- அஷ்ஷைஃக் அப்துர் ரஸ்ஸாக் அல்பத்ர் ஹஃபிதஹுல்லாஹ்
நிச்சயமாக ஒரு முஸ்லிமின் மீது சீர்திருத்த வேண்டிய மற்றும் கவனம் செலுத்துவதற்கு மிகவும் உரித்தான விடயமானது, தனது இரு விலாப்புறத்திற்கு மத்தியிலுள்ள தன்னுடைய உள்ளத்தை குறித்தே ஆகும். ஏனெனில், திட்டமாக உள்ளமே அமல்களின் அடிப்படையாகும், மேலும் உடல் அசைவுகளின் அடிப்படையாகும். அது அதற்கு, தனது படையின் மீது ஒரு அரசனுக்குள்ள அந்தஸ்தில் உள்ளது. எனவே, அது தூய்மையடைந்தால் உடலும் தூய்மையடையும், மேலும் அது கெட்டுவிட்டால் (உடலும்) கெட்டுவிடும்.
உள்ளத்தை சீராக்குவதற்கு
நபி ﷺ அவர்கள் அதீத கவனம் கொடுப்பவர்களாக இருந்தார்கள், மேலும் அது குறித்து முழுமையான அக்கறை கொள்பவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய நிறைய சங்கையான ஹதீஸ்களில் அதனைக் கொண்டு வஸிய்யத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும், அவர்களது நிறைய உயர்வான து'ஆக்களுல் அதனை சேர்த்தும் உள்ளார்கள்.
(நபி) ﷺ அவர்கள் தனது து'ஆவில்,
اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا
யா அல்லாஹ்! எனது உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
மேலும் தனது து'ஆவில்,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعُ
"யா அல்லாஹ்! அடிபணியாத/அஞ்சாத உள்ளத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடத்தில் பாதுகாப்பு தேடுகின்றேன்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
மேலும் தனது து'ஆவில்,
اللَّهُمَّ نَقِّ قَلْبِي مِنْ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّنَسِ
யா அல்லாஹ்! எவ்வாறு ஒரு வெள்ளை ஆடை கரைகளிலிருந்து தூய்மைப்படுத்தப்படுமோ, அவ்வாறே எனது உள்ளத்தை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! என்றும் கூறுபவர்களாக இருந்தார்கள்.
மேலும்,
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَن زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
"யா அல்லாஹ்! என்னுடைய நஃப்ஸிற்கு அதற்குரிய தக்வாவை வழங்குவாயாக, மேலும் அதனைப் பரிசுத்தப்படுத்துவாயாக. நீயே பரிசுத்தப்படுத்துபவர்களில் மிக சிறந்தவன், மேலும் நீயே அதனுடைய பாதுகாவலனும், அதனுடைய பொருப்பாளானுமாவாய்" என்றும் கூறுபவர்களாக இருந்தார்கள்.
மேலும்,
يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلبِي عَلَى دِينِكَ
“உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தின் மீது நிலை பெறச்செய்வாயாக" என்று(ம்) கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.
தனது வெளிரங்கத்தை சீர்படுத்துவதற்கு கொடுக்கும் கவனம் மற்றும் அமல்களை முழுமைப்படுத்துவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்துடன், தனது உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவது, அதனை சீர்படுத்துவது மற்றும் தூய்மைபடுத்துவதற்கு கவனம் கொடுப்பது நிச்சயமாக ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக இருக்கின்றது. அது ஏனெனில், உள்ரங்கத்தின் சீரழிவுடன் வெளிரங்கம் சீராக இருப்பது எவ்விதத்திலும் பொருட்படுத்தப்படாது.
எப்போது ஒரு முஸ்லிம் தனது உள்ளத்தை பரிசுத்தமான அமல்கள், இஃக்லாஸ், உண்மைத்தன்மை, அல்லாஹ் த'ஆலா மற்றும் அவனுடைய தூதர் ﷺ அவர்களுக்கான நேசம் ஆகியவற்றைக் கொண்டு சீர்படுத்துகின்றாரோ, அப்போது அவரது உறுப்புகள் சரியாகும், மேலும் அவரது வெளிரங்கமும் சீர்பெறும்.
அந்நுஃமான் பின் பஷீர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸில் உள்ளது போல், அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்:
أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ ؛ أَلَا وَهِيَ الْقَلْبُ
அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடம்பில் ஒரு சதைத்துண்டு இருக்கின்றது. அது சீரானால், உடம்பு முழுவதும் சீராகிவிடும், மேலும் அது சீர்கெட்டால், உடம்பு முழுவதும் சீர்கெட்டுவிடும்; அறிந்து கொள்ளுங்கள்! அதுவே உள்ளமாகும்.
இந்த மகத்தான ஹதீஸ், இதில் ஒரு அடியானுடைய வெளிரங்கமான அசைவுகளின் சீர்த்தன்மையானது, அவனது உள்ளத்தின் மற்றும் உள்ரங்கமான அசைவின் சீர்த்தன்மையைப் பொருத்தே இருக்கின்றது என்பதற்கு தெளிவான அடையாளம் உள்ளது.
எனவே, அவனது உள்ளம் பரிசுத்தமானதாக இருக்குமெனில், அதில் அல்லாஹ்வின் நேசம், அல்லாஹ் நேசிப்பவற்றையுடைய நேசம், மேலும் அல்லாஹ்வின் அச்சம், அல்லாஹ் வெறுப்பவைகளில் விழுந்து விடும் அச்சம் மட்டும் இருக்குமெனில், அவனது முழு உறுப்புகளின் அசைவுகளும் சீராகிவிடும்.
(இதற்கு) மாற்றமாக, அவரை மிகைத்திருப்பது கெட்டதாக இருந்தால், ஆசைகளை விரும்புவது, மனோ இச்சைகளைப் பின்பற்றுவது மற்றும் நஃப்ஸுடைய தேட்டங்களை முற்படுத்துவது ஆகியன அவரை ஆட்கொண்டிருக்குமென்றால், அவ்வாறு இருக்குமென்றால், அவரது உடலுறுப்புகளின் அசைவுகள் யாவும் சீர்கெட்டு விடும்.
இதன் காரணமாகவே சொல்லப்படும்: “உள்ளமானது உடலுறுப்புகளின் அரசன், மீதமுள்ள உடலுறுப்புகள் யாவும் அதன் படைகளாகும். அவை அத்துடன் அவனுக்குக் கீழ்ப்படியக்கூடிய, அவனுக்குக் கீழ்படிவதிலும் அவனது கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் முற்படக்கூடிய படைகளாகும்; அதிலிருந்து எந்த ஒன்றிலும் அவை (அவனுக்கு) மாறு செய்யாது.
எனவே, அந்த அரசன் நல்லவனாக இருந்தால், அந்த படைகளும் நல்லவையாக இருக்கும். மேலும் அவன் சீர்கெட்டவனாக இருந்தால், அவனது படைகளும் இதன் காரணமாக சீர்கெட்டவையாக இருக்கும்.”
பரிசுத்தமான உள்ளத்தை தவிர (வேறெதுவும்) அல்லாஹ்விடத்தில் பயனளிக்காது.
அல்லாஹ் கூறியது போல:
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ
செல்வமும், குமாரர்களும் (அந்த) நாளில் (யாதொரு) பயனளிக்காது,
اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍ
பரிசுத்தமான இதயத்துடன் அல்லாஹ்விடம் யார் வந்தாரோ அவர் தவிர (மற்றெவருக்கும் பயனளிக்காத நாள்). (அல்குர்ஆன் : 26:88,89)
பரிசுத்தமான உள்ளமென்பது, அது அனைத்து தீங்குகள் மற்றும் வெறுக்கத்தக்கவைகளை விட்டும் பரிசுத்தமானதாகும். மேலும் அதுதான் அல்லாஹ்வின் நேசம் மற்றும் அவனை விட்டும் தூரப்படுத்துகின்றவற்றின் (மீதான) அச்சத்தைத் தவிர வேறெதுவும் இல்லாத உள்ளமாகும்.
ஷைஃகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
பின்னர் உள்ளம்தான் அடிப்படையாகும். எனவே, அதிலே அறிவும், நாட்டமும் இருக்குமென்றால், கண்டிப்பாக அது உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும், உள்ளம் நாடுகின்றவற்றிலிருந்து உடல் பின்வாங்குவது என்பது சாத்தியமற்றதாகும்…
ஆகவே, உள்ளமானது அதிலுள்ள ஈமானினால் - கல்வியறிவு மற்றும் உளரீதியான அமல்களினால் - ஸாலிஹானதாக இருக்குமென்றால், கட்டாயமாக வெளிரங்கமான பேச்சு மற்றும் முழுமையான ஈமானுடனான அமலைக் கொண்டு, உடலின் சீர்த்தன்மையானது அவசியமாகும்”
இதன் காரணமாகவே, ஒரு மனிதனுடைய வெளிரங்கமான மற்றும் அந்தரங்கமான ஈமானை வலுவூட்டுகின்றனவற்றில் மிகவும் மகத்தானதிலிருந்து உள்ளதாவது:
அல்லாஹ்வின் நேசம் மற்றும் அவன் நேசிப்பவற்றை நேசிப்பது, வெளிரங்கமான, அந்தரங்கமான பேச்சுகள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து அல்லாஹ் வெறுப்பவற்றை வெறுப்பது ஆகியவற்றைக் கொண்டு, தனது உள்ளத்தை சீர்படுத்துவது மற்றும் நிர்வகிப்பதில் தனது நஃப்ஸுடன் முழுமையான போராட்டமாக போராடுவதாகும்.
யாருக்கு இது முழுமை பெறுமோ, அவருக்கு அவருடைய ஈமான் முழுமை பெறும்.
இதன் காரணமாகவே, நபி ﷺ அவர்கள் கூறியதாக உறுதியாகியுள்ளது:
مَنْ أَحَبَّ لِلَّهِ وَأَبْغَضَ لِلَّهِ ، وَأَعْطَى لِلَّهِ وَمَنَعَ لِلَّهِ ؛ فَقَدْ اسْتَكْمَلَ الْإِيمَانَ
“யார் அல்லாஹ்விற்காக நேசித்து,
அல்லாஹ்விற்காக வெறுத்து, அல்லாஹ்விற்காக கொடுத்து,
அல்லாஹ்விற்காக தடுப்பாரோ, அவர் திட்டமாக ஈமானை பரிபூரணப்படுத்திவிட்டார்”.
இதன் பொருளாவது: உள்ளம் மற்றும் உடலுறுப்புகளின் ஒவ்வொரு அசைவும், அவையாவும் அல்லாஹ்விற்காக இருக்குமென்றால், திட்டமாக அதைக்கொண்டு ஒரு அடியானுடைய ஈமான் வெளிரங்கமாகவும், அந்தரங்கமாகவும் பரிபூரணம் பெரும். மேலும் உள்ளத்துடைய அசைவுகளின் சீர்த்தன்மையிலிருந்து, உடலுறுப்புகளுடைய அசைவுகளின் சீர்த்தன்மையானது அவசியமாகும்.
எனவே, உள்ளம் சீரானதாக இருந்தால், அதில் அல்லாஹ்வின் நேசம் மற்றும் அவன் விரும்புகின்றவற்றின் (மீதான) நேசம் தவிர வேறெதுவும் இல்லை என்றால், உடலுறுப்புகள் அவன் விரும்புகின்றவற்றிலேயே தவிர (மற்றவற்றில்) முன் செல்லாது. அவனது பொருத்தம் இருக்கின்றவற்றின் பால் விரைந்து செல்லும், அவன் வெறுக்கின்ற, மேலும் எது அவன் வெறுக்கின்றவற்றிலிருந்து உள்ளதாக இருக்கும் என்று அஞ்சப்படுமோ - அதை உறுதி கொள்ளாத போதிலும் - அதனைத் தவிர்ந்து கொள்ளும்...
https://www.al-badr.net/muqolat/2554
அரபியுடன் வாசிக்க:
https://docs.google.com/document/d/e/2PACX-1vTo3rottpauvL68X2pRZ0hsIW6cCPH9xdq7zsYeGdZqo8lMa_iKICvEZOGdUwIXIc8rxWysCkv0s_i_/pub
மேலும் பல மொழிபெயர்ப்புகளைக் காண:
T.me/salafimaktabahmpm
-மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.