இமாம் ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்றுகள்...

'என்னுடைய சொல்லுக்கு மாற்றமாக நீங்கள் ஒரு நபியவர்கள் வழிகாட்டுதலை பெற்றுக் கொண்டால் நீங்கள் நபியவர்களின் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய சொல்லை விட்டு விடுங்கள். நிச்சயமாக நான் நபியுடைய வழிகாட்டுதலைக் கொண்டு கூறுபவன்தான்.
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57)

என்னுடைய வாழ்விலும், என்னுடைய மரணத்திற்கு பின்பும் எந்த மார்க்கச் சட்டங்களிலெல்லாம் அதிலே நான் நபி வழிக்கு மாற்றமாக பேசியுள்ளேனோ அத்தகைய  மார்க்கச் சட்டத்தை விட்டும் நான் திரும்பக் கூடியவன்தான்.
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57)

நான் கூறிய ஒவ்வொன்றும் நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸிற்கு மாற்றமாக இருக்குமென்றால் நபியவர்களுடைய ஹதீஸதான் ஏற்றமானதாகும். என்னை கண்மூடிப் பின்பற்றாதீர்கள்.
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58)

நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு ஹதீஸும்தான் என்னுடைய கருத்தாகுதம். 
அதை நீங்கள் என்னிடமிருந்து கேட்கவில்லையென்றாலும் சரியே
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58)

இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : நபியவர்கள் வழிமுறை கிடைக்கும் போது அதைவிட்டும் தூரமாகுபவர் யாரும் இல்லை. நான் நபியவர்களின் கூற்றுக்கு மாற்றமாக ஏதாவது ஒரு கருத்தைக் கூறினால் அல்லது ஏதாவது ஒரு அடிப்படையை அமைத்தால் நபியவர்கள் கூறியதுதான் சட்டமாகும். 
அதுதான் என்னுடைய கருத்துமாகும். 
இதனை அவர்கள் திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருந்தார்கள்.
(தாரீஹ் திமிஷ்க் பாகம் : 51 பக்கம் : 389)

நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு ஹதீஸும் அதுதான் என்னுடைய கருத்தாகும். அதை நீங்கள் என்னிடமிருந்து செவியேற்காவிட்டாலும் சரியே
(தாரீஹ் திமிஷ்க் பாகம் : 51 பக்கம் : 389)

ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள்:
 '' நான் இந்த புத்தகங்களை தொகுத்துள்ளேன். 
நான் ஆய்வு செய்வதில் குறைவைக்கவில்லை. 
என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக் கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ் அல்லாதவர்களிமிருந்து வருமென்றால் அதிலே அவர்கள் அதிகமான முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள் '' என்று தன் திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்த புத்தகங்களிலே திருமறைக்குஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பிவிட்டேன். (அதாவது என்னுடைய கருத்து தவறானது. நபிவழிதான் சரியானது என்பதாகும்).
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 60)

யாருக்கு நபியவர்களின் சுன்னத் தெளிவாகிறதோ அவர் மக்களில் யாருடைய சொல்லிற்காகவும் அதனை விடுவது அவருக்கு தகுதியானதில்லை என்ற கருத்தில் மக்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.
(இஃலாமுல் முவக்கிஈன் பாகம் : 2 பக்கம் : 325)

இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : ஹதீஸைப் பற்றியும் அறிவிப்பாளர்களைப் பற்றியும் என்னை விட நீங்கள்தான் அறிந்தவர்கள். ஒரு ஸஹீஹான ஹதீஸை கூஃபா வாசி, பஸராவாசி, ஷாம்வாசி யாரிடமிருந்து எனக்கு நீங்கள் அறியச்செய்தாலும் அது ஸஹீஹாக இருக்குமென்றால் நான் அதன் பக்கம் சென்றுவிடுவேன்.
(அல்மத்ஹல் பாகம் : 1 பக்கம் : 172) 

".என்னுடைய வாழ்நாளிலும் என்னுடைய மரணத்திற்குப் பிறகும் எந்த ஒரு மார்க்கச்சட்டதிலும் நான்கூறியதற்கு மாற்றமாக ஹதீஸ்கலை வல்லுநர்களிடம் ஸஹீஹான ஒரு செய்தி நபியவர்களிடமிருந்து வருமென்றால் நான் என்னுடைய கருத்தை விட்டும் திரும்பக்கூடியவன் என இமாம் ஷாஃபி கூறியுள்ளார்கள்.
 (இஃலாமுல் முவக்கிஈன் பாகம் 2 பக்கம் : 328).

இந்த அளவிற்கு தெள்ளத்தெளிவாக குர்ஆன் ஹதீஸை பின்பற்றச் சொல்லி மத்ஹபு இமாம்கள் கூறிய கருத்துக்களையெல்லாம் இருட்டடிப்புச் செய்துவிட்டுத்தான் மத்ஹபு இமாம்கள் சொன்னது மார்க்கத்திற்கு முரணாக இருந்தாலும், குர் ஆன் ஹதீஸிற்கு எதிரானதாக இருந்தாலும் அவற்றை ஏற்க வேண்டும். 

குர்ஆன் ஹதீஸில் உள்ள போதனைகளை பின்பற்றக்கூடாது என்று போலி உலமாக்களால் மூளைச் சலவை செய்யப்படுகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் .
Previous Post Next Post