நல்லெண்ணம்

உன்னை விட வயதில் பெரியவரை கண்டால் அவர் என்னை விட ஈமானிலும் நல் அமல்களிலும் முந்தியவர் எனவே என்னை விட அவரே சிறந்தவர் என்று கூறு.

உன்னை விட வயதில் குறைந்த ஒருவரை நீ பார்த்தால் இவரை விட பாவத்தில் நான் முந்தியவன்; எனவே என்னை விட இவரே சிறந்தவர் என்று கூறு, என்பதாக இமாம் பக்ரு அல் முஜzனி (ரஹி) அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: (சிஃபதுஸ்ஸஃப்வா)

குறிப்பு: ஏன்! ஒரு பாவியை நாம் பார்க்கும் போது கூட அவனை விட நான் சிறந்தவன் என்ற எண்ணம் உள்ளத்தில் ஒரு போதும் உதித்து விடக்கூடாது,

   மாறாக அவனுக்கு துஆச்செய்து நல்லுபதேசம் செய்து, எதிர்காலத்தில் அந்த பாவத்தில் தானும் வீழ்ந்து விடாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    இறுதி முடிவை அல்லாஹ் மாத்திரமே அறிவான், ஒரு வேளை அந்த பாவி உண்மையான தௌபா செய்து அல்லாஹ்விடம் சிறந்த அந்தஸ்தை பெறலாம், 

நாமோ நம்முடைய தீய எண்ணத்தின் மூலம் அல்லாஹ்வினால்  கைவிடவும் படலாம்.

அல்லாஹ் பாதுகாப்பானாக...
Previous Post Next Post