காலைநேர பரகத்

*கேள்வி:* காலைப் பொழுதில் தூங்குவது பற்றிய மார்க்கத்தின் நிலைப்பாடு யாது?

 *பதில்:* நபியவர்கள் கூறியதாக ஸஹ்ர் இப்னு வதாஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "என்னுடைய உம்மத்திற்கு அதனுடைய காலைப் பொழுதில் பரக்கத் செய்யப்பட்டுள்ளது.

நபியவர்கள் ஒரு கூட்டத்தையோ அல்லது, ஒரு படையையோ அனுப்பி வைக்க நாடினால், பகலின் ஆரம்பப் பகுதியில் அனுப்பி வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்".

இச்செய்தியை அறிவிக்கக்கூடிய ஸஹ்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு வியாபாரியாகக் காணப்பட்டார். அவர் வியாபார நோக்கில் ஒரு கூட்டத்தை அனுப்பி வைக்க நாடினால், பகலின் ஆரம்ப பகுதியில் அனுப்பி வைப்பார். அதன் காரணமாக அவருடைய செல்வம் அதிகரித்தது". (திர்மிதி, அபூ தாவூத்)

அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸிற்கு ரியாலுஸ் ஸாலிஹீன் விளக்கவுரையின் போது கூறுகையில்: "என்றாலும், கவலைக்குரிய விடயம்! இன்று எங்களில் அதிகமானோர் பகலின் ஆரம்ப பகுதியில் தூங்குகிறார்கள். முட்பகல் நேரத்திலன்றி தூக்கத்தை விட்டு எழும்புவதில்லை. அதன் காரணமாக பரகத் பொருந்திய பகலின் ஆரம்ப பகுதி அவர்களை விட்டும் தப்பி செல்கிறது" என்கிறார்.

எனவே, அன்பார்ந்த சகோதரர்களே! அதிகாலைப் பொழுதின் பரக்கத்தைப் பெறும் பொருட்டு நாம் தூங்கும் நேரசூசியை மாற்றி செயல்படுவதற்கு முன்வருவோமாக!

- ஹிஷாம் (மதனி)
Previous Post Next Post