இமாம்களான பைஹகீ, மற்றும் தாராகுத்னி ஆகியோருக்கிடையிலான இமாம் இப்னு தைமிய்யாவின் அழகிய ஒப்பீடு.


موَازَنَة_بين_البيْهَقِي ‎والدّارَقُطْني :
يقولُ ابنُ تيْميّة:
أمّا البَيْهقيُّ فهو على مذهب الشافعي مُنْتصراً له في عامّة أقواله.
أمّا الدّارقُطني:فله أيضاً ميلٌ لمذهب الشّافعي  ؛ لكن ليس في تقليد البيهقي . وكلٌّ منهما:له اجْتهادٌ .لكنّ اجتهادَ الدّارقطني:أقوى
لأنّه أعلمُ وأفْقه منه.

இமாம் பைஹகீ (ரஹி) அவர்கள் ஷாஃபிஈ மத்ஹப் போக்கில் செல்பவராகவும் பெரும்பாலும் அவர்களின் கூற்றுக்களில் இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்களின் கருத்துக்கு வலுச் சேர்ப்பவராகவும் இருந்தார்கள்.

இமாம் தாரகுத்னீ (ரஹி) அவர்கள் இமாம் ஷாஃபிஈ (ரஹி) அவர்களின் கருத்தால் ஈர்க்கப்பட்டவர்களாக இருந்தார்கள். 

அதனால் பைஹகி இமாமை தாரகுத்னீ அவர்கள்  கண்மூடித்தனமான தக்லீத் செய்தார் என்ற பொருள் கிடையாது. 

இவ்விரு அறிஞர்களுக்கும் இஜ்திஹாத் என்ற தனியான சட்ட அகழ்வு முயற்சி காணப்பட்டது.

எனினும் ஒப்பீட்டளவில் இமாம் தாரகுத்னியின் இஜ்திஹாத் வலுவானதாகவும் பலமானதாகவும் இருந்தது. 

ஏனெனில்  இமாம் பைஹகீயை விட தாரகுத்னீ அவர்கள் சட்டப் புலமை உள்ளவராவும், அறிவில் கூடியவராகவும் இருந்தார்கள். 

- கலாநிதி (முனைவர்) அலி முஹம்மத் அவ்தா 


விளக்கம்:

ஆலிம் உலமாக்கள் என்போர் இவ்வாறான ஒப்பீட்டு முறைகளைப் படிப்பதன் மூலமாகவும் கருத்து முரண்பாடுகளின் போது ஊர்ஜிதமான, தெளிவான கருத்தை தெரிவு செய்யும் வாய்ப்பை பெறலாம். 
அதன் மூலம் குழப்பமான மார்க்க விவகாரங்களுக்கு நடுநிலையான தீர்ப்பை எட்டலாம்.
والله أعلم 
اللهم فقهنا في ديننا

- எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
 
Previous Post Next Post