நபி (ஸல்) அவர்கள் தமது பள்ளியில் யூத, கிறிஸ்தவர்கள் வணங்க அனுமதித்தார்களா?

நஜ்ரானில் இருந்து வந்த ஒரு கிறிஸ்தவக் கூட்டம் மதீனாவுக்கு வந்து நபியவர்களிடம் இஸ்லாமிய மார்கத்தை தெரிந்து கொள்ள முற்பட்டவேலையில் ‘அவர்களது தொழுகையை மதீனா பள்ளிவாயலின் கிழக்கு பக்கமாக நிறைவேற்றியதாவும் அதற்கு நபியவர்கள் அனுமதி வழங்கியதாகவும்’ ஒரு செய்தியை வரலாற்று ஆசிரியரான இப்னு இஸ்ஹாக் என்பவர் பதிவு செய்துள்ளார்.

இச்செய்தியை முஹம்மது இப்னு ஜஃபர் இப்னு அஸ்ஸுபைர் என்பவர் அறிவிப்பதாக பதிவு செய்கின்றார்.

ஆனால் இந்த செய்தி ஏற்றுக் கொள்ளக் கூடிய தரத்தில் இல்லை! காரணம், இந்த முஹம்மது இப்னு ஜஃபர் தாபியீன்களிடம் இருந்து செய்திகளை அறிவிப்பவராவார். முழுமையான அறிவிப்பாளர் வரிசை இங்கு அறுபட்டுள்ளமையினால் இச்செய்தியை ஆதரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது.

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூட இந்த செய்தியை ஸாதுல் மஆத் என்ற தனது நூலில் பதிந்திருந்தாலும் ஸாதுல் மஆத் நூலை பகுப்பாய்வு செய்யும் அறிஞர்கள், ‘இந்த செய்தி அறிவிப்பாளர் வரிசை அறுபட்ட ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாகும்’ என குறிப்பிடுகின்றனர்.

அல்லாஹ் கூறுகின்றான்:
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.” (72:18)

இந்த செய்தியை சரியானதாக எடுத்து கொண்டாலும் இதனை வைத்து முஸ்லிம் அல்லாதவர்களை ‘பள்ளிவாயலுக்குள் அனுமதித்து அவர்களது வணக்க வழிபாடுகளை செய்வதற்கு’ உடந்தையாக இருக்க முடியாது.

‘தஃவா ரீதியாக அவர்களது வருகை இஸ்லாத்தை பற்றிய தெளிவை பெறுவதற்காக இருந்தால் மாத்திரம் அவர்களை பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கலாம்’ என நல்வழி நடந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இக்கருத்தை இமாம் முஹம்மது இப்னு இப்ராஹீம் ஆல ஷெய்க் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

தமிழாக்கம் : மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி
அழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா.
Previous Post Next Post