- ஷேக் சுலைமான் அர்ருஹைலீ (ஹஃபிழஹுல்லாஹ்)-
1- உணர்ச்சிகளை பின்பற்றாமல் மார்க்கத்திற்கு முதலிடம் தர வேண்டும்.
2- செய்திகளைப் பரப்புவதற்கு முன் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவசரப் படாதீர்கள்.
3- அறியாமையை எச்சரிக்கை செய்கிறேன். கல்வியைத் தேடுவதில் ஆர்வம் காட்டுங்கள்.
4- கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது பெரிய (உலமாக்களிடம்) செல்லுங்கள். சிறியவர்களிடம் செல்வதை எச்சரிக்கை செய்கிறேன்.
5- புதுமைகளில் எச்சரிக்கையாக இருங்கள். சுன்னாவைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
6- ஃபித்னாக்களை நெருங்காமல் தூரமாகுங்கள்.
7- ஃபித்னாக்களை கிளப்புவதை விட தடுப்பது இலகுவானது
8- ஃபத்வாக்களை எடுக்கும் போது மனோ இச்சையைத் தவிர்த்து ஆதாரபூர்வமான ஃபத்வாவை எடுங்கள்.
9- நீங்கள் பாமரானாக இருந்தால் உங்கள் சுவைக்கு ஏற்ப ஃபத்வாவைஎடுக்காமல் நன்கு அறிந்த ஒருவரைப் பின்பற்றுங்கள்.
10- தடுமாற்றத்தை எச்சரிக்கை செய்கிறேன். குர்ஆன் சுன்னா ஒளியில் மார்க்கத்தில் உறுதியாக இருங்கள்.
11- உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆதாரங்களை வைக்காதீர்கள். ஆதாரங்களுக்கு ஏற்ப உங்கள் விருப்பங்களை மாற்றுங்கள்.
12- பிரிவினையைப் பயந்து கொள்ளுங்கள். ஒற்றுமையாக இருங்கள்.
13- அநீதி, தீமை, தண்டனை என்பவற்றில் எச்சரிக்கையாக இருங்கள். நீதியையும், நன்மையையும் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். அதற்குரியவர்களுடனும் சேர்ந்திருக்கும்.
14- ஃபித்னாக்களை தேடித்திரியாதீர்கள். மாறாக அவற்றிலிருந்து பாதுகாப்பு தேடுங்கள்.
15- ஃபித்னாக்களின் அலங்காரத்தைப் பார்த்து ஏமாந்து விட வேண்டாம். மாறாக அதன் யதார்த்தை ஈமானிய கண் கொண்டு பாருங்கள்.
16- எல்லை மீறாதீர்கள். நடுநிலை பேசுங்கள்.
17- நோவினை செய்யாதீர்கள். உரிமைகளை உரியவர்களுக்கு கொடுத்து விடுங்கள்.
18. குருகிய பார்வையை விட்டு சத்தியத்தை அதன் அடிப்படையில் அறிந்து கொள்ளுங்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்- கிதாபுல் ஃபிதன் விளக்கவுரை. கேசட் 24)
தமிழில்: அபூ அதீ