பிரயோசனமான கல்வியும்.. பிரயோசனமற்ற கல்வியும்...

இஸ்லாமிய மார்க்கத்தின் (மராதிப்கள்)-தராதரங்கள் மூன்று. அவையாவன;

1.ஈமான்

2.இஸ்லாம்

3. இஹ்ஸான்

இதனையே 'ஹதீஸே ஜிப்ரீல்' என்று தொடங்கும் ஹதீஸினை உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வினவினார்கள்;

'மன் இஸ்லாம், மன் ஈமான், மன் இஃஸான்'.

இவர் ஜிப்ரீல், உங்களுக்கு உங்களுடைய தீனை கற்றுத்தர வந்தார் என்று நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹ அன்ஹு அவர்களிடம் கூறினார்கள். ( முஸ்லிம் ஹதீஸ் சுருக்கம்)

இமாம் இப்னு ரஜபல் ஹம்பலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவர்களுடைய ஜம்பது ஹதீஸ்களை உள்ளடக்கிய நூலில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

'தீனுடைய மராதிப்' - தராதரங்கள் மூன்று.

அவையாவன; ஈமான், இஸ்லாம், இஃஸான்.

இவைகளுள் முதன்மையான படித்தரத்தினை நோக்கினால்; இவைகள் ஒவ்வொன்றிற்கும் 'ருகூன்கள்' - தூண்கள் உண்டு.

இஸ்லாத்தின் தூண்களை நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்; முதலாவது ருகூனான 'மன் இஸ்லாம்' - இஸ்லாம் என்றால் என்ன என்பதற்கு...

'அஷ்ஹது அன்லாஹிலாஹ இல்லல்லாஹ்,

வஅன்ன முகம்மதுர்ரசூலுல்லாஹ்'

வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன் இன்னும் முகம்மத் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன் என்பது முதலாவது ருகூனாகும்(படித்தரமாகும்).மேலும், ஈமானுக்கு ஆறு ருகூன்கள் உள்ளன என்று நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

'மன் ஈமான்'; ஈமான் என்றால் என்ன? 'அன் துஹ்மின பில்லா' - அதில் முதன்மையானது அல்லாஹ்வை நீங்கள் ஈமான் கொள்வது.

அதேபோன்று 'மன் இஃஸான் ' - இஃஸான் என்றால் என்ன?

'அன் தஹ்புதுல்லா கஅன்னக தராஊ பயின்லம்தகுன் தராஹு பயின்னஹு யரா'

அல்லாஹ்வை காண்பது போன்று நீங்கள் அவனை வணங்க வேண்டும். நீங்கள் அவனைக் காணாவிட்டாலும் அவன் எங்களைப் கண்காணித்துக்கொண்டு இருக்கின்றான் என்ற உணர்வு எம்மிடம்; ஏற்படவேண்டும் அதுவே இஃஸான் என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ( முஸ்லிம் )

இஸ்லாத்தின் மூன்று படித்தரங்களையும் நோக்கினால் இஸ்லாம், ஈமான்; இஃஸான் ஆகியவைகளுள் முதன்மையான.. முக்கியமான அம்சம் அல்லாஹ்வைப் பற்றிய கல்வியாகும்.

உங்களைப் படைத்து, ரிஸக் அளித்து பரிபாலிக்கக்கூடிய ரப்பை அவனுடைய அடிப்படையை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இக்கல்வியுடைய பெருமதி விலைமதிக்க முடியாதொன்றாகும். எத்தனையோ மனிதர்கள் தங்களுடைய ரப்பை அறியாமல் அவனுக்கு சுஜுத்; ருகூ செய்கின்றார்கள், வணங்குகின்றார்கள்.

ஆனாலும் ரப்புல் ஆலமீனானா அல்லாஹு சுபஹான ஹுவத்தாஆலாவை எவ்வாறு வணங்க வேண்டும், எவ்வாறு விளங்க வேண்டும், அவனை எவ்வாறு தனித்துவப்படுத்தல் வேண்டும், நாங்கள் அவனுடைய செயற்பாடுகளில் அவனுக்கு எவ்வாறு இணைவைக்காமல் வணங்குவது, அவனுக்கு குப்ர் செய்யாமல் எவ்வாறு எங்களைப் பாதுகாப்பது, அவனை வணங்குவதில் நிபாக்குடைய நயவஞ்சகத் தன்மையில் இருந்து எவ்வாறு எங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பவைகளை கற்றறிதல் எம்முடைய கடமையாகும்.

இந்த இல்ம் மிக முக்கியமானது. ஓவ்வொரு இல்மிற்கும் ஒரு பெறுமதியுண்டு இன்னும் பெறுபேறும் உண்டு.

இமாம் இப்னு ரஜபல் ஹம்பலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்; 'பள்ல் இல்முல் ஸலப் அலா ஹலப்' என்ற நூலில் அறிவிக்கின்றார்கள்;

ஸலபுஸ்ஸாலிஹீன்கள் பெற்றுக் கொண்ட இல்ம். ' علمن نافي' ; பிரையோசனமான கல்வியாகும்.

நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து கூறினார்கள்;

யா முஆத்! நீங்கள் தொழுகைக்குப் பின்னால் பின்வரும் துவாவை விட்டுவிட வேண்டாம்.

' اللهم إني أسالك علما نافيا ورزق طيبة و عاملا متقابلا ' –

யா அல்லாஹ், பிரையோசனமான கல்வியினைத் தருவாயாக, நல்ல உணவினைத் தருவாயாக, இன்னும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அமலையும் தருவாயாக என்று பிராத்திக்குமாறு நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசித்தார்கள். மேலும் அவர்கள் கேட்டதுவாவும் இதுவாக இருந்தது.

மேலும் நபி சல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் பாதுகாப்பு தேடியவைகளில் ஒன்றே;

யா அல்லாஹ் உன்னிடத்தில் பிரையோசனமில்லாத கல்வியைவிட்டும் பாதுகாவல் தேடுகின்றேன். இதனை ஸைய்த் இப்னு அர்க்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த அடிப்படையில் இல்ம் என்பதை இரு வகைகளாக இமாம் இப்னு ரஜப்பல் ஹம்பலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பிரிக்கின்றார்கள்.

அவையாவன..

1.علمنسلاف

2. علمن حلف

1. 'علمن سلاف' - ஸலபுஸ் ஸாலிஹீன்களுடைய கல்வி.

அதாவது , அல்குர்ஆனையும், அஸ்சுன்னாவையும் ஸஹாபாக்களும், தாபியீன்களும், தப்அத்தாபியீன்களும் சுமந்த பிரையோசனமான கல்வி.

2.'علمن حلف' - பிரையோசனமற்ற கல்வியாகும். அல்குர்ஆனையும், சுன்னவையும் ஸஹாபாக்கள் விளங்கிய முறையில் விளங்காமல்; தனக்கு தேவையானவற்றை தான்தோன்றித்தனமாக பெற்றுக்கொள்வது பிரையோசனமற்ற கல்வியாகும்.

மேலும் அவர்கள் குறிப்பிகின்றார்கள. நீங்கள் ஒரு மரத்தை நடுகின்றீர்கள். அந்த மரத்தை எவ்வித நோக்கமும் இன்றி நடுவீர்களா? நிச்சயமாக இல்லை. ஒரு மனிதன் மரத்தினை நாட்டி அதற்கு தண்ணீர் பாய்ச்சி அதனை வெயிலிருந்து பாதுகாப்பான் என்றால் அதற்கு ஒரு குறிக்கோல் நிச்சயமாகக் காணப்படும்.

ஏனென்றால் அதிலிருந்து அவன் பிரையோசனமான, ஆரோக்கியமான, அதிகமான பலாபலன்களை எதிர் பார்த்தே அம்மரத்தை நட்டுகின்றான். இதே போன்று ஒரு மனிதன் இல்மைப் பெற்று விட்டல் அந்த இல்மின் தாக்கம், அடிப்படை, பெறுமதி, பிரதிபலங்களை அம்மனிதன் காண வேண்டும்.

காணவில்லையென்றால் அவன் பெற்றுக்கொண்ட இல்ம் பிரையோசனமற்ற கல்வியாகும். எவ்வாறு ஒரு மரத்தினை நாட்டிய பின்னர் ஒரு காற்று அடித்து சாய்த்து விட்டுச் செல்கின்றதோ அதே போன்றே எங்களுடைய கல்வியும் காணப்படுகின்றது.

நம்முடைய இல்ம் எப்போது உறுதித்தன்மையுடன் காணப்படுமோ அப்போது வழிகேடர்கள் , நயவஞ்சர்கள், எந்தப்பாதையில் வந்தாலும் அவர்களால் உங்களை அணுஅளவும் அசைக்க முடியாது. நீங்கள் அடிப்படையுடன் உரிய கல்வியினைப் பெற்றுக் கொண்டிருந்தால் உங்களை எவராலும் அசைக்க முடியாதவர்களாகக் காணப்படுவீர்கள். அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்வதே அடிப்படையான கல்வியாகும்.

இதனை இமாம் தகபி ரஹிமஹு லாஹ் அவர்கள் தன்னுடைய 'ஸித்துல் ரஸாயில்' என்ற நூலில் குறிப்பிடுகின்றார். ஒரு மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய, அடிப்படையானதும் மிக முதன்மையானதுமான கல்வி

அல்லாஹு சுபஹானஹுவத்தாஆலாவைப் பற்றி விளங்கிக் கொள்வதாகும்.

அவனை நீங்கள் உரிய முறையில் விளங்கிக்கொண்டால் அதனுடைய பிரதிபலன்கள் என்னவென்பதை 'ஷரஹ் அகீததுல் வாஸித்தியாவின் அத்தன்பிகாதுல் லதீபா' என்ற நூலில் இமாம் முகம்மத் நாஸிர் ஸஹ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்;

அதற்கு உதாரணமாக 'صوره الإخلاص' என்ற சூராவை குறிப்பிடுகிறார்கள். அதாவது அந்த சூரா அல்லாஹ்வைப் பற்றிக் கூறக்கூடிய சூராவாகும். அந்த சூராவை ஒரு உண்மையான முஸ்லிம், உரிய விதத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும்;

ஏனெனில் அந்த சூரா குறிப்பாக அல்லாஹ்வைப்பற்றிக் கூறக்கூடிய தாகும் . நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் முஷ்ரிகீன்கள் வினவினார்கள் 'ஸிப் ரப்பக'? - உங்களுடைய இரட்சகனை எங்களுக்கு வர்ணித்துக் கூறுங்கள். அப்போது நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மௌனமாக இருந்தார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்'صوره الإخلاص' உடன் இறங்கி நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அதனைக் கற்றுக் கொடுக்கின்றார்கள்.

நபியே! 'قل هو الله أحد' நபியே! கூறுங்கள்; உங்களுடைய இரட்சகனுடைய ஸிபாத் மகத்தான, பெறுமதியான, உயர்தரமான அந்த பண்புகளைச் சுமந்த ரப்புல் ஆலமீன் யார் என்பதை இந்த மக்களுக்கு கூறுங்கள். என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களினூடாக அல்லாஹு சுபஹானஹுவத்தாஆலா தான் யார் என்பதை அறிவிப்பதற்காக 'صوره الإخلاص' இறக்கினான்.

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய 'அகிததுல் வாஸிதியா' என்ற நூலில் முதன்மையாக கையாண்ட சூரா 'صوره الإخلاص'.

அஷ்ஷேஹ் அப்துர் ரஹ்மான் நாஸிருல் ஸஹ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவித்துள்ளார்கள் ...

யார் அல்லாஹ்வைப் பற்றி உரிய முறையில் விளங்கிக் கொண்டார்களோ, அதனுடைய அடிப்படைக் கல்வியினைப் பெற்றுக் கொண்டார்களோ அவைகளுடைய பெறுபேறு, பெறுமதி, பிரதிபலன் ஆகியவைகள் எத்தகையதாக இருக்குமென்றால்; அந்த ரப்புல் ஆலமீன் எந்த வாழ்க்கையில் திருப்தி உண்டாக வேண்டும் என்று விரும்புகின்றானோ, மேலும் தன்னுடைய வாழ்க்கையை எம்முறையில் அமைத்துக் கொண்டால் அல்லாஹ்வின் திருப்த்தி உண்டாகுமோ அதனடிப்படையில் அவன் தன்னுடைய வாழ்க்கையினை அமைத்துக் கொள்வான்.

ஏனென்றால் நான் எனக்கு வாழ்க்கை அளித்தவனை அறிந்த கொண்டேன். அதாவது என்னுடைய ரப்பை தான் விளங்கிக் கொண்டால், எனக்கு வாழ்வளித்தவனை, எனக்கு உணவளிப்பவனை இன்னும் என்னுடைய வாழ்விற்கு ஆதாரமளிக்கக் கூடியவனை விளங்கிக் கொள்வேன். என்னுடைய அசைவு, மூச்சு, உயிரோட்டம், மரணம் இன்னும் என்னுடைய அனைத்து நடவடிக்கைகளும் அந்த ரப்புல் ஆலமீனுடைய கட்டளை என்பதை விளங்கிக் கொள்வேன்.

அவன் எங்களை திருப்த்தியடைகின்றானா , அவனுடைய திருப்தி எதிலுள்ளது என்று கவனித்து அவ்வாறு நான் எனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன்.

அவ்வாறு அமைந்து கொண்டால் என்னுடைய செயற்பாடுகளில், குணங்களில், அன்றாட செயற்பாடுகளில், நான் மனிதனோடு உறவாடினாலும், மிருகங்களுடன், பறவைகளுடன் இன்னும் அல்லாஹ்வின் ஏனைய படைப்புகளுடன் உறவாடினாலும்; நன்முறையிலே உறவாடுவேன்.

என்னுடைய அஃலாக்குகள், ஆதாபுகள், முஆமலாத்துக்கள் நம்பிக்கைகள், கொடுக்கல் வாங்கல்கள்; வியாபாரங்கள் அல்லது என்னுடைய தொடர்புகள் அனைத்தும் அல்லாஹ்வைப் பற்றிய அறிவு சரியாக இருந்து அதில் உறுதியாக இருந்தால் அதனுடைய பிரதிபலன் இவ்வாறு இருக்கும் என்று ஷேக் அப்துர் ரஹ்மான் நாசர் ஸஹ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'அத்தன்பிஹாதுல் லதீபாவிலே' குறிப்பிடுகின்றார்கள்.

தவ்ஹீத், ஈமான், குப்ர், ஷிர்க், நிபாக் போன்றவற்றை கற்று விளங்கிக் கொண்டால் அதனுடைய பிரதிபலன், என்னுடைய வாழ்க்கையில், வணக்கவழிபாடுகளில், அஹ்லாக்குகளில், ஆதாபுகளில், முஆமலாத்துக்களில் உரிய முறையில் உறுதியாக இருத்தல் வேண்டும்.

சரி என்பது எது வென்று அல்லாஹ் சுபஹானஹுவத்தாஆலா அவனுடைய தூதர் முகம்மது சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மூலம் தெட்டத் தெளிவாகக் காட்டிவிட்டான்.

அவர்கள் நல்லவைகள் அனைத்தையும் எமக்குக் காட்டித்தந்துள்ளார்கள்.

எவைகள் எல்லாம் நன்மையாக அமையுமோ அவைகள் அனைத்தையும் ஒவ்வொரு தூதரும் அவர்களுடைய சமுகத்தினருக்கு எத்திவைக்காமல் சென்றதே இல்லை.

அதேபோன்று எவைகள் எல்லாம் தீயவைகளாக அமைகின்றதோ அவைகளை எச்சரிக்காமல் எந்தவொரு தூதரும் செல்லவில்லை என்று இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (முஸ்னத் அஹ்மத)

அல்லாஹ் ரப்புல்லாலமின் நம் அனைவருக்கும் பயனுள்ள கல்வியை தந்தருள்வானாக.

-அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்

எழுத்து வடிவில் உம்மு ருஸைக்
Previous Post Next Post