அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
*“இறைநம்பிக்கையாளர் ஒருவர் தூங்க முற்படுகின்ற வேளையில் அல்லாஹ்வுக்கென ஒரு நேரத்தை ஒதுக்கி அவர் உட்கார்ந்துகொள்ள வேண்டும். அதில், அன்றைய தினத்தில் தான் அடைந்துகொண்ட நஷ்டம் என்ன? பெற்றுக்கொண்ட இலாபம் என்ன? என்று தன்னையே அவர் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், தனக்கும் அல்லாஹ்வுக்கிடையிலும் தூய்மையானதோர் பாவமன்னிப்பை அவர் உருவாக்கிக்கொண்டு அந்தப் பாவமன்னிப்பின் மீதே அவர் தூங்க வேண்டும்; தூங்கி எழுந்துவிட்டால் பாவத்திற்குத் திரும்பச் செல்லமாட்டேன் என்றும் அவர் உறுதிகொள்ள வேண்டும்.*
*ஒவ்வொரு இரவிலும் இதை அவர் செய்து வந்து, அந்த இரவில் அவர் மரணித்துவிட்டால் பாவமன்னிப்புக் கேட்ட நிலையில் அவர் மரணிக்கிறார். விழித்துக்கொண்டால் தனது வாழ்நாள் பிற்படுத்தப்பட்டிருக்கிறது என்று சந்தோசப்பட்டு நற்காரியம் புரியும் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் விழிக்கின்றார். முடிவில், அவர் தன் இரட்சகனை சந்தோசத்துடன் நேருக்கு நேராகச் சந்திக்கின்றார். இந்தத் தூக்கத்திலிருந்து கிடைக்கும் மிகப்பெரும் பயனைவிட வேறெதுவுமே இறைநம்பிக்கையாளர் ஒருவருக்கு இருக்க முடியாது. குறிப்பாக அவர், தூங்க முன் பாவமன்னிப்புத் தேடியதன் பிற்பாடு அல்லாஹ்வை திக்ர் செய்துகொண்டு, தூக்கத்திற்கு முன் பேண வேண்டிய நபிவழிகாட்டல்களை அவர் செயல்படுத்திக்கொள்வது மிகப் பயனுள்ளதாக இருக்கும்!”.*
( நூல்: 'கிதாபுர் ரூஹ்', பக்கம்: 79 )
قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-
*« أن يجلس الرجل عندما يريد النّوم للّه ساعة يحاسب نفسه فيها على ما خسره وربحه في يومه، ثم يجدد له توبة نصوحا بينه وبين الله، فينام على تلك التّوبة، ويعزم على أن لا يعاود الذّنب إذا استيقظ.*
*ويفعل هذا كلّ ليلة، فإن مات من ليلته مات على توبة؛ وإن استيقظ إستيقظ مستقبلا للعمل مسرورا بتأخير أجله، حتى يستقبل ربّه، وليس للعبد أنفع من هذه النّومة، ولا سيما إذا عقب ذلك بذكر الله واستعمال السّنن »*.
{ المصدر: 'كتاب الرّوح'، ص - ٧٩ }
🌠➖➖➖➖➖➖➖➖🌠
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா