ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா?

ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா?

கேள்வி : ஒரு முஸ்லிம் பாம்பை வளர்ப்பது ஆகுமானதா?

பதில் : பாம்பு என்பது தீங்குவிளைவிக்கின்ற, நோவினைப்படுத்துகின்ற ஒரு விளங்காகும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதனை எங்கு கண்டாலும் கொன்றுவிடுமாரி ஏவினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள் : “தீங்கழைக்க க்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, நீர்க்காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை.” (ஆதாரம் : முஸ்லிம்-1198)

“பாம்புகளைக் கொல்லுங்கள்” (என்று) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மின்பர் மேடையில் இருந்து உரைநிகழ்த்துவதை நான் செவிமடுத்தேன் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
(எனவே) அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : “கண்ணில் படும் ஒவ்வொரு பாம்பையும் கொன்றுவருபவனாக இருந்தேன்” என்றார்கள். (ஆதாரம் : புஹாரி-3299, முஸ்லிம்-3233)

தொழுகையில் இருக்கின்றபோது பாம்பைக் கொல்லுமாரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : “பாம்பு , தேள் ஆகிய இரண்டையும் தொழுகையில் கொல்லுமாரு றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏவினார்கள்.” (ஆதாரம் : திர்மிதி-390) இது ஆதாரபூர்வமானது என இமாம் அல்பானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

எனவே, மார்க்கம் அவைகளை கொல்லுமாரு ஏவிஇருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிமிற்கு அதனைக்கொண்டு எவ்வாரு பயன்படுத்தமுடியும்?

இமாம் அஸ்zஸர்கஷீ கூறினார்கள் : “தீங்கிழைக்கக் கூடிய ஐந்து உயிரினங்களையும் கையகப்படுத்துவது தடுக்கப்பட்டதாகும்.” (துஹ்பதுல் முஹ்தாஜ் : 9/337) , (அல்மன்ஸுர் பில் கவாஇத் : 3/80)

இமாம் அஸ்ஸுயூதி கூறினார்கள் : “எந்த விடயங்கள் பயன்படுத்துவது தடுக்கப்பட்டதோ அந்த விடயங்களை எடுத்துக்கொள்வதும் தடுக்கப்பட்டதாகும். அந்த அடிப்படையிலேயே கேளிக்கை இயந்திரங்கள், தங்கம்-வெள்ளி பாத்திரங்கள், வேட்டைக்கு பயன்படுத்தப்படாத நாய் மற்றும் பன்றி போன்ற தீங்கிழைக்கக் கூடியவைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டதாகும்.” (அல்அஷ்பாஹ் வன் நழாஇர் : பக்கம்- 280)

இப்னு குதாமா கூறினார்கள் : “கொல்வதற்கு கடமையாக்கப்பட்டவைகளை பயன்படுத்துவது (ஹராம்) தடையாகும்.” (அல்முஃனீ : 2/11)
பாம்பை வாங்குவதையோ விற்பனைசெய்வதையோ தடைசெய்யப்பட்டது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

இமாம் அந்நவவீ கூறினார்கள் : “ (மிருகங்களில்) பயன்பெறமுடியாது என்கின்றவைகளை விற்பனை செய்வது ஆகுமானதல்ல. வண்டு, தேள், பாம்பு, எலி, எறும்பு போன்றவைகளை உதாரணமாகக் கூறலாம்.” (ரௌழதுத் தாலிபீன் : 3/351)

“எந்தவித பயனுமில்லாத பூச்சிக்களை விற்பனைசெய்வது ஆகுமானதல்ல என்பதில் அறிஞர்கள் உடன்படுகின்றார்கள். ஆதலால் விற்பனை செய்யப்படக்கூடிய பொருளில் பயன்பாடு இருக்கவேண்டும் என்ற ஒரு நிபந்தனை இடப்படுகின்றது. எனவே, எலிகளையோ, பாம்புகளையோ, தேள்களையோ, வண்டுகளையோ மற்றும் எறும்புகளையோ விற்பனை செய்வது ஆகுமானதல்ல.” (அல்மவ்ஸுஆ அல்பிக்ஹிய்யா : 17/280)

மேலும், பாம்பை கொலை செய்யுமாரு மார்க்க ஏவுதல்களில் வந்துள்ள பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் ; நச்சுத்தன்மை உள்ள பாம்போ அல்லது நச்சுத்தன்மையற்ற பாம்போ எந்த வகையாக இருந்தாலும் பயன்படுத்துவது (ஹராம்) தடைசெய்யப்பட்டதாகும்.
மேலும், எந்தவித பிரயோஜனமுமற்ற இப்படியான பாம்புகளை பயிற்சி கொடுப்பது என்பது ஒரு முஸ்லிமைப் பொருத்தமட்டில் எந்தவித தேவையற்ற காரியமாகும். அத்துடன் இப்படியான மிருகங்களை வளர்ப்பதில் ஆபத்துக்களே அடங்கியுள்ளன.

யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.

அரபியில் : https://islamqa.info/ar/answers/132566/
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளன் : தபூக் அழைப்பு நிலையம் – சவுதி அரேபியா.

Previous Post Next Post