களுக்கு விநியோகிக்காமல் உறங்க மறுத்த கண்களுக்கு சொந்தக்காரரிடம் என்ன குறை கண்டிருப்பார்கள்?

பொறுமை, அடக்கம் பற்றியெல்லாம் மக்களுக்குப் போதனை செய்து விட்டு, தன்னை விட பலவீனமாக உள்ள மனைவியிடம் கூட பொறுமையைக் கடைப்பிடித்து பண்பாடுகளின் சிகரமாகத் திகழ்ந்த அந்த உயர்ந்த மனிதரிடம் என்ன குறையை அவர்கள் கண்டுபிடிக்க முடியும்?

கடுஞ்சொல் கூறாத, கை நீட்டி அடிக்காத மனைவியரின் வீட்டு வேலைகளிலும் ஒத்தாசை செய்த அந்த உத்தமரிடம் குறை காண்பார்களா என்ன?

உங்களில் சிறந்தவர் யார் எனில் தம் குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடப்பவரே! நான் உங்களை விட குடும்பத்தினரிடம் சிறந்த முறையில் நடக்கிறேன் என்று கூறிய அந்த மாமனிதரை அவர் சொன்னது போலவே நடக்கக் கண்டவர்கள் அவரின் மனைவியர் தான்.

அதனால் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய அந்த நற்பண்புகள் பற்றி அவர்களின் மனைவியரே வெளி உலகுக்குச் சொல்ல முடிந்தது. ( மேற் குறிப்பிட்ட அனைத்து பண்புகள் பற்றியும் அடுத்த பதிவில் ஆதரங்களுடனான விளக்கங்களை எதிர்பாருங்கள். இன்ஷா அல்லாஹ்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குணம் எவ்வாறு இருந்தது? என்று கேட்ட போது குர்ஆனாகவே அவர்களின் குணம் இருந்தது என்று அந்த மனைவியரால் பதிலளிக்க முடிந்ததும் இதனால் தான்.

அவர் போதிக்கின்ற குர்ஆனில் கூறப்படுகின்ற எல்லாப் பண்புகளும் அவரால் கடைப்பிடிக்கப்பட்டன என்று அவரது மனைவியரே சான்று பகரும் அளவுக்கு சொல்லுக்கும், நடத்தைக்கும் வித்தியாசம் காட்டாதவர் அவர்.

ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் தன் கணவரைப் பற்றி இப்படிக் கூறி விடலாம். பல மனைவியரைப் பெற்றும் அவர்கள் அனைவருமே இப்படிக் கூற முடிந்தது என்றால் அவரிடம் இரட்டை வாழ்க்கை இருந்தது கிடையாது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை.

எந்தப் பரீட்சையில் அனைவரும் தோற்று விடுவார்களோ அந்தப் பரீட்சை தான் நபியவர்களுக்கு பல திருமணங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி. அந்தப் பரீட்சை அவர்களின் தூய வாழ்வை நிரூபித்துக் காட்ட அவசியமாகவும் இருந்தது. அவர்களால் அதில் தேறவும் முடிந்தது.

அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்தப் பரீட்சை தேவையுமில்லை. அவர்களால் இதில் தேறவும் முடியாது.

 
நபிகளாரின் பண்புகள்

ஒரு தனி மனிதனாய் பெண்ணுரிமைக்கும் , தீண்டாமைக்கும் , ஓர் இறை கொள்கைக்கும் நின்று போராடி தனது மொத்த வாழ்க்கையையும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க வாழ்ந்து மறைந்த சமூக நீதி தலைவரான நபிகளாரை அவமதிக்க நேர்மையான யாருக்கும் மனம் வராது.

 நபிகளாரின் திருமணங்கள் ஒவ்வொன்றிற்கும் பெரும் அரசியல் சமூகவியல் முன்மாதிரி தேவைகள் புதைந்திருப்பதை இத் தொடர் உணர்த்தி இருக்கும்.  

தனக்கான ஒரு சாம்ராஜ்யத்தை தனது காலப்பகுதியில் உருவாக்கி அதன் சக்கரவர்த்தியாக இருந்தும் நபிகளார் கடைபிடித்த எளிமையும் , நற்பண்புகளும் , அவர் போதித்த இறைவணக்கமுமே அவர் ஒரு செயலில் எவ்வளவு முன்மாதிரியை மனித குலத்துக்கு பேசி பெண்ணுரிமை மற்றும் தீண்டாமையை விரட்டியடிக்க ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதை உணர்த்தும். 

1400 வருடங்களுக்கு முன் அவரது காலத்திலிருந்து இன்று  வரை அவர் ஏற்படுத்திய சமூக மாற்றத்தை கவனிக்கும் போது இது ஒரு காம எண்ணம் மிகுந்த மனிதரால் ஏற்படுத்திய மாற்றம் என்று எந்த   அறிவுடைய மனிதனுக்கும் தோன்றாது.

ஒரு உயர் அரசியல் வாதியிலிருந்து ஒரு சாதாரண ஏழை மனிதன் வரை தனது வாழ்வை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது நபிகளாரின் வாழ்வில் எடுத்துவைக்கப்பட்டிருக்கின்றது.

 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்க்கையை படிக்கும் ஒரு ஏழை மனிதன்  நபிகளார் " ஏழ்மையில் பரம திருப்தி அடைந்திருக்கிறாரே" என வியப்பார்.     

 (பார்க்க  நபிகளாரின் உணவு பற்றி அறிய : புகாரி 2567, 6459, 5413,5374,5416, 6454,5423,  5385, 5421, 6457,2069, 2508,5414 , முஸ்லிம் 3802, 3824, புகாரி 2081, 2456, 5434, 5461,முஸ்லிம் 3799.

நபிகளாரின் உடை பற்றி அறிய: புகாரி 3108, 5818,1277, 2093, 5810,390, 807, 3654,1031, 3565,2597, 6636, 6979, 7174, 7197 , 

நபிகளார் பயன்படுத்திய ஏனைய பொருட்களின் நிலை பற்றி அறிய : புகாரி 5386, 5415, 6456 ,திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991,   புகாரி 730, 5862,4913, 183, 992, 1198, 4572,  

நபிகளாரின் வீடு பற்றி அறிய : புகாரி 382, 513, 1209,729, நபிகளார் விட்டு சென்ற சொத்துக்கள்: புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467,  புகாரி 2739, 2873, 2912, 3098, 4461)

ஒரு நீதிமான் நபிகளாரை பற்றி படித்தால் " எதிரிகள் உட்பட அனைவருக்கும் சமநீதி , அந் நீதியில் யாருடைய பரிந்துரை ஏற்கப்படாது என்று நீதியை நிலைநிறுத்திய  நீதிபதியாய் நபிகளாரை வரலாற்றில் உணர்வார்." (பார்க்க: புகாரி 3475, 3733, 4304, 6787, 6788
புகாரி 689, 732, 733, 805, 1114, 688,புகாரி 2351, 2366, 2451, 2602, 2605, 5620,புகாரி: 2352,அஹ்மத் 3706, 3769, 3807, 3834,புகாரி 2357, 2411, 2417, 2516, 2667 )

ஒரு வீரன் அல்லது ஒரு படைத்தளபதி நபிகளாரின் வீரத்தையும் தலைமையையும்  மொச்சி புகழ்வான்.(பார்க்க: புகாரி 4139, 2913, 2910,புகாரி 2899, 3507, 3373, புகாரி 2908, 2627, 2820, 2857, 2862, 2867, 2968, 2969, 3040, 6033, 6212,புகாரி 4064, 3811,முஸ்லிம் 3324)

(நபிகளார்  போர்க்களத்தில் பிறப்பித்த போர் சட்டம்: புகாரி 3014, 3015,புகாரி 2560, புகாரி 5516, : புகாரி 3016)

ஒரு சுதந்திர புரட்சியாளன் நபிகளாரன 1400 வருங்களுக்கு முன்னமே "அனைவரையும் சமமாக மதிக்கவும் தீண்டாமையை ஒழிக்கவும் தன் சமூகத்திற்கு பழக்கிய சமூக நீதியை நிலைநிருத்திய தலைவன் என நபிகளாரை பின் தொடர்வான்.   (புகாரி 1636, புகாரி 1980, 6277
அபூதாவூத் 157, இப்னுமாஜா 3170
தப்ரானி (கபீர்) 12494, தப்ரானி (ஸகீர்) 41,புகாரி 1337, புகாரி 380, 860,  புகாரி 617, 620, 623, 1919, 2656, 7348) " 

ஒரு உயர் அதிகாரத் தலைவர்கள் நபிகளாரை கற்றால் "மிக உயர்ந்த இடத்தில் இருந்தும் நபிகளார்  காட்டிய அடக்கம்,  (புகாரி 2306, 2390, 2401, 2606, 2609)
 ,பணிவு,  (அபூதாவூத் 3773, பைஹகீ 14430) எல்லையற்ற பொறுமை,( புகாரி 1283, 7154, முஸ்லிம்: 429) மென்மையான போக்கு, (: புகாரி 405, 406, 407, 409, 411, 414, 417, 6111) அரசனாய் இருந்தும்  அரச பணத்தில் வாழாமல் உழைத்து உண்ணும் எண்ணம் !(அபூதாவூத் 123, அஹ்மத் 17172), மன்னனான பிறகும் கர்வமற்ற வாழ்க்கை (புகாரி 2872, 6501), தர்ம சிந்தனை (புகாரி 2821, 3148) கொண்ட கொள்கையில் அசைக்க முடியாத உறுதி, தாம் சொன்ன அனைத்தையும் முதலில் தாமே செய்து காட்டிய முன்மாதிரி தலைமை (புகாரி 2837, 3034, 4104, 4106, 6620, 7236,புகாரி 3906, புகாரி 2262, 3406, 5453) எதிரிகள் உள்ளிட்ட அனைவரையும் மன்னிக்கும் அன்பு ,( முஸ்லிம் 2137, புகாரி 2910, 2913, 4137, 4139  ) 
 அன்பு செலுத்தல் (முஸ்லிம் 3831) பிற சமுதாய மக்களிடமும் நல்லிணக்கத்துடன் நடக்கும் பக்குவம் (முஸ்லிம் 4627,திர்மிதி 1866,புகாரி 1356,புகாரி 4372 : புகாரி 2096, 2252, 2509, 2513, 2068, 2200, 2251, 2386, புகாரி 2617, : புகாரி 1313,  புகாரி 2263, 2264, 3906,புகாரி 2411, 2412, 308, 6517, 6518, 7472,   : புகாரி: 2499, 2720) தமக்கோ தமது குடும்பத்திற்கோ எந்தச் பெரிய சொத்தையும் சேர்த்துச் செல்லாத வாழ்க்கை ( புகாரி: 3093, 3094, 3712, 4034, 4036, 4241, 5358, 6725, 6728,புகாரி 6730), தமது உடமைகள் அனைத்தையும் அரசுக் கருவூலத்தில் சேர்த்த தூய்மை!( புகாரி 2776, 3096, 6729) ,அரசின்  நிதியை தாமும் தமது குடும்பத்தினரும் எக்காலத்திலும் பெறக் கூடாது என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டு உருவாக்கிய சட்டம்! (புகாரி 1485, 1491, 3072,: புகாரி 1485) போன்ற நபிகளாரின் வாழ்க்கை  அவனை ஒரு சிறந்த தலைவனுக்குவதற்கு வழியை காட்டும்.

(மேலும் பார்க்க: தனது குடிமக்களின் கடன் நபிகளாருடைய கடனாக பார்க்கப்பட்டது : புகாரி 2297, 2398, 2399, 4781, 5371, 6731, 6745, 6763

தனது அரசின் கரூவூலம் ஏழைகளுக்கு அதிகம் பயன்பட்டது நஸயீ 4694, அபூ தாவூத் 4145, 3149, 5809, 6088) 

அரச சொத்தை எப்படி நேர்மையாக பயன்படுத்தினார் : புகாரி 851, 1221, 1430, புகாரி 2055, 2431, 2433, நஸயீ 2565, அபூதாவூத் 1407, புகாரி 2433, 2055, 2431,

தன்னால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் நடந்து கொண்ட விதம்:  அஹ்மத் 21040, 21042, 

மா மன்னரான பிறகும் மக்களுடன் நடந்து கொண்ட விதம்:  பஸ்ஸார் 1293

மக்களிடம் மன்னனான பிறகு தன்னை அறிமுகம் செய்த விதம் இப்னு மாஜா 3303,

அரசின் வேலையில் மக்களோடு மக்களாக தானும் வேலை செய்யும் ஆளுமை :புகாரி 1502, 5542)

ஒரு குடும்பஸ்தன் நபிகளாரை வரலாற்றில் தேடினால் தாய் தந்தை மற்றும் மனைவியருடன் நல்ல முறையில் நபிகளார் கண்ணியமாக  நடந்து கொண்ட விதம் ( புகாரி 5190,  முஸ்னத் அஹ்மத் 23756, 24176, 25039, புகாரி 676, 5363, 6039, புகாரி 2620, 3183, 5979,புகாரி 6130,அபூதாவூத் 2214)
சிறுவர்களிடம் அன்பு காட்டும் முறை!( புகாரி 6247, 6129,3874, முஸ்லிம் 4297,முஸ்லிம் 4272,) என அனைத்தும் குடும்ப  பண்புகளிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார் என்பதை மனம் உறுதி செய்யும்.

(மேலதிகமாய் பார்க்க : தனது வேலையை தானே செய்வார்:அஹ்மத் 23756, 24176, 25039)

இப்பண்புகளில் ஒரு சில பண்புகளை இன்றைக்கும் கூட சிலரிடம் நாம் காண முடியும் என்றாலும் அனைத்துப் பண்புகளையும் ஒரு சேர எவரிடமும் காண முடியாது. நபிகள் நாயகம் தவிர வேறு எந்த வரலாற்று நாயகர்களிடமும் இவற்றைக் காண முடியாது.

 மேலும் நபிகளாரின் இறுதி நேரத்தில் அவரது மொத்த பண்பும் வெளியில் தெரிந்த சம்பவம் ஒன்று நடந்தது

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்களுக்கருகில் கட்டுப் போடுவதற்குரிய சிவப்புத் துணி இருந்தது. 'என் பெரிய தந்தை மகனே! இதை என் தலையில் கட்டுவீராக' என்றார்கள். அதை எடுத்து அவர்களின் தலையில் கட்டினேன். பின்னர் என் மீது அவர்கள் சாய்ந்து கொள்ள நாங்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தோம். (நபிகள் நாயகம் (ஸல்) மரணப் படுக்கையில் இருந்ததால் மக்கள் பெருமளவு அங்கே குழுமி யிருந்தனர்.) 'மக்களே! நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.

மறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா? என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் (அன்றைய வெள்ளி நாணயம்) கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள்.
இவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அவர்களுக்கும் இவ்வாறே கூறினார்கள்.
இவ் நிகழ்ச்சியை ஃபழ்லு என்பவர் பதிவு செய்கிறார்
நூல் : முஸ்னத் அபீ யஃலா 6824

இப்படிச் சொல்லக் கூடிய துணிவு இன்றைய உலகில் ஒருவருக்கும் கிடையாது. என்னிடம் யார் கணக்குத் தீர்க்கிறாரோ அவர் தான் மற்றவர்களை விட எனக்கு நெருக்கமானவர் என்று இன்றைக்கு எவரேனும் கூற முடியுமா? ஒரு தலைவர் சரி கூற தயாரா? ஆனால் 1400   வருடங்களுக்கு முன் எங்கள் தலைவர் கூறினார்.. அதில் யாருக்கும் சிறு துன்பம் கூட கொடுக்காத நபிகளாரை  அந்த கடனை தவிர வேறந்த பலியும் தீர்க்கவில்லை...

இதன் காரணமாகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தமது உயிரை விடவும் அதிகமாக நேசிக்கிறார்கள். உலகம் அவர்களை மாமனிதர் என்று புகழ்ந்து போற்றுகிறது.

அன்று பல லச்சம் மனிதர்கள் முன் அவர் கண்ணால் கண்ட மனிதர்கள் யாரும் செய்யாததை இன்றைய குறை மதியாளர்களும் , பொய் பெண்ணியவாதிகளும் , தங்களை சமூக அக்கரையாளர்களாக காட்டி கொள்ளும் நேர்மையற்ற பகுத்தறிவு போலிகளும் ஆதரமற்று  அவதூறு சுமத்துவது பெரும் வேடிக்கை..

இத் தொடர் ஊடாக என்னால் முடிந்தவரை நபிகளாரின் பலதார மணத்திற்கான காரணங்கள் மற்றும் விமர்சனங்களுக்கான பதிலை தொகுத்திருக்கிறேன்.

இத் தொடர் இத்தோடு முடிகிறது. இத் தொடரை எழுத உதவிய உலமாக்கள் மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பிராத்தனைகளும்.

நன்றி.

MUM.Faris (BSc)



Previous Post Next Post