இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்,” எனது உம்மத் எழுபத்தி மூன்று பிரிவுகளாக பிரியும், அதில் ஒன்று மட்டுமே சுவனம் செல்லும். மீதி எழுபத்திரெண்டு கூட்டமும் நரகிற்கு செல்லும்.வெற்றி பெரும் அந்த ஒரு கூட்டம், இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பவர்கள்” -
நூல் -அபூ தாவூத்.திர்மிதீ.
தரம்- ஸஹீஹ் .
நீங்கள் எவ்வாறு நபியவர்கள் எச்சரித்த வழிகேடான (72) பிரிவுகளில் இருந்து தவிர்ந்து, எஞ்சியிருக்கும் பிரிவினரில் இருக்கிறீர்கள்?
இமாம் அப்துல்லாஹ் பின் அல்-முபாரக் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: "எழுபத்தி இரண்டு பிரிவுகளின் தோற்றம்: நான்கு வழி தவறிய கொள்கையிலிருந்திருக்கிறது, இந்த நான்கிலிருந்துதான் எழுபத்திரண்டு பிரிவுகள் தோன்றின.
1 கதரியா
2 முர்ஜிஆ
3 ஷிஆக்கள்
4 கவாரிஜுகள்
எவர் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோருக்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மற்ற தோழர்களை விட முன்னுரிமை அளித்து, மற்ற நபித்தோழர்கள் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் பேசாமல் இருந்து அவர்களுக்காகப் துஆ செய்தால் அவர் முற்றிலும் ஷீயிஸத்தை விட்டு வெளியேறி விடுகிறாரே அவரும்....
யார் ஈமான் (இறைநம்பிக்கை என்பது) சொல்லும்,செயலுமாகும், அது (அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதனால்)அதிகரிக்கிறது மற்றும் (அவனுக்கு மாறுபடுவதனால்)குறைகிறது; என்று நம்புகிறாரோ அவர் வழிகெட்ட முர்ஜிஆ கொள்கையில் இருந்து முற்றிலும் வெளியேறி விடுகிறாரே அவரும்...
யார் ஒவ்வொரு நீதமான மற்றும் நீதமற்ற அமீருக்குப் பின்னால் தொழுகிறாரோ, மேலும் ஜிஹாத் ஒவ்வொரு கலீஃபாவுடன் இணைந்து (இஸ்லாமிய ஷரீஆ ஆட்சியின் அமீருடன்) எதிரிகளை எதிர்கொள்வாரோ, மேலும் சுல்தானுக்கு(ஷரீஆ அரசுக்கு) எதிராக வாளால் கிளர்ச்சி செய்யாமல் இருந்து, மார்க்கத்துக்கு முரணாக நடக்கும் பொழுது அவர்கள் நீதியுள்ளவர்களாக இருக்க துஆ & உபதேசம் செய்தால்; அவர் கவாரிஜுகளின் கொள்களிலிருந்து முற்றிலும் வெளியேறி விடுகிறாரோ அவரும்...
விதிகளும் , நன்மைகளும் தீமைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவை என்றும் அல்லாஹ் ,தான் விரும்பியவர்களை நேரான வழியில் நடத்துகிறான், மேலும் அவன் விரும்பியவர்களை வழி கெடச் செய்கிறான்; என்று எவர் நம்பிகிறாரோ அவர் வழிகெட்ட கதரிய்யா கொள்கையிலிருந்து முற்றிலும் வெளியேறி விடுகிறாரோ அவரும்......
(அவர் அஹ்லுஸ் ஸுன்னாவைச் சார்ந்தவராவார்)
[இமாம் அல்-பர்பஹாரியின் ஷரஹுஸ் ஸுன்னா, ரஹிமஹுல்லாஹ் ].
ஸஹ்ல் பின் அப்துல்லாஹ்விடம் கூறப்பட்டது: “ஒரு மனிதன் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இருப்பதாக எவ்வாறு அறிவார்?
“அஹ்லுஸ் ஸுன்னாவின் பத்து குணங்களை அவர் கொண்டிருந்தால் அவர் சரியான கொள்கைகளில் இருக்கிறார் என்று அர்த்தம் என்று கூறுகிறார்:
- அவர் தனி நபராக இருந்தாலும் (அஹ்லுஸ் ஸுன்னாவை) ஜமாத்தை விட்டு விடமாட்டார்
- அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களை சபிக்க மாட்டார்.
- அவர் இந்த உம்மத்திற்கு எதிராக வாளால் கிளர்ச்சி செய்ய மாட்டார்.
- அவர் விதியை பொய்பிக்கமாட்டார்.
- அவர் ஈமானை (இறைநம்பிக்கையை) சந்தேகிக்கமாட்டார்.
- அவர் (இறுதியாக முடிவு செய்யப்பட்ட) மார்க்க விஷயத்தில் சர்ச்சை செய்யமாட்டார்.
- கிப்லாவின் மக்களிடமிருந்து (இறை நம்பிக்கையாளர்களிடமிருந்து) ஏற்பட்ட பாவத்தால் அந்த நபர் மரணித்துவிட்டால் அவருக்காக நடத்தப்படும் ஜனாஸா தொழுகையை விடமாட்டார்.
- ஒளூ செய்யும் பொழுது காலுறைகளில் மஸஹ் செய்வதை மறுக்க மாட்டார் .
- ஒவ்வொரு நீதமான அல்லது அநீதம் இழைக்கக் கூடிய ஆட்சியாளருக்கு பின்னால் ஜமாஅத் தொழுகையை விட்டு விட மாட்டார் .
[ஷரஹ் உஸுலி அஹ்லிஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் -இமாம் அல்-லாலிகாயி, ரஹிமஹுல்லாஹ் (183)].
-தமிழில்
உஸ்தாத் SM.இஸ்மாயீல் நத்வி
كيف اعرف أني على عقيدة أهل السنة والجماعة ؟!
كيف تنجو من (72) فرقة وتكون ضمن الفرقة الناجية ؟!
----------------------
قال اﻹمام عبد الله بن المبارك رحمه الله: "أصل اثنين وسبعين فرقة: أربعة أهواء، فمن هذه اﻷربعة الأهواء تشعبت الاثنان وسبعون فرقة.
1 الـقــدريــــــة
2 والـمـرجـئـــة
3 والـشـيـعــــة
4 والـخــــوارج
----------------------
فمن قدَّم أبا بكر، وعمر، وعثمان، وعليًّا، على أصحاب رسول الله ﷺ، ولم يتكلم في الباقين إلا بخير، ودعا لهم؛ فقد خرج من التشيع أوله وآخره.
----------------------
ومن قال: اﻹيمان قول وعمل، يزيد وينقص؛ فقد خرج من اﻹرجاء أوله وآخره.
----------------------
ومن قال: الصلاةُ خلفَ كلِّ بَرٍّ وفاجرٍ، والجهادُ مع كل خليفةٍ، ولم يرَ الخروج على السلطان بالسيف، ودعا لهم بالصلاح؛ فقد خرج من قول الخوارج أوله وآخره.
-----------------------
ومن قال: المقادير كلها من الله - عز وجل- خيرها وشرها، يضل من يشاء ويهدي من يشاء؛ فقد خرج من قول القدرية أوله وآخره.
(وهــو صاحــب السُّنــَّة)
[شــرح السنــة للإمام البربهاري رحمه الله].
————————————————
وقيل لسهل بن عبد الله: "متى يعلم الرجل أنه على السنة والجماعة؟!!"قال: " إذا عرف من نفسه عشر خصال:
- لا يترك الجماعة.
- لا يسب أصحاب النبي ﷺ.
- لا يخرج على هذه الأمة بالسيف.
- لا يكذب بالقدر.
- لا يشك في الإيمان.
- لا يماري في الدين.
- لا يترك الصلاة على من يموت من أهل القبلة بالذنب.
- لا يترك المسح على الخفين.
- لا يترك الجماعة خلف كلّ والٍ جارَ أو عدلَ".
[شرح أصول اعتقاد أهل السنة والجماعة للإمام اللالكائي رحمه الله (١٨٣)].