சிறப்புகள் அனைத்தையும் பொதிந்திருக்கும் இரு நபிமொழிகள்


🌟 நபித்தோழர் அபூஹுரைரா (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

          *“ஒருவர் இறைத்தூதர்  (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் வந்து, 'எனக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். அதற்கு நபியவர்கள், 'நீ கோபத்தைக் கைவிடு!' என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (அறிவுரை கூறுங்கள்! எனப்) பலமுறை கேட்டபோதும், 'நீ கோபத்தைக் கைவிடு!' என்றே நபியவர்கள் சொன்னார்கள்”*. (நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் - 6116)

🌟 நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

           *“உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்”* என இறைத்தூதர்  (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, ஹதீஸ் இலக்கம் - 13)

            இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா இப்னு ஹஸ்ம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

            “தனக்கு அறிவுரை கூறுமாறு கேட்டவருக்கு *'நீ கோபத்தைக் கைவிடு'* என்று இறைத்தூதர் ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறிய கூற்று, மற்றும் *'ஒருவர் தனக்கு விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்ப வேண்டும்'* என்ற அவர்களின் பணிப்புரை ஆகிய இவ்விரண்டும் சிறப்புகள் அனைத்தையும் பொதிந்திருக்கின்ற இரு நபிமொழிகளாகும்.  கோபம் பலமாக இருந்தாலும் அதன் ஆசைக்குக் கட்டுப்படாதிருக்கும்படி மனதைக் கட்டுப்படுத்தி அதைத் தடுத்து நிறுத்துகின்ற அம்சம் நபியவர்கள் கோபத்தைத் தடைசெய்த விடயத்தில் இருக்கின்றது. மனவிருப்பங்களும், அதன் ஆசைகளும் பலமாக இருந்தாலும் அவற்றிற்கு அடிபணியாதிருக்கும்படி அதைத் தடுத்து நிறுத்துகின்ற அம்சம், 'ஒருவர் தனக்கு விரும்புவதையே மற்றவருக்கும் விரும்ப வேண்டும்' என்ற நபியவர்களின் பணிப்புரையில்  இருக்கின்றது”.

*[* நூல்: 'கிதாபுல் அஹ்லாக் வஸ்ஸியர்' லிப்னி ஹஸ்ம், பக்கம் - 84 *]*


🌟 عن أبي هريرة رضي الله:  *{ أن رجلا قال للنّبيّ صلّى الله عليه وسلم « أوصني » ، قال: « لا تغضب »، فردّد مرارا، قال: « لا تغضب » }*. 

[ رواه البخاري، رقم الحديث - ٦١١٦ ]

🌟 عن أنس بن مالك رضي الله عنه، أن النبي صلّى الله عليه وسلم قال: *{ لا يؤمن أحدكم حتى يحبّ لأخيه ما يحبّ لنفسه }*

[ رواه البخاري، رقم الحديث - ١٣ ]

             قال العلاّمة إبن حزم رحمه الله تعالى:-

          { قول رسول الله صلّى الله عليه وسلم للّذي استوصاه: *« لا تغضب »*؛ وأمره عليه الصلاة والسلام *« أن يحبّ المرء لغيره ما يحبّ لنفسه »* ، جامعان لكل فضيلة؛ لأن في نهيه عن الغضب ردع النفس ذات القوة الغضبية عن هواها. وفي أمره عليه السلام بأن يحبّ المرء لغيره ما يحبّ لنفسه ردع النفس عن القوة الشهوانية }.

*[* المصدر: 'كتاب الأخلاق والسير' لابن حزم، ص - ٨٤ *]*

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Previous Post Next Post