அநியாயக்காரனுக்கு உதவி செய்!' என்ற நபிமொழி வாசகத்தின் அர்த்தம் என்ன?


            இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஸைத் அல்மத்ஹலீ (ரஹிமஹுல்லாஹ்)  கூறுகின்றார்கள்:

*“உன் சகோதரன் அநியாயக்காரனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் இழைக்கப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்! ......”*.  (ஸஹீஹுல் புகாரி - 6952) 

           ஹதீஸில் வந்திருக்கும் இவ்வாசகத்திற்கு ஹதீஸ் துறை அறிஞர்களிடம் காணப்படும் மார்க்க ரீதியான விளக்கம் வருமாறு:-

          *“அநியாயம் இழைக்கப்பட்டவராக இருந்தால்,* முடியுமான சாதனங்கள் அனைத்தையும் பயன்படுத்தி அவருக்கான உரிமையை பூரணமாக அவர் பெற்றுக்கொள்ளும் வரைக்கும் அவருக்கு உதவி செய்வதாகும். இதுதான் இவருக்குச் செய்கின்ற உதவியாகும். *அநியாயக்காரனாக இருந்தால்,* அவனது கரங்கள் இரண்டையும் பிடித்து அநியாயம் செய்யக்கூடாது என உபதேசித்து, அநியாயத்தை விட்டும் அவனைத் தடுத்து நிறுத்துவதாகும். இதுவே, இவனுக்குச் செய்யும் உதவியாகும்.  அவனது அநியாயம் மானம் மரியாதைகள், அல்லது பணம் சொத்துக்கள், அல்லது உயிர்கள் போன்றவற்றோடு சம்பந்தப்பட்டதாக இருப்பினும் சரியே.

         நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் நுபுவ்வத்திற்கு (அதாவது, நபி என்ற அந்தஸ்து கிடைப்பதற்கு) முன்னரான அறியாமைக்காலத்து மக்களின் வழக்கில் இவ்வாசகத்தின் கருத்து: *“அநியாயக்காரனாக, அல்லது அநியாயம் இழைக்கப்பட்டவனாக என எப்படியிருந்தாலும் உனது சகோதரனுக்கே நீ உதவி செய்!”* என்பதாகும். அதாவது, தமது கோத்திரத்து சகோதரனோடு முரண்பட்டு சண்டையிட்டவரைப் பொருட்படுத்தாது தமது சகோதரனின் நலனை மாத்திரமே அவர்கள் கவனத்தில் கொண்டார்கள். தமது கோத்திரத்தவரோடு முரண்பட்டு சண்டையிட்டவர் அநியாயம் இழைக்கப்பட்டவராக இருந்தாலும் சரி,  அல்லது அநியாயக்காரனாக இருந்தாலும் சரி, அல்லது உரிமையைப் பெறும் தகுதியுடைய உண்மையாளராக அவர்  இருந்தாலும் சரி,  அல்லது உரிமையைப் பெறும் தகுதியற்ற பொய்யராக இருந்தாலும் சரி தமது கோத்திரத்தானுக்கே அவர்கள் உதவுவார்கள். காரணம், இது விடயத்தில் அவர்கள் மார்க்க நெறிமுறை எதையும்  கடைப்பிடிக்காதவர்களாகவே இருந்தார்கள்”.

*{* நூல்: 'அல்பfவாயிதுல் ஜலிய்யா ஷர்ஹு மசாயிலில் ஜாஹிலிய்யா', பக்கம் - 209 *}*


🖊 قال شيخنا العلّامة زيد المدخلي رحمه الله: 


 وفي الحديث: *”أنصر أخاك ظالماً أو مظلوماً“* 

       وفي تفسيره الشرعي عند المحدثين، أنه ينصره إذا كان مظلوماً حتى يستوفي حقه، بكل وسيلة من الوسائل الممكنة، وينصره إذا كان ظالماً بالأخذ على يديه، وكفه عن الظلم وردعه، سواء كان ظلمه في الأعراض أو الأموال أو الدماء .


وأما في مفهوم الجاهلية: فانصر أخاك ظالماً أو مظلوماً؛ فإنهم ينصرونه على خصمه سواء كان خصمه مظلوماً أو كان خصمه ظالماً، وسواء كان محقاً، أو كان مبطلاً؛ لأنهم لا يتقيدون بشرع .


📚 { الفوائد الجلية شرح مسائل الجاهلية ص ٢٠٩ }

♾♾♾♾♾♾♾♾♾♾

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

        

Previous Post Next Post