அவசியம் திருத்தப்பட வேண்டிய ஒரு பிழையான வரலாற்றுச் சம்பவம்


சம்பவம் இதுதான்: “யூதன் ஒருவன் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்களுக்கு அண்டை வீட்டானாக இருந்தான். அவன் ஒவ்வொரு நாளும் நபியவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். நபியின் வீட்டு வாசலுக்கு முன்னால் அவன் குப்பையைக் கொட்டுகின்றபோது,  அவர்கள் பொறுமையாக இருந்து அதை அகற்றி விடுவார்கள்”. 

இதை ஆதாரபூர்வமான சம்பவம் என்றும், ஹதீஸ் துறை அறிஞர்களான புகாரி - முஸ்லிம் ஆகியோர் தமது ஹதீஸ் நூல்களில் இதைப் பதிவு செய்திருக்கின்றார்கள் என்றும் மக்களில் சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கும் அளவுக்கு இச்சம்பவம் பிரபல்யமடைந்திருக்கின்றது.

இது, ஆதாரபூர்வமான சம்பவம் கிடையாது. காரணம், (இச்சம்பவம் மக்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. ஆனால்) மக்காவில் யூதர்கள் இருக்கவில்லை; அவர்கள் இருந்தது மதீனாவில்தான்!. மதீனாவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக இருந்தால், அந்த யூதன் நபியவர்களுக்கு எப்படி தொந்தரவு கொடுத்திருக்க முடியும்? நபித்தோழர்கள் நிறையப்பேர் இருந்தார்கள்; அவர்களிடம் ரோசம் இருந்தது; அந்த யூதனின் செயலை தடுத்து நிறுத்தத் தேவையான பலமும் அவர்களிடம் காணப்பட்டது. இப்படியான நிலையில்,  பின்னர் அவர்களெல்லாம் இதைத் தடுக்காது அமைதியாக இருந்தார்கள்; இந்தக் குப்பையை அகற்றுவதற்கு ஒவ்வொரு நாளும் நபியவர்கள் நெருக்கடியைச் சந்தித்து வந்தார்கள் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

யூதனோடு உள்ள நபியவர்களின் தொடர்பு குறித்து புகாரி கிரந்தத்தில் வந்திருக்கும் ஆதாரபூர்வமான செய்தி இதுதான்: “நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபியவர்கள்  அவனிடம் சென்று,  அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, 'இஸ்லாதை ஏற்றுக் கொள்!' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், '(மகனே!) காசிம் என்ற பிள்ளையின் தந்தையான நபியவர்களின் கூற்றுக்கு நீ கட்டுப்படு!' என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், 'இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்” என அனஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(நூல்: ஸஹீஹுல்  புகாரி, ஹதீஸ் இலக்கம் - 1356)

இமாம் அஹ்மத் அவர்களின் அறிவிப்பில், “நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்களுக்கு தொழுகைக்காக 'உழூ' (அங்க சுத்தம்) செய்யத் தேவையான நீரைக் கொண்டுபோய் வைக்கின்ற வேலையையும், அவருடைய பாதணியை எடுத்துக் கொடுக்கின்ற வேலையையும் செய்து வந்த யூதச் சிறுவன் ஒருவன் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டான். அப்போது, அவனிடம் நபியவர்கள் நோய் விசாரிக்க வந்தார்கள்.... ” என இடம்பெற்றுள்ளது.

எனவே, யூதன் ஒருவன் நபிகள் நாயகம்  (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீது குப்பை கொட்டி வந்ததாகச்  சொல்லப்படுகின்ற இந்தப் பொய் குறித்து எச்சரிக்கை செய்பவருக்கு சிறந்த கூலியை அல்லாஹ் வழங்குவானாக!

[ “அல்லஜ்னா அத்தாயிமா லில்bபுஹூசில் இல்மிய்யா வல்இfப்தா” என்ற 'அறிவாராய்ச்சிக்கும், மார்க்கத் தீர்ப்புக்குமான அமைப்பு' - சஊதி அரேபியா, மார்க்கத் தீர்ப்பு இலக்கம்: 7066 )


           *« قصة اليهودي الذي كان جارا للنّبيّ صلّى الله عليه وسلم؛ وكان يؤذيه كل يوم ويلقي أمام بابه القمامة والنّبيّ صلّى الله عليه وسلم صابرا ويزيلها !! »*

            فمن شهرتها يظنّ بعض النّاس أنها صحيحة، وأنه رواها البخاري ومسلم. 

            فهذه قصة لا تصح! لأنه ليس بمكة يهود وإنّما كانوا بالمدينة. لو كانت بالمدينة فكيف يؤذي هذا اليهودي الرّسول صلّى الله عليه وسلم والصحابة متوافرون، وعندهم غيرة، ولهم قوّة في منع هذا اليهودي ثم يسكتون ويضطرّ رسول الله كل يوم لإزالة هذه القمامة؟

            والصحيح ما رواه البخاري في صحيحه عن أنس رضي الله عنه قال: *{ كان غلام يهودي يخدم النّبي صلّى الله عليه وسلم فمرض فأتاه النّبي صلّى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له: « أسلم »، فنظر إلى أبيه وهو عنده فقال له: « أطع أبا القاسم صلّى الله عليه وسلم » فأسلم، فخرج النّبي صلّى الله عليه وسلم وهو يقول: « الحمد لله الذي أنقذه من النّار » }*

           وفي رواية الإمام أحمد: *« أن غلاما يهوديا كان يضع للنّبيّ صلّى الله عليه وسلم وضوءه ويناوله نعليه، فمرض، فأتاه النّبي صلّى الله عليه وسلم.... »*.

           جزى الله خيرا من حذّر من الكذب على نبيّنا صلّى الله عليه وسلم...

*[ المصدر:* اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء - الفتوى رقم : ٧٠٦٦ ]


               தமிழில்

                  அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post