🎯 *“வசதியுள்ளவன், (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்!”* என இறைத்தூதர்(ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். { நூல்: புகாரி - 2287,2288 }
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு இந்நபிமொழியை விளக்குகின்றார்கள்:-
*“வாங்கிய கடனை அடைப்பதற்கு ஒருவன் வசதியுள்ளவனாகவும், முடியுமானவனாகவும் இருந்து, அதை அவன் நிறைவேற்றாமல் தடுத்து வைத்துக்கொண்டிருப்பது அநியாயம் என்பதே இதன் விளக்கமாகும். காரணம், இவன் தனக்குக் கடமையாக இருந்ததை (நிறைவேற்றாமல்) தடுத்துக்கொண்டான். கடனை அடைப்பதற்கான வசதி ஒருவருக்கு இருக்குமாக இருந்தால் அதை நிறைவேற்றுவதற்கு அவசரம் காட்ட வேண்டியது அவருக்கு அவசியமாகும்; பிற்படுத்துவது அவருக்கு ஆகாது! (கடனைச் செலுத்த) முடியுமானவராக இருந்தும் அதை அவர் பிற்படுத்தினால், அநியாயக்காரனாகவே அவர் இருப்பார்! அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்!!*
*அநியாயம் (என்பது இலேசான ஒன்று அல்ல! அது) மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரக்கூடியதாகும். (வசதியிருந்தும் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பவன் மீது கழியும் ஒவ்வொரு மணி நேரமும், அல்லது ஒவ்வொரு விநாடியும் அவனுக்கு அது தீமையைத்தான் அதிகப்படுத்திக் கொண்டிருக்கும்... அல்லாஹ் பாதுகாப்பானாக!!!*
{ நூல்: 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்', 03/413 }
🔰➖➖➖➖➖➖➖➖🔰
🎯 عن أبي هريرة رضي الله عنه قال، قال رسول الله صلّى الله عليه وسلم: *{ مطل الغنيّ ظلم }* ( البخاري: رقم الحديث - ٢٢٨٧،٢٢٨٨)
شرح العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى هذا الحديث بأن : *« يعني ممانعة الإنسان الذي عليه دين عن الوفاء، وهو غنيّ قادر على الوفاء ظلم! وهذا منع ما يجب؛ لأن الواجب على الإنسان أن يبادر بالوفاء إذا كان له قدرة. ولا يحلّ له أن يؤخّر؛ فإن أخّر الوفاء وهو قادر عليه كان ظالما! والعياذ بالله!! والظلم ظلمات يوم القيامة. وكل ساعة أو لحظة تمضي على المماطل فإنه لا يزداد بها إلا إثما..! والعياذ بالله...!!! »*
{ شرح رياض الصالحين، ٣/٤١٣ }
🔰➖➖➖➖➖➖➖➖🔰
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா