அல்லாஹ்வை அவமதிக்கும் வழிகெட்ட அத்வைதிகளும், அஷ்அரிய்யாக்களும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை]

-அஷ்ஷெய்க் ரிஸ்வான் மதனி

பொய்க் கடவுள்களும், உண்மையான அல்லாஹ்வும்.

الله அல்லாஹ் என்ற சொல்லுக்கு இணையான ஒரு சொல் இல்லவே இல்லை.

ஒரு முஸ்லிம் தனக்கோ, அல்லது தனது குழந்தைகளுக்கோ பெயர் வைக்கின்ற போது அல்லாஹ் என்ற பெயரை மட்டும் அவனுக்குரியதாக சூட்ட முடியாது என்பது இஸ்லாத்தின் விதியாகும்.

அல்லாஹ் என்றும் நித்திய ஜீவனாகும். அவன் உலகம் தோன்றும் முன்பிருந்தே இருந்து வருபவன். அவன் அர்ஷ், குர்ஸி, வானவர்கள், பூமி இதர கோள்கள் மனிதர்கள், ஜின்கள் போன்ற அவனது படைப்புக்கள் அனைத்தையும் படைப்பதற்கு முன்பிருந்தே

  • தனித்தனவனாக,
  • யாரோடும் கூட்டுச் சேராதவனாக,
  • வணக்கம், படைப்பு, இறையாண்மை, இறைத்தன்மை எதிலும் கூட்டை விரும்பாதவனாக,
  • மனைவி, குழந்தை குட்டிகளை எடுத்துக் கொள்ளாதவனாக,
  • யாராலும் பிறந்தவனாகவோ, பெற்றெடுக்கப்பட்டவனாகவோ இல்லாதவனாக,
  • முன்னுதாரணமின்றி, படைப்பவனாக,
  • தந்நிகரற்றவனாக, இன்னும் பல பண்புகளுக்கு உரித்தானவனாக இருந்து வருகின்றான்.

உண்மையான الله அல்லாஹ்-வை எவ்வாறு வேறுபடுத்திப் பார்ப்பது?

உலகில் அல்லாஹ் அல்லாத அனைத்தும் படைக்கப்பட்டதாகும். அவை எவ்வாறான குறைகளை தம்மில் பொதிந்து வைத்துள்ளன என்பது தன்னைக் கடவுளாக, கடவுளின் அவதாரமாக இன்றும் பொய்ப் பிரச்சாரம் செய்த அனைவரும் அறிந்ததே! இவர்கள் தம்மை அல்லாஹ் எனப் பிரச்சாரம் செய்தாலும் அவர்களின் இறுதி முடிவு அல்லாஹ்விடம் எவ்வாறு அமையப் பெறும், அமையப் பெற்றது என்பது பற்றியும் குர்ஆன் விளக்கி இருக்கின்றது.

காத்த நகர் ரவூஃபின் முன்மாதிரி ஃபிர்அவ்ன்னும் , இப்னு அரபியுமாகும். 

எல்லாம் நானே என அல்லாஹ் சொன்ன கொள்கை கிடையாது.

அத்வைதிகள் அனைவரும் தமது உலக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள பின்வருமாறு புலம்பினர்.

  • நானும் அவனே,
  • அனைத்தும் அவனே,
  • தாயும் அவனே,
  • தந்தையும் அவனே,
  • மலையும் அவனே,
  • காற்றும் அவனே,
  • மழையும் அவனே,
  • கடலும் அவனே,
  • நீரும் அவனே,
  • நெருப்பும் அவனே,
  • செருப்பும் அவனே,
  • கோயில் பூசாரியும் அவனே,
  • நாயும் அவனே , பன்றியும் அவனே, போன்ற வழிகெட்ட, கிரேக்க மற்றும் இத்துப் போன அத்வைத இந்து மதம் தத்துவங்களால் தமது உலக ஆசைகளை அடைந்து கொள்ள ஆரிஃபீன்கள், மகான்கள் சொன்னது என அதற்கு பொய்நாமம் சூட்டிக் கொண்டனர்.

இப்னு அரபி என்பவன் அல்லாஹ்வை கேவலப்படுத்தி, தானும் வழிகெட்டது மட்டுமின்றி, முஸ்லிமாகப் பிறந்த மற்ற முஸ்லிம் மக்களையும் வழிகெடுத்ததை இப்னு அரபி தொடர்பாக வாசிக்கின்ற போது அவதானிக்க முடிந்தது.

அந்த துர்நாற்றம் பிடித்த, காலாவதியாகிப் போன அப்பட்டமான பச்சை வழிகேட்டை தத்துவம் என்ற பெயரில் இப்னு அரபியின் சிஷ்யன் ரவூஃபும் மக்கள் முன் கொண்டு வந்து அவர்களை வழிகெடுப்பதை நாம் வழிகேடு, நரக வழி எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்துர் ரவூஃபின் நெருங்கிய வழிகேடர்கள்.

இந்த வழிகேடனோடு சுன்னத் ஜமாத் போர்வையில் பசுந்தோல் போ(ர்)த்திய புலிகளாக அஷ்அரிய்யாப் பெயரில் வலம் வரும் வழிகெட்ட ஜஹ்மிய்யாக்களை பின்தொடரும் இலங்கை வாழ் மௌலவிகள் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையில் சில போது அத்வைதிகளாகவும், சில நேரங்களில் அல்லாஹ்வின் முகம், கரம், உறக்கம் போன்ற பண்புகளை மனித பண்புகளுக்கு ஒப்பிடாமல், முறை கற்பிக்காமல் வெளிப்படையான பொருள் கொள்ளாது, மனித பண்புகளோடு ஒப்பிட்டு பின்னர் அதற்கு தவறான அர்த்தம் தருவதையும் பார்க்கின்றோம்.

இவர்கள் சாதாரண ஃபிக்ஹ் விஷயங்களில் நல்லறிஞர்களான ஷாஃபி, அஹ்மத் , மாலிக் போன்ற அறிஞர்களையும் , அகீதாவில் (அடிப்படையில்) அவர்களை உதைத்து தள்ளிவிட்டு பிற்காலத்தில் வந்த வழிகேடர்களை இவர்கள் இன்றும் பின் பற்றுவதால் அல்லாஹ் என்பவன் யார்? அவன் எங்கு உள்ளான்? அர்ஷின் மீதிருக்கின்றானா? எங்கும் நிறைந்தோனா? மறுமை நாளில் நமது கண்களால் நேரடியாக நாம் பார்க்க விருக்கும் அந்த உயர்ந்த இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு இப்போது, இவ்வுலகில் குறித்த தோற்றம் ஒன்று இல்லை எனில் அவன் எந்தத் தோற்றம் எடுத்து வரூவான்? இங்கே அவனுக்கென குறித்த தோற்றம் இல்லாத போது அவனை இங்கு போன்று அங்கும் காணசாத்தியமா? போன்ற எவ்விதமான தெளிவும் அற்ற மந்தைகளாக இருப்பது அவர்களின் உரைகள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழிகாட்டுவானாக!

அல்லாஹ்வின் மகத்துவம்

  • மகத்துவமிக்க அல்லாஹ் கண்ணியமானவன்,
  • அவன் எப்போதும், எல்லா நிலைகளிலும்,
  • இம்மையிலும் மறுமையிலும்,
  • அவனது படைப்புக்களோடு இரண்டரக்கலக்காது,
  • அர்ஷின் மீதிருந்தவாறு அவன் ஆட்சி செய்து வருவான். அதுவே அவனது கண்ணியமாகும்.

அல்லாஹ்வின் படைப்புக்கள் தெய்வமாகவோ, தெய்வீக வெளிப்பாடுகள் கொண்டதாகவோ ஆகுமுடியாது

அல்லாஹ்வின் படைப்புகளாகிய மனிதர்களுக்கு பிறப்பு இறப்பு, முன் ஆரம்பம் இறுதி முடிவு, அதன் பின்னும் மற்றொரு ஆரம்பம், அதன் பின் மரணமற்ற வாழ்வு போன்ற பல நிகழ்வுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகும் .

படைப்புக்கள் அனைத்தும் பொதுவாக இல்லாமை என்ற நிலையில் இருந்து உயிர்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் அதிபதியும் அல்லாஹ்வே! எனவே அவை ஆரம்பம் முடிவு என்ற இரு நிலைகளைக் கொண்டவைமாகும்.

அல்லாஹ்வோ அவ்வாறான குறைவுள்ள மனிதப் பண்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவனாகும். எனவே அவனது படைப்புகள் என்றும் அவனாகவோ, அவனது வெளிப்பாடாகவோ ஆக முடியாது.

பொய்யான தெய்வங்கள் என எவ்வாறு அடையாளம் காண்பது?

அல்லாஹ் தவிர்த்து அனைத்து விதமான தெய்வங்களும் பொய்யான தெய்வங்களே!  என்பது குர்ஆனின் சுருக்கமான நோக்காகும். அவைகள்/அவர்கள் பகுத்தறிவு சார்ந்ததாகவோ, அல்லது அற்றதாகவோ எவையாக இருப்பினும் சரியே! அவை அனைத்தும் அல்குர்ஆனின் கடவுள் கொள்கைக்கு மாற்றமான நரகத்திற்கு இட்டுச் செல்லும் தெய்வங்களே அன்றி வேறில்லை.

நரகை நோக்கி அழைத்துச் செல்லும் கடவுளர்களுக்கான உதாரணங்கள்.

  1. அல்லாஹ்வவோடு இணைத்து வணங்கப்படும் கப்றுகள்,
  2. அங்கு அடங்கப்பட்டுள்ள இயேசுநாதர், முகம்மது நபி ஸல் அவர்கள் போன்ற இறைத்தூதர்கள்,
  3. மனிதர்களை வழிபடுவோர்,
  4. வானவர்களை வணங்கி வழிபடுவோர்,
  5. சிலைகள்,
  6. சூரியன், சந்திரன்
  7. எலி, குரங்கு போன்ற ராட்சத மற்றும் சாதாரண படைப்புக்களைக் குறிப்பிட
    முடியும்.

الحمد لله بنعمته تتم الصالحات

அரபி மொழியில் இலாஹ் إله  என்ற சொற்பதம் உணர்த்தும் உண்மைகள்.

முன்னுரை:

இஸ்லாமிய ஷரீஅத்

    1. சட்டங்கள் (அஹ்காம்): உழு, தொழுகை, ஸகாத், ஹஜ், நோன்பு, மரணம், ஜீவனாம்சம், இத்தா இன்னும் பல.
    2. வணக்க வழிபாடுகள் ( இபாதாத்): நேர்ச்சை, அறுத்துப் பலியிடுதல், சுஜூத், இறையச்சம்…
    3. அல்முஆமலாத்: ( வர்த்தகம்/வாணிபம், கொள்முதல் வியாபாரம் விவசாயம் … போன்ற விபரங்கள்)
  1. அல்அக்லாக்:  பண்பாடு, பழக்க வழக்கம் . விருந்தோம்பல், அண்டை அயலவர் கடமைகள், பிற மதத்தவருடான உறவு, பெற்றார் பிள்ளை கடமைகள்…
  2. அல்ஜினாயாத் (குற்றவியல் சட்டங்கள்):கிளர்ச்சி செய்தல், மதம் மாறுதல், திருட்டு, வழிப்பறிக் கொள்ளை, ஸகாத் மறுப்பு, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் முஸ்லிமின் நிலை…
  3. அல்அகீதா (அத்தவ்ஹீத்):  அல்லாஹ் என்பவனே வணங்கி வழிபடத் தகுதியானவன், அவனுக்கென அழகிய பெயர்கள், உயர்ந்த பண்புகள் உண்டு. அவை மனித பண்புகளுக்கு ஈடானதோ, ஒப்பானதோ அல்ல. அவனை இவ்வுலகில் யாராலும் காண முடியாது. ஆனால் அவனது உண்மையான தோற்றத்தில் மரணத்தின் பின் வரும் நிரந்தர நாளில் நேரடியாகக் காணவது நிச்சயம் என நம்பிக்கை கொள்ளுதல் போன்ற…

இதில் இலங்கை மத்ரஸா மௌலவிகள் பலர் அகீதாவில் வழிகெட்ட பின்னோர்களையும் சட்டப் பிரச்சினைகளில் முன்னோர், பின்னோர் என எல்லோரையும் எடுக்கும் நிலை காணப்படுவதால் அவர்களிடம் அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையில் பாரிய இடைவெளியும் வழிகேடும் பிறந்தது என்பதே உண்மை.

அதனால் மேற்படி சொற் பிரயோகத்தில் காணப்படும் விளக்க குறைகளின் புள்ளியை கட்டாயம் நாம் அறிந்திருக்க வேண்டும்.

அரபிகளும் அரபிகள் அல்லாதவர்களும் اللهஅல்லாஹ் மற்றும் இலாஹ் إله போன்ற சொற்பிரயோகங்களை விளங்கி, விளக்கியதில் ஏற்பட்ட குழப்பம் ஒன்று எல்லாம் அவனே! அனைத்திலும் அவனே! போன்ற அத்வைத இணைவைத்தலுடன் இணை தெய்வங்கள் மூலமாகவே படைப்பாளாகிய அல்லாஹ்வை நெருங்க முடியாது என்ற மற்றொரு இணைவைத்தலும் நிகழ்ந்தது எனலாம்.

இன்னொரு புறத்தில் மனிதர்களிடம் காணப்படும் அல்லாஹ் வின் படைப்புக்களாக உள்ள மனித உறுப்புக்களின் பெயர்கள் மற்றும் செயற்பாடுள் அல்லாஹ்வின் பண்புகளாக, அவனது படைப்புக்களுக்கு ஒப்பிடாது இப்படித்தான் என முறைமையும் கற்பிக்காது அவற்றின் வெளிப்படையான பொருளில் மாத்திரம் நபித்தோழர்கள், மற்றும் இமாம்கள் வழியில் ஒரு முஸ்லிம் நிலைப்படுத்தப்படுத்துகின்ற போது அவன் அல்லாஹ்வுக்கு சிலை வணக்க வழிபாட்டு உருவம் கற்பித்தவன் போன்று மக்களிடம் காட்டுகின்றவைகளின் மத்ஹபின் பெயர் ஷாஃபி, அகீதா வழிபடுவது அஷ்அரிய்யாம்.

நல்லறிஞரான ஷாஃபி இமாம் அவர்களை ஏன் இவர்கள் அகீதாவில் பின்பற்றுவதில்லை என அவர்களை நோக்கி நாம் கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இவ்வாறனவர்கள் முதலில் அல்லாஹ்வுக்குரிய பண்புகளாக இடம் பெறும் மனித உறுப்புக்களின் பெயர்களை மனிதர்கள் போன்று அல்லாஹ்வுக்கும் உருவமாகக் முதலில் கற்பனை செய்கின்றனர், அதன் பின்னர் அது எப்படி மனிதர்களிடம் இருப்பது அல்லாஹ்வுகாகு இருக்க முடியும்?! என தமக்குள் பிரம்மிக்கும் அவர்கள் அப்படியும் இல்லை, இப்படியும் இல்லை என்ற தடுமாற்றமும் அறிவீனமும் நிறைந்த நிலைக்கு வருவதனால் ஷாஃபி மத்ஹபை உழு, தொழுகை, ஸகாத், ஹஜ், போன்ற சாதாரண சட்டங்களுக்காகவும், பிற்காலத்தில் தோன்றிய வழிகேட்டு சிந்தனைப் பிரிவுகளான ஜஹ்மிய்யா, அஷ்அரிய்யா, மாத்ரீ(ரூ)திய்யா போன்ற பிரிவுகளின் அஸ்மா ஸிஃபாத் போக்காகக் கொள்ளப்படும் பாழடிப்பு, தவறான விளக்கமளித்தல், நிராகரிப்பு போன்ற வழிகேட்டில் ஊறித்திழைத்தவர்களை ஒரு புறத்திலும் மறு புறத்தில் இப்னு அரபி, அபூயஸீத் அல்-பிஸ்தாமி, ஜுனைத் அல்-பக்தாதி போன்ற வழிகெட்ட அத்வைத சூஃபிகளின் கோட்பாட்டிலும் தொங்கிக் கொண்டு மக்கா காஃபிர்கள் போன்று தமது சித்தாந்தமே சரி என்ற நிலைப்பாட்டிலும் ஷைதானைப் போன்று ஏறுக்குமாறான விளக்கம் எடுத்து பாரிய வழி கேட்டில் உழல்ந்து தமது விளக்கமே சரி எற்றும் வாதிடுகின்ற பலரை இந்நாட்டில் நம்மால் காண முடிகின்றது.

அரபியில் إله தரும் பொருள் .

“இலாஹ் إله” என்ற அரபு வார்த்தை أله அலிஹ என்ற இறந்த காலச் சொல்லின் செயற்படு பொருள், அல்லது பெயர் வினைச் சொல்லில் இருந்து பிறந்த ஒரு பொதுப் பெயர்ச் சொல்லாகும்.

பணிந்து நடத்தல் , மகத்துமாகவும் கண்ணியமாகவும் இரட்சகனாக எடுத்துக் கொள்ளுதல் போன்ற கருத்துக்கள் தருகின்றனர் அரபு அகராதி அறிஞர்கள்.

இலாஹ் إله என்ற சொல்லின் பன்மைச் சொல்லாக آلهة என்று கூறப்படும்.
இதற்கு அன்பு, மரியாதை தந்து வணங்கப்படும் கடவுள் என்று சில போதும் உண்மையாக வணங்கி வழிபடும் உண்மையான அல்லாஹ் என்றும் இதற்கு பொருள் கொள்ளப்பட்டாலும் ஒரு முஸ்லிம் உண்மையாக வணங்கி வழிபடும் அல்லாஹ் என்று புரிவதையே அல்லாஹ் தனது திருமறைமிலும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல் அவர்கள் தனது நம்பிக்கை, போதனை, நடத்தை அனைத்திலும் விளக்கி இருக்கிறார்கள். அரபிக் கவிஞர்கள் தமது கவிதைகளிலும், மக்கள் பேச்சிலும் அல்லாஹ் என்பதைக் குறிக்க உபயோகித்திருப்பதை அறிய முடிகின்றது .

நபித்தோழர் குபைப் (ரழி) அவர்கள் இலாஹ் என்ற வார்த்தையை அல்லாஹ் என்பதைக் குறிக்கப் பாவித்திருப்பதன் மூலம் இதனை உறுதி செய்து கொள்ள முடியும்.

وَلَسْتُ أُبَالِى حِينَ أُقْتَلُ مُسْلِمـــاً عَلَى أَيِّ جَنْبٍ كَانَ في اللهِ مَصْرَعِي

முஸ்லிம் என்ற நிலையில் கொல்லப்படுவது பற்றி நான் எதையும் பொருட்படுத்தவதில்லை.
அல்லாஹ்வின் விஷயத்தில் எனது கொலை எப்படியாக நடந்தேறினாலும் சரியே!

وَذَلِكَ في ذاتِ الإِلَهِ وَإِن يَشـــأ يُبارِك عَلى أَوصالِ شِلوٍ مُــمَزَّعِ

இது அல்லாஹ்வுக்காக த்தான் ( நடக்கின்றது). அவன் நாடினால் சிதைக்கப்பட்ட உறுப்புக்களில் விருத்தி செய்வான். என்ற கவிதையில் இலாஹ் إله என்ற
சொல் அல்லாஹ் என்பதைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடியும்.

இலாஹ் إله என்ற
சொல் மொழி மற்றும் பொதுப் பொருள் வழக்கில் பின்வரும் பொருளில் இடம் பெற்றுள்ளது. (1)

أن معناه (الذي يستحق أن يكون معبودا) وليس فقط (المعبود)
فقد قال ابن منظور في لسان العرب (ج 13 / ص 467):

வணங்கப்பட என்று மட்டும் இல்லாமல் வணங்கப்படதத் தகுதியானவனாக இருப்பதையும் குறிக்கும். – என இமாம் இப்னு மன்ளூர் என்பவரை மேற்கோள் காட்டி விளக்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி கருத்தை சிதைக்கும் வகையில் செயல்பட்ட நபி நூஹ் (அலை) அவர்களின் சமுதாயம் முதல் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த அதற்கெதிரான தூதர்களின் எதிர்ப்புப் பிரச்சாரம், அதற்காக அவர்கள் சுமந்த கஷ்டங்கள், பட்ட இடர்கள், துன்பங்கள் அனைத்தும் இலாஹ் என்பது வணங்கி வழிபடத் தகுதியான ஒருவனையே குறிப்பதை உண்மைப்படுத்துகின்றன.

அத்துடன்:

  1. வத்து, சுவா, யகூஸ், யவூக், நஸ்ர் போன்ற இறைநேசர்களை வழிபட வேண்டாம் என நபி நூஹ் (அலை) அவர்கள் எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததும்,
  2. இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் சிலைகளை உடைத்து நொறுக்கியமைக்காக அதை வணங்கியோரால் தீக் குன்றில் வீசப்பட்டதும்,
  3. இல்யாஸ் (அலை) அவர்கள் காளையை வணங்கியோரை எதிர்த்ததும்,
  4. மூஸா நபி (அலை) அவர்கள் காழைக் கன்றை எரித்து கடலில் தூவியதும்,
  5. மக்கா காஃபிர்கள் பூமியில் பல தெய்வங்களை வணங்கிய போது முகம்மது நபி (ஸல்) அவர்கள்  لا اله الا الله என்ற கலிமாவின் மூலம் அவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைத்ததன் காரணமாக அவர்கள் காஃபிர்களின் பல இன்னல்களுக்குளாகியதும் , மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا (الإسراء/ ٨١)

சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்து போகக் கூடியதே என்றகுர்ஆன் வசனத்தை ஓதியவர்களாக கஃபாவில் காணப்பட்ட 360 சிலைகளையும் நொறுக்கி வீசியதும் அல்லாஹ் (الله) என்றும் தனித்து வணங்கப்படத் தகுதியானவன் என்ற கருத்தை வலப்படுத்தி, அதுதான் உண்மையும் என சுட்டிக்காட்டடுவதை அறியலாம்.

மேற்படி கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் இடம் பெறும் பின்வரும் குர்ஆன் வசனங்களில் இலாஹ் தொடர்பான கருத்தைக் கவனிக்கவும்.

وَهُوَ الَّذِي فِي السَّمَاءِ إِلَٰهٌ وَفِي الْأَرْضِ إِلَٰهٌ ۚ وَهُوَ الْحَكِيمُ الْعَلِيمُ (الزخرف : ٨٤)

வானத்தில் (உண்மையாக) வணங்கப்படுபவனும் அவனே! பூமியில் ( உண்மையாக) வணங்கப்படுபவனும் அவனே! அவன் ஞானம் நிறைந்தவன், யாவற்றையும் நன்கு அறிந்தவன். (அஸ்ஸுக்ருஃப்) .

பல தெய்வங்களை எடுத்துக் கொண்டவர்களே நீங்கள் எடுத்துக் கொண்ட தெய்வங்கள் பொய்யானனவைகள். எனவே வணங்கத் தகுதி உள்ள அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடுங்கள் என்பது இதன் பொருளாகும்.

مااتَّخَذَ اللَّهُ مِن وَلَدٍ وَمَا كَانَ مَعَهُ مِنْ إِلَٰهٍ ۚ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ (91) عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ (المؤمنون ٩١-٩٢)

(அவர்கள் கற்பனை செய்வது போன்று) அல்லாஹ் தனக்கென ஒரு குழந்தையை எடுத்துக் கொள்ள வில்லை. அவனுடன் (உலகைப் படைக்க , நிர்வகிக்க) இன்னொரு கடவுளும் இருந்ததில்லை. அப்படியாயின் (அந்த) ஒவ்வொரு தெய்வமும் அது படைத்ததோடு சென்றிருக்கும். (பலமிக்க ) ஒரு தெய்வம் (பலமற்ற) மற்றொரு தெய்வத்தின் மீது அத்துமீறி அதிகாரமும் செலுத்த இருக்கும். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். மறைவானதையும், முன்னால் இருப்பதையும் அறிந்ததவன். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் உயர்ந்தவனாகி விட்டான். (அல்முஃமினூன்- 91-92)

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை அவனுக்கே சொந்தமான, அவனது படைப்புக்கள் எவரும் கூட்டுச் சேரமுடியாத உயர்ந்த பண்புகளைக் கொண்டு

  • தனித்தவனாக,
  • அகிலத்தோடு ஒன்றரக் கலக்காதவனாக,
  • ஏழு வானங்களுக்கும் அப்பாலுள்ள அர்ஷின் மீதிருப்பவனாக,
  • மனைவி,மக்கள், இணை துணை அற்றவனாக,
  • ஈருலகிலும் அதிரடியாக?
  • மறுமையில் நேரில் பார்க்கப்படக் கூடியவனாக,
  • மறுமையில் காஃபிர்களும் அவன் ஒரு இருப்பதை அங்கீகரித்து, ஒத்துக் கொள்ளப்படுபவனாக,
  • மறுமை நாளில் தனது காரியங்களை தன்னந்தனியே நின்று முடித்து வைப்பவனாக போன்ற இன்னும் பல நிரப்பமான, முழுமையான குறைவில்லாத பண்புகளைக் கொண்டு வர்ணிக்கப்படும் அல்லாஹ்வை

நபித்தோழர்களுக்குப் பின்னால் தோன்றிய வழிகெட்ட அபூ மன்சூர் அல்- ஹல்லாஜ், அபூதாலிப் அல்மக்கி (மக்கு), நாஸ்திகன் இப்னு அரபி போன்ற அரபி மொழி வழிகேடர்களின் இறையிற் கோட்பாடுகளை காப்பி செய்து அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்காது, அல்லாஹ்வும் அவனது தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் கற்றுத்தந்த விளக்கங்களுக்கு மாற்றமான நாஸ்தீக, இறைமறுப்பு சார்ந்த விளக்கங்கள் தந்து அழியக்கூடிய அற்பமான, பலவீனமான, மண்ணோடு மண்ணாக மக்கி, உண்மையான அல்லாஹ்வின் நாட்டத்தால் மீண்டும் எழுப்பபட்டு விசாரிக்கப்பட உள்ள அல்லாவின் படைப்புகளுக்கு ஒப்பிட்டு

  • நானும் அவனே,
  • அனைத்தும் அவனே,
  • தாயும் அவனே,
  • தந்தையும் அவனே,
  • மலையும் அவனே,
  • காற்றும் அவனே,
  • மழையும் அவனே,
  • கடலும் அவனே,
  •  நீரும் அவனே

போன்ற வழிகெட்ட, இத்துப் போன அத்வைத இந்து மதம் தத்துவங்களால் அல்லாஹ்வை கேவலப்படுத்தி, தானும் வழிகெட்டது மட்டுமின்றி , முஸ்லிமாகப் பிறந்த மற்ற முஸ்லிம் மக்களையும் வழிகெடுப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த வழிகேடனோடு சுன்னத் ஜமாத் போர்வையில் பசுந்தோல் போ(ர்)த்திய புலிகளாக அஷ்அரிய்யாப் பெயரில் வலம் வரும் வழிகெட்ட ஜஹ்மிய்யாக்களை பின்தொடரும் இலங்கை வாழ் அசத்தியவாதிகளையும் இலக்காகக் கொண்டு அல்லாஹ் அர்ஷின் மீதிருப்பது பற்றிய அல்குர்ஆன், மற்றும் ஆதாரபூராவமான நபி மொழிகளின் ஓரிரு சான்றுகளின் துணையோடு இங்கு அல்லாஹ்வின் கண்ணியம் அவன் அர்ஷின் மீதிருந்தவாறு இம்மைணிலும் மறுமையிலும் இருப்பதுதான் என்பது பற்றி சுருக்கமாக விளக்கப்படுகின்றது.

அல்லாஹ் தொடராக அர்ஷின் மீதிருந்து வருவதை உணர்த்தும் மிஃராஜ் நிகழ்வு.

மிஃராஜ் நிகழ்வு முஸ்லிம் சமூகத்தில் உள்ள மக்களின் இறைகட்டுப்பாடு எவ்வாறு அமைய வேண்டும் எனக் கற்பிக்கின்ற முக்கிய திகழ்வாகும்.

  • சில மணி தேரங்களில் பல கோடி தூரத்தில் உள்ள ஓர் இடம் சென்று அல்லாஹ்வின் தூதர் மீண்டும் வந்தார்கள் என்பது ஒரு இரவில் அது சாத்தியமா?
  • அல்லாஹ் எவ்வாறான வலிமைகள், ஆற்றல்கள் மிக்கவன்,
  • அல்லாஹ்வை இந்த உலகில் நேருக்கு நேர் காணவே முடியாது,
  • அல்லாஹ் பேசுவது, உரையாடுவது,
  • அல்லாஹ்வின் உயர்ந்த அந்த அர்ஷ் ஆதம் நபி (அலை) அவர்கள் முதல் முஹம்மத் நபி ஸல் அவர்கள் வரை வந்த தூதர்கள் வரை அல்லாஹ் அவனது உயர்ந்த அர்ஷின் மீதிருப்பதையே நம்பி போதனையும் செய்துள்ளனர்,
  • சுவனங்கள் வானத்தில் உள்ளன,
  • அல்லாஹ் தனது அடியார்கள் தொடர்பாக தாய் ஏட்டை வைத்துள்ளான். அப்துல் ரவூஃப் நானும் அவனே எனப் போதித்தாலும் அவனாகப் போவதில்லை,
  • பர்ளான தொழுகையின் முக்கியத்துவம்,
  • அல்லாஹ் தனது அடியார்கள் மீது வைத்துள்ள கருணை, அன்பு, பாசம் போன்ற முக்கிய செய்திகளை பாடமாகக் கொண்ட சிறப்பான நிகழ்வாகும்.

இப்போது மிஃராஜ் இரவு கடமையாக்கப்பட்ட தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

«فَفَرَضَ اللهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلَاةً»، قَالَ: فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى أَمُرَّ بِمُوسَى، فَقَالَ مُوسَى عَلَيْهِ السَّلَامُ: مَاذَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ؟ قَالَ: قُلْتُ: فَرَضَ عَلَيْهِمْ خَمْسِينَ صَلَاةً، قَالَ لِي مُوسَى عَلَيْهِ السَّلَامُ: فَرَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ، قَالَ: فَرَاجَعْتُ رَبِّي، فَوَضَعَ شَطْرَهَا، قَالَ: فَرَجَعْتُ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ، فَأَخْبَرْتُهُ قَالَ: رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ، قَالَ: فَرَاجَعْتُ رَبِّي، فَقَالَ: هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ لَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ، قَالَ: فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَقُلْتُ: قَدْ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي، قَالَ: ثُمَّ انْطَلَقَ بِي جِبْرِيلُ حَتَّى نَأْتِيَ سِدْرَةَ الْمُنْتَهَى فَغَشِيَهَا أَلْوَانٌ لَا أَدْرِي مَا هِيَ؟ قَالَ: ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ، فَإِذَا فِيهَا جَنَابِذُ اللُّؤْلُؤَ، وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ

எனது சமுதாயத்தினர் மீது அல்லாஹ் ஐம்பது நேரத் தொழுகைகளைக் கடமையாக்கினான். அதனைக் கொண்டு நான் திரும்பி வரும் போது வழியில் மூஸா (அலை) அவர்கள் கண்டு உனது சமுதாயத்தினர் மீது உமது இரட்சகன் எதைக் கடமையாக்கி உள்ளான் எனக் கேட்டு உமது சமூகம் அதைச் செய்ய சக்தி அற்றவர்கள். எனவே உமது இரட்சகனிடம் நீர் மீண்டும் சென்று அதில் குறைப்பு சலுகைகளைப் பெற்றுக் கொள் என மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பினார்கள் இறுதியில் ஐந்து நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என நபி ஸல் அவர்கள் கூறியதும் அதையும் குறைத்துக் கொள்ள மூஸா நபி ஆலோசனை கூறிய போது நபி ஸல் அவர்கள் என்ன கூறினார்கள்தெரியுமா?

قَدْ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي

(இனியும் செல்ல) எனது இரட்சகனிடம் இருந்து நான் வெட்கப்படுகின்றேன் என்றார்கள். (புகாரி).
அப்படியானால், அல்லாஹ் அவருக்கென இருக்கும் தோற்றத்தை மறுக்க முடியுமா? அல்லாஹ் என்பவன் அவனது படைப்பாக முடியாது என்பதை மறுக்க முடியுமா?

அல்லாஹ் அர்ஷில் என்றும் இருக்கின்றான் என்பதை பல நூறு ஹதீஸ்கள் தெளிவுபடுத்தி உள்ளன. அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
இரவு வேளைகளில் வானில் இருந்து எறியப்படும் நட்சத்திரங்கள் தொடர்பான செய்தியில் நிச்சயமாக அவை உலகில் முக்கியமான ஒரு மனிதனின் பிறப்பிற்காகவோ இறப்பிற்காகவோ வீசி எறியப்படுவதில்லை. மாற்றாக அதற்கான காரணம் இதுதான்.

عن عَلِيُّ بْنُ حُسَيْنٍ: …. «فَإِنَّهَا لَا يُرْمَى بِهَا لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، وَلَكِنْ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى اسْمُهُ، إِذَا قَضَى أَمْرًا سَبَّحَ حَمَلَةُ الْعَرْشِ، ثُمَّ سَبَّحَ أَهْلُ السَّمَاءِ الَّذِينَ يَلُونَهُمْ، حَتَّى يَبْلُغَ التَّسْبِيحُ أَهْلَ هَذِهِ السَّمَاءِ الدُّنْيَا» ثُمَّ قَالَ: ” الَّذِينَ يَلُونَ حَمَلَةَ الْعَرْشِ لِحَمَلَةِ الْعَرْشِ: مَاذَا قَالَ رَبُّكُمْ؟ فَيُخْبِرُونَهُمْ مَاذَا قَالَ: قَالَ فَيَسْتَخْبِرُ بَعْضُ أَهْلِ السَّمَاوَاتِ بَعْضًا، حَتَّى يَبْلُغَ الْخَبَرُ هَذِهِ السَّمَاءَ الدُّنْيَا، فَتَخْطَفُ الْجِنُّ السَّمْعَ فَيَقْذِفُونَ إِلَى أَوْلِيَائِهِمْ، وَيُرْمَوْنَ بِهِ، فَمَا جَاءُوا بِهِ عَلَى وَجْهِهِ فَهُوَ حَقٌّ، وَلَكِنَّهُمْ يَقْرِفُونَ فِيهِ وَيَزِيدُونَ ” (مسلم/ ٢٢٢٩)

எவனது பெயர் நாமம் உயந்து அவன் மகத்துவமிக்கவனாக உயர்ந்துவிட்டானோ அந்த அல்லாஹ் வானத்தில் ஒரு விட(ஷ)யத்தை தீர்ப்பளிப்பு விட்டால் அர்ஷை சுமக்கும் வானவர்கள் அவனைத் துதிப்பார்கள். பின்னர் (செய்தி ஜிப்ரீல் அலை மூலம் சொல்லப்பட்டதும்) அதற்கு கீழ் வானவர்கள் அவனைத் துதிப்பார்கள். பின்னர், அர்ஷை சுமக்கும் வானவர்களுக்கும் சென்றடையும், பின் அடுத்து வானத்தில் உள்ள வானவர்கள் அர்ஷை சுமக்கும் வானவர்களிடம் உங்கள் இரட்சகன் என்ன கூறியுள்ளான் எனக் கேட்பார்கள். அவர்கள் தமது இரட்சகன் போதித்தது பற்றி ஏனையவர்களோடு பரிமாறிக் கொள்வார்கள். இவ்வாறு வானத்தில் உள்ள வானவர்கள் ஒருவரை ஒருவர் விசாரித்து கீழ்வானம் வரை அந்த செய்தியைப் பரிமாறிக் கொள்வார்கள். (மக்களை வழிகெடுப்பதற்காக உள்ள ) ஜின்களில் ஒருசாரார் சிலதைத் திருடி தமது மனித தோழர்களுக்கு அறிவித்து அதில் இருந்து திருட்டுத்தனமாக செவிமடுக்கும் போது அந்த நட்சித்தரங்களைக் கொண்டு வானவர்களால் அவர்கள் தாக்கி அழிக்கப்படுவார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மற்றொரு ஹதீஸில் அதில் அவர்கள் ஒரு உண்மையையும் 99 பொய்களையும் கலந்து தமது தோழர்களின் காதுகளில் (டொக்) எனப் போட்டுவிடுவார்கள். எனவே நீங்கள் ஜோதிடம் சொல்வோரிடம் வராதீர்கள் எனக் கூறினார்கள் என வந்துள்ளது.

மறுமையிலும் அல்லாஹ் அர்ஷின்மீதிருத்தவாறே தீர்ப்பளித்து ஆட்சி செய்வான்.

அல்குர்ஆன் இது பற்றி பின்வருமாறு விபரிக்கின்றது.

فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ (15) وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ (16) وَالْمَلَكُ عَلَىٰ أَرْجَائِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ (الحاقة/ ١٥ ١٧)

அப்போது நிகழக்கூடிய நிகழ்வு நடந்து விடும். வானமும் பிளந்து, அது பலவீனமானதாகி விடும். வானவர்கள் பலபாகங்களிலும் (பரவிக்) காணப்படுவார்கள். அந்நாளில் உமது இரட்சகனின் அர்ஷை எட்டு வானவர்கள் சுமப்பார்கள். (அல்ஹாக்கா: வசனங்கள் 15-17)

அல்லாஹ் அர்ஷின் மீதில்லாதிருந்தால் வானவர்கள் அதனை ஏன் சுமந்து வரவேண்டும்?  எனவே அல்லாஹ் அர்ஷின் மீதில்லை என்பதும், நானும் அவனாகலாம் என்பதும் அல்லாஹ்வை தெளிவாக நிராகரிக்கச் சொல்லும் போதனைகளே அன்றி வேறில்லை.

அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களின் தன்மைகள்

அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களை சாதாரண மனிதர்கள் போன்று கற்பனை செய்வதாலும், அல்லாஹ் தனக்குத் தேவையானது; அவசியமில்லாதது எனத் தேர்ந்தெடுத்துள்ள அர்ஷ் என்ற படைப்பு அல்லாஹ்வுக்கு தேவையற்றது என சாதாரண மனிதர்கள் முடிவு செய்வதாலும் அல்லாஹ் அர்ஷின் மீதிருப்பதை நிராகரிக்க சிலருக்கு ஏதுவானதாகிவிடுகின்றதா? எனவே அந்த வானவர்களின் பெறுமானம், தன்மைகள் பற்றியும் முஸ்லிம் ஒருவர் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும்.

அப்போதும் அல்லாஹ் அர்ஷின் மீதுள்ளான் என்பதை முடிவு செய்ய முடியும்.

((أُذن لي أن أحدث عن ملك من ملائكة الله من حملة العرش، إن ما بين شحمة أذنه إلى عاتقه مسيرة سبعمائة عام ((أبو داود ))

அர்ஷை சுமக்கும் அல்லாஹ்வின் வானவர்களில் ஒரு வானவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய நபி ஸல் அவர்கள்: அவர்கள் ஒருவரின் காதின் சோணைக்கும் ( மடல்) அவரது தோழ் புயத்திற்கும் இடைப்பட்ட தூர அளவு (700) எழுநூறு ஆண்டுகள் நடை தூரமாகும் எனக் கூறினார்கள்.(அபூதாவூத்).

அல்லாஹ் அர்ஷின் மீதில்லையானால் அவனது அர்ஷை அவனது வானவர்கள் சுமக்க ஏன் வேண்டும்?

வானத்தில் இருந்து அல்லாஹ்வின் கட்டளைகள் ஏன் வரவேண்டும்? வானவர்கள் ஏன் அங்கிருந்து உலகுக்கு இறங்கி வர வேண்டும்? மீண்டும் அங்கு சென்று அல்லாஹ்வுடன் ஏன் உரையாட வேண்டும் ? என்று சிந்திக்கும் முஸ்லிம் அல்லாஹ் வானில் உள்ள அவனது அர்ஷின் மேலிருந்து சூழ்ந்து அறியும் அவனது அபரிமிதபான அறிவாற்றலால் உலகை ஆட்சி செய்வதை அறிந்து கொள்வான்.

அல்லாஹ் தினமும் அடிவானத்திற்கு இறங்குவது உணர்த்துவது என்ன? 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ “

தினமும் இரவில் மூன்றில் ஒரு பகுதி மீதிருக்கும் போது நமது இரட்சகன் அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்குகின்றான். என்னிடம் யார் பிரார்த்தனை செய்வாரோ அவருக்கு நான் பதில் அளிப்பேன், என்னிடம் யார் கேட்கின்றாரோ நான் அவருக்கு கொடுப்பேன்,
என்னிடம் யார் பாவமன்னிப்பு வேண்டுவாரோ நான் அவருக்கு பாவமன்னிப்பு வழங்குவேன் எனக் கூறுவான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் .(புகாரி/முஸ்லிம்)

குறிப்பு:

  • நானே அவன் எனக் கூறும் அதிகாரம் காத்த நகர் மனிதக் கடவுள் ரவூஃபுக்குண்டா என்று அவரது சீடர்கள் யோசிக்க வேண்டும்.
  • மேற்படி ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதி மற்றும் பல ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெறும்,متواتر முதவாதிர் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

எனவே அதனை நாம் எக்காரணம் கொண்டும் மறுக்க முடியாது. மாற்றமாக மார்க்க விளக்கத்திலும் மொழி அறிவிலும் சிறந்து விளங்கிய நபித்தோழர்கள் முறை கற்பிக்காது, கற்பனையும் செய்யாது , அருள் என்றும் நம்பாது எவ்வாறு அதன் பொருளில் நம்பினார்கள்களோ அவ்வாறு நாமும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதுவே நபி ஸல் அவர்கள் நம்பிய, போதித்த நம்பிக்கையாகும்

அல்லாஹ் தினம் தினம் அர்ஷில் இருந்து இறங்கி வருவதால் அவனது அர்ஷ் காலியாகும் என்பது சிலருக்கு கவலை போலும்!

இவ்வாறான அற்ப கற்பனைகளால் இந்த ஹதீஸுக்கு அல்லாஹ்வின் அருள் இறங்குவதாக நபித்தோழர்களின் நம்பிக்கைக்கு மாற்றமாக பிற்காலத்தில் வந்தவர்களின் உளரல்களையும் கற்பனைகளைகளையும் முன்வைத்து அதனை இவ்வாறு விளக்க முற்படுவதும், அல்லது ஹதீஸில் தெளிவாக வந்திருப்பதை விட தமது கற்பனைகளை முற்படுத்துவதும் ஜஹ்மிய்யா, முஃதஸிலா அஷ்அரிய்யா போன்ற வழிகெட்ட பிரிவுகளின் போக்காகும்.

எனவே அந்தப் பிரிவுகளின் விளக்கத்தை மீண்டும் உயிர்பிக்கும் நவீன வழிகேட்டு வழிகாட்டிகளின் விளக்கம் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

தம்பி மட்டுமில்லை தவ்ஹீத் பேசும் தென்னிந்திய அண்ணனும்தான் சொல்லி இருக்கிறார்.

விளக்கம் சரியா?

அல்லாஹ் தனது அருளைக் குறிக்க பயன்படுத்தும்
الرحمة கருணை
النعمة சிரேஷ்ட அருள்
الفضل மேலதி அருள்
போன்ற தெளிவான எந்த வாசகங்களும் இங்கு இடம் பெறாமல் இதில் அல்லாஹ் இறங்குவதாக வந்துள்ளது. எனவே அவன்

فعال لما يريد 
ولا يسأل عما يفعل 

தான் தாடுவதைச் செய்யக் கூடியவன், அவன் செய்வது பற்றி அவனை யாராலும் அவன் விசாரிக்க முடியாது போன்ற குர்ஆன் வசனங்களின் படி இந்த ஹதீஸை நம்புவதும் அதனை இறங்கி வருதல் என்ற பொருளிலேயே நபித்தோழர்களும் நம்பி
விசுவாசித்தது போன்று நாமும் விசுவாசம் கொள்வது நமது கடமையாகும்.

அதற்கு அல்லாஹ் அர்ஷில் இல்லை. உலகம் முழுவதும் இல்லை, எங்கும் எதிலும் இல்லை. அனைத்தும் அல்லாஹ்தான் என மக்களை மடையர்களாக்கும் அரைகுறை விளக்கங்களை நம்புவது வழிகேடாகும்.

அல்லாஹ் தன்னை ஒருவனாகவும், அழகிய தோற்றம் உள்ளவனாகவும் மறுமை நாளில் அடியார்கள் அவனை நேரடியாக தமது கண்களால் காணக்கூடியவனாகவும்
அறிமுகம் செய்துள்ள நிலையில்…

அத்வைதிகள் எனப்படும் நாஸ்தீககர்கள், அல்லாஹ்வை அவனது படைப்புக்களில் ஒருவனாகவும் சிலைகள், விக்ரகங்கள், மரம், செடி கொடிகள் , கோவிலில் வணங்கப்படும் சாமிகள், எலி, பன்றி, ஏசுநாதர், புத்த பெருமான் போன்ற அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் அனைத்தும் அல்லாஹ் தான், அவற்றை வணங்குவோரும் அல்லாஹ்வையே வணங்குகின்றனர் (نعوذ بالله) போன்ற பழங்கால கிரேக்க மற்றும் இந்திய நாஸ்தீக அத்வைதிகளின் கோட்பாடுகளை இஸ்லாமாக முஃஅவைப்பதன் மூலம் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை திரிகயிப்மதோடு அகௌரவப்படுத்தியும் வாழ்கின்றனர்.

மற்றொரு பிரிவினர் அஸ்மா ஸிஃபாத்தில் வழிகெட்ட அஷ்அரிய்யாக்களாகும்.

  • இவர்கள் தம்மை சுன்னத் ஜமாஅத் முஸ்லிம்களாக உலகுக்கு இன்று வரை அறிமுகம் செய்து வருகின்றனர்.
  • இவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் போதனைப் படியோ, நபித்தோழர்களின் வழிமுறைகளின் வழியிலோ, சிறந்த இமாம்களின் வழியிலோ செல்வதில்லை.

மாற்றமாக ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் பின்னால் வந்த அஸ்மா ஸிஃபாத்தில் இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி என்ற அறிஞரின் தடுமாற்ற காலமாக பதியப்பட்டுள்ள குல்லாபியாக்களின்நிலைப்பாட்டை போதிப்பதன் மூலம் இந்த உலகில் அல்லாஹ் தனக்குரியதாக அறிவித்துள்ள பூரணமான, ஒரு முஸ்லிம் அவசியம் நிலைப்படுத்தி, நம்பிக்கை கொள்ள வேண்டிய அல்லாஹ்வின் உயர்ந்த பண்புகளை அனைத்து குறைபாடுகளும் உள்ள மனிதப் பண்புகளுக்கு ஒப்பிட்டு, அவற்றைக் கொண்டு அல்லாஹ்வுக்கு மனித உருவத்தையும் கற்பனை செய்து விட்டு பின்னர் அப்படி வரமுடியாது என இவர்களாகவே முடிவு செய்து, வழிகெட்டதன் மூலம் இம்மையில் அல்லாஹ் என்பவன் யார் எனத் தெரியாதவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ عِيَانًا» ( أخرجه البخاري برقم/ ٧٤٣٥ )

நிச்சயமாக உங்கள் இரட்சகனை நீங்கள் கண்களால் காண்பீர்கள் ( புகாரி/ 7435)

«إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُونَ فِي رُؤْيَتِهِ ( البخاري) 

இந்த நிலாவைப் பார்ப்பதில் நீங்கள் சிரமப்படாதது போன்று நிச்சயமாக நீங்கள் உங்கள் இரட்சகனைக் கண்களால் அல்லாஹ்வைக் காண்பீர்கள் என நபி ஸல் அவர்கள் கூறிய செய்தி புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மறுமை நாளில் அல்லாஹ்வை முழு நிலைவை போன்று காண்பீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவாறு அந்நாளில் அல்லாஹ் தன்னை தனது படைப்புக்களிடம் காண்பிக்கின்ற போது வெட்கித் தலைகுனியும் நிலை வேறு.

அவ்வாறு தனது உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்துவது நடந்தே தீரும். அந்த நிகழ்வை நிகழ்த்துபவன் புதிதாகத் தோன்றிய அல்லாஹ்வையா குறிக்கும் ? என்ற கேள்விக்கு நவீன அஷ்அரிய்யா வழிகேடர்கள் என்ன பதில் வைத்திருக்கின்றனர்? இது அல்லாஹ்வை கௌரவப்படுத்துவதாக அமையுமா?

அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை அவனுக்கே சொந்தமான, அவனது படைப்புக்கள் எவரும் கூட்டுச் சேரமுடியாத உயர்ந்த பண்புகளைக் கொண்டு ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

  • எதுவும், யாரும் இல்லாத நிலையில் அவனது அர்ஷின் மீதிருந்தவனாக,
  • இப்போதும் அவனது படைப்புகளுக்கு ஒப்பில்லாது இருப்பவனாக,
  • மறுமை நாளிலும் அதன் மீதிருந்தவாறு எட்டு வானவர்களால் சுமக்கப்படுபவனாக நம்பிக்கை கொள்வது போன்று அவனை தனித்தவனாக,
  • அகிலத்தோடு ஒன்றரக் கலக்காதவனாக,
  • ஏழு வானங்களுக்கும் அப்பாலுள்ள அர்ஷின் மீதிருப்பவனாக,
  • மனைவி, மக்கள், இணை துணை அற்றவனாக,
  • இவ்வுலகில் மனித படைப்புக்கள் அவர்களின் கண்ணால் நேரடியாகப் பார்க்க முடியாதவனாக,
  • மறுமையில் நேரில் பார்க்கப்படக் கூடியவனாக,
  • சுவனத்தில் அவனது அடியார்களோடு அவன் தனது மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து யதார்த்தமான அழகான தனது திரையை நீக்கி தன்னை அவர்களுக்கு காண்பிப்பவனாக,
  • மறுமையில் காஃபிர்களும் அவன் ஒருவன் இருப்பதை அங்கீகரித்து, ஒத்துக் கொள்ளப்படுபவனாக,
  • மறுமை நாளில் அடியார்கள் தொடர்பான தீர்ப்புக்களை தன்னந்தனியே நின்று முடித்து வைப்பவனாக

எனப் இன்னும் பல நிரப்பமான, முழுமையான குறைகள் அற்ற, பண்புகளைக் கொண்டு அல்லாஹ் வர்ணிக்கப்படுகின்றான்.

فتعالى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ (116) وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ ۚ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ (المؤمنون: ١١٦- ١١٧) 

சத்தியமான அல்லாஹ் உயர்ந்தவனாகி விட்டான். அவனை அன்றி உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் யாரும் இல்லை. (அவன்) மகத்தான அர்ஷின் அதிபதி. யார் அல்லாஹ்வோடு வேறு கடவுளை அழைக்கிறானோ அதற்கு அவனுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அவனது கணக்கு வழக்கு அல்லாஹ்விடமே உண்டு. நிச்சயமாக இறை நிராகரிப்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள். (அல்முஃமினூன் – 116, 117)

அந்த அல்லாஹ்வை நபித்தோழர்களுக்குப் பின்னால் தோன்றிய வழிகெட்ட அபூ மன்சூர் அல்- ஹல்லாஜ், அபூதாலிப் அல்மக்கி (மக்கு), நாஸ்திகன் இப்னு அரபி போன்ற அரபி மொழி வழிகேடர்களின் இறையிற் கோட்பாடுகளை காப்பி செய்து அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்காது, அல்லாஹ்வும் அவனது தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் கற்றுத்தந்த விளக்கங்களுக்கு மாற்றமான நாஸ்தீக, இறைமறுப்பு சார்ந்த விளக்கங்கள் தந்து அழியக்கூடிய அற்பமான, பலவீனமான, மண்ணோடு மண்ணாக மக்கி, உண்மையான அல்லாஹ்வின் நாட்டத்தால் மீண்டும் எழுப்பபட்டு விசாரிக்கப்பட உள்ள அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பிட்டு

  • நானும் அவனே,
  • அனைத்தும் அவனே,
  • தாயும் அவனே,
  • தந்தையும் அவனே,
  • மலையும் அவனே,
  • காற்றும் அவனே,
  • மழையும் அவனே,
  • கடலும் அவனே,
  • நீரும் அவனே,
  • சிவனும் அவனே,
  • முருகனும் அவனே,
  • புத்தரும் அவனே,

போன்ற வழிகெட்ட இத்துப் போன அத்வைத இந்து மதம் தத்துவங்களால் அல்லாஹ்வை கேவலப்படுத்தி, தானும் வழிகெட்டது மட்டுமின்றி , முஸ்லிமாகப் பிறந்த மற்ற முஸ்லிம் மக்களையும் அத்வைதிகள் வழிகெடுப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த வழிகேடனோடு சுன்னத் ஜமாத் போர்வையில் பசுந்தோல் போ(ர்)த்திய புலிகளாக அஷ்அரிய்யாப் பெயரில் வலம் வரும் வழிகெட்ட ஜஹ்மிய்யாக்களை பின்தொடரும் இலங்கை வாழ் அசத்தியவாதிகளையும் இலக்காகக் கொண்டு அல்லாஹ் அர்ஷின் மீதிருப்பது, உயய்ந்த அவனது பண்புகள் பற்றிய அல்குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளின் சான்றுகளின் சான்றுகளில் இருப்பதை சிறந்த நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்கள் நிலைப்படுத்தியது போன்று அவனது படைப்புக்களுக்கு ஒப்பிடாது, பொருளை சிதைக்காது நாம் நம்பிக்கை கொள்வதன் மூலம் மறுமையில் அந்த இரட்சகனைச் சந்திக்க விரும்பினால் அவனும் நம்மைச் சந்திக்க விரும்புவான் என இடம் பெறும் நபி மொழிக்குரியவர்களாக நம்மை ஆக்குவானாக! ஆமீன்…


Previous Post Next Post