நல்லதும் கெட்டதும் சமமாகமாட்டாது


🌟 அல்லாஹ் கூறுகிறான்: *“தீயது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும், தீயதும் நல்லதும் சமமாகமாட்டாது' என்று (நபியே) நீர் கூறுவீராக. சிந்தனையுடையோரே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்”*. (அல்குர்ஆன், 05:100)

         அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “நபியே!  ஒவ்வொன்றிலும் இருக்கக்கூடிய நல்லதும் கெட்டதும் சமமாகவேமாட்டாது என்று தீமையை எச்சரித்து, நன்மையில் ஆசையூட்டியவராக மக்களுக்கு நீர் கூறுவீராக! ஈமானும், குfப்ரும் சமமாகமாட்டாது; கட்டுப்படுதலும், மாறு செய்தலும் சமமாகமாட்டாது; சுவர்க்கவாதிகளும், நரகவாதிகளும் சமமாகமாட்டார்கள்; துர்ச்செயல்களும், நற்செயல்களும் சமமாகமாட்டாது; தடுக்கப்பட்ட ஹராமான வழியில் சேர்த்த சொத்துப்பத்துகள், ஆகுமான ஹலாலான வழியில் சேர்த்த சொத்துப்பத்துகளுடன் சமமாகமாட்டாது.

*“தீயது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும்...* என்ற இவ்வாசகம், (தீமைக் கவர்ச்சிக்கு உள்ளான) மனிதனுக்கு அது எப்பயனையும் அளிக்காது என்பதையும், மாறாக அவனுக்கு அது, அவனது மார்க்க விடயத்திலும் உலக விடயத்திலும் தீங்கைத்தான் ஏற்படுத்தும் என்பதையும் விளக்கப்படுத்துகிறது.


*சிந்தனையுடையோரே! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்”*: நிரப்பமான சிந்தனைகளும், பூரணத்துவமான கருத்துக்களையுமுடைய புத்திசாலிகளுக்குத்தான் அல்லாஹ் இங்கு கட்டளை பிறப்பிக்கின்றான்;  தனது கட்டளையை இவர்களுக்கே அவன் முன்வைக்கின்றான்; ஏனெனில், இவர்களுக்கே விளக்கம் கிடைக்கும்; இவர்களில்தான் நலவும் இருக்கும் என்று நல்லாதரவு வைக்கப்பட முடியும்!.

        அல்லாஹ்வின்  ஏவல், அவனின் விலக்கல் ஆகியவற்றில் அவனுடைய திருப்தியும் உடன்பாடும் இருக்கக்கூடிய அமைப்பில் மனிதனின் செயல்பாடு இருக்க வேண்டும் என்பதுதான் 'தக்வா'வாகும். இந்த 'தக்வா'வில்தான் வெற்றியே தங்கியுள்ளது என்பதாக இதன் பின்னர் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். காரணம், அல்லாஹ்வை அஞ்சி வாழ்பவர் அனைத்து வெற்றிகளையும் அடைந்து விடுகிறார்; அவனை அஞ்சி வாழ்வதை விட்டுவிட்டவருக்கு நஷ்டம் கிடைப்பதோடு, இலாபங்களும் அவருக்குத் தவறிப் போய்விடுகிறது!”.

{ நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான் fபீ தfப்சீரி கலாமில் மன்னான்', பக்கம்: 207, 208 }

          

   🌟 قال الله تعالى: *{ قل لّا يستوى الخبيث والطّيّب ولو أعجبك كثرة الخبيث فاتّقوا الله يا أولي الألباب لعلّكم تفلحون }* « سورة المائدة، الآية : ١٠٠ »

           قال العلاّمة المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله:

           { أي: قل لّلنّاس محذّرا عن الشّرّ ومرغبا في الخير : لا يستوي الخبيث والطّيّب من كلّ شيئ. فلا يستوي الإيمان والكفر، والطاعة والمعصية، ولا أهل الجنة وأهل النار، ولا الأعمال الخبيثة والأعمال الطّيّبة، ولا يستوي المال الحرام بالمال الحلال.

      *"ولو أعجبك كثرة الخبيث"* : فإنّه لا ينفع صاحبه شيئا، بل يضرّه في دينه ودنياه.

       *"فاتّقوا الله يا أولي الألباب لعلّكم تفلحون "*: فأمر أولي الألباب، أي: أهل العقول الوافية، والآراء الكاملة، فإن الله تعالى يوجه إليهم الخطاب. وهم الذين يؤبه لهم، ويرجى أن يكون فيهم خير.

           ثم أخبر أن الفلاح متوقّف على التقوى التي هي موافقة الله في أمره ونهيه. فمن اتّقاه أفلح كلّ الفلاح؛ ومن ترك تقواه حصل له الخسران، وفاتته الأرباح }.

[ المصدر: ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان' للسّعدي، ص - ٢٠٧ ، ٢٠٨ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post