இஸ்திகாரா'வை அற்பமாகக் கருதாதிருப்போம்


🔅ஜாபிர்  (ரழியழ்ழாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்:

         “நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் நல்லதைத் தேர்ந்தெடுக்கப் பிரார்த்திக்கும் முறையை (இஸ்திகாராவை) குர்ஆனின் அத்தியாயங்களைக் கற்றுத் தருவதைப் போன்று கற்றுத் தருபவர்களாய் இருந்தார்கள். 

(அந்த முறையாவது): நீங்கள் ஒன்றைச் செய்ய நினைத்தால் கூடுதலான (நஃபிலான) இரண்டு ரக்அத்கள் தொழுது கொள்ளுங்கள். பிறகு அல்லாஹ்விடம்,  *“அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக்க பி இல்மிக்க, வ அஸ்தக்திருக்க பி குத்ரத்திக்க, வ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்கல் அழீம். ஃபஇன்னக்க தக்திரு வலா அக்திரு; வதஃலமு வலா அஃலமு வஅன்த்த அல்லாமுல் ஃகுயூப். அல்லாஹும்ம இன் குன்த்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர் கைருன்லீ 'ஃபீ தீனீ, வமஆஷீ, வ ஆகிபத்தி அம்ரீ' .வ இன் குன்த்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர் ஷர்ருன் லீ ஃபீ தீனீ, வ மஆஷீ, வ ஆகிபத்தி அம்ரீ  ஃபஸ்ரிஃப்ஹு அன்னீ, வஸ்ரிஃபினீ அன்ஹு, வக்துர் லி யல் கைர ஹய்சு கான, ஸும்ம ரள்ளினீ பிஹி”* என்று பிரார்த்தித்து, 'உங்கள் தேவை இன்னதெனக் குறிப்பிடுங்கள்' என்று கூறினார்கள். 

*(பொருள்:* இறைவா! நீ அறிந்துள்ள படி (எது எனக்கு) நன்மை(யோ அ)தனை ஆற்றலால் எனக்கு ஆற்றல் உண்டாக வேண்டுமென உன்னிடம் கோருகிறேன். உன்னுடைய மாபெரும் அருளைக் கோருகிறேன். ஏனெனில், 'நீயே ஆற்றல் மிக்கவன்; எனக்கோ எந்த ஆற்றலும் கிடையாது. நீயே நன்கறிந்தவன்; எனக்கோ எந்த அறிவும் கிடையாது. நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன். இறைவா! இந்தக் காரியம் எனக்கு 'என் மார்க்கத்திலும் என் வாழ்க்கையிலும் என் காரியத்தின் முடிவிலும்' அல்லது 'என் இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும்' நன்மையானதாக இருக்குமென நீ அறிந்திருந்தால் அதைச் சாதிப்பதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! இந்தக் காரியம் எனக்கு 'என் மார்க்கத்திலும் வாழ்க்கையிலும் தீமையானதென நீ அறிந்திருந்தால் இக்காரியத்தை என்னைவிட்டுத் திருப்பிவிடுவாயாக! என்னையும் இக்காரியத்தைவிட்டுத் திருப்பிவிடுவாயாக. நன்மை எங்கிருந்தாலும் அதை அடைவதற்குரிய ஆற்றலை எனக்கு வழங்குவாயாக! பிறகு அதில் எனக்குத் திருப்தியை அளித்திடுவாயாக.) 

[ நூல்: புகாரி - 6382 ]

👉🏿 அல்லாமா அல்அய்னீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          *“எல்லா விடயங்களிலும்..”* என்ற நபியவர்களின் இக்கூற்று,  பொதுவாக எல்லா நல்ல விடயங்களிலும் அல்லாஹ்விடம் 'இஸ்திகாரா'வைக் கேட்கலாம் என்பதற்கான ஆதாரமாகும். எனவே, விடயம் சிறிது என்பதற்காக வேண்டி அதை அற்பமாகக் கருதி, அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அதில் இஸ்திகாரா செய்வதை ஒருவர் விட்டுவிடக் கூடாது.

       அலட்சியமாகவும், இழிவாகவும் கருதப்பட்ட எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன! அவற்றை  செய்திருப்பதாலும், அல்லது செய்யாது அவற்றை விட்டிருப்பதாலும் பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. எனவேதான், *“உங்களில் ஒருவருடைய செருப்பின் வார் அறுந்தாலும், அதைச் சீர்செய்து தரும்படி தனது இரட்சகனிடம் அவர் கேட்டுக்கொள்ளட்டும்!”* என நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்”.

[ நூல்: 'உம்ததுல் காரீ', 07/223 ]


🔅عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كُلِّهَا كَالسُّورَةِ مِنْ الْقُرْآنِ إِذَا هَمَّ بِالْأَمْرِ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ ثُمَّ يَقُول:ُ *{ اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ رَضِّنِي بِهِ }* وَيُسَمِّي حَاجَتَهُ . 

           قال العلّامة العيني رحمه الله تعالى:-

          { قوله: *"في الأمور كلّها"*: دليل على العموم، وأن المرء لا يحتقر أمرا لصغره وعدم الإهتمام به، فيترك الإستخارة فيه.

         فربّ أمر يستخفّ بأمره فيكون في الإقدام عليه ضرر عظيم أو في تركه. ولذلك قال النّبي صلّى الله عليه وسلم: *«ليسأل أحدكم ربّه حتى في شسع نعله»*

[ المصدر: 'عمدة القاري، ٧/٢٢٣ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post