திருவள்ளுவர் கூறும் இறைவன்!

1. ஆதி பகவன்.
அனைத்துப் பொருளுக்கும் முன்னால் முதன்மையாக இருந்தவன். 

2. வாலறிவன். 
நுட்பங்களையும் ரகசியங்களையும் அனைத்தையும் அறிந்தவன். 

3. மலர்மிசை ஏகினான்.
பரந்து விரிந்த வானத்தில் இருப்பவன்.

4. வேண்டுதல் வேண்டாமை இலான்.
அவனுக்குத் தேவை எதுவும் இல்லை.  அவனுடைய தேவை இன்றி யாரும் இல்லை. 

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன். 
சிறு பெரு  தவறுகள் இல்லாதவன்.

6. பொறிவாயில் ஐந்தவித்தான்.
கண் காது மூக்கு வாய் உடல் ஆகிய ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவன்.

7. தனக்குவமை இல்லாதான். 
தனக்கு எந்த இணையும் ஒப்பும் இல்லாதவன். 

8. அறவாழி அந்தணன். 
அவன் நேர்மைக் கடல்.  நல்லவன். 

9. எண்குணத்தான். 
நல்ல பண்புகளும் தன்மைகளும் உள்ளவன். 

10. இவனே இறைவன்.
Previous Post Next Post