ஸலஃப்களை விமர்சனம் செய்வோர் பலர்

ஸலஃப் விமர்ச நோய் யூதன் இப்னு ஸபஃ தொடக்கி வைத்ததாகும்.

அதனால் ஸலஃபுகள் பற்றிய விமர்சனம் என்பது ஷீஆ, கவாரிஜிய கொள்கோயோடும் வழிகெட்ட தீய பித்ஆ பிரிவுகளோடும் அவர்களின் வாடையோடும் கலந்ததாகும்.

ஸலஃப்கள் என்போர்?
---
 ஸலஃப் முன்னோர் என்ற பொருள் பட வலம் வரும் இந்தப் பெயர், இறைத் தூதரோடு இணைத்து நபித்தோழர்களையும் அவர்களின் வழி நடப்போரையும் குறிக்கப் பயன்படும் சொல்லாக இருப்பது போல்; நபித்தோழர்கள், அவர்களின் வழி வந்த மூன்று நூற்றாண்டு கால மக்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

ஸலஃப் வார்த்தைப் பிரயோகம்
--
குர்ஆன் சுன்னாவைப் பின் பற்றும் ஒருவர் தான் ஸலஃபி, அல்லது ஸலஃப் வழியில் செல்பவர் எனக் கூறினால் அவர் குர்ஆனிய வழியையும் இறைத் தூதரையும் புறக்கணித்துச் செல்கின்றார் என்பது பொருள் கிடையாது.

மாறாக பிற்கால வழி கெட்ட பித்ஆ பிரிவுகளின் அனைத்துவிதமான வழிகேடுகளை விட்டும் விலகி, ஸஹாபாக்கள், ஆரம்ப கால அறிஞர்கள் சென்ற நல்வழியைத் தேர்வு செய்துள்ளார் என்பது பொருளாகும்.

இதற்கு பின் வரும் ஹதீஸைக் கவனிக்கவும்.
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தனது மரண வேளை நெருங்கியதை அறிந்த போது   தனது அன்பு மகள் ஃபாத்திமாவிடம்   
"وإنّك أوّل أهل بيتي لحوقًا بي، ونعم السّلف أنا لك» "
"எனது குடும்பத்தில் முதலாவதாக நீதான்  
என்னோடு சேர்ந்து கொள்பவள்"  "ஸலஃப்" "முன்னோரில் உனக்கு நானே சிறந்தவர்" எனக் கூறிய போது அன்னை ஃபாத்திமா அழுதார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்) .

மேற்படி  செய்தியில் "முன்னோரில் உனக்கு நானே சிறந்தவர்" என்ற வாசகத்தில் "ஸலஃப்" என இடம் பெறுவதைக் கவனத்தில் கொண்டு இறைத்தூதரின் வழிநடப்போர் ஸலஃபுகள் என்ற பொருளை சம்பந்தப்பட்டவர்கள் முன்வைக்கின்றனர். இதில் தவறு ஏதும் தெரியவில்லை.
 
ஸலஃபுகள் எனப்படுவோர் , ஸஹாபாக்கள், அன்ஸார், முஹாஜிர்களில் இஸ்லாத்தில் முந்தி இணைந்தவர்கள் என்றும் அர்த்தப்படுத்துவோர்.காலத்தால் முந்திய அவர்கள் :

இறைத் தூதரோடு கூடவே வாழ்ந்தவர்கள்.

மார்க்க சான்றுகளை மிகத் தெளிவாக அணுகத் தெரிந்தவர்கள்,

மார்க்க விளக்கத்தில் நம்மை விட சிறந்தவர்கள், 

அரபி மொழிப் புலமை பெற்றவர்கள் ,

அல்லாஹ்வால் புகழ்ந்துரைக்கப்பட்ட 
நன்மக்கள் .

மார்க்க விவகாரங்களில் உறுதியானவர்கள், பேணுதல், இறையச்சமுள்ளவர்கள் போன்ற பல  காரணங்களை முன்வைத்து அவர்களை மார்க்க மேதைகளாகவும் முன்மாதிரிகளாகவும் கொள்கின்றனர்.

இதில் எந்த தவறுமில்லை. ஏனெனில்
(1): நபித்தோழர்களிடம் கல்வி பயின்ற மாணவர்களான தாபியீன்கள் மற்றும் அவர்களின் மாணவர்களிடம் நவீன கால கொள்கைக் குழப்பங்கள் இருக்கவில்லை.
அவர்களின் நூல்களில் அவ்வாறான அணுகு முறை காணப்படவே செய்கின்றன. 
இதற்கு உதாரணமாக முவத்தா மாலிக் நூலையும், புகாரியையும் எடுத்துக் கொள்ளலாம்.

(2) சிறந்த நூற்றாண்டு கால அறிஞர்களால் சமுதாயம் பல்வேறு துருவங்களாக மாற்றப்பட வில்லை, அவர்கள் நபித்தோழர்களை ஆதாரமாகக் காட்டி அவர்கள் காலத்தில் இது இப்படித்தான் புரிந்தனர் போன்ற கருத்துக்களை கூறாமலும் இல்லை.
அதனால் அவர்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள் என்பது பொருள் கொள்ள முடியாது. 

(3) தமிழகத்தை சீரழித்தவர்களில் தவ்ஹீத் பெயரில் இயங்கும் பல அமைப்புக்களை அடையாளப்படுத்த முடியும். அவற்றில், பீ.ஜே. முதன்மை மனிதர் என்பது அவரது கொள்கைக் குழப்பமும்  ஒன்றாகும்.

 பீ.ஜே. அகீதாக் கொள்கையில் மாத்திமின்றி ஃபிக்ஹ் துறையிலும் உறுதியற்றவராக இருந்து வந்தவர் என்பதற்கு அவரது கல்வித் தேடலில் காணப்படும் பாரிய குறைபாடுகளே காரணம்.

அதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகளைக் கூறலாம்.

(1)  இலங்கையில் உமர் அலி என்பவரோடு பைஅத் பற்றி விவாதித்த போது ஃபாத்திமா (ரழி) கலீஃபா அபுபக்கருக்கு பைஅத் செய்யாமலே மரணித்ததால் அவர்கள் நரகவாதியா?
எனக் கேட்டு ஒரு ஸஹாபிப் பெண்ணின் நிலைப்பாட்டை தனது விவாத வெற்றிக்கான ஆதாரமாக அப்போது முன்வைத்தார். அதற்கு  பிற்பட்ட காலங்களில் ஸஹாபாக்களை விட சிறப்பாக புரியும் சக்தி உள்ளவர்கள் நாமும் தன்னை விலக்கிய ஜமாத்தும் என்றார்.

தாம் மாத்திரமே உலக அரங்கில் ஸஹாபாக்களைப் பின்பற்றாத, உலகில் சிறந்த ஜமாத் எனக் கூறி வந்த பீ.ஜே. தான் அதிலிருந்து விலக்கப்பட்ட கையோடு உலகில் சிறந்த தனது சீடர்டகளை வழிகேடர்கள் எனக் கூறி, அந்தர் பல்டி அடித்தார்.

(02) இதே அண்ணன் தனது ஜனாஸா நூலில் மரணித்தவர்களை முத்தமிடலாம் என்பதற்கு அபூபக்கர்ஸித்தீக் (ரழி) அவர்கள் இறைத் தூதரை முத்தமிட்டதை ஆதாரமாகக் கூறி இருந்தார்.
அது ஒரு ஸஹாபியின் செயல் என்பதை மறந்தே எழுதியுள்ளார்.

(3) இவரே பில்லி சூனியம் தலைப்பில் எழுதிய நூலில் சூனியம் உண்டு. அல்லாஹ் நாடினால் பாதிப்பு வரும் என எழுதி இருந்தார்.
பின்னர், சூனியத்தை நம்புபவர் முஷ்ரிக் எனக் கூறி ஷிர்க் செய்யாதவர்களை முஷ்ரிக்கள் என்றார். 
அதாவது நூலில் மறைமுக முஷ்ரிக்காகியதை, மறுத்து ஞானம் கிடைத்து முஃமினாகினார்.

இவ்வாறான தடுமாற்றமான போக்கு ஸலஃபுகளின் கல்விக் கொள்கையில் கிடையாது என்பதை உணர்ந்தவர்களே ஸலஃபுகள் வழி சரியானதும், நேர்த்தியானதும் எனப் போதிக்கின்றனர்.

ஸலஃபுகளிடம் காணப்படுவதாக கூறப்படுகின்ற ஆதாரமாக எடுக்கத் தேவையில்லாத ஃபிக்ஹ் சார்ந்த சில கருத்துக்களை மலைமாதிரித் தவறாகச் சித்திரிக்கும் மாற்றும் போக்கு இந்த வழிகேடர்கள் தமது வழிகாட்டை மறைக்க பாதிக்கின்ற மிகப் பெரும் யுக்தியாகும்.

ஆகவே இவ்வாறான நேரங்களில்  பின்னோர்களான நாம் இவர்களைப் போன்ற தீய பித்ஆ சிந்தனைப் பிரிவுகளின் மார்க்கத்திற்கு நேர்முரணான கருத்துக்களை மிகக் கவனமாக அணுக வேண்டும்.

உதாரணமாக பீ.ஜே. அர்ஷ் பற்றிய தனது விளக்கத்தில் அர்ஷ், குர்ஸி ஆகிய இரண்டும் ஒன்றுதான் என  விளக்கம் தந்திருந்தார்.  அது அவரது உச்ச கட்ட அகீதா அறிவின்மை என்பதை விளங்காத அப்போதைய பக்கதர்களும்  தற்கால அவரது முகல்லிதுகளும் அந்த மாபெரும்  அகீதாப் பிழையச் சரி காண அவர்களின் எல்லையற்ற அறியாமைதான் துணை நின்றது . 

அதனை நாம் ஸலஃபுகளின் அறிவுத்தராசில் போட்டு நிறுத்த போது அர்ஷ் வேறு குர்ஸி வேறு என்பதுடன், பீ.ஜே. வின் கருத்து வெறும் பதர் என்பது புலனாகியது.

அது மாத்திரமல்ல சாதாரண மாணவனுக்கும் விளங்கும்
لحم الخنزير
பன்றியின் மாமிசமும் அதே கதைதான். அதனால்தானே பன்றித் தோல் வியாபாரம் பற்றி onlinepj வில் சட்டங்கள் பகுதியில் எழுதி இருந்தார் அண்ணன்.

தம்பிகளுக்கு  இது என்றும் புரிவதில்லை.  காரணம் தமது தலைவன் தவறாகச்சொல்ல மாட்டார் என்ற கண்மூடித்தனமே! 

இப்போது நாம் இந்த சிக்கல்களை எதிர் கொள்கின்ற போது சரி யார் பக்கம் என்பதை முடிவு செய்ய பின்வரும் வரிகள் துணை செய்கின்றன. 
"أن مذهب السلف أعلم وأحكم وأسلم."
ஸலஃபுகளின் கருத்தியல் மற்றும் நடைப் போக்கானது மிகவும் அறிவுபூர்வமானது, மிக நேர்த்தியானது, மிக மிக ஏற்றுக் கொள்ளத்தக்கது" என்பதாக ஸலஃபுகளின் அறிவு தொடர்பான  ஆணித்தரமான இந்த அடிப்படையில் நின்று கருத்துக் குழப்பத்தை தீர்த்துக் கொள்கின்றோம்.

இவ்வாறான சிக்கல்களை ஷரீஆ துறை மாணவர்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காகவே மாணவர்கள் எப்படி? எந்த அடிப்படையில் ஷரீஆ கல்வியைத் தேட வேண்டும் என்றெல்லாம் அறிஞர்கள் வழிகாட்டி உள்ளனர்.
ஆகவே குழப்பங்களை உருவாக்கி, மார்க்க அடிப்படைகளைச் சிதைப்போரை தமிழக முஸ்லிம்கள் அடையாளம் காண வேண்டும்.
குறிப்பாக குர்ஆன் சுன்னா வழி நடப்போர் முத்திரையின் மீது நடப்போராக செயல்பட வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் மார்க்கத்தில் நலவை நாடுவானாக ! 

-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
Previous Post Next Post