ஸய்யிதுல் இஸ்திக்பார் (தலைமை இஸ்(غ)திக்பார்)

நீங்கள் எப்போது மரணித்தாலும் நரகத்திற்குச் செல்லாமலே சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா?


இந்தப் பாவமன்னிப்புக் கோரலை அர்த்தம் புரிந்து உறுதியான நம்பிக்கையோடு இரவிலும் பகலிலும் அல்லாஹ்விடம் முன்வையுங்கள்.


 «اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ». 


அல்லாஹ்வே! நீயே என் இரட்சகன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் (எவரும்) இல்லை. நீ என்னைப் படைத்தாய்; நான் உன் அடிமை. நான் உன்(னுடன் செய்து கொண்ட) உடன்படிக்கையிலும் (நான் உனக்களித்த / நீ எமக்களித்த) உன் வாக்குறுதியிலும் என்னால் இயன்றவரை (நிலைத்து) இருக்கிறேன். நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடி ஒதுங்கிக்கொள்கிறேன்! என் மீதுள்ள உன் அருட்பாக்கியங்களை (நீயே சொரிந்திருக்கிறாய் என) நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், என் பாவங்களையும் ஒப்புக்கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், உன்னைத் தவிர (வேறெவரும்) பாவத்தை மன்னிக்கமாட்டார் (மன்னிக்க முடியாது).


நபி ﷺ அவர்கள் இந்தப் பிரார்த்தனையை இஸ்தி(غ)க்பார்களில் தலையாயது / முதன்மையானது என வர்ணித்துள்ளார்கள்.


அதேபோன்று யார் இந்தப் பாவமன்னிப்பை அதில் உறுதியான நம்பிக்கை வைத்தவராக ஒரு நாளில் கேட்கின்றாரோ அவர் அந்த நாளில் மாலைப்பொழுதை அடைவதற்குள் மரணித்தால் அவர் சுவர்க்கவாசியாக இருப்பார். மேலும் எவர் இதனை அதில் உறுதியான நம்பிக்கை வைத்தவராக ஒரு இரவில் கூறுகிறாரோ அவர் காலைப் பொழுதை அடைவதற்குள் மரணித்தால் அவர் சுவர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என்று நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்.


புகாரீ: (6306), அறிவிப்பவர்: ஷத்தாத் இப்னு அவ்ஸ் (றளியல்லாஹு அன்ஹு).


-ஸுன்னஹ் அகாடமி:


Previous Post Next Post