அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளின் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் வழிமுறை

منهج أهل السنة والجماعة في الأسماء والصفات

-இமாம் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்


السؤال:
கேள்வி:

مجموعة من طلاب العلم بعثوا بهذا السؤال، يقولون في سؤالهم: نود من سماحة الشيخ أن يتحدث عن مذهب أهل السنة والجماعة في الأسماء والصفات؛ لأننا اختلفنا كثيرًا مع الإخوان في ذلك حول هذا الموضوع، وجهونا سماحة الشيخ.
மார்க்கக் கல்வியைத் தேடும் மாணவர்களில் ஒரு கூட்டத்தார் இக்கேள்வியை அனுப்பியுள்ளார்கள். அவர்கள் தங்களுடைய கேள்வியில் கூறுகின்றார்கள்: "(அல்லாஹ்வுடைய) பெயர்கள் மற்றும் பண்புகளின் விடயத்தில் அஹ்லுஸ் ஸன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் வழிமுறையைப் பற்றி ஷைஃக் அவர்கள் பேச நாங்கள் விரும்புகின்றோம். ஏனென்றால், இந்த விடயத்திலே (எங்களுடைய) சகோதரர்களுடன் நாங்கள் அதிகமாக கருத்துவேறுபாடு கொண்டுள்ளோம். ஷைஃக் அவர்களே (இவ்விடயத்தில் சரியான நிலைபாட்டின் பக்கம்) எங்களுக்கு வழிகாட்டுவீர்களாக!".

الجواب:
பதில்:

مذهب أهل السنة والجماعة في أسماء الله وصفاته:
அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளின் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் வழிமுறையானது:

أنهم يؤمنون بها، ويثبتونها كما جاءت في القرآن والسنة، ويمرونها كما جاءت؛ من غير تحريف، ولا تعطيل، ولا تكييف، ولا تمثيل،
அவர்கள், அவற்றை (அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகளை) நம்பிக்கை கொள்கின்றார்கள். மேலும் குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வில் வந்துள்ளது போன்றே அவற்றை உறுதிப்படுத்துகின்றார்கள்.
திரித்தல் (தஹ்ரீஃப்)
மறுத்தல் (தஃதீல்)
எவ்வாறு இருக்கின்றது என விளக்கம் கூறுதல் (தக்யீஃப்)
ஒப்புமை செய்தல் (தம்ஸீல்)
ஆகியவையின்றி அவை எவ்வாறு வந்துள்ளனவோ அவ்வாறே அவற்றை உறுதிப்படுத்துகின்றார்கள்.

 هكذا قول أهل السنة والجماعة، وهم أصحاب النبي ﷺ ومن سلك سبيلهم، يؤمنون بأسماء الله وصفاته الواردة في القرآن الكريم، أو في السنة الصحيحة،
இவ்வாறே அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் கூற்றானது இருக்கின்றது. அவர்கள் நபி ﷺ அவர்களின் தோழர்களும், அவர்களின் பாதையில் பயணித்தவர்களும் ஆவர். சங்கைமிகு குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ வந்திருக்கின்ற அல்லாஹ்வுடைய பெயர்களையும் அவனது பண்புகளையும் அவர்கள் (சரியான முறையில்) நம்பிக்கை கொள்கின்றார்கள்.

 ويثبتونها لله على الوجه اللائق بالله، من غير تحريف لها، ومن غير تعطيل، ومن غير تكييف، ولا تمثيل، يعني: لا يحرفونها ويغيرونها، ولا يعطلونها كما تفعل الجهمية والمعتزلة.
அவற்றை திரிக்காமல், மறுக்காமல், எவ்வாறு என்று விளக்கம் கூறாமல், ஒப்புமை செய்யாமல், அல்லாஹ்வுக்கு (அவனது கண்ணியம் மற்றும் மகத்துவத்திற்கு) தக்க வகையில் அவற்றை உறுதிபடுத்துவார்கள். அதாவது, ஜஹ்மிய்யா மற்றும் முஃதஸிலா (போன்ற வழிகெட்ட கூட்டங்கள்) செய்வது போன்று அவற்றை திரிக்கவோ, மாற்றவோ, மறுக்கவோ மாட்டார்கள்.

ولا يمثلون صفات الله بصفات خلقه، ولا يكيفون ويقولون: كيفيتها كذا، كيفيتها كذا، لا، بل يمرونها كما جاءت، من غير تحريف، ولا تعطيل، ولا تكييف، ولا تمثيل،
அல்லாஹ்வுடைய பண்புகளை, அவனது படைப்புகளின் பண்புகளுடன் ஒப்புமை செய்யமாட்டார்கள். 'அவை இன்னின்னவாறு இன்னின்ன விதத்தில் இருக்கும்' என்று விளக்கம் கூற மாட்டார்கள். மாறாக, அவற்றை திரிக்காமல், மறுக்காமல், (அப்பண்புகள் அவனுக்கு எத்தகைய வகையில் இருக்கும் என்று) விளக்கம் கொடுக்காமல், (அவனது பண்புகளை, படைப்புகளின் பண்புகளுடன்) ஒப்பாக்காமல், (குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வில் வந்துள்ளவாரே) உறுதிப்படுத்துவார்கள்.

 مثل: الرحمن، نقول: هو موصوف بالرحمة على الوجه اللائق بالله، ليست مثل رحمة المخلوقين، ولا نعلم كيفيتها، ولا نزيد ولا ننقص،
உதாரணத்திற்கு "அர்-ரஹ்மான்" (என்ற அல்லாஹ்வுடைய பெயரை எடுத்துக் கொள்வோம்). "அல்லாஹ் (அவனது கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும்) தக்க வகையில் கருணை (என்ற பண்பைக்) கொண்டுள்ளான், அது படைப்பினங்களின் கருணையைப் போன்றதன்று, அது அவனுக்கு எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிய மாட்டோம்" என்று நாங்கள் கூறுவோம். மேலும் (இங்கே குறிப்பிட்டதை விட) அதிகப்படுத்தவும் மாட்டோம், குறைவுபடுத்தவும் மாட்டோம்.

وهكذا نقول: إن الله موصوف بالاستواء: الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى [طه:٥].
இவ்வாறே அவன் "இஸ்திவாவைக் கொண்டு (அர்ஷின் மீது அவனது மகிமைக்கு தக்கவாறு உயர்ந்திருக்கும் தன்மையைக்  கொண்டு) வர்ணிக்கப்படுவான் என்று நாங்கள் கூறுவோம்.

ٱلرَّحْمَٰنُ عَلَى ٱلْعَرْشِ ٱسْتَوَىٰ
(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். [20 :5]

أما كيف استوى؟ الله أعلم، ولا نقول كما تقول الجهمية:إنه استولى، لا، نقول: استوى، يعني: ارتفع وعلا فوق العرش، الاستواء هو العلو والارتفاع،
அல்லாஹ் அர்ஷின் (அரியாசனத்தின்) மீது எவ்வாறு உயர்ந்தான் என்பதைப் பொறுத்தவரை, அல்லாஹ்வே (அதைப்பற்றி) மிக அறிந்தவன். (அதைப் பற்றிய ஞானம் எங்களுக்கு கிடையாது). [இஸ்தவா (உயர்ந்தான்) என்பதை] "இஸ்தவ்லா (கைப்பற்றினான்)" என்று ஜஹ்மிய்யா (திரித்து) கூறுவது போன்று நாங்கள் கூறமாட்டோம். "இஸ்தவா", அதாவது அர்ஷின் மீது உயர்ந்து விட்டான் என்றே நாங்கள் கூறுவோம். 'அல்-இஸ்திவா' என்றால் உயர்வது, மேலே செல்வது ஆகும்.

لكن على الوجه اللائق بالله، لا يشابه استواء المخلوقين على دوابهم، أو في سطوحهم، لا، استواؤه يليق به، ويناسبه، لا يماثل صفات المخلوقين، ولا يعلم كيفيته إلا هو .
எனினும், (அது) அல்லாஹ்வின் (கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும்) தக்கவாறு இருக்கும். படைப்பினங்கள் அவர்களின் பயணப்பிராணிகள் அல்லது அவர்களுடைய (வீடுகளின்) மேல்தளத்தின் மீது ஏறுவதற்கு ஒப்பாக இருக்காது; இல்லை. அவனுடைய 'உயர்தல்' என்பது (அவனுக்கு) ஏற்றவாறும், (அவனுக்கு) எவ்வாறு இருக்க தகுமோ அவ்வாறும் இருக்கும். அது படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக இருக்காது. மேலும் அது எவ்வாறு இருக்கும் என்பதை அவனைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.

كذلك كونه يغضب، يغضب صحيح هو يغضب -جل وعلا- على من عصاه، وخالف أمره، لكن ليس مثل غضبنا، ولا نكيف ونقول: كيفيته كذا وكذا، لا، نقول: يغضب غضبًا يليق بجلاله لا يشابه صفات المخلوقين،
அவ்வாறே அவன் கோபப்படுதல் (என்ற விடயமும் ஆகும்). (அல்லாஹ்) கோபப்படுகின்றான். (ஆம்) சரிதான். யார் அவனுக்கு மாறுசெய்வாரோ, மேலும் (யார்) அவனது கட்டளைக்கு முரண்பட்டு நடப்பாரோ அவர் மீது அவன் கோபப்படுகின்றான். ஆனால் அது நம்முடைய கோபத்தைப் போன்றதன்று. மேலும் "அது அவனுக்கு இன்னின்ன விதத்தில் இருக்கும்" என்று கூறி நாம் அதற்கு விளக்கம் கொடுக்க மாட்டோம். இல்லை, அவனது கண்ணியத்திற்கு தக்கவாறு அவன் கோபம் கொள்வான் என்றே கூறுவோம். (அது) படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக இருக்காது.

كما قال سبحانه:
அல்லாஹ் கூறியதைப் போன்று:

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ
"அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்". [42:11]

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
அவனுக்கு ஒப்பாக ஒன்றுமில்லை.[112:4]

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

فَلا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا
ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்.[2:22]

أَندَادًا يعني: أشباهًا ونظراء.
(இந்த வசனத்தில் இடம் பெற்றிருக்கும்) "அன்தாதன்" என்ற சொல்லின் பொருள் "ஒப்பானவர்கள், நிகரானவர்கள்" என்பதாகும்.

وهكذا نقول: إنه يعطي ويمنع، وإنه يحب، وأنه يكره، لكن على الوجه اللائق بالله، لا يشابه صفات المخلوقين في محبتهم وكراهتهم وبغضهم وسخطهم، لا، صفاته تليق به،
மேலும் இவ்வாறே, "நிச்சயமாக அவன் கொடுக்கின்றான், தடுக்கின்றான், நேசிக்கின்றான், வெறுக்கின்றான்" என்றும் நாங்கள் கூறுவோம். ஆனால், (அவை) அல்லாஹ்வின் (கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும்) தக்கவாறு இருக்கும். படைப்பினங்களின் பண்புகளான நேசம், வெறுப்பு மற்றும் கோபத்திற்கு ஒப்பாக இருக்காது. இல்லை (அவ்வாறு கிடையாது). (மாறாக) அவனது பண்புகள் அவனுக்கு ஏற்றவாறு இருக்கும்.

وهكذا نقول: له وجه، وله يد، وله قدم، وله سمع، وله بصر، لكن ليس مثل أسماعنا، ولا مثل أبصارنا، ولا مثل أيدينا، ولا مثل وجوهنا، وجه يليق بالله، يد تليق بالله، سمع يليق بالله، عين تليق بالله،
மேலும் 'இவ்வாறே அவனுக்கு முகம், கை, பாதம், கேட்கும் மற்றும் பார்க்கும் பண்புகள் இருக்கின்றன' என்று நாங்கள் கூறுவோம். ஆனால் எங்களின் கேட்கும் மற்றும் பார்க்கும் பண்புகள் போன்றதல்ல, மேலும் எங்களின் கைகள் மற்றும் முகங்கள் போன்றதல்ல. முகம், கை, கேட்பது, கண் (என்பன போன்ற பண்புகள்) அவனுடய (கண்ணியத்திற்கும், மகத்துவத்திற்கும்) ஏற்றவாறு இருக்கும்.

لا يشابه خلقه في شيء من صفاته -جل وعلا-، كما قال سبحانه
அவனது எந்த ஒரு பண்பிலும், அவனது படைப்பினங்களுக்கு அவன் ஒப்பாக மாட்டான்.
அல்லாஹ் கூறியதைப் போன்று:

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ [الشورى:١١]
அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். [42:11]

وقد أخبر عن نفسه
அல்லாஹ் தன்னை பற்றி (பின்வருமாறு) அறிவிக்கின்றான்:

أَنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ
நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். [22:61]

إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ
"நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்". [8: 63]

بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ
மாறாக, அவனுடைய இரு கைகளும் விரிந்தே இருக்கின்றன. [5:64]

مَا مَنَعَكَ أَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ
நானே என் இரு கரங்களால் படைத்தவற்றிற்கு நீ சிரம் பணியாது உன்னைத் தடுத்தது எது? [38:75]

 يقول النبي ﷺ: لا تزال جهنم يلقى فيها، وهي تقول: هل من مزيد؟ حتى يضع الجبار فيها قدمه فينزوي بعضها إلى بعض، ثم تقول: قط قط يعني: حسبي حسبي،
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக்கொண்டே இருக்க, (அது நிரம்பாத காரணத்தால்) “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். இறுதியில் அடக்கி ஆள்பவன் (அல்லாஹ்) தனது பாதத்தை அதில் வைப்பான். நரகத்தின் சில பகுதிகள் மற்ற சிலவற்றோடு நெருடல் அடையும் - அப்போது அது “கத் கத்" - அதாவது - "போதும்! போதும்!" என்று கூறும்.

وهكذا بقية الصفات نمرها كما جاءت، مع الإيمان بها، وإثباتها لله على الوجه اللائق بالله، من غير تحريف، ولا تعطيل، ولا تكييف، ولا تمثيل،
இவ்வாறே ஏனைய (அல்லாஹ்வின்) பண்புகளிலும் (நாங்கள் நடந்து கொள்வோம்). அவை எவ்வாறு வந்துள்ளனவோ அவ்வாறே நம்பிக்கை கொள்வோம். அவற்றை திரிக்காமல், மறுக்காமல், எவ்வாறு (அப்பண்புகள் அவனுக்கு) இருக்கின்றது என விளக்கம் கொடுக்காமல், (படைப்பினங்களின் பண்புகளுடன்) ஒப்புமை செய்யாமல், அல்லாஹ்வுக்கு (அவனது கண்ணியத்திற்கு மற்றும் மகத்துவத்திற்கு) தக்க வகையில்,அவற்றை நாங்கள் நம்பிக்கை கொண்டு உறுதிப்படுத்துவோம்.  

نقول: إنها ثابتة، وإنها حق، ولا يعلم كيفيتها إلا هو سبحانه، كما قال -جل وعلا-
அவை (அல்லாஹ்வுக்கு பண்புகளாக) உறுதியாகவே இருக்கின்றன. மேலும் அவையாவும் உண்மைதான். அவை எவ்வாறு உள்ளது என்பதை அவனைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்று நாங்கள் கூறுவோம்.

அல்லாஹ் கூறியதைப் போன்று:

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ [الشورى:١١].
"அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்". [42:11]

ولما سئل مالك بن أنس -رحمه الله- عن الاستواء، قال: الاستواء معلوم، والكيف مجهول، والإيمان به واجب، والسؤال عن ذلك بدعة، يعني: عن الكيفية.
இமாம் மாலிக் பின் அனஸ் அவர்களிடம் "(அல்லாஹ் அர்ஷின் மீது) உயர்ந்திருப்பது (எவ்வாறு)" என்று கேள்வி கேட்கப்பட்ட பொழுது, இமாமவர்கள் "இஸ்திவா" (என்ற அரபிச் சொல்லின் பொருள்) அறியப்பட்டது, அது எவ்வாறு (அவனுக்கு இருக்கின்றது என்பது) அறியப்படாதது, அதை நம்பிக்கை கொள்வது கடமை, மேலும் அதைப் பற்றி கேள்வி கேட்பது பித்அத், அதாவது (அவனுக்கு அப்பண்பு) எவ்வாறு இருக்கின்றது (என்று கேள்வி கேட்பது பித்அத் ஆகும்)" என்று பதிலளித்தார்கள்.

وهكذا قال سفيان الثوري، وابن عيينة والأوزاعي، والإمام أحمد بن حنبل، والإمام إسحاق بن راهويه، وغيرهم من أئمة السلف، وهكذا الصحابة والتابعون على هذا الطريق،
இவ்வாறே, சுஃப்யான் அஸ் ஸவ்ரீ, இப்னு உயைனா, அல் அவ்ஸாயீ, இமாம் அஹ்மது பின் ஹன்பல், இமாம் இஸ்ஹாக் பின் ராஹவைஹ் மற்றும் இவர்கள் அல்லாத முன்சென்ற அறிஞர்களும் (ஸலஃபுகளும்) கூறினார்கள். இதுபோலவே, ஸஹாபாக்களும், தாபியீன்களும் இந்த பாதையின் மீதே இருந்தனர்.

لا يمثلون صفات الله بصفات خلقه، ولا يكيفونها، ولا يقولون: كيف كيف؟ بل يقولون: نثبتها لله، على الوجه اللائق بالله، من غير تحريف، ولا تعطيل، ولا تكييف، ولا تمثيل، بل نقول كما قال سبحانه: لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ [الشورى:11]، نعم.
அல்லாஹ்வுடைய பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக்க மாட்டார்கள். அவை எவ்வாறு உள்ளன என்று விளக்கம் அளிக்கவும் மாட்டார்கள். அவை 'எப்படி (அவனுக்கு இருக்கின்றது)' என்று கேட்கவும் மாட்டார்கள். மாறாக, "அவற்றை திரித்தல், மறுத்தல், எவ்வாறு என்று விளக்கம் அளித்தல், ஒப்புமை செய்தல் ஆகியவை இல்லாமல், நாங்கள் அல்லாஹ்வுக்கு தக்க வகையில் உறுதிப்படுத்துவோம்" என்றே கூறுவார்கள்.

மாறாக, நாங்கள் அல்லாஹ் கூறுவது போன்றே கூறுவோம்:

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ [الشورى:١١].
"அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்". [42:11]. ஆம்.

- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
Previous Post Next Post