சாலிம் இப்னு அப்துல்லாஹ் (ரஹி)

சிறப்புகள்: 

ஏழு பிரபல்யமான  தாபியீன்களில் ஒருவர்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி )அவர்களின் மகன். 

இவரது பாட்டனார் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள்.

ஸயீத்  பின் முஸய்யிப் (ரஹி ) அவர்களிடம் இவர்களது தந்தை அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நான் என் மகனுக்கு  சாலிம் என்று பெயர் வைத்ததன் நோக்கம்   உதைபா(ரலி) அவர்களின் அடிமை சாலிம் (ரலி) அவர்களின் பெயரைத்தான் வைத்துள்ளேன். ஏனென்றால் அவர்கள் குர்ஆனை  கற்றுத் தேர்ந்தவராகவும், அறிஞராகவும் இருந்துள்ளார்கள் என்று கூறினார்கள் .

நம் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் பொழுது இது போன்ற அறிஞர்களின் பெயர்கள் மற்றும் சஹாபாக்களை போன்று வரவேண்டும் என்று சஹாபாக்களின் பெயர்கள் மற்றும் அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர்களை வைக்கவேண்டும்.


இவர்கள் சந்தித்த சஹாபாக்கள்:

அபுல்  அன்சாரி (ரலி), அபூஹுரைரா ரலி போன்ற சஹாபாக்களிடம் கல்விகற்று அமல்படுத்தினார்கள்.

இறையச்சம் கூடிய நற்குணம் கொண்டவராகவும், இபாதத்தைப் பேணக் கூடியவர்களாகவும், ஹதீஸ், ஃபிக்ஹ் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், உலகப் பற்றற்ற தன்மை உடையவராகவும் வாழ்ந்தார்கள் .

மிகவும் ஏழ்மையான வாழ்ந்தார்கள் என்பதற்கு உதாரணமாக  மிஸ்ரு நாட்டிலிருந்து சில நபர்கள் சாலிம் (ரஹி ) அவர்களை சந்திக்க வருகிறார்கள். அப்பொழுது மிஸ்ரு  நாட்டினர் சாலிம் அவர்கள் கம்பீரமாக உயர்ந்த ஆடைகளை கொண்டவராக இருப்பார்கள் என்று கற்பனையாக நினைத்து கொண்டு வருகிறார்கள்.

ஆனால் சாலிம்(ரஹி)  அவர்கள் வாசலில் மிக எளிமையாக நின்று கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். இதன் மூலம் இவர்களின் எளிமையை அறியமுடிகிறது.

மற்றுமொரு சம்பவம் சுலைமான் இப்னு அப்துல்லாஹ் (ரஹி ) அவர்கள் கலீபாவாக அவர்களை சந்தித்து உலக தேவை ஏதேனும் இருக்கிறதா என்று கேட்க வருகிறார்கள். அப்பொழுது அவர்கள் கஃபாவில் குர்ஆன் ஓதி கொண்டு , அழுது கொண்டிருக்கிறார்கள். சுலைமான் ( ரஹி ) அவர்கள் உங்களுக்கு உலக தேவை ஏதேனும் இருக்கிறதா என்று கேட்க அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் வீட்டின் முன்னாடி உட்கார்ந்து கொண்டு அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்பதற்கு வெட்கப்படுகிறேன் என்று கூறினார்கள்.

சுலைமான்( ரஹி)  அவர்கள் சற்று நேரம் கழித்து அவர்கள் கஃபாவை விட்டு வெளியில் வந்தவுடன் மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவர்கள் இந்த உலகத்தின் சொந்தக்காரனாகிய அல்லாஹ்விடமே நான் இந்த உலகத் தேவை எதையும் கேட்டதில்லை என்று கூறினார்கள்.

இதிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள் என்ன வென்றால் உலகத் தேவைக்காக அல்லாஹ்விடம் கேட்கலாம் ஆனால் அவர்கள் கேட்டதில்லை மற்றும் அவர்களின் எளிமையும் , உலகப் பற்றற்ற தன்மையையும் தான் இதில் நாம் உணர முடியும் 

உதாரணமாக நம் கணவன்மார்களுக்கு வேலை இழந்து விட்டார்கள் என்றால் எவ்வளவு உடைந்து போகின்றோம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழந்தவர்களாக இருக்கின்றோம். ரிஸ்க் கொடுப்பவன் அல்லாஹ் எனவே அல்லாஹ் மற்றொரு வேலையை கொடுப்பான் என்ற தவக்குல் வைக்க வேண்டும்.

சாலிம்(ரஹி) அவர்களைப் போல் நாமும் நம் வாழ்க்கையில் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து மார்க்கத்தைப் பேணி வாழ வேண்டும்.

Previous Post Next Post