சிறிய திக்ரு வடிவ துஆக்கள்



துஆ 01

اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي

அல்லாஹும்மஹ்தினீ வ ஸத்தித்னீ

யா அல்லாஹ்! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாக செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக

صحيح مسلم 2725


துஆ 02

اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا

அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரா

யா அல்லாஹ், என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக

صحیح مسلم 763


துஆ 03

اللَّهُمَّ فَقِّهْنِى فِي الدِّينِ

அல்லாஹும்ம ஃபக்கிஹ்னீ ஃபித்தீன்

யா அல்லாஹ்! எனக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக

صحيح البخاري 143


துஆ 04

أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ

அஸ்தக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹ்

நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்

صحيح البخاري 6307


துஆ 05

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ஹுப்பக

யா அல்லாஹ், நிச்சயமாக, நான் உன்னிடம் உன்னுடைய அன்பை கேட்கிறேன்

سنن الترمذي 3490


துஆ 06

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ وَرَحْمَتِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் ஃபத்லிக வ ரஹ்மதிக்

யா அல்லாஹ், நிச்சயமாக, நான் உன்னிடம் உன்னுடைய அருட்கொடையை மற்றும் உன்னுடைய கருணையை கேட்கிறேன்

السلسلة الصحيحة 1543


துஆ 07

اِجْعَلْنِى رَبِّ رَضِيًّا

இஜ்’அல்னீ ரப்பி ரதிய்யா

என் இறைவனே! என்னை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவனாக நீ ஆக்கி வைப்பாயாக!

ஸூரத்துல் மர்யமின் 6வது வசனத்திலிருந்து ஈர்க்கப்பட்டது.


துஆ 08

اللَّهُمَّ يَسِّرْ لِيْ جَلِيْسًا صَالِحًا

அல்லாஹும்ம யஸ்ஸிர்லீ ஜலீஸன் ஸாலிஹா

யா அல்லாஹ்! ஸாலிஹான‌ துணையை கொண்டு எனக்கு அருள்புரிவாயாக

 الترمذي413


துஆ 09

سُبْحَانَ الله وَبِحَمْدِهِ

ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹ்

தூயவனாகிய அல்லாஹ்வை போற்றி‌ புகழ்ந்து துதிக்கிறேன்

 صحيح مسلم6843


துஆ 10

لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِا للّٰهِ

லா ஹவ்லா வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது

 متفق عليه


துஆ 11

حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏

ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வக்கீல்

அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்

 (اٰل عمران:173)(صحيح البخاري:4563)


துஆ 12

 يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

யா ஹய்யூ யா கய்யூமு பிரஹ்மதிக அஸ்தகீஸ்

என்றென்றும் வாழ்பவனே, நித்தியமான ஒருவனே, உன் கிருபையினால் என்னுடைய எல்லா காரியங்களும் சரியான முறையில் அமைய‌ நான் உன்னை அழைக்கிறேன்

 (سنن الترمذي:3524) حسن



துஆ 13

اَلْلَهُمَّ لَاسَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلً

அல்லாஹும்ம லா ஸஹ்லா இல்லா மா ஜ’அல்தஹு ஸஹ்லா

யா அல்லாஹ் நீ எளிதாக்கியதை தவிர வேறு எதுவும்‌ எளிதானது இல்லை

 (صحيح ابن حبان،ج:974،3) صحيح


துஆ 14

اَلْلَهُمَّ اِنِّى اَعُوْبِكَى مِنَ الْعَجْزِ وَ الْكَسَلِ

அல்லாஹும்ம இன்னீ அ’ஊதுபிக மினல் ‘அஜ்ஸி வல் கஸல்

யா அல்லாஹ்! இயலாமையிலிருந்தும் சோம்பலில் இருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

 (صحيح مسلم:6873)


துஆ 15

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ‏

ரப்பிர் ஹம்ஹுமா கமா ரப்பயானீ ஸகீரா

“என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!”

 (الاسراء: 24)


துஆ 16

رَضِيْتُ بِا للّٰهِ رَبًّا وَّ بِالْاِسْلَامِ دِيْنًا وَّ بِمُحَمَّدٍ نَبِيًّا

ரதீது பில்லாஹி ரப்பவ் வ பில் இஸ்லாமி தீனவ் வ பி முஹம்மதின் நபிய்யா

அல்லாஹ் سبحان وتعالى வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மது صلى الله عليه وسلم அவர்களை நபியாகவும் நான் பொருந்திக் கொண்டேன்.‌

 (السلسلة الصحيحة:2686)


துஆ 17

اللَّهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَ بَصَرِي

அல்லாஹும்ம மத்திஃனீ பி ஸம்’ஈ வ பஸரீ

யா அல்லாஹ், என்னுடைய கேட்டல் மற்றும்‌ என்னுடைய பார்வையை எனக்கு பயனுள்ளதாக ஆக்கி தருவாயாக

 (سنن الترمذي:3604/7)حسن


துஆ 18

اللَّهُمَّ اهْدِ قَلْبِي وَسَدِّدْ لِسَانِيِ

அல்லாஹும்மஹ்தீ கல்பீ வஸத்தித் லிஸானீ

யா அல்லாஹ், என்னுடைய இதயத்தை வழிநடத்துவாயாக மேலும் எனது நாவை உண்மையாக வைத்திருப்பாயாக

 (سنن الترمذي:3551) صحيح


துஆ 19

رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا

ரப்பிஜ்’அல்னீ லக ஷக்காரா

என்னுடைய ரப்பே, எப்போதும் உனக்கு நன்றி உடையவனாக என்னை ஆக்கி வைப்பாயாக

 (سنن الترمذي:3551) صحيح


துஆ 20

اللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக்க ‘அஃபுவ்வுன் துஹிப்புல் ‘அஃப்வ ஃப’ஃபு’அன்னீ

யா அல்லாஹ்! நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னை மன்னித்து விடு!

(سنن الترمذي:3513) صحيح


துஆ 21

اللّٰهُمَّ إِنِّى اَسْئَلُكَى عِلْمًا نَّافِعًا

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக ‘இல்மன் நாஃபி’ஆ

யா அல்லாஹ்! நான் உன்னிடம் பயனளிக்கக்கூடிய அறிவை கேட்கிறேன்

(سنن ابن ماجه :925) صحيح


துஆ 22

اللّٰهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا

அல்லாஹும்ம ஆதி நஃப்ஸீ தக்வாஹா

யா அல்லாஹ்! என்னுடைய ஆத்மாவுக்கு அதனுடைய இறை அச்சத்தை வழங்குவாயாக

 (صحيح مسلم :2722)


துஆ 23

اللّٰهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ

அல்லாஹும்ம இன்னீ அ’ஊது பிக மின் ஜவாலி நிஃமதிக்

யா அல்லாஹ்! உன்னுடைய உதவிகள் நிறுத்திவைக்கப்படுவதை விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்

(صحيح مسلم: 2739)


துஆ 24

اللّٰهُمَّ اغْفِرْلِىْ وَ ارْحَمْنِى وَ عَافِنِىْ وَارْزُقْنِىْ

அல்லாஹும்மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ

இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை அளிப்பாயாக!

 (صحيح مسلم: 2697)


துஆ 25

اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ لَذَّةَ النَّظَرِ إِلَى وَجْه‍ِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக லத்த தன்னதரி இலா வஜ்ஹிக்

யா அல்லாஹ்! நிச்சயமாக நான், உன்னுடைய முகத்தை காணும் இனிமையை உன்னிடம் நான் கேட்கின்றேன்

(صحيح النسائي: 1304)


துஆ 26

اللّٰهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْإِيمَانَ

அல்லாஹும்ம ஹப்பிப் இலைனல் ஈமான்

யா அல்லாஹ்! ஈமானை நேசிக்கக் கூடியவர்களாக எங்களை ஆக்குவாயாக

 (صحيح الأدب المفرد: 538)



துஆ 27

اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلٰى مِنَ الْجَنَّة

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகத் தரஜாதில் ‘உலா மினல் ஜன்ன

யா அல்லாஹ் நிச்சயமாக நான், சொர்க்கத்தின் உயர்ந்த நிலையை உன்னிடம் நான் கேட்கின்றேன்

(المستدر ک للحاكم، ج :2، ص : 1954) صحيح


துஆ 28

أَعُـوْذُ بِكَلِمَـاتِ اللَّهِ ا لتَّـا مَّـاتِ مِنْ شَـرِّ مَا خَلَـقَ

அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா ஹலக்

அல்லாஹ் படைத்த அனைத்து தீங்குகளை விட்டும் பூரணத்துவம் வாய்ந்த அவனுடைய வார்த்தைகளைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன்

(صحيح مسلم:5248)


துஆ 29

حَسْبِـيَ اللَّهُ لَآ إِ لَهَ إِ لاَّ هُوَ عَلَـيْهِ تَوَكَّـلْتُ ، وَهُوَ رَبُّ ا لْعَرْشِ الْعَظِـيْمِ

ஹஸ்பியல்லாஹு லா இலாஹா இல்லா ஹுவ அலைஹி தவகல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்

எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன்.

(سنن أبي داود :4/321)


துஆ 30

رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏

ரப்பி ஜித்னீ ‘இல்மா

“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”

 (سورة طه :114)
Previous Post Next Post