அஸ்மாஉல் ஹுஸ்னா - விளக்கவுரை

வழங்குபவர்: ஷெய்க் முபாரக் மதனி PhD



அறிமுகம்:

அல்லாஹ்வுடைய திருநாமங்களில் அறிவது முஸ்லீம்களின் மீது கடமையாக இருக்கிறது.

ஈமான் கொள்ள வேண்டிய 6 அம்சங்களில் அல்லாஹ்வை ஈமான் கொள்வது முதன்மையானதும் மிக பிரதானமானதாகும்.

அல்லாஹ்வை சரியான முறையில் ஈமான் கொள்ள வேண்டும் எனில் அல்லாஹ்வை அறிய வேண்டும்.

அதனால்தான் அல்குர்ஆனில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அல்லாஹ்வை அறிய வேண்டும் என்பதை அல்லாஹு தஆலா வலியுறுத்துகிறான்.

அல்லாஹ்வை பற்றிய அறிவு இன்றியமையாததாகும்.

இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்கு கிடைக்கின்ற மிகப் பெரிய பாக்கியம் அல்லாஹ்வின் அன்பு அவனுக்கு கிடைப்பது.

ஒரு மனிதன் அல்லாஹ்வை அறிய வேண்டும் என்றால் அதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன.

அந்த வழிமுறைகளில் மிக பிரதானமான ஒன்றுதான் அல்லாஹ்வின் திருநாமங்கள், அவனுடைய பண்புகளை ஊடாக அல்லாஹ்வை அறிவது என்பது.

அல்லாஹ்வின் திருநாமங்கள் எத்தனை என்பது அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிவான்.

அல்லாஹ்வின் பெயர்கள் தொண்ணூற்றொன்பது மட்டும் தான் என்பது பிழையான கருத்து.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது – நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கத்தில் நுழைவார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹுல் புஹாரி 7392, 6410)

நபி(ஸல்) அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட 99 பெயர்களையும் தெரியுமா? என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் இல்லை என்றுதான் கூறுகின்றனர்.

எனவே அல்லாஹ்வின் 99 திருநாமங்களையும் பொருளோடு நாம் அறிந்து மனனம் செய்து சுவர்க்கத்தை அடைய முயற்சி செய்வோம்.

அல்லாஹ்வின் திருநாமங்கள் தொடர்பாக சில பிழையான நடைமுறைகள் மக்கள் மத்தியில் இருக்கிறது

சிலர் அல்லாஹ்வின் பெயர்களை எதிலாவது எழுதி அதை வீடுகளில் தொங்க விட்டு அதன் மூலம் பரக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். சிலர் வாகனங்களிலும் அதை தொங்க விடுவார்கள், அதன் மூலம் தங்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க வேண்டும், பரக்கத் வர வேண்டும் என்ற எண்ணங்கள் அவர்களுக்கு வருகிறது. இது ஒரு பிழையான தவறான நடைமுறை ஆகும்.

நபி ஸல் அவர்கள் இவ்வாறு செய்யவில்லை. சஹாபாக்கள் மத்தியில் ஒரு நடைமுறை இருக்கவில்லை. அதேபோன்று சஹாபாக்கள் பின்னால் வந்த மக்கள் இவ்வாறான ஒரு நடைமுறையை செய்யவில்லை. எனவே நாமும் இதை கண்டிப்பாக தவிர்த்துக்கொள்ள வேண்டும் .

மனப்பாடம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு நீங்கள் வீட்டில் ஏதாவது ஒன்றில் எழுதி தொங்க விட்டால் அதன் நிலை வேறு.

காரில், வீட்டில், கடைகளில் தொங்க விட்டு அதன் மூலம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். இது பிழையான கருத்தாகும்.

அல்லாஹ்வின் திருநாமங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தத்துவங்களை சொல்லி இதன் மூலம் இன்ன காரியம் நடைபெறும் இந்தப் பெயரைக் கொண்டும் இன்ன காரியம் நிறைவேறும் இன்னன நோய்க்கு குணம் கிடைக்கும் என்றெல்லாம் அல்லாஹ்வுடைய திருநாமங்களை அவர்கள் பிரித்து பார்த்து கொண்டிருப்பதை நாம் காணமுடிகிறது இதுவும் ஆதாரமற்ற, இஸ்லாம் அனுமதிக்காத விஷயமாக இருக்கிறது.

எனவே இவ்வாறான பிழையான நடைமுறைகளை அல்லாஹ்வுடைய அஸ்மாவுல் ஹுஸ்னா என்ற திருநாமங்கள் விஷயத்தில் நாம் தவிர்த்துக் கொண்டு அல்லாஹ்வுடைய திருநாமங்களை பொருளுணர்ந்து மனப்பாடம் செய்து, அது நம்மிடம் எதிர்பார்க்கக் கூடிய அந்த அம்சங்களை நம்முடைய வாழ்க்கையில் எடுத்து நடந்து, வெற்றி அடைய நாம் முயற்சிக்கவேண்டும். வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக.

அஸ்மாஉல் ஹுஸ்னா - அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்

அல்லாஹ்- الله
அல் இலாஹ் – الاله
என்ற பெயர்களை பற்றி பார்க்கப் போகிறோம்.

அல்லாஹ் الله என்ற பெயர் குர்ஆனில் 2200 தடவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அல்லாஹ் என்ற பெயரின் சிறப்பு:

மற்ற எல்லா பெயர்களும் இந்தப் பெயருக்காக வந்தது.

அல்லாஹ்வுடையபெயர்தான் – அர் ரஹ்மான்.

அல்லாஹ்வுடைய பெயர்தான் - அர் ரஹீம்.

எனவே ஏனைய பெயர்கள் அனைத்தும் இதனை அலங்கரிக்க வந்தது.

(அர்ரஹ்மான், அர்ரஹீம்…….) ஏனைய பெயர்களின் கருத்துக்கள் அனைத்தும் இந்த அல்லாஹ் என்ற பெயருக்குள் அடங்கிவிடுகிறது.

இதன் மற்றொரு சிறப்பு

எப்பொழுதுமே ال ( அல்) உடன் தான் இருக்கும் உச்சரிக்கும் போதும் அப்படியேதான் உச்சரிக்கிறோம் அல்லாஹ் என்று எந்த சந்தர்ப்பத்திலும் ال அல் நீங்காது.

திக்ருகளில் அல்லாஹ் என்ற பெயர் பொதிந்திருக்கிறது

சுபஹான ல்லாஹ்
அல்ஹம்து லில்லாஹ்
அல்லாஹூ அக்பர்
லாஇலாஹ இல்லல்லாஹ்

அல்லாஹ் என்ற பெயர் கூறப்பட்டால் மூமின்களின் உள்ளம் நடுங்கும்.

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ ‌‏ 

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
(அல்குர்ஆன் : 8:2)

அல்லாஹ் الله என்ற சொல் அல்இலாஹ் ‘لاله’ என்ற சொல்லிலிருந்து உருவானதாகும்

அதனால்தான் இமாம்கள், அல்லாஹ் என்ற பெயரோடு அல்இலாஹ்- யும் குறிப்பிடுகிறார்கள்.


அல் இலாஹ்- வணங்கப்படுபவன்

அல்இலாஹ் என்பதின் பொருளை பற்றி இப்னு அப்பாஸ்( ரலி) அவர்கள் கூறுவதாவது;
அனைத்து படைப்புகளும் அவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதை குறிக்கக்கூடிய சொல்லாகும்.

அல்லாஹ், அல்இலாஹ் – வணங்கபடத் தகுதியானவன்.

எனவே இந்த பெயர்களை சரியாக புரிந்து அதனை மனனம் செய்து அமல் செய்திட அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக


الر ب -அர் ரப்

அர் -ரப் என்ற, இந்த திருநாமம் குர்ஆனில் 500 தடவைக்கும் அதிகமாக வந்துளளது.

அறிஞர்கள் அர்-ரப் என்ற வார்த்தையிலிருந்துதான், தவ்ஹீது ருபூபிய்யா என்பதை அடையாளப்படுத்துகிறார்கள்.

இமாம் இப்னு ஜரீர் அத் தபரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தன்னுடைய தப்ஸீரில் அர் -ரப் என்ற வார்த்தைக்கு ,

அரபிகள் மத்தியில் ஒரு தலைவருக்கு கட்டுப்படக்கூடிய ஒரு வார்த்தைக்கு ரப் என்றும்,

சீர்திருத்தக் கூடிய ஒருவருக்கு ரப் என்றும்,

ஒன்றுக்கு சொந்தக்காரராக ஒருவர் இருந்தால் அவரையும் ரப் என்று அழைக்கும் நடைமுறை இருந்திருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், அந்நிஹாயா என்ற புத்தகத்தில்,

ரப் – என்பவன் ஆட்சி அதிகாரம் உள்ளவன், தலைவன், நிர்வகிப்பவன், பராமரிப்பவன், அருள்பாலிப்பவன் என்ற பல அர்த்தங்களை தரக்கூடியதாக இருக்கின்றது எனக் கூறுகிறார்கள்.

இந்த இரண்டு அறிஞர்களின் கூற்றுப்படி ரப் என்பது தலைவன், ஆட்சியாளன், நிர்வகிக்கக்கூடியவன், பராமரிக்க கூடியவன், அருள்பாலிப்பவன் போன்ற கருத்துக்களை நாம் அறியலாம்.

பிற்காலத்தில் வந்த அகீதா அறிஞர்கள் ‘ரப்’ என்ற வார்த்தைக்கு தலைவன், ஆட்சியாளன், இல்லாமல் இருந்த ஒன்றை உருவாக்க கூடியவன் என்ற பொருள் தருவதாக கூறுகிறார்கள்.

அல்லாஹ்வை பொறுத்தவரை ‘ரப்’ என்ற வார்த்தைக்கு அவனே தலைவன், ஆட்சி அதிகாரம் உள்ளவன், இல்லாமையில் இருந்து ஒன்றை உருவாக்க கூடியவன் என்று பொருள் தருவதாக நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

உண்மையிலேயே ஒருவன் அல்லாஹ்வின் ரப் என்ற வார்த்தையை அறிந்திருந்தால் அல்லாஹ் (வுக்கு எதையும் யாரையும் இணையாக்காமல்) ஒருவனையே வணங்குவான்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً  ‌ وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ‏ 
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அனைவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய) ஒரே வகுப்பார்தான். (இதில் ஜாதி வேற்றுமை கிடையாது.) உங்கள் அனைவருக்கும் இறைவன் நான் ஒருவனே! ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்.
(அல்குர்ஆன் : 21:92)

ஹதீஸ்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும், மன நிறைவோடு ஏற்றுக்கொண்டாரோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை அடைந்துவிட்டார்.
இதை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 56.

எனவே அல்லாஹ்வை ரப்பாக நினைத்தால் தான் நாம் ஈமானின் சுவையை உணர முடியும், வணக்கத்தில் இக்லாஸ் வரும் என்பதை நாம் புரியலாம்.

எனவே ரப் என்ற வார்த்தையை சரியான முறையில் உச்சரித்து மனப்பாடம் செய்ய அல்லாஹ் நமக்கு உதவி புரிவானாக.


الرحمن அர்ரஹ்மான் ➖அன்பு நிறைந்தவன்
الرحيم அர்ரஹீம் ➖ அன்பை தருபவன்

அல்லாஹ்வின் திருநாமங்களை அறிந்து மனனம் செய்வது நாம் சுவனம் செல்ல சிறந்த வழி.

அர் ரஹ்மான் என்ற வார்த்தை அல் குர்ஆனில் 57 இடத்தில் வந்திருக்கிறது

அர் ரஹீம் என்ற வார்த்தை அல் குர்ஆனில் 114 இடத்தில் வந்திருக்கிறது.

பொதுவாக அல்லாஹ்டைய ஒவ்வொரு பெயரிலும் ஒரு ஸிஃபத் (பண்பு) இருக்கிறது.

ரஹ்மான், ரஹீம் இரண்டு பெயரும் ரஹ்மத் என்ற ஒரே ஸிஃபத்தை (பண்பை) கொண்டிருக்கிறது. அது அன்பு, கருணை இரக்கம் என்கிற ஸிஃபத்.

அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் ஆரம்பிக்கும் போதே இந்த இரண்டு பெயர்களை முன்னிலை படுத்தி ஆரம்பிக்கிறான்.

بسم الله الرحمن الرحيم.

ஒவ்வொரு சூராவை ஓதும் போதும் சூராவின் ஆரம்பத்திலும் இந்த பெயர்களை ஓதி ஆரம்பிக்கிறோம்.

ஒவ்வொரு தொழுகையிலும் ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த பெயர்களை ஓதி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறோம்.

இரண்டு பெயர்களையும் ஒரு மனிதன் சரியாக புரிந்து கொண்டால் எல்லாவற்றையும் விட அதிகமாக அல்லாஹ்வை அவன் நேசிப்பான்.

அல்லாஹ்வின் அன்பு கருணை இரக்கம் எவ்வளவு விசாலமானது என்பதை இந்த இரண்டு பெயர்களும் நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றன.

அல்லாஹ் தன்னுடைய அன்பு இரக்கம் கருணையினால் தான் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் நமக்கு தந்திருக்கிறான்.

அல்லாஹ் தன்னுடைய அன்பு இரக்கம் கருணையினால் தான் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் நமக்கு தந்திருக்கிறான்.

நாம் பாவம் செய்யக்கூடியவர்கள், அதிலும் சில நேரம் அளவுகடந்து பாவங்கள் செய்கிறோம்.

அப்படி பாவம் செய்யக் கூடிய நம்மை பார்த்து அல்லாஹ் அழைக்கிறான்.

قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏ 
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: “எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அன்பை கருனையை பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 39:53)

அல்லாஹ்வின் அன்பும் கருணையும் இருப்பதினால் தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அவனுக்கு அநீதி இழைக்கக் கூடிய ஒரு பாவம் செய்யக் கூடியவர்களும் அவருடைய அன்பும் கருணையும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

அதே நேரத்தில் முஃமின்களுக்கும் விசேஷமான அன்பும் கருணையும் அல்லாஹ்விடம் இருந்து கிடைத்து கொண்டிருக்கிறது.

மறுமையிலும் உங்களுக்கு அல்லாஹ்வுடைய அன்பும் கருணையும் இருக்கிறது.

அல்லாஹ் தன் அன்பை பற்றி குர்ஆனில் கூறுகிறான்:

وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ‌ ‌
என்னுடைய அன்பு எல்லா வஸ்துக்களிலும் சூழ்ந்து விசாலமாகியுள்ளது,
(அல்குர்ஆன் : 7:156)

என்னுடைய அன்பு எல்லாவற்றையும் வியாபித்து விட்டது என்று அல்லாஹ் கூறுகிறான்.

எனவே ரஹ்மான் ரஹீம் என்ற பெயரை சொல்லும் போது அல்லாஹ்வின் அன்பை நாம் ஆதரவு வைக்க வேண்டும் அதில் நிராசை அடையக் கூடாது என்பதை உணர்த்துகிறது.

அல்லாஹ்வின் அன்பு தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். அந்தக் கைதிகளில் ஒரு பெண் (தனது மார்பில் சுரந்த பாலை ஊட்டுவதற்காகத் தனது குழந்தையைத்) தேடினாள். (குழந்தை கிடைக்கவில்லை. எனவே,) கைதிகளிடையே எந்தக் குழந்தையைக் கண்டாலும் அதை (வாரி) எடுத்து, தனது வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். (தனது குழந்தை கிடைத்ததும் அதையும் நெஞ்சணைத்துப் பாலூட்டினாள்.)
அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தப் பெண் தனது குழந்தையைத் தீயில் எறிவாளா,சொல்லுங்கள்?” என்றார்கள். நாங்கள், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது” என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள்மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்” என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 5315.

ரஹ்மான் ➖– அன்பு நிறைந்தவன்
ரஹீம் ➖– அன்பு அள்ளிச் சொரிபவன்

இரண்டு பெயர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ரஹ்மான் என்பது (அல்லாஹ்வுடைய தாத்தோடு தொடர்புடைய ஸிஃபத் ஆகும்)வஅல்லாஹ்விடம் இருக்கும் பண்பாகும்.

ரஹீம் என்பது அடியார்களுக்கு அல்லாஹ் அன்பு கருணை காட்டுவதை உணர்த்துவதாகும்.

இனி ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மான்னிர் ரஹீம்’ ஓதும் போது அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று இல்லாமல் ‘அன்பு நிறைந்தவன்’ ‘அன்பை அள்ளி அள்ளி கொடுக்க கூடியவன்’ என்பதை புரிந்து ஓதுவோமாக இருந்தால், அல்லாஹ்வின் மீது அன்பும் நெருக்கம் அதிகரிக்கும்.


الْحَـىُّ ➖அல்ஹய்யு

الْقَيُّوْمُ ➖அல்கய்யூம்

’அல்ஹய்யு’ என்ற பெயர் அல்குர்ஆனில் 5 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

’அல்கய்யூம்’ என்ற பெயர் தனித்து வரவில்லை. அல்ஹய்யு என்ற பெயருடன் சேர்ந்தே அல்குர்ஆனில் 3 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏
அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. (அவன்) ஜீவனுள்ளவன், (என்றென்றும்) நிலைத்திருப்பவன், அவனை சிறு துயிலும், உறக்கமும், பீடிக்காது. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுபவர் யார்? அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவையன்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும் முற்றிலும் (மற்றெவரும்) அறிந்து கொள்ளமாட்டார்கள். அவனுடைய ‘குர்ஸிய்யு’ வானங்களிலும், பூமியிலும் விசாலமாக (பரவி) இருக்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்காது. மேலும் அவன் மிக்க உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.
(அல்குர்ஆன் : 2:255)

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُ‏ 
அல்லாஹ் (அவன் எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன். (என்றும்) நிலையானவன்.
(அல்குர்ஆன் : 3:2)

وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَىِّ الْقَيُّوْمِ‌ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا‏ 
(அந்நாளில் அல்லாஹ்வான) நிலையானவனாகிய நித்திய ஜீவனுக்கு (முன்) யாவருடைய முகங்களும் கவிழ்ந்துவிடும், எவன் (இணையாக்குதல் என்னும்) அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் திட்டமாக நஷ்டமடைந்து விட்டான்.
(அல்குர்ஆன் : 20:111)

’அல்ஹய்யு’ என்றால் உயிரோடு இருப்பவன் என்பது அர்த்தமாகும்.

அல் ஹய்யு என்கிற பெயருக்குள் ‘அல்ஹயாத்’ ‘உயிரோடு இருத்தல்’ என்கிற ஒரு ஸிஃபத் இருக்கிறது.

எனவே அல்லாஹ் உயிரோடு இருப்பவன்.

உயிரோடு இருப்பவன் என்றால் மவுத் இல்லாது உயிரோடு இருப்பவன்.

இதைப்பற்றி ஷேக் அப்துர் ரஸாக் அல் அப்பாத் அவர்கள் கூறும்போது; “அல்லாஹ்வின் பண்பான ஹயாத் என்பது, இல்லாமையில் (என்ற ஒரு நிலையில்) இருந்து வந்த ஹயாத் அல்ல. அழிதல் என்ற நிலை இல்லாத ஹயாத். எந்த குறையும் ஏற்படாத ஹயாத்” என்று கூறினார்கள்.

இந்த கருத்தை தான் அல்ஹய்யு என்ற வார்த்தை தருகிறது.

وَتَوَكَّلْ عَلَى الْحَـىِّ الَّذِىْ لَا يَمُوْتُ وَسَبِّحْ بِحَمْدِهٖ‌ وَكَفٰى بِهٖ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرَ ا‌ ۛ ۙ‏ 
இறந்து விடமாட்டானே அத்தகைய உயிருள்ளவனின் மீது (உமது காரியங்களை ஒப்படைத்து அவன் மீது முழு) நம்பிக்கையும் வைப்பீராக! இன்னும், அவனின் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்வீராக! இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை நன்குணர்ந்திருப்பது அவனுக்குப் போதுமானதாகும்.
(அல்குர்ஆன் : 25:58)

இப்படி பல இடங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்:
அன்த ஹய்யுல்லதீ லாயமூது.
நீ மரணமில்லா உயிருள்ளவன் என்று கூறினார்கள்.

மனிதன் இல்லாமையில் இருந்து வந்தவன். அழிந்து விடக் கூடியவன்.

அல்லாஹ் இல்லாமை என்ற ஒரு நிலை இல்லாத ஹய். அழிந்து விடாத ஹய். இந்த ஹய்யு என்கிற பெயருக்குள் இருக்கும் ஹயாத் என்கிற பண்பு தான் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கி வழிபட தகுதியானவன் என்பதை வலியுறுத்துகிற மிக முக்கியமான ஒரு பண்பு.

ஆயத்துல் குர்ஸியில்:
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُ‏ 
அல்லாஹ் (அவன் எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன். (என்றும்) நிலையானவன்.
என்று அல்லாஹ் இதை கூறுகிறான்.

எனவே நாம் ஒருவரை வணங்க வேண்டும் என்றால், வணங்க தகுதியானவராக அவர் இருக்க வேண்டும் என்றால் அவர் இல்லாமை என்ற ஒரு நிலையில் இருந்து வராத ஒரு ஹய்யாகவும், மரணிக்காமல் என்றென்றும் உயிர் வாழ கூடிய ஒரு ஹய்யாகவும் அவர் இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான அடிப்படையாக இருக்கிறது.

‘அல் கய்யூம்’➖ என்றால் தன்னுடைய காரியங்களைத் தானே நிறைவேற்றிக் கொண்டு தன்னுடைய படைப்புகளையும் பராமரிக்கிறவன் என்பது அதனுடைய அர்த்தமாக இருக்கிறது.

அல்கய்யூம் என்பதை நிலையானவன் என்று கூறுகிறோம். அதைவிட தன்னுடைய எல்லா காரியங்களையும் தானே நிறைவேற்றுபவன். (தன் படைப்புகளிடம்) அடியார்களிடம் எந்த தேவையும் அற்றவன் என்று புரிந்து கொண்டால் அல்கய்யூம் என்ற பெயர் நம்மிடம் சரியான முறையில் செல்வாக்கு செலுத்த கூடியதாக இருக்கும்.

’அல்ஹய்யு, அல்கய்யூம்’ என்ற இந்த இரண்டு பெயர்களும் உலமாக்கள்
‘ اسماء الأعظم’ அல்லாஹ்வின் மகத்தான பெயர்கள் என்று கூறுகிறார்கள்.

ஒரு சஹாபி துஆ செய்யும் போது அல்ஹய்யு அல்கய்யூம் என்று துஆ செய்வதை கண்ட நபி ஸல் அவர்கள்; “அல்லாஹ்வின் மகத்தான பெயர்களை கொண்டு இவர் துஆ செய்துவிட்டார். எனவே அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றி விடுவான்” என்று கூறினார்கள்.

எனவே ‘யா ஹய்யு, யா கய்யூம்’ என்று அல்லாஹ்வின் இரண்டு பெயர்களை கூறி துஆ கேட்டால் நம் தேவைகள் நிறைவேறும் என்பது இந்த இரண்டு பெயர்களுக்கும் இருக்கும் ஓர் சிறப்பம்சமாக இருக்கிறது.

எனவே இந்த இரண்டு பெயர்களையும் புரிந்து மனப்பாடம் செய்ய முயற்சி செய்வோம்.


الخالق ➖ அல்ஃகாலிக்
الخلاق➖ அல்ஃகல்லாக்

الخالق ➖ அல்ஃகாலிக்
என்ற பெயர் அல்குர்ஆனில் 11 இடங்களில் இடம்பெற்றிருக்கிறது.

الخلاق➖ அல்ஃகல்லாக்
என்ற பெயர் அல்குர்ஆனில் 2 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.

اِنَّ رَبَّكَ هُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ‏ 
நிச்சயமாக உமதிரட்சகன் – அவனே (அனைத்தையும்) படைத்தோன், (இவர்களைப்பற்றி) நன்கறிந்தோன்.
(அல்குர்ஆன் : 15:86)

اَوَلَيْسَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْؔ بَلٰی وَهُوَ الْخَـلّٰقُ الْعَلِيْمُ‏ 
வானங்களையும், பூமியையும் படைத்தானே அத்தகையவன், அவர்களைப் போன்றதைப் படைக்கச் சக்திபெற்றவனாக இல்லையா? ஏன் இல்லை? (அவனே ஆற்றலுடையவன்.) நிச்சயமாக, அவனே மிகப் பெரும் படைப்பாளன், நன்கறிகிறவன்.
(அல்குர்ஆன் : 36:81)

’அல்ஃகாலிக்’ என்றால் ‘படைப்பாளன்’ ‘படைக்க கூடியவன்’ என்பது அர்த்தமாகும்.

’அல்ஃகல்லாக்’ என்றால் ‘அதிகமாகப் படைக்க கூடியவன்’ என்பது அர்த்தமாகும்.

பொதுவாக இந்த ‘அல்ஃகாலிக்’ ‘அல்ஃகல்லாக்’ என்ற பெயர்களுக்குள் ‘அல்ஃகல்க்’➖ ‘படைத்தல்’ என்கிற பண்பு இருக்கிறது.

’அல்ஃகல்க்’ என்கிற இந்தச் சொல் குர்ஆனில் இரண்டு அர்த்தங்களில் பிரயோகிக்கப்பட்டு உள்ளது.

அர்த்தம்1: முன்னுதாரணங்கள் என்று ஒன்று இல்லாமல், இல்லாமையிலிருந்து ஒன்றை உருவாக்குவது.

اِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ‏ 
நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும், (நிர்ணயிக்கப்பட்ட) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 54:49)

*الَّذِىْ خَلَقَ فَسَوّٰى ۙ‏ *
அவன் எத்தகையவனென்றால், அவனே (படைப்பினங்களனைத்தையும்) படைத்து பிறகு (அவற்றைச்) செவ்வையாக்கினான்.
(அல்குர்ஆன் : 87:2)

بَدِيْعُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ اَنّٰى يَكُوْنُ لَهٗ وَلَدٌ وَّلَمْ تَكُنْ لَّهٗ صَاحِبَةٌ‌ وَخَلَقَ كُلَّ شَىْءٍ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ 
முன் மாதிரியின்றியே வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவன், அவனுக்கு மனைவியே இல்லாதிருக்க அவனுக்கு எவ்வாறு பிள்ளையிருக்க முடியும்? இன்னும், ஒவ்வொரு பொருளையும் அவனே படைத்திருக்கின்றான், அன்றியும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் : 6:101)

يَوْمَ نَـطْوِىْ السَّمَآءَ كَطَـىِّ السِّجِلِّ لِلْكُتُبِ‌ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ‌ وَعْدًا عَلَيْنَا‌ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ‏ 
(நபியே!) எழுதப்பட்ட (பெரும்) ஏடுகளைச் சுருட்டுவதைப்போல, நாம் வானத்தைச் சுருட்டிவிடும் நாளை (நினைவு கூர்வீராக!) முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே அதை நாம் (திரும்பவும்) மீளவைப்போம், (இது) நம் மீது கட்டாயமான வாக்குறுதியாகும், நிச்சயமாக நாம் (இதை) செய்வோராய் இருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 21:104)

மேலுள்ள வசனங்களிலிருந்து அல்லாஹ் கூறக்கூடிய இந்த வார்த்தையின் அர்த்தம் இல்லாமையிலிருந்து ஒன்றை உருவாக்குவது.

’அல்ஃகல்க்’ என்பதன் இன்னுமொரு அர்த்தம்2:
‘தக்தீர்’ ➖ ‘நிர்ணயித்தல்’ என்பதாகும்.

அல்குர்ஆனில் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ள இடங்கள்:

اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا‌ اِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَـكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏ 

“அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் விக்கிரகங்களைத்தான், நீங்கள் பொய்யாக (உங்கள் கைகளால் அவைகளைப்) படைத்துக்கொண்டீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவை உங்களுக்கு உணவளிக்கச் சக்திபெறமாட்டா. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே தேடுங்கள். அவ(ன் ஒருவ)னையே வணங்குங்கள், அவனுக்கு நன்றியும் செலுத்துங்கள், அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 29:17)

وَّتَخْلُقُوْنَ اِفْكًا‌
இதற்கு நீங்கள் படைக்கிறீர்கள் என்று அர்த்தம் கிடையாது.

பொய்யை நீங்கள் நிர்ணயித்து வடிவமைக்கிறீர்கள் என்று தான் இந்த வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்க வேண்டும்.

فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ‏ 
ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும்பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன்.
(அல்குர்ஆன் : 23:14)

இந்த வசனத்தில் ஃகாலிக்கீன்➖ என்பது ‘இல்லாமையில் இருந்து ஒன்றை படைப்பவர்களில் அல்லாஹ் சிறந்தவன்’ என்ற அர்த்தம் கிடையாது.

அப்படி இல்லாமையில் இருந்து ஒன்றை படைப்பவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. அவ்வாறு படைப்பவன் அல்லாஹ் மட்டுமே.

இந்த இடத்தில் இந்த சொல், (இருப்பதைக் கொண்டு) ‘நிர்ணயித்து வடிவமைப்பது’ என்று அர்த்ததில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே ‘ஃகல்க்’ ➖படைத்தல் என்ற வார்த்தையை அல்லாஹ்வோடுதொடர்பு படுத்தும் போது இல்லாமையிலிருந்து படைத்தவன் என்ற அர்த்ததில் பயன்படுத்தப்பட வேண்டும்.

இல்லாமையிலிருந்து படைத்தவன் அல்லாஹ் மட்டும் தான்.

மனிதர்களோடு இந்த வார்த்தையை தொடர்பு படுத்தும் போது ‘நிர்ணயித்தல், வடிவமைத்தல்’ என்ற அர்த்தம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

அல்லாஹ்வைத் தவிர உள்ள எல்லாமே ‘العالمون’➖ ‘அல்ஆலமூன்’ என்று சொல்லப்படும்.

அல்ஃகாலிக் அல் ஃகல்லாக் என்பதை நாம் சரியாக அறிகிற போது இந்த உலகம் முழுவதையும், ‘அல்ஆலமூன்’ அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ்தான் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அனைத்தையும் அல்லாஹ் படைத்திருக்கிறான்.

அல்லாஹ்வை தவிர உள்ள அனைத்தும் படைக்கப்பட்டவை.

இந்த அனைத்தையும் அல்லாஹ் நிச்சயமாக வீணாக படைக்கவில்லை.

அல்லாஹ்தஆலா அனைத்தையும் அர்த்தத்தோடு தான் படைத்திருக்கிறான்.

وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ‏ 
வானையும், பூமியையும், அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் விளையாடியவர்களாக (வீண் விளையாட்டுக்காக) நாம் படைக்கவில்லை.
(அல்குர்ஆன் : 21:16)

அல்லாஹுத்தஆலா படைத்திருக்கும் அனைத்து படைப்புகளுமே அர்த்தத்தோடு தான் படைக்கப்பட்டிருக்கிறது.

பூமியில் உள்ள அனைத்தையும் மனிதர்களுக்காக படைக்கப்பட்டிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ‌ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ 
அவன் எத்தகையவனென்றால், பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காக அவன் படைத்தான்; பின்னர் அவன் வானத்தை படைக்க கருதியபோது அவைகளை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகின்றவன்.
(அல்குர்ஆன் : 2:29)

⁉நாம் மனிதர்கள் எதற்க்காக படைக்கப்பட்டுள்ளோம்?⁉

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏ 
மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.
(அல்குர்ஆன் : 51:56)

அல்லாஹ் மனிதனை படைத்த நோக்கம் அவன் ஒருவனையே நாம் இபாதத் செய்ய வேண்டும் என்பதற்காக.

அதாவது காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை நாம் மரணிக்கும் வரை அல்லாஹ் சொன்னபடி, அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த படி நாம் வாழ வேண்டும் என்பதற்காக தான் அல்லாஹ் நம்மை படைத்திருக்கிறான்.

அல்ஃகாலிக் அல்ஃகல்லாக் என்ற பெயர்களின் அர்த்தத்தை நாம் அறிந்து உணரும் போது, நமக்கு அல்லாஹ்வின் மீது ஒரு பெரிய கண்ணியம் ஏற்படுகிறது. அவன் மீது பாதிப்பு ஏற்படுகிறது, அல்லாஹ் தான் வணங்கி வழிபட தகுதியானவன் என்ற உணர்வு ஏற்படுகிறது.

எனவே அவனை மாட்டுமே நாம் வணங்க கூடியவர்களாக மாறுகிறோம்.

அல்லாஹுத்தஆலா அப்படியான நல்ல மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக.


البارئ➖
தோற்றுவிப்பவன்
المصور.➖
உருவம் அமைப்பவன்

அல்லாஹ் தன் திருமறையில் தன்னை பற்றி கூறுகிறான்:

هُوَ ٱللَّهُ ٱلۡخَٰلِقُ ٱلۡبَارِئُ ٱلۡمُصَوِّرُۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰۚ يُسَبِّحُ لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
அவன்தான் அல்லாஹ்; படைப்பவன், ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன், உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவையாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன – அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.
(அல்குர்ஆன் 59:24)

இந்த ஆயத்தில் அல் காலிக் (الخالق) என்ற பெயரும் சேர்ந்து வருகிறது.

’அல் பாரி’ என்றால் ‘தோற்றுவிப்பவன்’.

அதாவது இல்லமையிலிருந்து ஒன்றை தோற்றுவிக்கிறவன்.

’அல் முஸவ்விர்’ என்றால் ‘உருவமைப்பவன்’.

இமாம் இப்னு கஸீர் (ரஹி) அவர்கள் கூறும் 59:24 ஆயத்தின் விளக்கம்:

அல்லாஹ் அல்ஃகாலிக் , அல்பாரி, அல்முஸவ்விர் என்ற இந்த மூன்று பெயர்களை இதில் குறிப்பிடுகிறான்.

’ஃகல்க்’ என்றால் நிர்ணயித்தல்.

’பர்’ என்றால் நிர்ணயித்ததை நிறைவேற்றுதல்.

’தஸ்வீர்’ என்றால் அதை வடிவமைப்பது.

அல்லாஹ் தான் ஒரு படைப்பு எப்படி உருவாக வேண்டும் என்று வடிவமைத்து, அந்த படைப்பை இல்லாமையிலிருந்து தோற்றுவித்து, அதற்கான சரியான வடிவம் அமைக்கிறான் என்பதை இந்த பெயர்கள் நமக்கு உணர்த்துகிறது.

அல்லாஹுதஆலா ஒரு படைப்பை படைக்கின்ற போது அது மிக அழகிய வடிவில் படைக்கிறான் என்பதை அல்குர்ஆனில் நமக்கு அல்லாஹ் அடையாளப்படுத்து் கிறான்.

அல்லாஹ் படைப்பவன், இல்லமையிலிறுந்து ஒன்று தோற்றுவிப்பவன், அதை உறுவமைப்பவன், இங்கே இந்த மூன்று விஷயங்களிலும் அல்லாஹ் ஒருமைபடுத்தப்பட வேண்டியவனாக இருக்கிறான்.

படைத்தலில் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு நிகராக வேறு யாராலும் உருவாக்க முடியாது.

இல்லமையிலிருந்து தோற்றுவிப்பது என்பதிலும் அல்லாஹ்க்கு நிகராக யாரும் வரமுடியாது .
உருவமைப்பதிலும் அல்லாஹ்க்கு நிகராக யாரும் வரமுடியாது.

எனவே தான் இந்த உருவமைப்பது பொறுத்தவரையில் யாராவது அல்லாஹ் உடைய படைப்பை போன்று ஒன்றை தன்னுடைய கரங்களால் உருவமைக்க வந்தால் அவர் பற்றி மிக கடினமான எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்கள் விடுதிருப்பதை பார்க்கின்றோம்.

மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடினமான வேதனைக்குள்ளாவோரில் இந்த உருவப் படங்களை வரைகிறவர்களும் அடங்குவர்’ என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6109. முஸ்லிம்)

நள்ர் இப்னு அனஸ் இப்னி மாலிக்(ரஹ்) அறிவித்தார்
நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் இருந்தேன். அவர்களிடம் மக்கள் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். (பொதுவாக) தம்மிடம் (விளக்க) கேட்கப்படாத வரை நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ்(ரலி) (எதையும்) கூற மாட்டார்கள்.
அப்போது (ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில்) இப்னு அப்பாஸ்(ரலி), ‘உலகில் ஓர் உருவப் படத்தை வரைகிறவர் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது’ என்று முஹம்மத்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்’ எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 5963.

இந்த உலகத்தில் உருவங்களை வடிவ மைப்பவர்கள் , உருவங்களை வரைபவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

(ஃபோட்டோ எடுப்பதை கூடுமா கூடாதா என்பதை பொறுத்தவரையில் அறிஞர்களிடதில் கருத்து வேறுபாடு இருக்கின்றது.
அதிகமான அறிஞர்கள் கூடாது என்று சொன்னபோதிலும், ஒரு சில அறிஞர்கள் அது உருவம் அமைப்பது என்ற நிலைக்குள் வராது. இருக்கிற உருவத்தை பிரதி செய்வதாக அமைகிறது.
அது தேவைகளுக்கும், அவசியமான சூழ்நிலைகளுக்கும் கூடும் என்கிற கருத்தை சொல்கிறார்கள்)

ஆனால் தன்னுடைய கரங்களால் ஒரு உருவத்தை வடிவமைப்பது அல்லது உருவத்தை வரைவது என்பது எச்சரிக்கைக்கு உரிய குற்றம் என்பது எல்லா அறிஞர்களின் கருத்தாகும்.

எனவே அல்லாஹ் ‘அல் பாரி’, ‘அல் முஸவ்விர்’ என்று அறியக்கூடிய நாம் இந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


الملك ➖அல்மலிக்

المليك ➖அல்மலீக்

அல் மலிக் என்ற பெயர் அல்குர்ஆனில் ஐந்து இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.

அல் மலீக் என்ற பெயர் அல்குர்ஆனில் இரண்டு இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.

اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّنَهَرٍۙ‏ 
நிச்சயமாக பயபக்தியுடையோர் சுவனபதிகளிலும் (அவற்றிலுள்ள) ஆறுகளிலும் இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 54:54)

فِىْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ‏ 
(மெய்யாகவே) மிக்க உண்மையான இருக்கையில், மிக்க சக்தி வாய்ந்த அரசனிடத்தில் இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 54:55)

இந்த இரண்டு பெயர்களுமே அல்லாஹ்வுக்கு முல்க் என்ற ஒரு ஸிஃபத் இருப்பதை உணர்த்துகிறது.

முல்க் என்றால் ஆட்சி அதிகாரம் என்பது நேரடியான அர்த்தம்.

முல்க் என்ற சொல் மூன்று விஷயங்களை உணர்த்துவதாக ஷேக் அப்துர் ரஸாக் இப்னுல் அப்பாத் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்:

முதலாவதாக: ‘அல் மலிக்’ என்ற இந்த பெயருக்குள் இருக்கும் ‘முல்க்’ என்ற ஸிஃபத்தின் அர்த்தம் அதிகாரம் என்பதாகும்.
அதிகாரம் என்றால் பலம், கண்ணியம், சக்தி, பூரணமான அறிவு, எல்லாவற்றையும் நிறைவேற்றக் கூடிய தன்மை, எல்லாவற்றை நிர்வகிக்கக் கூடிய ஆற்றல், அன்பு, இரக்கம், பூமியில் உள்ளவை, வானத்தில் உள்ளவை எல்லாவற்றையுமே நிர்வகிக்கின்ற அந்த தன்மையை தான் முல்க் என்பது குறிக்கும்.

இதற்கு அவர்கள் கூறும் ஆதாரம்:

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 3:189)

اَلْمُلْكُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ لِلرَّحْمٰنِ‌ وَكَانَ يَوْمًا عَلَى الْكٰفِرِيْنَ عَسِيْرًا‏ 
அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மா(ன் ஒருவ)னுக்கே இருக்கும், மேலும், நிராகரிப்போருக்கு அது (மிக்க) கடினமான நாளாகவும் இருக்கும்.
(அல்குர்ஆன் : 25:26)

يَوْمَ هُمْ بَارِزُوْنَ  لَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْهُمْ شَىْءٌ  لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ‏ 
(மரணித்த) அவர்கள் (மண்ணறைகளிலிருந்து) வெளிப்பட்டவர்களாக வரும் நாளில், அவர்களிலிருந்து எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது, “ஆட்சி, இன்று யாருக்குரியது?” (என்று கேட்டுவிட்டு, அதற்கு விடையாக, “யாவரையும்) அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது” (என்று அவன் கூறுவான்).
(அல்குர்ஆன் : 40:16)

இரண்டாவது: ‘அல்லாஹ் அல்மலிக் அல்லது அல்மலீக் எனும் போது அவனுடைய படைப்புகளான மலக்குகள், ஜின்கள், மனிதர்கள், விலங்குகள் அனைத்துமே அல்லாஹ்வுடைய அடிமைகள் என்பதை இந்த பெயர்கள் உணர்த்துகிறது.

மூன்றாவதாக: ‘அல்லாஹ் இந்த பிரபஞ்சத்தை அவன் விரும்பியபடி நிர்வகிக்கின்ற ஆற்றலும் வல்லமையும் உள்ளவன்’ என்பதை மலீக் என்கிற பெயர் உணர்த்துகிறது.

இமாம் இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹி) அவர்கள் கூறும் போது, ‘முல்க் என்பது ஆட்சி அதிகாரம். அது அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது. அதாவது ஒன்றை கொடுப்பது, தடுப்பது, கண்ணியப்படுத்துவது, இழிவுபடுத்துவது, கூலி கொடுப்பது, தண்டனை கொடுப்பது, கோபிப்பது, பொருந்திக் கொள்வது, விரும்பியவர்களை கண்ணியப்படுத்துவது, விரும்பியவர்களை இழிவுபடுத்துவது, போன்ற அனைத்தையும் உள்ளடக்கக் கூடிய ஒன்று’ என்று கூறுகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக உள்ள வசனம்:
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌  بِيَدِكَ الْخَيْرُ‌ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
(நபியே!) பிரார்த்தித்து) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே (இம்மை மறுமையின் சகல) ஆட்சிக்கும் அதிபதியே” நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய். மேலும், நீ நாடியவரை கண்ணியப்படுத்துகின்றாய், இன்னும் நீ நாடியவரை இழிவு படுத்துகின்றாய் நன்மை(யாவும்) உன் கைவசமே (இருக்கின்றது). நிச்சயமாக, நீ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 3:26)

تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ‌ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ‌ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏ 
“நீ இரவைப் பகலில் நுழையச் செய்கின்றாய், இன்னும் நீ பகலை இரவில் நுழையச் செய்கின்றாய், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும் நீயே வெளியாக்குகின்றாய், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் நீயே வெளியாக்குகின்றாய், மேலும் நீ நாடியவர்களுக்குக் கணக்கின்றியே அளிக்கின்றாய்.”
(அல்குர்ஆன் : 3:27)

எனவே, அல்லாஹு தஆலா அல்மலிக், அல்மலீக் என்றால் இந்த இரண்டு பெயர்களும் உள்ளடக்கி இருக்கின்ற முல்க் என்ற ஒரு ஸிஃபத் அவனிடம் இருக்கும்போதுதான் அவன் வணங்குவதற்கு தகுதியானவனாக கருதப்படுவான்.

அந்த பூரணத்துவமான முல்க் இல்லாத ஒருவன் வணக்கங்கள் எதற்கும் தகுதி பெற மாட்டான்.

இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ ۙ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ‌ كُلٌّ يَّجْرِىْ لِاَجَلٍ مُّسَمًّى ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَـهُ الْمُلْكُ وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْرٍ‏ 
அவனே இரவைப் பகலில் நுழையச் செய்கிறான், இன்னும், பகலை இரவில் நுழையச் செய்கிறான், சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தி வைத்திருக்கிறான், (இவை) ஒவ்வொன்றும் (அதற்குக்) குறிப்பிடப்பட்ட தவணைப்படியே செல்கின்றன, (இத்தகைய தகுதிகளுக்குரிய) அவன்தான் உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்; அரசாட்சி அவனுடயதே! இன்னும், அவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கின்றீர்களே அத்தகையவர்கள், ஒரு வித்தின் (மேலிருக்கும்) தொலி அளவும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 35:13)

اِنْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَآءَكُمْ‌ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَـكُمْ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ وَلَا يُـنَـبِّـئُكَ مِثْلُ خَبِيْرٍ‏ 
அவர்களை நீங்கள் அழைத்தபோதிலும், உங்களுடைய அழைப்பை அவர்கள் செவியுறமாட்டர்கள், அவர்கள் செவியேற்ற போதிலும் உங்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள், மறுமை நாளிலோ நீங்கள் (அவர்களை) இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள். (விஷயங்களை) அறிந்தவனைப் போல் (மற்றெவரும்) உமக்கு(ச் செய்திகளை) அறிவிக்கமாட்டார்.
(அல்குர்ஆன் : 35:14)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹு தஆலா ஷிர்க் எனும் இணை வைக்கக்கூடியவர்களை நோக்கி; அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கக்கூடியவைகள் கடுகளவு போன்ற ஆக குறைந்த அளவு கூட எந்த முல்க்கும், எந்த அதிகாரமும் இல்லாதவர்கள். எனவே எந்த அதிகாரமும் இல்லாத ஒருவர் நிச்சயமாக வணங்கி வழிப்பட தகுதியானவராக இருக்க முடியாது என்று கூறுகிறான்.

எனவே அல்லாஹ் “அல்மலிக்” “அல்மலீக்” என்று நாம் பார்க்கிறபோது, நிச்சயமாக அவன்தான் இந்த பிரபஞ்சங்கள் அனைத்துக்கும் சொந்தக்காரன் என்ற உணர்வு நம்மிடத்தில் வரவேண்டும்.

நாம் அல்லாஹ்வுடைய அடிமைகள் என்கிற உணர்வும் வரவேண்டும்.

அவ்வாறு நாம் உணர்ந்தால் அல்லாஹ்வை பற்றிய கண்ணியம் நம்மிடம் வரும்.

நம்மிடம் இயல்பாகவே பணிவு வரும்.

அப்போது அல்லாஹ்வை சரியான முறையில் கண்ணியப்படுத்த கூடியவர்களாகவும்,

அவனுக்கு அடிமைப்பட்டு வாழக் கூடியவர்களாகவும்,

மற்ற மனிதர்களை மதிக்க கூடியவர்களாகவும் நாம் மாறமுடியும்.


அர் ரஸ்ஸாக்- الرزاق

அர் ராஸிக்- الرازق

ரஸ்ஸாக் என்ற பெயர் குர்ஆனில், (51: 58) வசனத்தில் இடம் பெற்றிருக்கிறது:

إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِين

நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.

அல்குர்ஆன் ( 51:58)

“خير الرازقين”
என ஐந்து இடங்களில் அவனது பெயர் பன்மையாக இடம்பெற்றிருக்கிறது .

ஹதீஸிலும், ரஸ்ஸாக் என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது.

ரஸ்ஸாக் ➖ அதிகமாக ரிஸ்குகளை வழங்குபவன்.

ராஸிக்➖ ரிஸ்க் வழங்குபவன்.

படைப்பினங்களுக்குரிய ரிஸ்க்கை பொறுப்பெடுத்து, அந்த ரிஸ்கை வழங்குபவன் தான் ராஸிக், ரஸ்ஸாக்.

இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில்,

۞وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزۡقُهَا وَيَعۡلَمُ مُسۡتَقَرَّهَا وَمُسۡتَوۡدَعَهَاۚ كُلّٞ فِي كِتَٰبٖ مُّبِينٖ

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.

(அல்குர்ஆன்-11:6)

பூமியில் உள்ள எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அதற்குரிய ரிஸ்க் அல்லாஹ்விடம் இல்லாமல் இல்லை என்று வலியுறுத்தி சொல்கிறான்

எல்லா படைப்புகளுடைய ரிஸ்க்கும் அல்லாஹ்விடத்தில் இருக்கிறது. அதற்கு ரிஸ்க் வழங்குகிற பொறுப்பு அல்லாஹ் மீது சாட்டப்பட்டிருக்கிறது என்பதை அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறான்.

மேலும்,
وَكَأَيِّن مِّن دَآبَّةٖ لَّا تَحۡمِلُ رِزۡقَهَا ٱللَّهُ يَرۡزُقُهَا وَإِيَّاكُمۡۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ

அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் – இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் -29:60)

دابة
“என்றால் பூமியில் வாழ கூடியவை .
(மனிதன், மிருகம், விலங்கு, பறவைகள்)
இவை அனைத்துக்கும் அல்லாஹ் ரிஸ்க் வழங்குவதாக இந்த வசனத்தில் சொல்கிறான்.

மேலும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

َوَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ
;. இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.

(அல்குர்ஆன்- 2:212)

اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًا بَصِيْرًا‏ 
நிச்சயமாக உங்கள் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கின்றான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்தும்) அளவாகவும் கொடுக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், செயலை உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்கும் தக்கவாறு கொடுக்கிறான்.)
(அல்குர்ஆன் : 17:30)

அவன் நாடியவர்களுக்கு குறைத்தும் கொடுப்பான், நாடியவர்களுக்கு அளவில்லாமல் ரிஸ்க்கை கொடுப்பான் என்று சொல்கிறான்.

எனவே இந்த ரிஸ்க்கை அல்லாஹுத்தஆலா பொறுப்பெடுத்து இருக்கிறான்.

அந்த ரிஸ்கை உண்மையிலேயே வழங்குபவன் அல்லாஹ் தான் என்பதை இந்த
அர் ராஸிக்,
அர் ரஸ்ஸாக்,
என்ற பெயர்கள் உணர்த்துகிறது…

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த ரிஸ்க்கை இரண்டாக பிரித்து சொல்கிறார்கள்.

1.”رزق عام”

2.”رزق خاص”

1.”رزق عام”
ரிஸ்குன் ஆம் ➖ என்றால் பொதுவான ரிஸ்க்.
இதனை- ரிஸ்குன் அப்தான் என்றும் சொல்வார்கள். இதன் பொருள் உடல் வளர்வதற்கான ரிஸ்க் என்பதாகும்.
இந்த வகை ரிஸ்க்கை அல்லாஹு தஆலா
நல்லவர்களுக்கு, கெட்டவர்களுக்கு,
மூமின்களுக்கு, காபிர்களுக்கு என
உலகத்தில் வாழ்கின்ற எல்லோருக்கும் கொடுப்பான்.

2.”رزق خاص”
ரிஸ்க்குன் ஃகாஸ் ➖என்பது மூமின்களுக்கு மட்டுமே அல்லாஹுதஆலா கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

அவை இல்ம், ஈமான், ஹலாலானவற்றை மட்டுமே உண்ண வேண்டும், ஹலாலாக வாழ வேண்டும் என்ற உணர்வு.

இந்த ரிஸ்க் மூஃமின்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதை குர்ஆன் நமக்கு உணர்த்துகிறது.

இது கிடைப்பவர்கள் தான் பெரிய பாக்கியசாலியாக இருக்கிறார்கள்.

எனவே மறுமையில் கிடைக்கக்கூடிய ரிஸ்க்கை தவறவிட்டு விட்டு, உலக ரிஸ்கிலே தன்னை அழித்துக் கொள்ளக் கூடியவர்கள், அதற்காக தங்களை அதிகமாக ஈடுபடுத்த கூடியவர்களை அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலே எச்சரிக்கை செய்திருக்கின்றான்.

எனவே அன்புள்ள சகோதர சகோதரிகளே,

அர் ரஸ்ஸாக்
அர் ராஸிக்

என்பதை திரும்பத் திரும்ப படித்து, இதன் பொருளை சரியாக நாம் புரிந்து கொள்வோமாக இருந்தால்,

வாழ்க்கையில் மன உளைச்சல் வராது,
வாழ்க்கையில் பொறாமை வராது,

மற்றவருக்கு அல்லாஹ் ஒன்றை கொடுக்கும்போது அல்லாஹ் அவனுக்கு எழுதியதை கொடுக்கிறான், எனக்கும் அல்லாஹ் எழுதியதை தருவான் என்ற உணர்வு நமக்கு வரும்.

நிச்சயமாக அல்லாஹுதஆலா நமக்கு எழுதிய ரிஸ்க்கை தராமல் நாம் இந்த உலகத்தை விட்டு போகமாட்டோம்.

அல்லாஹ் ஒன்றை தரக்கூடாது என்று தடுத்துவிட்டால், அதனை தருவதற்கு யாரும் இல்லை என்ற அந்த நம்பிக்கையும்
அர் ரஸ்ஸாக்,
அர் ராஸிக் என்ற பெயர்களை படிக்கும்போது நமக்கு ஏற்படும்.

அல்லாஹ்வின் இந்த திருநாமங்களை சரியாக புரிந்து அதை ஈமான் கொண்டு அதற்கு, ஏற்ப நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா நமக்கு தௌபிக் செய்வானாக.


الصمد➖அஸ் ஸமத்

அரபு மொழியில் “அஸ் ஸமத்” என்ற வார்த்தைக்குரிய அர்த்தம்

அஸ்ஸயீத் அல் முத்ஆ – மக்கள் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய எஜமானன் என்ற அர்த்தம்.

மற்றொரு அர்த்தம் அஸ் ஸமத்- மிகவும் உயர்ந்தவன்
என்று இருக்கிறது.

அரபு மொழியில் இந்த இரண்டு அர்த்தமும் உள்ளது.

அல்லாஹ்- எஜமானன்.
அதிலே அவன் பூரணத்துவமானவன். எஜமானிய பண்பிலே பூரணமானவனாக இருக்கிறான் என்பது ஸமத் உடைய அர்த்தமாக இருக்கிறது.

பூமியில் உள்ள அனைத்து படைப்பினங்களும், மனித, ஜின் மற்றும் ஆகாயத்தில் உள்ள அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ் விடத்தில் தேவையுள்ளதாக இருக்கிறது என்பது ஸமத் உடைய அர்த்தமாக இருக்கிறது.

சில இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள்,

மனிதனுக்கு வயிறு இருக்கிறது, அதனால் அவனுக்கு பசி என்பது இருக்கிறது. இப்படியான நிலை அல்லாஹ்விற்க்கு கிடையாது.

அல்லாஹ் -அஸ்ஸமத்
அவன் சாப்பிடக்கூடிய தேவை கிடையாது, குடிக்க வேண்டிய தேவை கிடையாது.
மாறாக உண்ண கொடுக்கிறவனாகவும், குடிக்க கொடுக்கிறவனாகவும் இருக்கிறான். இதனால் தேவையற்றவன் என்ற அர்த்தம் ஸமத் என்பதற்க்கு வருகிறது.

அஸ்ஸமத் என்பதற்க்கு தேவையற்றவன் என்று பொருள் கொடுக்கும்போது அந்த ஸமத் உடைய பூரணமான பொருள் நமக்கு வராது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும்போது ,
اَللّٰهُ الصَّمَدُ‌ ‏ 
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

*لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏ *
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன் : 112:2,3)

அல்லாஹ் -அஸ்ஸமத் என்பதினால் அவன் யாராலும் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை என்று சொல்கிறான்.

அல்லாஹ்- அஸ்ஸமத் என்பதினால் அவனுக்கு வாரிசுகள் கிடையாது. மவுத் என்பது இல்லை , என்பதை ஸமத் என்ற வார்த்தை உணர்த்துகிறது

அஸ்ஸமத் என்றால்- மக்கள், படைப்புகள் அனைத்துமே வழிபடக்கூடிய எஜமானன் என்ற அர்த்தமாக இருக்கிறது.

ஸமத் என்பது -அந்தஸ்த்தால் உயர்ந்தவன், பண்புகளால் விசாலமானவன்,
என்கிற கருத்துக்கள் இருப்பதாகவும் உலமாக்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஸமத் என்பது-மிக உயர்ந்தவன் என்கிற அர்த்தமும் இருக்கிறது.

அல்லாஹு தஆலா அவனுடைய ‘தாத்’தால் உயர்ந்தவன்.

தாத்’தால் உயர்ந்தவன் என்றால் படைப்புகளை விட்டு ஏழு வானங்களுக்கு மேல் அர்ஷின் மேல் உயர்ந்திருக்கிறான் என்ற அர்த்தமும் ஸமத் என்ற வார்த்தைக்கு இருக்கிறது.

அல்லாஹுடைய அனைத்து பண்புகளுமே உயர்ந்த பண்புகள்.
அது எந்த பண்பாக இருந்தாலும் சரி, மிக உயர்ந்த பண்பாக தான் இருக்கும்.

இமாம் இப்னு கஸீர் போன்றோர் குறிப்பிடும்போது

ஸமத் என்றால்- لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ அவனைப்போன்று ஒன்றுமில்லை என்ற அர்த்தத்திலும் ஸமத் என்ற வார்த்தையை புரிய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக சூரத்துல் இஹ்லாஸ் உடைய கடைசி ஆயத்தை குறிப்பிடுகிறார்கள்.

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏ 
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

(அல்குர்ஆன் : 112:4)

எனவே ஸமத் என்றால்- அல்லாஹ்வைப் போன்று ஒன்றுமில்லை, அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்ற கருத்தும் இருக்கிறது.

எல்லாப் படைப்புகளும் தங்களுடைய தேவைகளின் போது நாடப்பட வேண்டியவன் என்ற அர்த்தமும் ஸமத் என்பதற்க்கு இருக்கிறது.

அல்லாஹ் உடைய பெயர்களில் அஸ்ஸமத் என்பது இத்தனை அர்த்தங்களையும் உள்ளடக்கி இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

உண்மையில் ஒரு மனிதன் அல்லாஹ் ஸமத் என்பதை புரிந்துகொள்ளும்போது,

அல்லாஹ்வின் பால் தான் எவ்வளவு தேவை உள்ளவன் என்பதை புரிந்து கொள்கிறான்.

மனிதனுக்கு என்ன சூழ்நிலை வந்தாலும் அவனுடைய உள்ளம் அல்லாஹ்வின் பக்கம் மட்டுமே திரும்பும்.

அல்லாஹ்விடத்திலே மட்டும்தான் பிரார்த்திப்பான்,

அல்லாஹ்விடத்திலே மட்டும்தான் மன்றாடுவான்,

அல்லாஹ்விடத்திலே மட்டும்தான் முறையிடுவான் .

என்பதை இந்த ஸமத் வலியுறுத்தக்கூடிய மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது.

எனவே அன்புள்ள சகோதரிகளே

அஸ் ஸமத் என்கிற வார்த்தையை சரியாக புரிந்து, அதன் அடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள நாம் எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக..!!!


பாவப்பட்ட மக்கள் என்பவர் யார்?
பாவப்பட்ட மக்கள் என்பவர்கள் இந்த உலகிற்கு வந்து அல்லாஹ்வைப் பற்றி அறியாமல் போனவர்கள் .

அல்லாஹ்வைப் பற்றி அறிய இஸ்லாம் நமக்கு பல வழிமுறைகளை காட்டித் தந்துள்ளது. அதில் ஒன்று தான் அல்லாஹ்வின் பெயர்களை, பண்புகளை அறிவது.

الهادى➖
அல்ஹாதி வழிகாட்டுபவன்

அல் ஹாதி என்ற பெயர் ஹிதாயத் என்ற வார்த்தையில் இருந்து வந்துள்ளது.

அல் ஹாதி என்ற பெயர் அல் குர்ஆனில் 2 இடங்களில் வந்துள்ளது.

وَّلِيَـعْلَمَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّكَ فَيُؤْمِنُوْا بِهٖ فَـتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْ‌ وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ 
(ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 22:54)

وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِيْنَ‌ وَكَفٰى بِرَبِّكَ هَادِيًا وَّنَصِيْرًا‏ 
மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன். (அல்குர்ஆன் : 25:31)

அல்லாஹ்வின் வழிகாட்டுதல் என்பது பலவழியாக அமையும் என்று அகீதா உலமாக்கள் கூறுகிறார்கள்.

முதல் வகை:

அல் ஹிதாயதுல் ஆம்மா ➖பொதுவான வழிகாட்டுதல்.

உலகில் அல்லாஹ் படைத்த படைப்புகள் ஒவ்வொன்றிருக்கும் அவை வாழ்வதற்குறிய வழிகளை வழங்குபவன்.

உதாரணமாக:
பிறக்கும் குழந்தைக்கு தன் உணவு எங்கே உள்ளது என்ற வழிகாட்டுதலை கொடுப்பவன் அல்ஹாதி….

மிருகத்தின் குட்டிக்கும் அதன் உணவு தாயின் மார்பகத்தில் உள்ளது என்று வழிகாட்டுபவன் அல்ஹாதி.

மனிதன் இந்த உலகில் வாழ்வதற்கு தேவையான அனைத்து வழிகாட்டுதலும் அல்லாஹ்வினால் வழங்கப்படுகிறது.

இரண்டாவது வகை:

ஹிதாயத்துல் இர்ஷாத் வல் பயான் லில்முகல்லஃபீன் ➖அல்லாஹ்வின் சட்டங்களை பின்பற்றுவதில் நேர்வழி எது? வழிகேடு எது? என்பதை காண்பிப்பவன்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِ‌‏ 
மேலும், (நன்மை, தீமையாகிய) இரு வழிகளை நாம் அவனுக்குக் காண்பித்துவிட்டோம்.
(அல்குர்ஆன் : 90:10)

மூன்றாவது வகை:

ஹிதாயத்துல் தௌபிக் வல் இல்ஹாம் ➖நேர்வழியை கொடுப்பவன்.

அல்லாஹ்வை தவிர இந்த உலகத்தில் யாரும் யாருக்கும் நேர்வழியை கொடுக்க முடியாது.

நபி ﷺ அவர்கள் தஃவா பணியில் தனக்கு உறுதுணையாக இருந்த தனது சிறிய தந்தை அபூதாலிபின் மரணவேளையில்; ‘”லா இலாஹ இல்லல்லாஹு” என்ற வார்த்தையை சொல்லுங்கள், இதை வைத்து நான் அல்லாஹ்விடம் மன்றாடுவேன்’ என்று கூறினார்கள்.
ஆனால் அபூதாலிபுக்கு ஹிதாயத் கிடக்கவில்லை.

அல்லாஹ் குர்ஆனில் கூறினான்…..

اِنَّكَ لَا تَهْدِىْ مَنْ اَحْبَبْتَ وَلٰـكِنَّ اللّٰهَ يَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ‏ 
(நபியே!) நிச்சயமாக நீங்கள் இவர்களில் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்த உங்களால் முடியாது. எனினும், தான் விரும்பியவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகின்றான். நேரான வழியில் செல்லத் தகுதியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.
(அல்குர்ஆன் : 28:56)

அல்லாஹ் நாடியவருக்கு மட்டும் தான் நேர்வழி கிடைக்கும்.

எனவே அல்லாஹ் ஹாதி என்பது – நேர்வழியை கொடுப்பவன் என்ற அர்த்தமும் இதில் அடங்கி இருக்கிறது.

அல் ஹாதி-
1.சொர்க்கத்திற்கு வழிகாட்டுபவன்.

2.நரகத்திற்கு வழிகாட்டுபவன்.
என்ற அர்த்தமும் இருக்கிறது.

சொர்க்கத்திற்கு வழி காட்டுபவன்:

وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ‌ وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ هَدٰٮنَا لِهٰذَا وَمَا كُنَّا لِنَهْتَدِىَ لَوْلَاۤ اَنْ هَدٰٮنَا اللّٰهُ‌ ‌ لَقَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّ‌ وَنُوْدُوْۤا اَنْ تِلْكُمُ الْجَـنَّةُ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ 

அன்றி, (இவ்வுலகில் ஒருவரைப் பற்றி மற்றொருவருக்கு இருந்த) குரோதத்தையும் அவர்களுடைய உள்ளங்களிலிருந்து நீக்கி விடுவோம். (ஆகவே, ஒருவருக்கொருவர் மிக நெருங்கிய தோழர்களாகி விடுவார்கள்.) அவர்(கள் பாதங்)களுக்கு அருகில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அன்றி அவர்கள் *”இந்த (சுவனபதியை அடையக்கூடிய) நேரான வழியில் எங்களை செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும்

இவ்வழியில் அல்லாஹ் எங்களை செலுத்தியிருக்காவிட்டால் நிச்சயமாக நாங்கள் (இதனை) அடைந்திருக்கவே மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் (சந்தேகமற) சத்திய (மார்க்க)த்தையே (எங்களுக்குக்) கொண்டு வந்(து அறிவித்)தார்கள்” என்று கூறுவார்கள். (அதற்குப் பிரதியாக) “பூமியில் நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே இந்த சுவனபதிக்கு நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்டுள்ளீர்கள்” என்ற சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். (அல்குர்ஆன் : 7:43)

நரகத்திற்கு வழிகாட்டுபவன்:

اُحْشُرُوا الَّذِيْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙ‏ 
அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று சேர்த்து,

مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰى صِرَاطِ الْجَحِيْمِ‏ 
“அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்” (என்றும்),
(அல்குர்ஆன் : 37:22,23)

அல்ஹாதி➖ என்றால் வழிகாட்டுபவன்.

மனித, ஜின், பருவ வயதை அடைபவர்களுக்கு எது நேர்வழி எது வழிகேடு என்பதை காட்டுகிற வனாகவும்,

ஹிதாயத் ( நேர்வழியை) வழங்குபவனாகவும், அல்லது அதில் நுழைவிப்பவனாகவும்,

சொர்க்கத்திற்கு வழி காட்டுபவன் அல்லது நரகத்திற்கு வழிகாட்டுபவனாகவும் இருக்கின்றான்.

என்பதை இந்த ஹாதி என்ற பெயர் உணர்த்துகிறது.

எனவே இந்தப் பெயரை நாம் சரியாக புரிந்து கொண்டு, அதற்கேற்ப நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக. …


அல்லாஹ்வைப் பற்றி அறிகின்ற போது நமக்கு ஆனந்தமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது அதில் எந்த சந்தேகமும் இல்லை.

அல்லாஹ்வைப் பற்றி அறியும்போது , அல்லாஹ்வும் நம்மை பொருந்திக் கொள்வான். நம் மீது இறக்கமும் அன்பையும் காட்டுவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அல்லாஹுத்தஆலா குர்ஆனில் ,

فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ‏ 
நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.

(அல்குர்ஆன் : 2:152) அல்லாஹ்வைப் பற்றி கேட்பதும், பேசுவதும் மிக பெரிய பாக்கியம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுடைய பெயர்களில் மிக அழகான பெயர் அல் -வஹ்ஹாப்.

الوهاب-
அல்வஹ்ஹாப்➖ அதிகமாக வழங்குபவன்

அல் குர்ஆனில் மூன்று இடங்களில் இடம் பெறுகிறது.


رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 
(அன்றி அவர்கள்) “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!” (அல்குர்ஆன் : 3:8)

اَمْ عِنْدَهُمْ خَزَآٮِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِيْزِ الْوَهَّابِ‌‏ 
(வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உங்களது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கின்றதா?
(அல்குர்ஆன் : 38:9)

قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 
ஆகவே, அவர் “என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பெரும் கொடையாளி” என்று பிரார்த்தனை செய்தார்.
(அல்குர்ஆன் : 38:35)

அல் வஹ்ஹாப் -அதிகமாக வாரி வழங்குபவன், கொடுப்பவன் என்று அர்த்தமாகும்.

வஹ்ஹாப் என்பது அரபு மொழியில்( فعال) ஃபஆல் என்ற அமைப்பில் இடம்பெறுகிறது.

ஃபஆல் – அதிகமாக என்று அர்த்தம்

குர்ஆனில் மூலச்சொல் ஆகிய يهب ، وهب என்ற சொல் பயன்படுகிற போது அல்லாஹ் பல முக்கியமான செய்திகளை நமக்கு சொல்கிறான்.

அதில் முதலாவதாக அல்லாஹ் அவனுடைய ரஹ்மத்தை வாரி வழங்குவது.

ஒரு மனிதர் மீது அல்லாஹ் ரஹ்மத்தை வழங்குகிறான் என்றால், அவன் மிக பெரிய பாக்கியசாலி இம்மையிலும் மறுமையிலும் .

ஏனென்றால் ஒரு மனிதன் சுவர்க்கம் செல்ல வேண்டுமென்றால் அல்லாஹ்வுடைய ரஹ்மத் இல்லாமல் செல்ல முடியாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்; ‘அல்லாஹ்வின் ரஹ்மத் இல்லாமல் ஒருவர் சுவர்க்கம் செல்ல முடியாது’.

ஸஹாபாக்கள் ‘உங்களுக்கும் இந்த நிலைமையா யா ரசூலல்லாஹ்!’ என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல் அவர்கள் கூறினார்கள்; ‘ ஆம் நானும் என் அமல்களை கொண்டு சுவர்க்கம் செல்ல முடியாது அல்லாஹ்வின் ரஹ்மத் மூலம் தான் சுவர்க்கம் செல்ல முடியும். அல்லாஹ் தன் ரஹ்மதத்தால் நனைந்து கொண்டு விட்டான்.’

(ரஹ்மத் என்றால் அல்லாஹ்வுடைய அன்பு, கருணை) அல்லாஹ் என்னை இவைகளை கொண்டு சூழ்ந்து கொண்டான் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்.

وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا‏ 
அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் “அலைஹிஸ் ஸலாம்” என்று எந்நாளும் துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்.)

وَ وَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِيًّا‏ 
நம் கருணையைக் கொண்டு அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அளித்தோம்.
(அல்குர்ஆன் : 19:50,53)

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 
(அன்றி அவர்கள்) “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!”
(அல்குர்ஆன் : 3:8)

اَمْ عِنْدَهُمْ خَزَآٮِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِيْزِ الْوَهَّابِ‌‏ 
(வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உங்களது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கின்றதா?
(அல்குர்ஆன் : 38:9)

என்ற வசனங்களில் அல்லாஹ் தன்னுடைய ரஹ்மத்தை வாரி வழங்குகிறான் என்பதை சொல்கிறான்.

வஹ்ஹாப் என்பதின் முதல் நிலை அல்லாஹ் தன் அடியார்களுக்கு ரஹ்மத்தை வாரி வழங்குவது என்பதாகும்.

சிலருக்கு இந்த உலகத்தில் ஆட்சி அதிகாரம் வழங்குவதில் (وهب) வஹப என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கிறான்.

فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِىْ رَبِّىْ حُكْمًا وَّجَعَلَنِىْ مِنَ الْمُرْسَلِيْنَ‏ 
ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என்னுடைய இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன்னுடைய தூதராகவும் ஆக்கினான்.
(அல்குர்ஆன் : 26:21)

رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ 
என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லோர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக!
(அல்குர்ஆன் : 26:83)

قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْبَغِىْ لِاَحَدٍ مِّنْ بَعْدِىْ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 
ஆகவே, அவர் “என் இறைவனே! என்னுடைய குற்றங்களை மன்னித்து விடு! எனக்குப் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் ஆட்சியை எனக்கு நீ அளித்தருள் புரிவாயாக! நிச்சயமாக நீ பெரும் கொடையாளி” என்று பிரார்த்தனை செய்தார்.
(அல்குர்ஆன் : 38:35)

என்ற வசனங்களில் அல்லாஹ் ஆட்சி அதிகாரம் அவன் நாடியவர்களுக்கு வாரி வழங்குவான் என்ற அர்த்தமாக உள்ளது.

வஹ்ஹாப் என்ற இந்த பெயர், அல்லாஹ் தன் அடியானுக்கு சாலிஹான மனைவியையும், நல்ல சந்ததிகளையும் வழங்குகிறான் என்ற அர்த்ததையும் தருகிறது.

وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَٰجِنَا وَذُرِّيَّٰتِنَا قُرَّةَ أَعۡيُنٖ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِينَ إِمَامًا

மேலும் அவர்கள்; “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (அல்குர்ஆன் 25:74)

வஹாப் என்ற சொல்லில் இருந்துதான் இதில் ஹப் (هب)என்ற சொல் வந்தது.

وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ نَافِلَةٗۖ وَكُلّٗا جَعَلۡنَا صَٰلِحِينَ

இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம். (அல்குர்ஆன் 21:72)

யஹ்யாவை ஹிபத்தாக நாம் வழங்கினோம் என்று சொல்கிறான்.

وَوَهَبۡنَا لِدَاوُۥدَ سُلَيۡمَٰنَۚ نِعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٌ

இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
(அல்குர்ஆன் 38:30)

தாவூதுக்கு சுலைமான் ஐ ஹிபத்தாக வழங்கினோம் என்று குறிப்பிடுகிறான்.

வஹ்ஹாப் என்பதின் அர்த்தம் நல்ல மனைவி நல்ல சந்ததியை வழங்குபவன் என்பதாகவும் இருக்கிறது.

எனவே வஹ்ஹாப் என்பது

ரஹ்மத்தை வழங்குபவன்.

ஆட்சி அதிகாரம் வழங்குபவன்.

நல்ல மனைவியையும் சந்ததியையும் வழங்குபவன்.

உலகத்தில் உள்ள நிஃமத்துகளை தன் அடியார்களுக்கு வழங்குபவன் என்ற அர்த்தமாக உள்ளது.

எனவே ஒரு மனிதன் அல்லாஹ்வை வஹ்ஹாப் என புரிந்து ஏற்றுக் கொண்டால் தன் தேவைகளை அல்லாஹ்விடம் கேட்பான்.

அவனுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய ஹிபத்துகளுக்கு நன்றி செலுத்த கூடியவனாக இருப்பான்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அல்-வஹ்ஹாப் தன் ரஹ்மத்துகளை நம்மீது வழங்குவானாக ஆமீன்.


الفتاح➖
அல் ஃபத்தாஹ்

இந்த பெயர் அல்குர்ஆனில் 2 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.

قُلۡ يَجۡمَعُ بَيۡنَنَا رَبُّنَا ثُمَّ يَفۡتَحُ بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَهُوَ ٱلۡفَتَّاحُ ٱلۡعَلِيمُ

“நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன்” என்றும் கூறுவீராக. (அல்குர்ஆன் 34: 26)


قَدِ ٱفۡتَرَيۡنَا عَلَى ٱللَّهِ كَذِبًا إِنۡ عُدۡنَا فِي مِلَّتِكُم بَعۡدَ إِذۡ نَجَّىٰنَا ٱللَّهُ مِنۡهَاۚ وَمَا يَكُونُ لَنَآ أَن نَّعُودَ فِيهَآ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّنَاۚ وَسِعَ رَبُّنَا كُلَّ شَيۡءٍ عِلۡمًاۚ عَلَى ٱللَّهِ تَوَكَّلۡنَاۚ رَبَّنَا ٱفۡتَحۡ بَيۡنَنَا وَبَيۡنَ قَوۡمِنَا بِٱلۡحَقِّ وَأَنتَ خَيۡرُ ٱلۡفَٰتِحِينَ

“உங்கள் மார்க்கத்தை விட்டு; அலலாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் தீரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்” (என்று கூறி), “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக – தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்). (அல்குர்ஆன்7: 89)

என்கிற வசனங்களில் இடம் பெற்றிருக்கிறது.

அல் ஃபத்தாஹ் என்ற பெயர்
ஃபதஹ் என்ற சொல்லில் இருந்து வந்ததாகும்.

ஃபதஹ என்றால்➖ திறந்தான்;

ஃபத்தாஹ் என்றால்➖ அதிகமாக திறக்க கூடியவன் என்று அர்த்தமாகும்.

அல்ஃபத்தாஹ்-விற்கு விளக்கம் கொடுக்கக் கூடிய உலமாக்கள் அது பல அர்த்தங்கள் உள்ளடக்க கூடியதாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

அதில் ஒன்றுதான்,
ஃபத்தாஹ் என்ற பெயருக்கு அர்த்தம் ➖
الفتاح الذي يفتح مغالق القلوب بلهدى الإيمان
உள்ளங்கள் மூடி இருக்கும்போது அந்த உள்ளங்களை ஈமானை கொண்டும், நேர்வழியை கொண்டும் திறக்கக் கூடியவன் என்ற அர்த்தம் உள்ளதாக கூறப்படுகிறது.

வரலாற்றிலும் பல உள்ளங்களை அல்லாஹ் இப்படி திறந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.

உதாரணமாக :

மூஸா (அலை) காலத்தில், ஃபிர்அவ்ன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு சூனியக்காரர் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்காக , சூனியக்காரர்களை அழைத்து அவர்கள் முன்னாள் மூஸா (அலை) அவர்களையும் கொண்டு வந்து போட்டியை நடத்திய வரலாறு அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّاۤ اَنْ تُلْقِىَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰى‏ 
பின்னர் (சூனியம் செய்ய வந்த) அவர்கள் (மூஸாவை நோக்கி) “மூஸாவே! (சூனியத்தை) நீங்கள் எறிகின்றீர்களா? அல்லது முதலாவதாக நாங்கள் எறியவா?” என்று கேட்டார்கள்.

قَالَ بَلْ اَلْقُوْا‌ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى‏ 
அதற்கவர் “நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்” என்று கூறினார். (அவர்கள் எறியவே எறிந்த) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவது போல் இவருக்குத் தோன்றின.

فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى‏ 
ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.

قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى‏ 
(அச்சமயம் நாம் அவரை நோக்கி) “நீங்கள் பயப்படாதீர்கள்! நிச்சயமாக நீங்கள்தான் உயர்ந்தவர்” என்று கூறினோம்.

وَاَ لْقِ مَا فِىْ يَمِيْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا‌ اِنَّمَا صَنَعُوْا كَيْدُ سٰحِرٍ‌ وَلَا يُفْلِحُ السّٰحِرُ حَيْثُ اَتٰى‏ 
அன்றி, உங்களது வலது கையில் இருப்பதை நீங்கள் எறியுங்கள்! அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் (வெறும்) சூழ்ச்சியே(யன்றி உண்மையல்ல). சூனியக்காரர்கள் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டார்கள்” (என்றும் கூறினோம்).

فَاُلْقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى‏ 
(மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதனைக் கண்ணுற்ற) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு “நாங்களும் மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினார்கள்.

قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْ‌ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَ‌ فَلَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَـنَّكُمْ فِىْ جُذُوْعِ النَّخْلِ وَلَـتَعْلَمُنَّ اَيُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبْقٰى‏ 
(இதனைக் கண்ட ஃபிர்அவ்ன்) “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தாம் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களுடைய தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களுடைய மாறு கை, மாறு காலை வெட்டிப் பேரீச்ச மரத்தின் வேர்களில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். நிலையான வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார் என்பதையும் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறினான்.

قَالُوْا لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِىْ فَطَرَنَا‌ فَاقْضِ مَاۤ اَنْتَ قَاضٍ‌ اِنَّمَا تَقْضِىْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا ‏ 
அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) “எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ செய்துகொள். நீ செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்.

اِنَّاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِيَـغْفِرَ لَـنَا خَطٰيٰنَا وَمَاۤ اَكْرَهْتَـنَا عَلَيْهِ مِنَ السِّحْرِ‌ وَاللّٰهُ خَيْرٌ وَّاَبْقٰى‏ 
நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்களுடைய குற்றங்களையும் உன்னுடைய நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலைத்திருப்பவனும் ஆவான்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 20:65 -73)

இந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களுடைய உள்ளங்களை திறந்து விடுகிறான்.

அல்ஃபத்தாஹ் என்றால்➖

الذي يكشف الغمه أن عباده ويسرئ البلفرج ويرفع الكرب

மக்களுக்கு ஏற்படக்கூடிய துன்பங்கள் துயரங்களை அகற்றுபவன், அவர்களுடைய கஷ்டங்களை நீக்கி வைப்பவன். என்பதும் அல் ஃபத்தாஹ் என்ற அர்த்தங்களில் ஒன்று என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மனிதனுக்கு சோதனைகளில் இருந்து விடுவிப்பவனும் அல்லாஹ் தான் என்பதும் இதனுடைய அர்த்தமாகும்.

அதனால்தான் மஸ்ஜிதுக்கு செல்லும்போது ஓதக்கூடிய துஆ-வில்
اللهم إفتح لي ابواب رحمتك
யா அல்லாஹ் உன்னுடைய ரஹ்மத்துடைய வாசல்களை திறந்து விடு.

என்று துஆ கேட்க வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகிறார்கள்.

மஸ்ஜித் என்பது ரஹ்மத்தான ஒரு இடம். அங்கு செல்லும் போது ரஹ்மத்தின் வாசல்களை திறந்துவிடு; கஷ்டங்களை நீக்கி விடு என்று கேட்கின்றோம்.

அல்ஃபத்தாஹ் என்று சொன்னால்➖

الذي يفتح عباده الابواب العلم الحكمة والمعرفة
தன்னுடைய அடியார்களுக்கு கல்வி ஞானம் அறிவு போன்றவற்றின் வாசல்களை திறந்து விடுபவன் என்கிற அர்த்தமும் உள்ளது.

அதனால் தான் அல்லாஹ் கல்விக்காக துஆ கேட்க வேண்டும் என்று சொல்கிறான்.

وقل رب زدني علما
என்னுடைய இரட்சகனே எனக்கு கல்வி அறிவை அதிகப்படுத்துவாயாக….

கல்வியும் அல்லாஹ் தரக்கூடியது என, ஃபத்தாஹ் என்ற வார்த்தை சொல்லக்கூடிய செய்தியாக இருக்கிறது.

அல்ஃபத்தாஹ் ➖சாம்ராஜ்யங்களையும், நாடுகளையும், உலகத்தையும், தன்னுடைய நல்லடியார்களுக்கு வெற்றிகொள்ள செய்பவன் என்ற அர்த்தமும் இருக்கிறது.

அதனால்தான் மக்கா வெற்றியை பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

إِنَّا فَتَحۡنَا لَكَ فَتۡحٗا مُّبِينٗا

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம். (அல்குர்ஆன் 48: 1)

அல்ஃபத்தாஹ்➖மறுமையிலும் அல்லாஹ் அடியார்களுக்கு மத்தியில் சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்கக்கூடியவன்.

اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ‌ فَاِنْ يَّكْفُرْ بِهَا هٰٓؤُلَۤاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوْا بِهَا بِكٰفِرِيْنَ‏ 
இவர்களுக்குத்தான் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்திருந்தோம். ஆகவே, அவைகளை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்து விட்டால் (இவர்களுக்குப் பதிலாக) நிராகரிக்காத (உண்மை முஸ்லிம்களான) மக்களை நிச்சயமாக நாம் ஏற்படுத்தி விடுவோம். (அல்குர்ஆன் : 6:89)

அல் ஃபத்தாஹ் ➖ அல்லாஹ் வழங்கக்கூடிய வெற்றியை ஃபத்தாஹ் என்ற அர்த்தமாக இருக்கிறது.

இந்த அற்புதமான அழகான பெயரை சரியாக புரிந்து அல்லாஹ்வின் பக்கம் நெருங்க கூடியவர்களாகவும், அல்லாஹ்வுடைய உதவியை நாடக் கூடியவர்களாகவும் அல்லாஹ் நமக்கு கிருபை செய்வானாக.


அஸ்_ஸமீஃ ➖செவியேற்பவன்.

ஸமீஃ என்றால் ➖மொழிகள் வேறுபட்டாலும், தேவைகள் வேறுபட்டாலும் அனைத்தையும் செவியேற்கக்கூடியவன். எல்லாவிதமான சப்தங்கள், இரகசியம், பரகசியம் என அனைத்தையும் துல்லியமாக செவியேற்பவன்.

அல்லாஹ்வின் இந்த பண்பை நபி ﷺ அவர்கள் ஹதீஸுல் குத்ஸி என்று குறிப்பிடுகிறார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி ﷺ அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
என் அடியார்களே!
அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள்.
என் அடியார்களே!
உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே. ஆகவே, என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள். உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன்.
என் அடியார்களே!
உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே. ஆகவே, என்னிடமே உணவாதாரத்தைக் கேளுங்கள். நான் உங்களுக்கு உணவளிக்கிறேன்.
என் அடியார்களே!
உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணமானவர்களே. ஆகவே, என்னிடமே ஆடை கேளுங்கள். நான் உங்களுக்கு ஆடையணிவிக்கிறேன்.
என் அடியார்களே!
நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள். நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள். நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன்.
என் அடியார்களே!
உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது; மேலும், உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை.
என் அடியார்களே!
உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; கடலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)!
என் அடியார்களே!
நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன். பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன். நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும். அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும்! ஸஹீஹ் முஸ்லிம் : 5033.

அல்லாஹ்வுடைய பண்பான செவிமடுத்தல் மிகவும் அற்புதமானது.

ஒருமுறை நபி ﷺ அவர்களும், சஹாபாக்களும் பயணத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது உயரமான ஓரிடத்தை கடக்கும் போது சத்தத்தை உயர்த்தி தக்பீர் சொன்னார்கள்.
அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள், நீங்கள் உங்கள் சத்தத்தை உயர்த்தி கஷ்டப்படாதீர்கள், மெதுவாக தக்பீர் சொன்னால் போதுமானது. நீங்கள் செவிடனயோ அல்லது உங்களை விட்டும் தூரமாக இருக்க கூடியவனையோ அழைக்க வில்லை. நல்ல முறையில் கேட்கக்கூடிய, பார்க்கக்கூடிய, உங்களுக்கு நெருக்கமாக இருக்கக்கூடியவனை தான் அழைக்கிறீர்கள்.
(ஸஹிஹுல் புஹாரி, முஸ்லிம் )

இந்த பண்பை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தான், பாவத்தில் வீழ்ந்துவிடுபவர்களாக இருக்கின்றனர்.

உதாரணமாக➖

முஷ்ரிக்குகளில் சிலர் அல்லாஹ்வுக்கு மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பம் இருப்பதாக, தங்களுக்குள் பேசிய போது, அவர்களுக்கு அல்லாஹ் பதில் அளிக்கும் விதமாக இந்த வவசனத்தை இறக்கினான்.

اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ‌ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ‏ 
அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்து கூடிப் பேசுவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல: மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்கள் (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.
(அல்குர்ஆன் 43:80)

இப்னு மஸ்வூத் (ரலி ) அறிவிக்கிறார்கள். ஒரு முறை கஃபாவிற்கு மூன்று பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உடல்கள் பெருத்தவர்களாக , அறிவாற்றல் சிறுத்தவர்களாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் கேட்கிறார், நாம் பேசுவதை அல்லாஹ்வால் செவியேற்க முடியுமா? மற்றவர் பதில் அளிக்கிறார், நாம் சப்தமாக பேசினால் கேட்க முடியும், ஆனால் நாம் பொறுமையாக பேசினால் அல்லாஹ்வால் கேட்க முடியாது.
மூன்றாமவர் சொல்கிறார், நாம் சப்தமாக பேசினால் அல்லாஹ்வால் கேட்க முடியும் என்றால், நிச்சயமாக நாம் பொறுமையாக பேசினாலும் அல்லாஹ்வால் கேட்கக் முடியும் என்று கூறியுள்ளார்.

இதை பற்றி அல்குர்ஆனில்,

دوَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَاۤ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ‏ 
“உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.
(அல்குர்ஆன் 41:22)

நாம் சப்தமாக பேசினாலும், மௌனமாக பேசினாலும், கூட்டமாக பேசினாலும், தனித்தனியே பேசினாலும் நிச்சயமாக அல்லாஹ் மிக துல்லியமாக கேட்டுக் கொ‌ண்டு‌ இருக்கிறான்.

அஸ்_ஸமீஃ ➖ என்ற அல்லாஹ்வின் இந்த பண்பு, நம் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய ஒரு பெயர்.

அல்லாஹ் நாம் பேசுவதை கேட்டுக்கொ‌ண்டு‌ இருக்கிறான், என்ற உள்ளச்சத்தோடு வாழ்ந்து, நல்லதையே பேசக்கூடிய மக்களாக நம் அனைவரையும் ஆக்கிவைப்பானாக.


البصير➖ அல்_பஸீர்

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான், அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவை எத்தனை என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்.

நபி (ஸல் ) அவர்கள் கூறுகிறார்கள், யார் ஒருவர் அல்லாஹ்வின் 99 திருநாமங்களை பொருளுணர்ந்து மனப்பாடம் செய்கிறார்களோ, அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும்.

அல்_பஸீர் என்ற பெயர் அல்குர்ஆனில் 40 க்கும் மே‌ற்ப‌ட்ட இடங்களில் வந்துள்ளது.

உதாரணமாக :

சூராத்துஷ் ஷுஃரா_11, 27 வசனம்
சூரத்துன்னிஸா 58
சூராத்துல்பகரா 265
சூராத்து ஆல இம்ரான் 15
சூரத்துல் முல்க் 19
சூரத்துல் இஸ்ரா 17

ஆகிய வசனங்களில் தனக்கு பஸீர் என்று பெயர் இருப்பதை அல்லாஹ் அடையாளப்படுத்துகிறான்.

அல்_பஸீர்➖ பார்க்கக் கூடியவன்

பஸீர் ➖என்றால் மிக துல்லியமாக, தெளிவாக எல்லாவற்றையும் பார்ப்பவன்.

இப்னுல் கய்யிம் அல் ஜவ்ஸியா(ரஹ்) அவர்கள் தன் புத்தகமான தரீக்குல் ஹிஜ்ரத்தைன் குறிப்பிடுகிறார்கள்.

அல்லாஹ் பஸீரானவன்,➖ அவனின் பார்வையின் பூரணத்துவத்தால் சிறிய அணுவளவு படைப்பாக இருந்தாலும், அதனுடைய முழு விபரங்களையும் அவன் பார்க்கிறான். உதாரணமாக படைப்பினங்களின் உடல் உறுப்புகளையும், அதன் சதை, இரத்தம், எலும்புகள், நரம்பு ஆகிய எல்லாவற்றையும் மிக நுணுக்கமாக பார்க்கக்கூடியவன்.

உதாரணமாக :

கடுமையான இருட்டில் கருங்கல்லில் ஓர் கட்டெறும்பு ஊர்ந்து சென்றாலும், அல்லாஹ் பார்ப்பான்.

அல்லாஹு தஆலா தன் கண்ணியத்திற்கும், மகத்துவத்திற்கும் பொருத்தமான முறையில் இரண்டு கண்களை கொண்டு பார்ப்பவன் என்பதையும் ஈமான் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் குர்ஆனில்,

وَحَمَلْنٰهُ عَلٰى ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍۙ‏ 
நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம்.

تَجْرِىْ بِاَعْيُنِنَا‌ جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ‏ 
அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது.
(அல்குர்ஆன் : 54:13,14)

وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْيُنِنَا‌ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِيْنَ تَقُوْمُۙ‏ 
(நபியே!) உங்களது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நீங்கள் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர்கள். (ஆகவே, அவர்கள் உங்களைத் தங்கள் இஷ்டப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீங்கள் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உங்களது இறைவனின் புகழைக் கூறித் துதி செய்வீராக! (அல்குர்ஆன் : 52:48)

اَنِ اقْذِفِيْهِ فِى التَّابُوْتِ فَاقْذِفِيْهِ فِى الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَاْخُذْهُ عَدُوٌّ لِّىْ وَعَدُوٌّ لَّهٗ‌ وَاَلْقَيْتُ عَلَيْكَ مَحَـبَّةً مِّنِّىْ  وَلِتُصْنَعَ عَلٰى عَيْنِىْ ۘ‏ 
“(உங்களது இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உங்களைப் பற்றி உங்கள் தாய் கவலை கொண்டாள். ஆகவே, உங்கள் தாயை நோக்கி) “உங்களைப் பேழையில் வைத்து கடலில் எறிந்துவிடுங்கள். அக்கடல் அதனைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதனை எடுத்துக்கொள்வான் என்று (உங்கள் தாய்க்கு அறிவித்தோ)ம். நீங்கள் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உங்கள்மீது என் அன்பை சொரிந்(து உங்களைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம். (அல்குர்ஆன் : 20:39)

ஆகிய வசனங்களில் தனக்கு கண்கள் இருப்பதாக குறிப்பிடுகிறான்.

தன்னுடைய கண்ணியத்திற்கும், மகத்துவத்திற்கும் பொருத்தமான முறையில் அந்த கண்களை கொண்டு அனைத்தையும் துல்லியமாக பார்க்கக்கூடியவன்.

நபி(ஸல் ) அவர்கள் தஜ்ஜாலை பற்றி கூறும் போது, அவன் குருடனாவான், உங்கள் ரப்பாகிய அல்லாஹ் குருடனல்ல என்று குறிப்பிடுகிறார்கள். (புஹாரி, முஸ்லிம் )

மிகப்பெரிய இமாம்களில் ஒருவரான இமாம் ஃகுஸைமா(ரஹ் ) தன்னுடைய கிதாப்புத்தவ்ஹீது புத்தகத்தில், அஹ்லுஸ் சுன்னா வல்ஜமாஅத்தின் அகீதா கொள்கையை பற்றி குறிப்பிடுகையில்,

எங்களுடைய ரப்புக்கு இரண்டு கண்கள் இருக்கின்றன என்று நாம் கூறுகிறோம்.

நிலத்திற்கு கீழும், ஏழு பூமிக்கு கீழும், வானத்திலும், வானம் பூமிக்கிடையிலும் உள்ள அனைத்தையும் பார்ப்பவன்.

சிறியதோ, பெரியதோ எதுவானாலும் அவனின் பார்வையிலிருந்து மறைந்து விட முடியாது.

அவனுடைய கண்களை, மனிதர்களின் கண்களுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது. எதையும் உதாரணமாக சொல்லக்கூடாது ,மறுக்கவும் கூடாது.

அல்லாஹ் குர்ஆனில் ஸமீஃ, பஸீர் ஆகிய திருநாமங்களை கொண்டு 40 வசனங்களை முடிக்கிறான்.

இதை பற்றி ஒரு மனிதனுக்கு சரியான புரிதல் இருந்தால் அல்லாஹ் நம்மை எப்போதும் பார்த்து கொண்டு, நாம் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொ‌ண்டு‌ இருக்கிறான் என்று உணர்வு(முராகபா) வரும்.
அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டான்; அல்லாஹ்வை பற்றிய பயம் இருக்கும்.

நாம் உள்ளச்சத்தோடு அல்லாஹ்விற்கு அஞ்சக்கூடிய நிலையில் வாழ்ந்து, பாவத்திலிருந்து மீளக்கூடியவர்களாக இருந்து, நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வாழக்கூடியவர்களாக , அல்லாஹ் நமக்கு தௌஃபீக் செய்வானாக.


العليم
அல் அலீம் – அனைத்தையும் அறிந்தவன்

அல் அலீம் என்ற பெயர் அல் குர்ஆனில் சுமார் 157 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது

اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَيْبَةً  ‌ يَخْلُقُ مَا يَشَآءُ ‌ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ‏ 
அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் – அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் : 30:54)

ذٰ لِكَ الْـفَضْلُ مِنَ اللّٰهِ‌ وَكَفٰى بِاللّٰهِ عَلِيْمًا‏ 
இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:70)

وَالشَّمْسُ تَجْرِىْ لِمُسْتَقَرٍّ لَّهَا ‌ ذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ‏ 
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும்.
(அல்குர்ஆன் : 36:38)

فَمَنْ بَدَّلَهٗ بَعْدَمَا سَمِعَهٗ فَاِنَّمَآ اِثْمُهٗ عَلَى الَّذِيْنَ يُبَدِّلُوْنَهٗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏ 
வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் – நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:181)

அல் அலீம் என்றால்➖ அல்லாஹ் அறிவாளன், அவனுடைய அறிவு வெளிப்படையான, உள்ளார்ந்த, ரகசியமான, பகிரங்கமான, அனைத்தையும் அறியக் கூடியவன்.

கீழே உள்ளவை, மேலே உள்ளவை, நடந்தவை, நடப்பவை, நடக்க இருக்கிறவை அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான்.

எந்த ஒரு விஷயமும் அவனிடமிருந்து மறைந்து விடாது, என்ற கருத்துக்களை தரக்கூடிய ஒரு பெயராக இருக்கிறது.

அல் குர்ஆனில், “அல் அலீம்” என்ற பெயர் அல்லாஹ்வுடைய அறிவைப் பற்றி பல்வேறு கோணங்களில் நமக்கு அடையாளப்படுத்தப்படுகிறது.

அல்லாஹ்வுடைய அறிவின் விசாலத்தை பற்றி அல் குர்ஆனில் பல்வேறு வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான் :

‌وَسِعَ رَبِّىْ كُلَّ شَىْءٍ عِلْمًا‌

என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்;
(அல்குர்ஆன் : 6:80)

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا 
“எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்!
(அல்குர்ஆன் : 40:7)

وَسِعَ كُلَّ شَىْءٍ عِلْمًا‏ 
“எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.
(அல்குர்ஆன் : 20:98)

அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான், அவனுடைய அறிவு எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கிறது என்றும் ; மறைவானவை, பகிரங்கமான, கண்ணுக்கு தெரிந்தவை, தெரியாதவை அனைத்தையும் அறியக்கூடியவனாக இருக்கிறான் என்பதை அல்குர்ஆனில் கூறுகிறான் :

رَبَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِىْ وَمَا نُعْلِنُ‌ وَمَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْ شَىْءٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ‏ 
“எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, வானத்திலோ உள்ள எந்த பொருளும் மறைந்ததாக இல்லை.
(அல்குர்ஆன் : 14:38)

يَعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ‏ 
கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
(அல்குர்ஆன் : 40:19)

وَاِذِ اعْتَزَلْـتُمُوْهُمْ وَمَا يَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَاْوٗۤا اِلَى الْـكَهْفِ يَنْشُرْ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَيُهَيِّئْ لَـكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا‏ 
அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).
(அல்குர்ஆன் : 18:16)

அல்லாஹ்வுடைய அறிவு என்பது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் சூழ்ந்திருக்கிறது, அவன் அனைத்தையும் அறிந்தவன் என்பதையும், அல் அலீம் என்ற பெயரின் அர்த்தமாக இருக்கிறது.

اِنَّ اللّٰهَ يَعْلَمُ غَيْبَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ 

“நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள மறைவானவற்றை (யெல்லாம்) நன்கறிகிறான்; (அல்குர்ஆன் : 49:18)

وَاللّٰهُ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏ 

“அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் – அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன் : 49:16)

அல்லாஹ், சில விஷயங்களில், அறிவின் திறவுகோல்களை அவனிடத்தில் வைத்திருக்கிறான். அவனைத் தவிர வேறு யாரும் அதை அறிய மாட்டார்கள், என்று அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்:

وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏ 

அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.
(அல்குர்ஆன் : 6:59)

اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌ وَيُنَزِّلُ الْغَيْثَ‌ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ‌ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا‌ وَّمَا تَدْرِىْ نَـفْسٌ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ ‏ 

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(அல்குர்ஆன் : 31:34)

குர்ஆனைப் படித்துப் பார்க்கும் பொழுது, அல்லாஹ்வுடைய அறிவின் விசாலம் மிகவும் பெரியது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ் ➖அல் அலீம் என்பதை ஒரு மனிதன் சரியாக அறிந்து, ஈமான் கொள்ளும் போது அவனுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும்

ஒரு இஸ்லாமிய அறிஞர் கூறியது போல்
அல் அலீம் என்ற➖ இந்த வார்த்தை, மனிதனுக்கு உபதேசம் செய்வதற்குரிய மிகப்பெரிய வழிமுறையாகும், பாவங்களிலிருந்து அவனை தடுக்கக்கூடிய மிகப்பெரிய அம்சமாகவும் காணப்படுகிறது” என்று கூறினார்கள்.

அல் அலீம் என்ற அல்லாஹ்வுடைய பெயரை சரியான முறையில் நாம் புரிந்து, ஈமான் கொண்டு, அதற்கேற்ப நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்ய அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக.


اللطيف
அல் லத்தீஃப் ➖ நுணுக்கமான அறிவுடையவன்

அல்லத்தீஃப் என்கிற அல்லாஹ்வுடைய பெயர் குர்ஆனில் ஏழு இடங்களில் இடம் பெற்றிருக்கிறது

لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏ 

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன் : 6:103)

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَتُصْبِحُ الْاَرْضُ مُخْضَرَّةً ً  اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ‌ ‏ 

நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து (மழை) நீரை இறக்குகிறான்; அதனால் பூமி பசுமையாகி விடுகிறது என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவன்; நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் : 22:63)

وَرَفَعَ اَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًا‌ وَقَالَ يٰۤاَبَتِ هٰذَا تَاْوِيْلُ رُءْيَاىَ مِنْ قَبْلُقَدْ جَعَلَهَا رَبِّىْ حَقًّا‌ وَقَدْ اَحْسَنَ بِىْۤ اِذْ اَخْرَجَنِىْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّيْطٰنُ بَيْنِىْ وَبَيْنَ اِخْوَتِىْ‌ اِنَّ رَبِّىْ لَطِيْفٌ لِّمَا يَشَآءُ‌ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏ 

இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 12:100)

அரபு மொழியில், அல்லத்தீஃப் என்ற பெயருக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கிறது .

உதாரணமாக – கண்ணியப்படுத்துதல், நல்லது செய்தல், நுணுக்கமாக அறிதல், போன்ற பல்வேறு அர்த்தங்கள் இந்தப் பெயருக்கு இருக்கிறது

அல்லாஹ்வை அல்லத்தீஃப் என்று குறிப்பிடும் பொழுது, அவனுடைய அறிவு மிக நுணுக்கமானது என்கிற கருத்து பிரதானமான கருத்தாக இடம்பெற்றிருக்கிறது

அல்லத்தீஃப் என்று சொன்னால், அல்லாஹ் ஒவ்வொன்றையும் நுணுக்கமான வழிகளில் அதற்குரிய இடங்களில் சேர்பிக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான், “அவர்கள் சில நேரங்களில் அறியாமல் இருந்தாலும், அல்லாஹ் அறியாத புறத்திலிருந்து அவர்களுடைய நலவுகளை அவர்களுக்கு சேர்பிக்கின்றான்”

اَللّٰهُ لَطِيْفٌ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَآءُ‌ وَهُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ‏ 

அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன். (அல்குர்ஆன் : 42:19)

அல்லாஹ் நுணுக்கமான ஞானம் உடையவன், நுணுக்கமான அறிவுள்ளவன்.
எனவே ஒவ்வொருவருக்கும் எது தேவை, அவர்களுடைய நலவு எதிலே தங்கியிருக்கிறது என்பதை அறிந்து, அவர்களுக்கு சேர வேண்டியவைகளை சேர்பிக்கக்கூடியவன்.

சில உலமாக்கள் கூறுகிறார்கள்

அல்லாஹ், அல்லத்தீஃப் என்று சொல்லும்பொழுது, அவனுடைய படைப்பு மிக நுணுக்கமான அறிவின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்றும், இந்த உலகத்தில் அவன் மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமான முறையில் அமைத்திருக்கிறான் என்பதையும் குறிக்கிறது.

அல்லாஹ் அவனுடைய நேசர்கள் மற்றும் எதிரிகளின் விஷயத்தில் மிக நுணுக்கமான அறிவுடன் செயல்படுகிறான்.

لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏ 

பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்குர்ஆன் : 6:103)

அல்லாஹ் அல்லதீஃப் என்கிற அடிப்படையில் இந்த உலகத்தில் நிச்சயமாக யாராலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அல்லது கனவிலோ அல்லாஹ்வை பார்க்க முடியாது. அவ்வாறு பார்த்ததாக கூறுபவர்கள் பொய் சொல்கிறார்கள்

ஆனால், மறுமையில் சொர்க்கவாசிகளுக்கு அல்லாஹ் தரக்கூடிய மிகப்பெரிய பாக்கியம் அல்லாஹ்வை பார்க்கக்கூடிய வாய்ப்பு.

எனவே, அல்லத்தீஃப் என்றால் அல்லாஹ் மிக நுணுக்கமான அறிவுடையவன், அதன் அடிப்படையில் இந்த பிரபஞ்சத்தை இயக்குபவன், தன்னுடைய படைப்புகளை படைத்திருப்பவன் என்பதை நாம் ஈமான் கொள்ளும் பொழுது, அல்லாஹ்வின் மீது நமக்கு மிகப்பெ

ரிய அன்பும் , பயமும் ஏற்படும், அதைக் கொண்டு அல்லாஹ் விரும்பியவாறு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக


அல் (خ)ஃகபீர் – (الخبير)

அன்புள்ள சகோதரிகளே

அல் (خ)ஃகபீர் என்ற அல்லாஹ்வுடைய பெயர் சுமார் 45 இடங்களில் தனியாகவும் சில இடங்களில் வேறு ஒரு பெயருடன் சேர்ந்தும் குர்ஆனில் இடம்பெற்றிருகிறது.

உதாரணமாக

لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏ 
பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கின்றான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன்; மிக்க அறிந்தவன். (அல்குர்ஆன் : 6:103)

وَاِذْ اَسَرَّ النَّبِىُّ اِلٰى بَعْضِ اَزْوَاجِهٖ حَدِيْثًا‌ فَلَمَّا نَـبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْ بَعْضٍ‌ فَلَمَّا نَـبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْبَاَكَ هٰذَا‌ قَالَ نَـبَّاَنِىَ الْعَلِيْمُ الْخَبِیْرُ‏ 
(நமது) நபி தன்னுடைய மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்துவிட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி “இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?” எனக் கேட்டார். அதற்கு அவர் “(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 66:3)

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ثُمَّ اَحْيَاھُمْ‌ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَکْثَرَ النَّاسِ لَا يَشْکُرُوْنَ‏ 
(நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக் கணக்கில் வெளியேறியவர்களை நீங்கள் கவனித்தீர்களா? அல்லாஹ் அவர்களை இறக்கும்படிக் கூறி (இறக்கச் செய்து) பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது கருணையுள்ளவனாக இருக்கின்றான். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவது இல்லை. (அல்குர்ஆன் : 2:243)

அல்லாஹீத ஆலா தனக்கு (خ)ஃகபீர் என்ற பெயர் இருப்பதை அடையாளபடுத்துவதை நாம் பார்க்கலாம்

(خ)ஃகபீர்
என்பது (خ)ஃகபர் மற்றும் (خ)ஃகிப்ரா என்ற சொல்லில் இருந்தும் பிறந்தது.

இந்த (خ)ஃகபீர் ➖ஃகிப்ரா என்பதுடைய நேரடியான அர்த்தம் “அறிவு”என்தாகும்

அலீம், லதீஃப் என்ற பெயருக்கும் (خ)ஃகபீர்க்கும் மிக நெருக்கமான தொடர்பு இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

இந்த அடிப்படையில் அல்லாஹுதஆலா அவனுடைய விசாலமான, நுணுக்கமான அறிவையும் பிரதிபலிக்கின்ற ஒரு பெயர் தான் (خ)ஃகபீர் என்ற பெயராகும்.

குர்ஆன் தர்ஜுமாக்களில் (خ)ஃகபீர்➖ என்ற பெயருக்கு அறியக்கூடியவன், நுணுக்கமான அறிவுள்ளவன் என்று மொழி பெயர்த்திருப்பார்கள்.

அதாவது அல்லாஹ்வுடைய அறிவின் விசாலத்தை அடையாளபடுத்தக்கூடிய பெயராக இது இருக்கிறது.

வானத்தில் உள்ளவை,
பூமியில் உள்ளவை,
உலகத்தில் இருக்க கூடியவை, 
மறுமையில் இருக்க கூடியவை,
வெளிப்படையானவை,
கண்ணுக்கு முன்னால் இருக்க கூடியவை,
மறைந்திருக்க கூடியவை,
சடரீதியானவை, அது அல்லாதவை,

இப்படி எல்லா விஷயங்களையும், அல்லாஹுதஆலா அறிந்தவனாக இருக்கின்றான்.

எல்லா இடங்களில் நடக்க கூடியவையும், எல்லா காலங்களில் நடக்க கூடியவையும் அல்லாஹ் அறிந்தவன் ஒரு அணு அளவு கூட அவன் அறிவிலிருந்து மறைந்து விட மாட்டாது . இதை போன்ற பல்வேறு விஷயங்களை இந்த அல் (خ)ஃகபீர் என்ற அல்லாஹ்வுடைய பெயர் பிரதிபலிக்கிறது.

ஒரு நாள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களோடு, ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு விஷயம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஆயிஷா (ரலி) யிடம் ஒரு செய்தி கேட்கிறார்கள் ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் அதை வெளிப்படையாக சொல்லவில்லை.அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் அயிஷாவை பார்த்து கேட்டார்கள், “நீ எனக்கு சொல்ல வில்லை என்றால் லத்தீஃப் ஆகிய (خ)ஃகபீர் ஆகிய அல்லாஹ்” எனக்கு சொல்லி விடுவான்; என்று சொன்னார்கள். (ஆதாரம்:ஸஹிஹ் முஸ்லிம்)

எனவே அல்லாஹீதஆலா (خ)ஃகபீராக இருப்பதனால் அடியாருடைய ஒவ்வொரு நிலையும் அவன் அறிந்தவனாக இருக்கின்றான். எனவே அதற்கேற்ப இம்மையிலும், மறுமையிலும் அவர்களுக்கு கூலி கொடுப்பவனாக அல்லாஹ் இருந்து கொண்டிருக்கிறான்.

எனவே நாம் செய்யக் கூடிய நல்லறங்களை எல்லாம் அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான். நாம் செய்யக் கூடிய நல்அமல் விஷயத்திலும் அவன் (خ)ஃகபீராக இருக்கிறான்.

எனவே அதிகமாக நாம் நல்அமல்களை செய்ய வேண்டும். அதே போன்று நம்முடைய பலவீனத்தை அவன் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான் . எனவே அவன் நம் பிரச்சினைகளுக்கான தீர்வை விரைவில் தருவான் என்று நாம் நம்ப வேண்டும்.

அல்லாஹ் நம் தவறுகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ஆகவே நாம் அதிகமாக இஸ்திஃபார் செய்யவேண்டும்.

யாரெல்லாம் நமக்கு,நம் சமுதாயத்திற்கு , நம் மார்க்கத்துக்கு, சதி செய்கிறார்களோ, அதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். அவர்களுக்கு தகுந்த கூலியை தருவான் என்று ஆறுதல் அடைய வேண்டும்.

அல் (خ)ஃகபீர்➖அனைத்தும் அறிந்தவன். என்ற அல்லாஹ்வின் பெயர் நமக்கு அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்படுத்த, நம்முடைய ஈமானை அதிகரிக்க , நல்லமல்கள் மீது நாட்டம் வரவும், அதிகமாக தவ்பா செய்வதையும் , மனதில் அமைதியையும் ஏற்படுத்த வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக


நம்மை படைத்து நிர்வகிக்கின்ற அல்லாஹு ரப்புல் ஆலமீன் பற்றி அறிவது மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு சிறந்த வணக்கமாகும்.

படைத்தவனை அறிவதும், படைத்தவனுக்காக வாழ்வதும், மறுமையில் அவனைப் பார்ப்பதும், மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் ,உண்டாக்கும்.

அடுத்து மிக மிக முக்கியமான நான்கு பெயர்களை பார்க்க இருக்கின்றோம்

1.அல்அஃபூவ்- العفو
2. அல்கஃபூர்- الغفور
3. அல்கஃப்பார் – الغفار
4. அத்தவ்வாப்- التواب

இந்த நான்கு பெயர்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். அதனால் ஒரே அமர்வில் இந்த நான்கு பெயர்களும் பார்க்கலாம்.

அல்அஃபூவ் என்கிற பெயர் குர்ஆனில் 5 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.

அல்கஃபூர் என்கிற பெயர் 91 இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அல்கஃப்பார் என்கிற பெயர் 5 இடங்களில் இடம்பெற்றிருக்கிறது.

அத்தவ்வாப் என்பது 11 இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

”அல்அஃபூவ்”
என்கிற பெயர் “அல்கஃபூர் ” என்கிற பெயரோடு சேர்த்து அல்லாஹ் குர்ஆனில்,

۞ذَٰلِكَۖ وَمَنۡ عَاقَبَ بِمِثۡلِ مَا عُوقِبَ بِهِۦ ثُمَّ بُغِيَ عَلَيۡهِ لَيَنصُرَنَّهُ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ

அது (அப்படியே ஆகும்) எவன் தான் துன்புறுத்தப்படும் அளவே (துன்புறுத்தியவனை) தண்டித்து அதன் பின் அவன் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.
(அல்குர்ஆன் 22- 60)

அல்குர்ஆனில் அல்லாஹ் அஃபூவ், கஃபூர் என்கிற பெயர்களை ஒன்றாக சொல்கிறான்.


فَأُوْلَٰٓئِكَ عَسَى ٱللَّهُ أَن يَعۡفُوَ عَنۡهُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَفُوًّا غَفُورٗا

அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்;. ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4-99)

கஃபூர் என்கிற பெயரை, ரஹீம் என்கிற பெயரோடு சேர்த்து சொல்கிறான்.

لِّيُعَذِّبَ اللّٰهُ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَالْمُشْرِكٰتِ وَيَتُوْبَ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏ 
(அத்தகைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாறாக நடக்கும்) நயவஞ்சக ஆண்களையும் பெண்களையும், இணை வைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் அல்லாஹ் வேதனை செய்வான். (அந்த பொறுப்பை மதித்து நடக்கும்) நம்பிக்கையாளர்களாகிய ஆண்களையும் பெண்களையும் (அவர்களுடைய) தவறிலிருந்து (அருளின் பக்கம்) அல்லாஹ் திருப்பி விடுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 33:73)

கஃப்பார் என்கிற பெயர் குர்ஆனில் ,

وَإِنِّي لَغَفَّارٞ لِّمَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا ثُمَّ ٱهۡتَدَىٰ

“எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்” (என்று கூறினோம்).
(அல் குர்ஆன் 20- 82)

தவ்வாப் என்கிற பெயர் குர்ஆனில்,

إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصۡلَحُواْ وَبَيَّنُواْ فَأُوْلَٰٓئِكَ أَتُوبُ عَلَيۡهِمۡ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ

எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
(அல் குர்ஆன் 2-160)

அல்குர்ஆனில் இப்படி பல இடங்களில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வின் பாவமன்னிப்பை நாம் பெறுவதற்கு நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசி பத்து இரவுகளில் ஓதக்கூடிய பிரத்யேகமான ஒரு பிரார்த்தனையை கற்றுத்தந்துள்ளார்கள். சிறிய பிரார்த்தனையாக இருந்தாலும் நிறைவான பொருள் கொண்ட அல்லாஹ்விடம் அதிக பெறுமதியான இந்தப் பிரார்த்தனையை நாம் அனைவரும் மனனமிட்டு அதிகமாக பிரார்த்திக்க வேண்டும்.

”அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால் அந்த இரவில் என்ன சொல்ல வேண்டும்” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு கற்றுத் தந்தார்கள்.

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபعஃபு அன்னீ
பொருள்: யா அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை மன்னித்து விடு!
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதீ 3435

அஃபூவ் என்ற பெயரின் அர்த்தத்தில் மன்னிப்பு என்ற அர்த்தமும் அழித்துவிடு என்ற அர்த்தமும் இருக்கிறது.

அல்லாஹுத்தஆலா மன்னிப்பவனும் ,நம்முடைய பாவங்களை அழிப்பவனாகவும் இருக்கிறான் என்பது அஃபூவ் என்பதனுடைய அர்த்தமாகும்.

நாம் பாவத்தை செய்கிறோம் அல்லாஹ்விடம் அதற்கு ஏற்றவாறு மன்னிப்பு கேட்கிறோம். அதற்கு அல்லாஹ் நம்மை மன்னித்து பாவங்களை அழித்து விடுகிறான். அதற்குப் பிறகு அந்த பாவங்கள் நம்முன் வந்து நிற்காது என்பதை இந்த அஃபூவ் என்ற பெயர் கூறுகிறது.

கஃபூர் என்பது மன்னித்தல், மறைத்தல் என்கிற அர்த்தத்தை கொண்டது.

அல்லாஹ்விடம் நாம் தவ்பா செய்தால் நம்மை மன்னிப்பான், நம் பாவங்களை மறைப்பான், அதை அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்த மாட்டான் என்ற அர்த்தத்தை கஃபூர் என்பது தருகிறது.

கஃபூர் என்கிற பெயரின் அதிகப்படியான அர்த்தத்தை தரக்கூடியது கஃப்பார் என்பது.

அதிகமதிகம் கஃபூர் ஆக இருப்பவன் கஃப்பார். மன்னிப்பவன் மறைப்பவன்.

தவ்வாப் என்றால் அல்லாஹ் தன் அடியார்களின் தவ்பாக்களை ஏற்றுக் கொள்பவன் என்பது அர்த்தமாகும்.

இந்த நான்கு பெயர்களும் நமக்கு மிகப்பெரிய ஆறுதலாகும்.

இன்னும் அல்லாஹ் அர்ரஹ்மான், அர்ரஹீம் என்பதன் பிரதிபலிப்பாகவே இந்த நான்கு பெயர்களையும் நாம் பார்க்கிறோம்.

இந்த உலகத்தில் பலவீனமாக படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம் செய்யக்கூடிய பாவங்களை வெளிப்படுத்தி, அல்லது அந்த பாவங்களை கொண்டு இந்த உலகத்தில் தண்டிக்க நாடினால் , அல்லது பாவங்கள் மன்னிக்கப்படும் என்கிற வாசலை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால், நம்முடைய நிலைமை என்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வை நாம் அனைத்தையும் விட அதிகமாகவே நேசிக்க வேண்டும். இந்த நான்கு பெயர்களும் படிக்கின்ற போது அந்த நேசம் வரும்.

அல்லாஹ்வை இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விட விரும்புவோம் ; நேசிப்போம்; ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்,

قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌ اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏ 
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: “எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 39:53)

நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான் எந்த அளவுக்கு என்றால் நபி (ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்;

ان الله يقبل التوبه العبودي ما لم يغرغر.

ஒரு அடியானுடைய உயிர் அவனுடைய தொண்டை குழியை அடைகிற வரைக்கும் அவனுடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.

நபி (ஸல் )அவர்கள் சொல்கிறார்கள் ;

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்து இஸ்திக்பார் செய்யுங்கள்.

நான் ஒரு நாளைக்கு நூறு தடவை தவ்பா செய்கிறேன்.

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வுடைய மிக நேசத்திற்குரிய நபி, நபிமார்களுக்கெல்லாம் தலைவர், சுவர்க்கத்தில் முதலாவதாக நுழையக் கூடியவர், அவர்கள் இப்படி சொல்லுகிறார்கள் என்றால் நம்மைப் போன்ற மனிதர்கள் பாவமன்னிப்பு கேட்கும் விஷயத்தில் போட்டி போட வேண்டும்.

அல்லாஹ் முஃமின்களை பார்த்து சொல்கிறான்.

وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏ 
உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர் களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன் : 3:133)

அல்லாஹ் , அஃபூவ், கஃபூர், கஃப்பார், தவ்வாப் என்று அறிகின்ற ஒரு அடியார் நிச்சயமாக அல்லாஹ்வை நேசிப்பான்.

அல்லாஹ்வை பயப்படுவான்; அல்லாஹ்வுக்கு மாறு செய்ய விரும்பமாட்டான்; அல்லாஹ்வுடைய திருப்தி பெற்றுக்கொண்ட நிலையில் அவனை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவான்.

அல்லாஹ்வுடைய இந்தப் பெயர்களை புரிந்து அவனை நேசிக்க கூடியவர்களாகவும், அவனுக்கு அஞ்சி வாழக் கூடியவர்களாகவும் நம்மை ஆக்கி அருள்வானாக ஆமீன்.


அல்லாஹ் தன்னை பற்றி அறிந்து கொள்ளும் படி குர்ஆனில் கட்டளையிடுகிறான்.

فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ 
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்
(அல்குர்ஆன் 47:19)

ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வை அறிந்து கொள்வது கடமை என்று உலமாக்கள் கூறுகிறார்கள்.

ஒருவன் அல்லாஹ்வை அறிகிற போதுதான் அவனுடைய வாழ்க்கை சீராகும். அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்க கூடியவனாக அவன் மாறுவான்.

அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்கு அவனுடைய அழகிய திருநாமங்களாகிய அல் அஸ்மாஉல் ஹுஸ்னா என்ற பெயர்களின் வாயிலாக அறிவது முக்கியமான வழிமுறையாக காணப்படுகிறது.

1. ’அலி-العلي
2. ’அலா-الْاَعْلَى
3. முதஆல்-المتعال

இந்த மூன்று பெயர்களும் ஒன்றோடு ஒன்று பிண்ணிப் பிணைந்தவை.

அல்லாஹ் குர்ஆனில்,
1)
العلي-العلي- அல்அலி
திருக்குர்ஆனில் 8 இடங்களில் ,
2)
الْاَعْلَى-அல்அஃலா
குர்ஆனில் 2 இடங்களில் ,
3)
المتعال-
அல்முதஆல்
குர்ஆனில் 1 இடத்தில், அல்லாஹ் கூறுகிறான்.

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ  لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌ‌ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖ‌ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ‌ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ‌‌ وَلَا يَــــٴُـوْدُهٗ حِفْظُهُمَا ‌ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ‏
அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்; அவனை சிறு உறக்கமும் பீடிக்காது; பெரும் நித்திரையும் பீடிக்காது. வானங்கள், பூமியில் உள்ளவை அனைத்தும் அவனுடையதே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக்கூடும்? அவர்களுக்கு முன் இருப்பவற்றையும் அவர்களுக்குப் பின் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய விருப்பமின்றி அவனுக்குத் தெரிந்த வற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய “குர்ஸி” வானங்கள், பூமியை விட விசாலமாய் இருக்கின்றது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமன்று. மேலும், அவன்தான் மிக உயர்ந்தவன்; மிக மகத்தானவன். (அல்குர்ஆன் : 2:255)

وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ‏ 
நிச்சயமாக அல்லாஹ்தான் உயர்ந்தவன், (மேலானவன்,) மகா பெரியவன்

(அல்குர்ஆன் : 22:62)

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ‏ 
(நபியே!) மிக மேலான உங்களது இறைவனின் திருப்பெயரை நீங்கள் புகழ்ந்து துதி செய்வீராக;
(அல்குர்ஆன் : 87:1)

اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌‏ 
மிக்க மேலான தன் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பியே (தானம் கொடுப்பார்).
(அல்குர்ஆன் : 92:20)

عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ‏ 

மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன்.
(அல்குர்ஆன் : 13:9)

என்றும் கூறுகிறான்.

இந்த மூன்று பெயர்களும்
உயர்ந்தவன் என்றே பொருள் தரும்.

அல்லாஹ் முதலில் தாத் -ஆல் உயர்ந்து இருக்கிறான்.

தாத் என்றால் உண்மையான நிலை என்று அர்த்தமாகும்.

அல்லாஹ் தன்னுடைய தாத்தால் உயர்ந்தவனாக இருக்கிறான்.

அல்லாஹ் இதைப்பற்றி குர்ஆனில் ,

اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى‏ 
(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.
(அல்குர்ஆன் : 20:5)

அல்குர்ஆனில் இதைப்பற்றி 6 வசனத்தில் திரும்ப திரும்ப கூறுகிறான்.

அர்ஷ் என்பது 7 வானங்களுக்கு மேலே உள்ள அல்லாஹ்வின் படைப்பு

அல்லாஹ் அர்ஷின் மேல் தன்னுடைய தாத்தால் உயர்ந்து இருக்கிறான்.

இஸ்தவா என்பதற்கு உயர்ந்து உள்ளான் என்று அபுல் ஆலியா(ரஹ்) போன்ற தாபியீன்கள் அர்த்தம் கூறுகிறார்கள்.

2. அல்லாஹ் கத்ரால் உயர்ந்து இருக்கிறான், அந்தஸ்தால் உயர்ந்து இருக்கிறான்.

அல்லாஹ்க்கு ஸிஃபாத் இருக்கின்றன.
ஸிஃபாத் என்றால் பண்புகள், தன்மைகள்.
அல்லாஹ்வுடைய இந்த பண்புகளும் தன்மைகளும் அவனுடைய அந்தஸ்துக்கும் மகத்துவத்திற்கும் உரிய முறையில் அவனுக்கு இருக்கின்றன.

அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் சொல்லப்பட்டிருப்பது போலவே அல்லாஹ்வின் பண்புகளை மறுக்காமல், வேறு அர்த்தம் சொல்லாமல், உதாரணம் சொல்லாமல், வடிவம் சொல்லாமல், அப்படியே ஈமான் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் வின் ஸிஃபாத் -ஐ அடியார் ஸிஃபாத்தோடு ஒப்பிடக்கூடாது. ஏனென்றால் அல்லாஹ் ஸிஃபத்தால் உயர்ந்தவன்.

முஷ்ரிக்குகள் அடியார்களைப் போன்று அல்லாஹ்வை நினைத்த போதுதான் அல்லாஹ் குர்ஆனில்,

وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ 

அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை.
(அல்குர்ஆன் : 6:91)

என்று கூறுகிறான்.

அலி-العلي
அலா-الاعلى
முதஆல்-المتعال

அல்லாஹ் ஆற்றலினால் உயர்ந்தவன், வல்லமையால் உயர்ந்தவன், சக்தியினால் உயர்ந்தவன்.

என்பதை இந்த மூன்று பெயர்கள் உணர்த்துகின்றன.

இந்த மூன்று பெயரையும் நாம் ஈமான் கொண்டால் உள்ளத்தில் பணிவும், அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும் என்றும், அல்லாஹ் பக்கம் நெருங்க வேண்டும் என்ற ஆசை வரும்.


அல்கபீர்➖الكبير

அல்லாஹ் அல்குர்ஆனில் 6 இடத்தில் கபீர் என்று கூறுகிறான்.

ذٰ لِكُمْ بِاَنَّهٗۤ اِذَا دُعِىَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْ وَاِنْ يُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا فَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِىِّ الْكَبِيْرِ‏ 
இ(த்தண்டனையான)து_ நிச்சயமாக அதன் காரணம்: அல்லாஹ், அவன் தனித்தவனாக அழைக்கப்பட்டால் நீங்கள் நிராகரித்தீர்கள், மேலும், அவனுக்கு (உங்கள் தெய்வங்கள்) இணையாக்கப்பட்டால் (அதை) விசுவாசித்தீர்கள், இப்பொழுது தீர்ப்பு (வழங்குவது) மிக்க உயர்வானவனாகிய மிகப் பெரியவனான அல்லாஹ்விற்கு (மட்டும்) உரியதாகும் (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன் : 40:12)


ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الْبَاطِلُ ۙ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ‏ 
இவையனைத்தும் “நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையான இறைவன் என்பதற்கும், அவனையன்றி அவர்கள் (தெய்வங்களென) அழைப்பவை பொய்யானவை என்பதற்கும், அல்லாஹ்தான் மிகப் பெரியவனும் மேலானவனும் ஆவான்” என்பதற்கும் அத்தாட்சி களாக இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 31:30)


عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ‏ 
(இது மட்டுமா! மற்ற அனைத்தின்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன்.
(அல்குர்ஆன் : 13:9)

ஆகிய இடங்களில் வருகிறது.

அல்கபீர் என்றால் பெரியவன், பெரியது என்று அர்த்தமாகும்.

அல்லாஹு தஆலா பெரியவன் என்று சொல்லும்போது அவனுடைய ‘தாத்’ ஆல் பெரியவனாக இருக்கிறான்.

அல்லாஹ் ஏழு வானத்தின் மேலே அர்ஷின் மீது உயர்ந்து இருப்பதாக அல்குர்ஆனில் 6 இடத்தில் கூறுகிறான்.

அர்ஷின் மீது அல்லாஹ்வின் குர்ஸி இருக்கிறது.

அர்ஷை பற்றியும், குர்ஸியைப் பற்றியும், குர்ஆனிலும், ஸலஃப் சாலிஹீன்களின் விளக்கங்களிலும் பார்க்கமுடிகிறது.

அர்ஷைப் பற்றி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறும்போது;

அல்லாஹ்வின் அர்ஷை 8 மலக்குமார்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைப் பற்றி பேசுவதற்கு அல்லாஹ் எனக்கு அனுமதி கொடுத்து இருக்கிறான். அந்த ஒருவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறும்போது, அந்த மலக்கின் தோல் புஜத்திற்கும், காது சோனைக்கும் இடைப்பட்ட தூரம் 700 வருடம் நடந்து செல்லக்கூடிய தூரமாகும்.

8பிரம்மாண்டமான மலக்குகள் சுமக்கின்ற அளவுக்கு அல்லாஹ்வுடைய அர்ஷ் பிரம்மாண்டமாக இருக்கிறது. அர்ஷின் மீது இருக்கும் குர்ஷியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்,

وسع كرسيه السماوت والارض
அல்லாஹ் வின் அரியாசனம் வானங்களிலும் பூமியிலும் பரந்து நிற்கின்றது.

அல் குர்ஆன்:(2:255)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்,
அர்ஷுக்கு முன்னால் குர்ஸியின் நிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு மிகப் பெரிய திறந்த வெளியிலே ஒரு சின்ன வளையல் போடப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் அந்த வளையல் எப்படி தோன்றுமோ அது போல் தான் அர்ஷ்க்கு முன்னால் குர்ஸி என்று கூறினார்கள்.

குர்ஸியை விட மிக பிரம்மாண்டமானது அர்ஷ்.

அந்த அர்ஷுக்கு மேலே உயர்ந்து இருக்கும் அல்லாஹ் அவனுடைய தாத்தால் மிகப் பெரியவன் என்பதை அல்கபீர் என்ற வார்த்தை உணர்த்துகிறது.

அல்லாஹ் அவனுடைய செயல்களால் மிகப்பெரியவனாக இருக்கிறான்.

لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏ 
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, (இறந்த) மனிதர்களை (மறு முறை) படைப்பதைவிட நிச்சயமாக மிகப் பெரிய காரியமாகும். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இவ்வளவுகூட அறிந்து கொள்வதில்லை.
(அல்குர்ஆன் : 40:57)

இந்த வசனத்தின் மூலம் செயல்களால் பெரியவன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் பெரியவன், பெருமைக்குரியவனாகவும் இருக்கிறான்.

அல்லாஹ் ஹதீஸுல் குத்ஸியில் கூறுகிறான்:

கண்ணியம் என் கீழ் ஆடை ; பெருமை என் போர்வை; இந்த விஷயத்தில் யார் போட்டி போட வருகிறாரோ அவரை தண்டிப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வை கபீர் என்றும், அக்பர் என்றும், ஈமான் கொள்ளும் முஃமின் தன் உள்ளத்தில் கடுகளவு பெருமை கொள்ள மாட்டான்.

அந்த அடியான் பணிவு உள்ளவனாகவும், தேவை உள்ளவனாகவும், அல்லாஹ்விடத்தில் இறைஞ்ச கூடியவனாகவும், கெஞ்ச கூடியவனாகவும், மன்றாட கூடியவனாகவும் இருப்பான்.

அந்த மனிதன் மற்ற மனிதர்களை மதிப்பான் எல்லா மனிதரையும் சமமாக நினைப்பான்.

மேலும் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,

وَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَّهٗ وَلِىٌّ مِّنَ الذُّلِّ‌ وَكَبِّرْهُ تَك

ْبِيْرًا‏ 
இன்னும், “பிள்ளையை (தனக்கு) எடுத்துக் கொள்ளாதவனும், ஆட்சியில் தனக்கு துணைவன் இல்லாதவனும், இழிவிலிருந்து (காக்க) அவனுக்கு உதவி செய்பவரே இல்லாதவனும் ஆகிய – இத்தகைய அல்லாஹவிற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக” எனவும் (நபியே!) நீர் கூறுவீராக! ஆகவே (மாபெரும் மகத்துவத்திற்குரிய) அவனை மிக மிக பெருமைப்படுத்துவீராக!
(அல்குர்ஆன் : 17:111)

அல்லாஹ்வை கபீர் என்று சொல்லும் நாம் , மற்ற மனிதர்களை புரிந்து, உள்ளத்தில் பணிவு கொண்டு, மனிதர்களை மதிக்கும் தன்மையை வளர்க்க அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக……


அல் அளீம்➖ العظيم 

அல்லாஹ்வினுடைய திருநாமமாகிய العظيم என்பது குர்ஆனில் 9 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

சூரத்துல் பகராவில் ஆயத்துல் குர்ஸி என்று நாம் அழைக்கக்கூடிய 255 ஆவது வசனத்தின் இறுதியில்
وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
என்பது இடம்பெறுகிறது.

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ‏ 

ஆகவே, (நபியே!) நீங்கள் மகத்தான உங்கள் இறைவனின் திருப்பெயரை துதி செய்து கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன் : 69:52)

அல் அளீம், அல் கபீர் நெருக்கமான கருத்துக்களையுடைய பெயர்கள்.

அல் அளீம் என்பது ➖’அளம’ ‘عظمة’ என்பதிலிருந்து வந்திருக்கிறது.
‘அளம’ என்றால் ➖அரபு மொழியில் தோற்றத்தில் பிரம்மாண்டமானது, அந்தஸ்தில் உயர்ந்து இருப்பது நிலையில் உயர்ந்திருப்பது என்பதையும் இந்த வார்த்தை குறிக்கும். சுருக்கமாக மகத்தானது, பிரம்மாண்டமானது என்பது அர்த்தமாகும்.

அல் அளீம் என்பதன் அர்த்தம் அல்லாஹ் அவனுடைய ‘தாத்’ல் மகத்தானவனாக, மிகப்பெரியவனாக இருக்கிறான் என்பதாகும்.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா ஒன்றுமில்லாத சூனியம் கிடையாது.
அவனுக்கென்று ஒரு தாத் இருக்கிறது.

தாத் என்றால் அல்லாஹ்வுக்கு இருக்கிற உண்மையான நிலையென்று அர்த்தமாகும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِه ‌ۖ وَالْاَرْضُ جَمِيْعً قَبْضَتُهٗ يَوْمَ الْقِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطْوِيّٰتٌۢ بِيَمِيْنِهٖ‌ ؕ 

அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்.
(அல்குர்ஆன் 39:67)

அல்லாஹ்வினுடைய கையில் வானங்களும் பூமியும் கடுகைவிட சிறியதாக இருக்குமென்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் இந்த ஆயத்தின் தஃப்ஸீரில் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
7வானங்களும் அல்லாஹ்வின் குர்ஸிக்கு முன்னால் வைத்தால் ஒரு திறந்த வெளியிலே போடப்பட்ட வளையல் போன்று காணப்படும். குர்ஸியை விட அர்ஷின் சிறப்பு எப்படி என்றால் திறந்தவெளியில் போடப்பட்ட வளையல் போன்றுதான் காணப்படும் என்று கூறினார்கள்

அல்லாஹ்வினுடைய அர்ஷ், குர்ஸி, 7 வானங்கள், பூமி அனைத்தையும் பார்க்கும்போது அல்லாஹ் அவனுடைய தாத் ஆல் எவ்வளவு மகத்தானவன் என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.

அல்லாஹ்வை அல் அளீம் என்று சொல்வதின் மூலம் அவனுடைய ஸிஃபாத்துகள் அனைத்துமே மிக பிரம்மாண்டமானவை, சிறந்தவை, கண்ணியமானவை .

அல்லாஹ் அவனுடைய செயல்களால் அவன் மகத்தானவன், மிகப்பெரியவன் என்ற கருத்தை அளீம் என்கிற இந்த பெயர் உணர்த்துகிறது.

அல்லாஹ் அளீம் என்று நாம் கூறும்போது அவனை போன்று அவனுடைய படைப்புகளில் யாரும் கண்ணியப்படுத்தபடவோ, உயர்த்தபடவோ கூடாது என்பதையும் உணர்த்துகிறது.

அல்லாஹு தஆலா அவனுடைய ரிஸ்கை, அவனுடைய கூலியை விரும்பியபடி அவனுடைய அடியார்களுக்கு மகத்தானதாக கொடுக்கிறான்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்

وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّاٰتِهٖ وَيُعْظِمْ لَهٗۤ اَجْرًا‏

எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான். (அல்குர்ஆன் 65 :5)

யார் அவருடைய ரிஸ்கை விசாலமானதாக ஆக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறாரோ, அவருடைய தவனை நீடிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறாரோ அவர் தன்னுடைய இரத்த உறவுகளை சேர்ந்து வாழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வை நாம் அல் அளீம் என்று ஏற்றுக்கொள்ளும்போது நாம் அவனுடைய அடிமைகள் , நாம் பெருமைப்படவோ, ஆணவப்படவோ, கர்வம் கொள்ளவோ வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக.


அல்கவிய் القوي
அல்மதீன் المتين

அல் கவிய் என்ற பெயர் குர்ஆனில் 25 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

اَللّٰهُ لَطِيْفٌ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَآءُ‌ وَهُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ‏ 
அல்லாஹ் தன் அடியார்களை அன்பாகக் கவனித்து வருபவன். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளித்து வருகின்றான். அவன் மிக பலமுள்ளவனும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான். (அல்குர்ஆன் : 42:19)

كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِىْ‌ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ‏ 
தானும், தன்னுடைய தூதர்களுமே நிச்சயமாக வெல்வார்களென்று அல்லாஹ் விதித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் பலவானாகவும் (அனைவரையும்) மிகைத்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 58:21)


فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا صٰلِحًـا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْىِ يَوْمِٮِٕذٍ‌ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ‏ 
(வேதனையைப் பற்றிய) நம்முடைய கட்டளை(யின்படி வேதனை) வந்தபொழுது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கைக் கொண்டவர்களையும் (வேதனையிலிருந்தும்) அந்நாளின் இழிவில் இருந்தும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். (நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவன் பலமிக்கவனும் (அனைத்தையும்) மிகைத்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் : 11:66)

அல் மதீன் என்ற பெயர் குர்ஆனில் ஒரு வசனத்தில் இடம்பெற்றுள்ளது,

اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ‏ 
(நபியே! நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்கமுடியாத பலசாலியுமாவான். (அல்குர்ஆன் : 51:58)

அல் கவிய் என்றால்➖ பலமுள்ளவன் என்று அர்த்தமாகும்.

அவனை மிகைக்க யாராலும் முடியாது. அவனை பலவீனப்படுத்தவும் யாராலும் முடியாது. அப்படிப்பட்ட பலமுள்ளவன்.

அல் மதீன் என்றால்➖ மிக உறுதியானவன். பலத்தில் கடுமையான பலமுள்ளவன் என்று அர்த்தமாகும்.

அல்லாஹ் அவனுடைய நபிமார்களுக்கு அவனுடைய நேசர்களுக்கு உதவி செய்தது அவனுடைய பலத்தில் உள்ளது.

உதாரணமாக:
அல்லாஹ் சூரத்துல் ஹூத் 66வது வசனத்தில் சாலிஹ் (அலை) அவர்களை பாதுகாத்த அந்த சம்பவத்தை
اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ‏
நிச்சயமாக உம்முடைய ரப்பு கவிய் ஆகவும் அஜீஸ் ஆகவும் இருக்கிறான்.

அல்லாஹ் கவிய் ஆக இருப்பதனால் தான் அநியாயக்காரர்களையும், பாவிகளையும் பல்வேறு விதமான தண்டனைகளை கொண்டு உலகத்தில் அழித்திருக்கிறான்.

சூரத்துல் அன்பால் 52 ஆவது வசனத்தில் ஃபிர்அவ்ன் எப்படி அவனுடைய தண்டனை ஆக்கிரமித்தது என்பதை

اِنَّ اللّٰهَ قَوِىٌّ شَدِيْدُ الْعِقَابِ‏

நிச்சயமாக அல்லாஹ் கவிய் ஆகவும் கடுமையாக தண்டிப்பவனாகவும் இருக்கிறான்.

அல்லாஹுத்தஆலா ‘கவிய்’ ஆக இருப்பதால் இந்த உலகத்தில் பாவிகளை அநியாயக்காரர்கள் தண்டிக்கிறான்.

அல்லாஹ் கவிய் என்பதினால் வானங்களும் பூமிகளும் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன

அல்லாஹ் கவிய் என்பதனால் , தன் அடியார்களுக்கு நாடிய விதமாக ரிஸ்க்கை அளிக்கிறான்.

சூரத்துல் ஷுறா 19 ஆவது வசனத்தில் ,
اَللّٰهُ لَطِيْفٌۢ بِعِبَادِهٖ يَرْزُقُ مَنْ يَّشَآءُ‌ۚ وَهُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ
அல்லாஹ் அவன் நாடியவர்களுக்கு ரிஸ்க்கை கொடுக்கிறான் அவன் கவிய் ஆகவும், அஜீஸ் ஆகவும் இருக்கிறான்.

அல்லாஹு தஆலா கவிய் எனும் போது அவனிடமே நாம் அனைவரும் மீள் வேண்டும் என்பது புரிகிறது.

ஒரு அடியான் அடைக்கலம் தேடுவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே கிடையாது.

ஒரு மனிதன் கடைசியாக போய் நிற்கும் இடம் அல்லாஹ்வின் சந்நிதானம்.

அல்லாஹ் நாடியதை எல்லாம் செய்கின்ற ஆற்றல் படைத்தவன் ஏனெனில் அவன் கவிய் ஆக இருக்கிறான்.

அல்லாஹ் கவிய் என்று ஒரு மனிதன் அவனை ஏற்றுக் கொள்ளும்போது, அல்லாஹ்விடத்தில் அவன் மீளுகின்றான்; அல்லாஹ்விடத்தில் அவன் இறைஞ்சுகின்றான். அல்லாஹ்வின் மீது அவன் தங்கியிருக்கிறான்

நபி (ஸல்) அவர்கள் அபூ மூஸா அல் அஷரி ரலி அவர்களிடம் “அபூ மூசாவே لاحول ولاقوة الا بالله என்று நீர் கூறும். அது சுவர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒன்றாகும்” என்று கூறினார்கள்.

அபூதர்(ரலி) அவர்கள் கூறினார்கள் “என் நண்பர் நபி(ஸல்) அவர்கள் 7 விஷயங்களை ஏவினார்கள் ; அதில் ஒன்றுதான் لاحول ولاقوة الا بالله என்பதை அதிகமாக சொல்லுங்கள்; ஏனென்றால் அது அர்ஷுக்கு கீழே இருக்கக்கூடிய ஒரு பொக்கிஷமாக காணப்படுகிறது”.

லா ஹவ்ல (لاحول) என்றால்➖ மாற்றம் ஏற்படுவது கிடையாது.

வலா குவ்வத்த (ولا قوة) என்றால் ➖சக்தி என்பது கிடையாது.

இல்லா பில்லாஹ் என்றால் ➖ ( الا با لله) அல்லாஹ்வைக் கொண்டே தவிர.

மாற்றம் ஏற்படுவதற்கு அல்லாஹ்வின் நாட்டம் தேவை. சக்தி என்பது அல்லாஹ்வின் சக்தியை கொண்டு தான் அமையும் என்பதை நபி ஸல் அவர்கள் இந்த ஹதீஸ் மூலம் நமக்கு கூறுகிறார்கள்.

அல்லாஹ் அல்கவிய், அல்மதீன் என்று நாம் ஈமான் கொள்ளும்போது, அந்த பெயர் உயர்த்தக்கூடிய இத்தனை கருத்துக்களை நாம் ஈமான் கொள்ளும்போது, நாம் பலவீனமானவர்கள் என்பதை உணர வேண்டும். அல்லாஹ்விடத்தில் நாம் தஞ்சம் அடைய வேண்டும். அவனிடமே நாம் மீள வேண்டும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே அல்லாஹ்வின் பெயர்களை புரிந்து அதன்படி நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க அல்லாஹு ரப்புல் ஆலமீன் தவ்ஃபீக் தவ்ஃபீக் செய்வானாக.


الشهيد
அஷ்ஷஹீத் — சாட்சியாளன்

الرقيب
அர்ரகீப் — கண்காணிப்பவன்

அஷ் ஷஹீத் என்ற பெயர் அல்குர்ஆனில் சுமார் 18 இடங்களில் இடம்பெற்றுள்ளது

الَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ ‏ 

வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 85:9)

مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ‌ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّـفْسِكَ‌ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا‌ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا‏ 

உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் – (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:79)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالصّٰبِـــِٕيْنَ وَالنَّصٰرٰى وَالْمَجُوْسَ وَالَّذِيْنَ اَشْرَكُوْۤا ‌ اِنَّ اللّٰهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏ 

திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 22:17)

அர் ரகீப் என்ற பெயர் அல்குர்ஆனில் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளது.

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏ 

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:1)

لَا يَحِلُّ لَـكَ النِّسَآءُ مِنْ بَعْدُ وَلَاۤ اَنْ تَبَدَّلَ بِهِنَّ مِنْ اَزْوَاجٍ وَّلَوْ اَعْجَبَكَ حُسْنُهُنَّ اِلَّا مَا مَلَـكَتْ يَمِيْنُكَ‌ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ رَّقِيْبًا‏ 

இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள் உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்; அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே – ஹலால் இல்லை – மேலும், அல்லாஹ் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவன். (அல்குர்ஆன் : 33:52)

مَا قُلْتُ لَهُمْ اِلَّا مَاۤ اَمَرْتَنِىْ بِهٖۤ اَنِ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيْدًا مَّا دُمْتُ فِيْهِمْ‌ فَلَمَّا تَوَفَّيْتَنِىْ كُنْتَ اَنْتَ الرَّقِيْبَ عَلَيْهِمْ‌ وَاَنْتَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏ 

“நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), “என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்” (என்றும்);
(அல்குர்ஆன் : 5:117)

ஷேக் அப்துர் ரஹ்மான் இப்னு சஅதி (ரஹி) அவர்கள், “அஷ்ஷஹீத் மற்றும் அர்ரகீப்” என்ற இரண்டு பெயர்களும் ஒரே கருத்தைத் தரக்கூடிய பெயர்கள் என்று கூறினார்கள்.

அஷ்ஷஹீத் என்றால் ➖
ஒவ்வொன்றையும் பார்க்கக் கூடியவன்,
அவனுக்கு எதுவுமே மறையாது,
மெதுவான அல்லது வெளிப்படையான எல்லாவிதமான சத்தங்களையும் அறியக் கூடியவனாக இருக்கிறான்,
இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிற ஒவ்வொன்றையும் பார்க்கக் கூடியவனாக இருக்கிறான்.

அர்ரகீப் என்றால் ➖
உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதை அறியக் கூடியவன்,
கண்காணிக்கக்கூடியவன்.

இந்த இரண்டு பெயர்களும் மனிதர்களுடைய உள்ளத்தில், அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வையும், நம்பிக்கையும் ஏற்படுத்தக்கூடிய பெயர்களாக இருக்கின்றன.

அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அல்குர்ஆனில் பல இடங்களில் வெளிப்படையாக கூறியிருக்கிறான் :

وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِىْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ‌ 
அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; (அல்குர்ஆன் : 2:235)

وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْ‌ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏ 
நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் – அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 57:4)

اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰى‏ 
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
(அல்குர்ஆன் : 96:14)

فَاِنَّكَ بِاَعْيُنِنَا‌ 
நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்..
(அல்குர்ஆன் : 52:48)

يَعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ‏ 
கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
(அல்குர்ஆன் : 40:19)

அல்லாஹ் நம்முடைய ஒவ்வொரு காரியத்தையும், செயலையும், ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அஷ்ஷஹீத் மற்றும் அர்ரகீப் என்ற பெயர்கள் வலியுறுத்துகின்றன.

அல்லாஹ்தான் அஷ்ஷஹீத் அர்ரகீப் என்று நாம் ஈமான் கொள்ளும் போது, நம்முடைய உள்ளங்களில் “முறாக்கபா” என்ற தன்மை உண்டாகிறது,

’முறாக்கபா’ என்றால் எந்த நிலையிலும், எந்த நேரத்திலும், எல்லா சந்தர்ப்பத்திலும், அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்கிற உணர்வு நம்மிடத்தில் வரும்.

நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) இஹ்ஸான் பற்றிக் கேட்டபோது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

”ஒரு மனிதன் அல்லாஹ்வை பார்ப்பது போன்று அவனை வணங்க வேண்டும், அவனை நீ பார்க்காவிட்டாலும், அல்லாஹ் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வோடு வணங்க வேண்டும்”

இது இஹ்ஸானுடைய மகாம் என்பார்கள். இந்த தன்மைகளை நம் மனதில் வளர்த்து கொள்வது. இது அஷ்ஷஹீத் அர்ரகீப் என்ற பெயர்கள் ஏற்படுத்தும் மாற்றம் ஆகும்.

”முறாக்கபா” என்ற சிந்தனை நம்முடைய உள்ளங்களில் வந்தால், நிச்சயமாக நம்முடைய உள்ளம் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடையும்.

உள்ளங்களை பற்றி அதிகம் பேசிய அறிஞர், இமாம் இப்னு கய்யூம் அல் ஜவ்ஸியா (ரஹி)அவர்கள் கூறினார்கள்;
‘அல்லாஹ்வைக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சி அடைவது என்பது, அல்லாஹ்வை கொண்டு உள்ளம் சந்தோஷம் அடைவது என்பது, அல்லாஹ்வைக் கொண்டு கண்குளிர்ச்சி அடைவது என்பது இந்த உலகிலுள்ள எந்த இன்பமும் அதற்கு நிகராகாது.

”அல்லாஹ்வை அறிந்து, அல்லாஹ் நம்மைக் கண்காணிக்கிறான் என்று, அல்லாஹ்வுக்காக ஒவ்வொன்றையும் செய்கின்றோம், அல்லாஹ்வுக்காக என்ற உணர்வு நம்மிடத்தில் வந்தால், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் சந்தோஷமும், இந்த உலகத்தில் எந்த சுகத்தை கொடுத்தாலும் அந்த மகிழ்ச்சிக்கு நிகராகாது”

அல்லாஹ், அஷ்ஷஹீத் மற்றும் அர்ரகீப் என்பதை நாம் அறியும்போது, நிச்சயமாக அல்லாஹ் எதிர்பார்க்கக்கூடிய நல்லடியார்களாக நாம் மாற முடியும்,

மேலும், இந்த உலகத்திலும் நாம் அல்லாஹ்வுடைய கண்காணிப்பைக் கொண்டு மகிழ்ச்சி அடையவும், மறுமையிலும் அல்லாஹ்வை பார்க்கிறபோது ஆனந்தம் அடையவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக.


அல்ஃகனி (الغني) ➖தேவைகளற்றவன்

அல்ஃகனி என்ற பெயர் அல்குர்ஆனில் 18 இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.


وَرَبُّكَ الْغَنِىُّ ذُو الرَّحْمَةِ ‌ اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْ بَعْدِكُمْ مَّا يَشَآءُ كَمَاۤ اَنْشَاَكُمْ مِّنْ ذُرِّيَّةِ قَوْمٍ اٰخَرِيْنَ ‏ 
உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் – அவன் நாடினால் உங்களைபோக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்று – தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான். (அல்குர்ஆன் 6:133)

يٰۤاَيُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَى اللّٰهِ وَاللّٰهُ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏ 
மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன். (அல்குர்ஆன் 35:15)


لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏ 
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன்; புகழப்படுபவன்.
(அல்குர்ஆன் 31:26)

அரபுமொழியில், அல்ஃகனி என்றால் தேவையற்றவன், செல்வந்தன் என்ற அர்த்தங்கள் இருக்கின்றன.

அல்லாஹ் அல்ஃகனி என்று சொன்னால், அந்தப்பெயர் உள்ளடக்கி இருக்கக்கூடிய அர்த்தம் மிக ஆழமானதும், விரிவானதும் ஆகும்.

அல்லாஹு தஆலா தன்னுடைய ‘தாத்’தில் யாருடைய தேவையும் அற்றவனாக இருந்து கொண்டிருக்கிறான். அவனுடைய தாத் யாரின் பாலும் எந்த தேவையும் அற்ற நிலையில் இருக்கிறது.

நாம் எல்லோரும் அல்லாஹ்வுடைய தேவையுள்ளவர்கள், ஆனால், அல்லாஹ், அவனுடைய செயல்களிளும், ஸிஃப்பத்துக்களிளும் யாரிடமும் எந்த தேவையும் இல்லாத நிலையில் இருக்கிறான்.

அல்லாஹ் அல்ஃகனியாக இருப்பதனால் தான், இந்த உலகத்தில் உள்ள அத்தனை மக்களும் அல்லாஹ்வை வணங்கினாலும், அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டாலும், அதனால் அல்லாஹ்வுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

நபி ﷺ அவர்கள் அறிவித்தார்கள், ஒரு ஹதீஸுல் குத்ஸியில் அல்லாஹ் கூறுகிறான்:

”என்னுடைய அடியார்களே நீங்கள் எனக்கு எந்த வகையிலும் பிரயோஜனம் அளிக்கவோ, அல்லது எந்த வகையிலும் தீங்கிழைக்கவோ முடியாது”
(ஸஹீஹ் முஸ்லிம்)

நாம் செய்கின்ற எந்த ஒரு செயலாலும், அல்லாஹ்வுடைய அந்தஸ்து கூடுவதும் இல்லை, குறைவதும் இல்லை.

நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளால், அல்லாஹ் பயனடைகிறான் என்று நாம் எண்ணவும் கூடாது, ஏனென்றால் அல்லாஹ் அல்ஃகனியாக இருக்கிறான்.

அல்லாஹ் தேவையற்றவனாக, நிரப்பமான செல்வந்தனாக இருப்பதனால், அவனுடைய அடியார்கள் கேட்பதையெல்லாம் வாரி வாரி வழங்குகிறான்.

அல்லாஹ் அல்ஃகனி என்ற தேவையற்ற ரஹ்மானாக இருப்பதனால், படைப்பினங்களுக்கு இருக்கிற எல்லாவிதமான குறைபாடுகளை விட்டும் அவன் நீங்கியவனாக இருக்கிறான்.

அல்லாஹ்வுக்கு மனைவியோ, குழந்தைகளோ, ஆட்சியில் துணையோ, உதவியாளர்களோ அல்லது அவனுக்கு நிகராக யாரும் எவரும் கிடையாது என்று அல்குர்ஆனில் அல்லாஹ் அடையாளப்படுத்துகிறான்.

அல்லாஹ் அல்ஃகனியாக இருப்பதனால் தான், தன்னுடைய ஏழையான அடியார்களைப் பார்த்து தன்னிடம் கேட்கச் சொல்கிறான்.

மனிதர்களிடம் எதையாவது தேவை என்று கேட்டால் ஒரு தடவை அல்லது இரு தடவை செய்வார்கள். பல தடவைகள் உதவி கேட்டால் சலிப்படைந்து விடுவார்கள்.

அல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு கேட்பதை கொடுப்பதனால், அவனுடைய ஆட்சியிலிருந்தோ அவனுடைய கஜானாவிலிருந்தோ எதுவுமே குறையாது. அதனால் தான் அல்லாஹ் தன் அடியார்களை பார்த்து; “என்னிடம் கேளுங்கள் நான் உங்களுக்கு தருகிறேன்” என்று கூறுகிறான்.

நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:
“யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ, அவர் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்”.

அல்லாஹ் அல்ஃகனி என்பதனால், அவனுடைய அடியார்களை அவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அழைப்பு விடுகிறான்.

அல்லாஹ் தன்னுடைய அடியார்களிடத்தில் எந்த தேவையுமற்றவனாக இருப்பதினால், தன்னுடைய அடியார்களில் அவன் விரும்பியவர்களை செல்வந்தனாக ஆக்குகிறான் என்பதை அல்குர்ஆனில் கூறுகிறான் :

وَاَنَّهٗ هُوَ اَغْنٰى وَ اَقْنٰىۙ‏ 
நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான். (அல்குர்ஆன் 53:48)

அல்லாஹ் தான் உண்மையான செல்வந்தன், எந்த தேவையுமற்ற ரப்புல் ஆலமீன் என்பதை நாம் புரிந்து கொள்ளும்போது, நிச்சயமாக நாம் அனைவரும் அல்லாஹ்விடம் தேவையுள்ளவர்கள் என்பதை நாம் உணரலாம்.

மற்ற மனிதர்கள் மத்தியில் வாழும் போது நாம் தேவை உள்ளவன் தான் என்ற உணர்வோடு வாழலாம்.

நாம் அல்லாஹ்விடம் தேவையுள்ளவர்கள் என்ற உணர்வோடு வாழும் பொழுது, நம்மிடம் பணிவு வரும், மற்ற மனிதர்களை மதிக்கும் தன்மை வரும், மேலும், நிச்சயமாக நம்மிடம் பெருமை வராது.

எனவே, அல்லாஹ் அல்ஃகனி என்பதை புரிந்து வாழ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக.

அல்லாஹ்வைப் பற்றி அறியாமல் வாழ்கிற மனிதனைவிட துர்பாக்கியசாலி, நஷ்டவாளி வேறு யாரும் இல்லை.

இப்பிரபஞ்சத்தை படைத்து அதில் உள்ளவற்றை படைத்து பரிபாலித்து கொண்டிருக்கின்ற அல்லாஹ்வைப் பற்றி அறிவது கட்டாயக் கடமையாகும்.

♦அல்கரீம்,
♦அல்அக்ரம்
الكريم
الاكرم

அல் குர்ஆனில் மூன்று இடங்களில் வந்துள்ளது.

قَالَ الَّذِىْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْـكِتٰبِ اَنَا اٰتِيْكَ بِهٖ قَبْلَ اَنْ يَّرْتَدَّ اِلَيْكَ طَرْفُكَ‌ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّىْ‌ لِيَبْلُوَنِىْٓ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ‌ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّىْ غَنِىٌّ كَرِيْمٌ‏ 
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார். அல்குர்ஆன் : 27:40

يٰۤاَيُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيْمِۙ‏ 
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது? அல்குர்ஆன் : 82:6

فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ رَبُّ الْعَرْشِ الْـكَرِيْمِ‏ 
ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!
அல்குர்ஆன் : 23:116


الاكرم- அல் அக்ரம்

اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏ 
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
அல்குர்ஆன் : 96:3

அல்கரீம், கரம் என்ற சொல்லிலிருந்து தோன்றியதாகும்.

கரம் என்றால் அதிக நன்மை, அதிக பயன் என்ற அர்த்தம் தரும்.

நபி(ஸல்) அவர்கள் யூசுப் (அலை) அவர்கள் பற்றி சொல்லும் போது “இன்னல்கரீம இப்னுல் கரீம் யூசுப் இப்னு யாகூப்.”
கரீமுடைய மகன் கரீம் யூசுப் ஆகும் என்று சொன்னார்கள்.

யூசுப் (அலை) அவர்களுக்கு – நபித்துவம், அதிக அறிவு ஞானம், அதிக அழகு
கொடுக்கப்பட்டது.

இதை நபி(ஸல்) அவர்கள் அல்கரீம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய கலாமாகிய அல்குர்ஆனை அல்லாஹ் கரீம் என்று சொல்கிறான்.

اِنَّهٗ لَـقُرْاٰنٌ كَرِيْمٌۙ‏ 
நிச்சயமாக இது மிக்க கண்ணியமுள்ள குர்ஆனாகும்.
(அல்குர்ஆன் : 56:77)

அல்லாஹ் தன் அர்ஷை பற்றி சொல்லும்போது அல்கரீம் என்று குறிப்பிடுகிறான்.

சொர்க்கத்தில் நல்லடியார்களுக்கு தயார் செய்து வைத்திருக்கும் நன்மைகளை பற்றி சொல்லும்போது அல்கரீம் என்று சொல்கிறான்,

اُولٰۤٮِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ‌ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‌‏ 
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு. (அல்குர்ஆன் : 8:4)

ِنْ تَجْتَنِبُوْا كَبٰٓٮِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَنُدْخِلْـكُمْ مُّدْخَلًا كَرِيْمًا‏ 
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம். (அல்குர்ஆன் : 4:31)

اَوَلَمْ يَرَوْا اِلَى الْاَرْضِ كَمْ اَنْبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ‏ 
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 26:7)

இப்படி நன்மைகள் அதிகமாக நிறைந்த ஒன்றை குறிப்பிடுவதற்கு அல்லாஹ் கரீம் என்று சொல்கிறான்

அந்த வகையில் அல்லாஹ் அல்கரீம் என்று சொன்னால் நன்மைகள் நிறைந்தவனாகவும் வாரி வழங்க கூடியவனாகவும் இருக்கிறான். அவனை விட தன் அடியார்களுக்கு அதிகமாக வாரி வழங்குகின்ற ஒருவரும் இல்லை என்பதையும் இந்த பெயர் உணர்த்துகிறது.

கரீம் என்ற சொல்லின் அதிகபட்சமான நிலையை என்பதை உணர்த்துவதுதான் அல்அக்ரம் என்ற சொல்லாகும்.

அல்லாஹுத்தஆலா கரீம் என்றால் அவனிடம் இருந்து கிடைக்கக்கூடிய கொடைகள் தொடர்ச்சியாக கிடைக்கிறது என்ற அர்த்தத்தையும் அது பிரதிபலிக்கிறது.

அல்கரீம் என்பது➖ அல்லாஹ்விடமிருந்து நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும் என்பதையும் இது குறிக்கும்

குறைகளை விட்டும் நீங்கியவன் என்ற அர்த்தத்தையும் இது தருகிறது

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَسْجُدُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُوْمُ وَ الْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَآبُّ وَكَثِيْرٌ مِّنَ النَّاسِ‌ وَكَثِيْرٌ حَقَّ عَلَيْهِ الْعَذَابُ‌ وَمَنْ يُّهِنِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ مُّكْرِمٍ‌ اِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يَشَآءُ ۩  ‏ 
வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது; அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். (அல்குர்ஆன் : 22:18)

அல்லாஹ்தான் தன் அடியார்களுக்கு கொடுக்கிறான். அவன் ஒன்றை தன் அடியார்களுக்கு கொடுத்து விட்டால் அவனை விட சிறப்பாக கொடுப்பதற்கு யாரும் இல்லை என்பதை இந்த அல்கரீம் என்ற வார்த்தை மேல் உள்ள வசனத்தில் அறியலாம்.

அல்லாஹு தஆலா நன்மைகள் நிறைந்தவன் தாராளமாக தன் அடியார்களுக்கு கொடுக்கக் கூடியவன். பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல் கொடுக்கக் கூடியவன் என்பதையும் இந்த அல்கரீம் என்ற அல்லாஹ்வின் தன்மையிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

அல்லாஹ்விடம் நெருங்கக் கூடிய அடியானை கைவிடமாட்டான்.

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِيْعُ اَجْرَ مَنْ اَحْسَنَ عَمَلًا‌ ‏ 
(எனினும்,) நிச்சயமாக எவர்கள் (இக்குர்ஆனை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ (அத்தகைய) நன்மை செய்பவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்கி விடுவதில்லை.
(அல்குர்ஆன் : 18:30)

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து அவனிடம் நாம் சென்று விட்டால் அவன் கரியின் நிச்சயமாக கூலிகள் எதையும் வீணாக்காமல் முழுமையாக கொடுக்கக் கூடியவன்.

அல்லாஹ் அல்கரீம் ஆக இருப்பதினால் தான் நம்மிடம் அவன் என்னிடம் கேளுங்கள் நான் தருகிறேன் என்று சொல்கிறான்.

وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِىْۤ اَسْتَجِبْ لَـكُمْ
இன்னும், உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், “நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன்,
(அல்குர்ஆன் : 40:60)

அல்லாஹ் அல்கரீம் அல்அக்ரம் என்ற தன்மையுடையவன் என்று நாம் புரியும் பொழுது அல்லாஹ்விடம் நன்மைகளை நாடக் கூடியவர்களாகவும் அந்த நன்மைகளுக்காக முயற்சி செய்பவர்களாகவும் மாற முடியும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் (அல்கரீம்,) நமக்கு தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.

நம்மை படைத்து நமக்கு ரிஸ்க்கை கொடுத்து எண்ணிலடங்கா நிஃமத்தை அளித்து கொண்டு இருக்கின்ற, அல்லாஹ் பற்றி அறிய வேண்டும் என்ற ஆசையோடு அவனுடைய திருநாமங்களை கற்று வருகிறோம்.

அல்முஹைமின்➖ المهيمن

அல் குர்ஆனில் ஒரு இடத்தில் இந்த பெயர் வருகிறது.

هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ اَلْمَلِكُ الْقُدُّوْسُ السَّلٰمُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيْزُ الْجَـبَّارُ الْمُتَكَبِّرُ‌ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ‏ 
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் – அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். (அல்குர்ஆன் : 59:23)

அல்லாஹ் இவ்வசனத்தில் பலபெயர்களை குறிப்பிட்டு இறுதியாக அல்முஹைமின் என்ற பெயரை பதிவுசெய்கிறான்.

அல்முஹைமின் அரபியில் அல்ஹய்மனா என்ற மூலச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

ஹய்மனா என்றால்➖ பாதுகாப்பு, கண்காணிப்பு ஆக்கிரமிப்பு, அதிகாரம் செலுத்துதல் என்ற அர்த்தங்களை கொண்டதாகும்.

அல் முஹைமீன் என்ற பெயருக்கு
“அஷ்ஷஹித்”➖ கண்காணிப்பவன்
அல்அமீன். ➖ நம்பிக்கைக்கு உரியவன் என்ற அர்த்தம் வரும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ், அல் முஹைமின் என்று சொன்னால் அதற்கு நாம் பல அர்த்தங்களை கொடுக்கலாம்

”அஷ்ஷாஹீது அலா ஃகல்கிஹி”➖’தன்னுடய படைப்புகளை கண்காணிப்பவன்’

தன்னுடய படைப்புகளுடைய ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு செயலையும் கண்காணிக்க கூடியவன். அவனிடம் எதுவுமே மறைந்து விடாது. அவனுடைய படைப்பினங்கள் செய்யக்கூடிய பேசக்கூடிய அனைத்தையும் உற்றுநோக்கியவனாக இருக்கிறான்

அல்லாஹு தஆலா தன்னுடைய அடியார்களுடைய காரியங்களையும் பராமரித்து கண்காணிக்கிறான்

அல்லாஹு தஆலா தன்னுடைய அடியார்களில் நாடியவர்களை பயத்திலிருந்தது பாதுகாத்து, நிம்மதியான, அமைதியான வாழ்க்கையை வழங்குகிறான்

அல்முஹைமின்➖நாணயமானவன், நம்பிக்கையானவன் அல்லாஹ்விற்கு கட்டுப்படுபவர்களுக்கு எந்த குறையும் வைக்காமல் அவர்களுக்கு நிறைவான கூலிகளை கொடுக்கக்கூடியவன்.

பாவிகளுக்கும் அவர்களுடைய பாவத்தை அள்ளி கொடுக்காமல் அவர்களுடைய பாவம் அளவிற்கு தண்டனையை கொடுக்கிறவன்.

அல் முஹைமின்,➖உண்மை படுத்தக் கூடியவன்.

அல்லாஹ் நபிமார்களை உண்மைப்படுத்தினான். அவர்களுக்கு முஃஜிஸத்களை கொடுத்து உண்மை ஆக்கினான்.

ஒரு மனிதன் அல்லாஹ்வை அல் முஹைமின் என்று அறிந்து கொள்ளும்போது ,அவன் அல்லாஹ்வின் சட்டங்களை பேணி நடக்க கூடியவனாகவும், தன்னுடைய வார்த்தைகளையும், செயல்களையும் அல்லாஹ் பொருந்தி கொள்ளும் வகையிலும் அமைத்துக்கொள்வான்.

அல் முஹைமின் என்ற அல்லாஹ்வின் பெயரை சரியான அர்த்தத்தோடு தெரிந்து ஈமான் கொண்டு அதற்கேற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்

எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக ஆமீன்.


அல் முஹீத் ➖ المحيط 

அல் முஹீத் என்ற பெயர் அல் குர்ஆனில் 8 இடங்களில் இடம்பெற்றுள்ளது.

சூரத்துன்னிசா 126 ஆவது வசனத்தில்
وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ مُّحِيْـطًا

சூரத்துல் ஆல இம்ரான் 120 ஆவது வசனத்திலும் இடம்பெற்றுள்ளது.
اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ‏ 
(ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயலை சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.

சூரத்துல் பகரா 19ஆவது வசனத்தில்
وَاللّٰهُ مُحِيْطٌ‌ۢ بِالْكٰفِرِيْنَ.

அல் முஹீத் என்ற பெயர் அல் இஹாதா என்ற சொல்லில் இருந்து பிறந்தது.

இஹாதா என்றால்➖ சூழ்ந்துகொள்ளுதல் என்று அர்த்தம்.

அல் முஹீத் என்றால்➖ சூழ்ந்துகொள்ளக்கூடியவன். அல்லாஹுத்தஆலா அறிவாலும் ஆற்றலாலும் , வல்லமையாலும் அனைத்தையும் சூழ்ந்துக்கொள்ளக் கூடியவன்.

அல்லாஹ் குர்ஆனில் சூரத்துல் இஸ்ரா அறுபதாவது வசனத்தில் கூறுகிறான்.

وَاِذْ قُلْنَا لَـكَ اِنَّ رَبَّكَ اَحَاطَ بِالنَّاسِ‌
நிச்சயமாக உம்முடைய இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.

சூரத்துல் தலாக் 12 வசனத்தில்
لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمً
அல்லாஹ் நிச்சயமாக எல்லாவற்றிற்கும் ஆற்றலுள்ளவன் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் தன்னுடைய அறிவால் சூழ்ந்துள்ளான் என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

சூரத்துல் ஜின் 28 ஆவது வசனத்தில்
وَاَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَاَحْصٰى كُلَّ شَىْءٍ عَدَدًا
அவர்களிடமுள்ள அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்து அறிந்துள்ளான.

ஒரு மனிதன், அல்லாஹ் தன்னுடைய அறிவாலும் ஆற்றலும் வல்லமையும் சூழ்ந்து இருக்கிறான் என்பதை அறியும்போது, அல்லாஹ்வுடைய கட்டுப்பாட்டை விட்டு வெளியே போவதற்கு விரும்பமாட்டான். அல்லாஹ் எதை விரும்புகிறானோ அதைத்தான் நான் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவான்.

அல் முஹீத் என்ற சொல் அல்லாஹ் அவனுடைய அறிவால் நம்மை சூழ்ந்து இருக்கிறான். நான் செய்யக்கூடிய அனைத்தையும் அறியக்கூடியவனாக இருக்கிறான். எனவே நாம் அல்லாஹ்வுக்கு மாறு செய்யக்கூடாது என்கின்ற உணர்வை நமக்கு உணர்த்தக்கூடியதாக இருக்கிறது.

அல்லாஹ் தன்னுடைய வல்லமையால் நம்மை சூழ்ந்துள்ளான். அல்லாஹ்வுடைய கட்டுப்பாட்டிலிருந்து அவனுடைய பிடியிலிருந்து நாம் தப்பி ஓட முடியாது. எனவே அல்லாஹ்வுடைய அடிமையாக வாழ்வதை தவிர நமக்கு வேறு வழி இல்லை என்பதை இந்தப் பெயரை புரிந்து கொள்ளும்போது நாம் அறிந்து கொள்ளலாம்.

எனவே அல் முஹித் என்ற இந்த பெயரை நாம் உணர்ந்து, மனப்பாடம் செய்து அதன்படி நாம் செயல்பட அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு தவ்ஃபீக் செய்வானாக.

அல் முகீத் (المقيت)

அல் முகீத் என்ற பெயர் அல்குர்ஆனில் ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது.

சூரத்துன்னிசா 85 ஆவது வசனத்தில்,
وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا‏
அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

அல்முகீத் என்ற பெயருக்கு பல்வேறு அர்த்தங்களை அரபு மொழியில் காணமுடிகிறது.

அல்ஹஃபீழ்- பாதுகாப்பவன்
அல்முக்ததிர்- ஆற்றல்மிக்கவன், வல்லமை மிக்கவன்.
அஷ்ஷஹீத்- கண்காணிப்பவன்.
அல் காயிம் அலா குல்லி ஷய்யிம் பித்தத்பீர்- ஒவ்வொன்றையும் பராமரிக்கக் கூடியவன் , நிர்வகிக்க கூடியவன்.

இவ்வாறான பல அர்த்தங்கள் உடைய பெயராக தான் அல்முகீத் என்ற பெயர் காணப்படுகிறது.

அல்லாஹ்வை முகீத் என்று சொன்னால் அவன் தன்னுடைய அடியார்களுடைய விஷயத்தில் வல்லமை உடையவனாகவும் அவர்களை படைப்பதற்கு ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிற அதே நேரத்தில் அவர்களுடைய ரிஸ்க்கை பொறுப்பேற்றவனாகவும் இருக்கின்றான்.

அதனால் சில அறிஞர்கள் அல் முகீத் என்பதற்கு உணவு வழங்கக் கூடியவன் என்றும் மொழிப்பெயர்ப்பு செய்வார்கள்.

அல்லாஹ் மனிதனுடைய உணவை பொறுப்பேற்று இருக்கிறான்.

அல்குர்ஆனில் அல்லாஹ் கூறும் போது

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏ 
பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு, அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தே தவிர இல்லை, அவை தங்குமிடத்தையும், அவை ஒப்படைக்கப்ப(ட்)டு (சேரு)மிடத்தையும் அவன் (நன்கு) அறிகிறவன் (இவை யாவும் (லவ்ஹூல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 11:6)

பூமியில் உள்ள எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் ஊர்ந்து செல்லக்கூடிய எதுவாக இருந்தாலும் அதற்குரிய ரிஸ்க் அல்லாஹ்விடம் இல்லாமல் இல்லை என்று குறிப்பிடுகிறான்.

மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்கள், பறவைகள் ஏனைய ஜீவராசிகள் அவை அனைத்திற்கும் உரிய ரிஸ்க்கை படைத்து அதை உரியவர்களுக்கு கொண்டு சேர்க்கின்ற பொறுப்பு அல்லாஹ்விடம் இருக்கிறது என்பதை இந்த முகீத் என்ற வார்த்தை குறிப்பிடுகிறது.

முகீத் என்ற பெயரை சரியான பொருளோடு நாம் புரிந்து கொள்கின்ற நேரத்தில் ரிஸ்க்கு தொடர்பாக நம் வாழ்க்கையில் பதட்டமோ தடுமாற்றமோ ஏற்படாது. ஏனென்றால் நமது ரிஸ்கை அவன் தருவதாக வாக்களித்து இருக்கிறான் ஆகவே நமக்குரிய ரிஸ்க் நம்மை கண்டிப்பாக சேரும் என்ற நம்பிக்கையை இந்தப் பெயர் ஏற்படுத்தும்.

முகீத் என்பதற்கு உடலுக்கு ரிஸ்கை தருவது போல் உள்ளத்திற்கும் ரிஸ்கை தரக் கூடியவன் என்ற அர்த்தமும் இருக்கிறது.

உள்ளத்திற்கு உரிய ரிஸ்க் என்பது அறிவும் ஈமானும் ஆகும்.

அல்லாஹு தஆலா அல்முகீத் என்று நாம் அறிந்து, மனனம் செய்து, இந்தப் பெயர் சொல்லக்கூடிய பொருளை நாம் சரியாகப் புரிந்து கொள்கின்ற போது இந்த உலகத்தில் நிம்மதியாக சந்தோஷமாக வாழலாம். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கிறவர்களாகவும் மாறலாம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு தவ்பீக் செய்வானாக செய்வானாக.



அல் ஃபத்தா – மூடின கதவுகளை திறப்பவன்

அல்லாஹ் தான் அல் ஃபத்தா. ஓர் செயல் சாத்தியமற்றது என்றும் அல்லது மிகவும் கடினமானது என்றும் நாம் நினைக்கும் போது அல்-ஃபத்தாவை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அல்லாஹ் இது போன்ற சூழ்நிலைகளில் இந்த பெயரை கொண்டு நாம் அவனை  அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நம்மை அழைக்கிறான்.

 அல்-ஃபத்தா,   (ف-ت-ح) என்னும் மூன்று எழுத்துகளிலிருந்து வந்துள்ளது. சில சொற்கள் அதன் எதிர்மறை சொற்களை கொண்டு பொருள் அறியப்படுக்கிறது. அது போல ‘ஃபத்’ என்பதின் எதிர்மறை பொருளாவது ‘ ஏதேனும் மூடப்படுவதற்கு வேண்டும்’ என்பதாகும். எனவே ஃபத் என்றால் “திறப்பதற்கு” என பொருள்ப்படும்.

 அல்-கஜாலி அவர்கள் அல்-ஃபத்தாவை பற்றி நமக்கு தெரிவிப்பது என்னவெனில் : ” அவன் ஒருவனின் அக்கறையால் மூடின விஷயங்கள் அனைத்தும் திறக்கப்படும்”. உங்களை நான் ஓர் கதவை திறக்குமாறு கூறினால் அந்த கதவு மூடி இருக்க வேண்டும், அவ்வாறு அல்லாமல் அக்கதவு ஏற்கனவே திறந்து இருந்தால் என்னை நீங்கள் வேடிக்கையாக பார்ப்பீர்கள்.

 எனவே இதன் பொருள் என்ன? மூடின விஷயங்களை அல்லாஹ் அல்-ஃபத்தா திறப்பான். சாத்தியமற்றது என நாம் நினைக்கும் செயல்களையும், இது எவ்வாறு நடக்கும் என நம்மால் புரிந்துக்கொள்ள முடியாத விஷயங்களையும் அல்லாஹ் நடத்தி வைப்பான். ஓர் கதவை ஒருவர் வந்து திறக்க வேண்டும் என்றால் அக்கதவானது மூடியிருக்க வேண்டும்.

 இதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுவதாவது:

 ” மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன் “.
(அல் குர்ஆன் 35:2)
Previous Post Next Post