கெட்டவர்கள் தம்மை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவே முயற்சிப்பர்


     அறிஞர் அஷ்ஷெய்க் ரபீbஃ பின் ஹாதீ அல்மத்ஹலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

         “வழிகெடுக்கும் மனித இன விரோதியான இந்த 'இப்லீஸ்' எம் தந்தை ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடமும், அவர்களின் துணைவியார் ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) அவர்களிடமும் *'நான் அநியாயக்காரன்;  கெட்டவன்'* என்றெல்லாம் கூறவில்லை. மாறாக,  *“நிச்சயமாக நான் உங்கள் இருவருக்கும் உபதேசம் செய்வோரில் உள்ளவன் என்றுதான்  அவ்விருவரிடமும் அவன் சத்தியம் செய்தான்”*. (அல்குர்ஆன், 07:21)

        கொடுங்கோல் ஆட்சி புரிந்த அக்கிரமக்கார அரசன் பிfர்அவ்ன் கூட, *'நான் அடக்கியாளும் அநியாயக்கார இறைமறுப்பாளன்'* என்று தன் சமூகத்தாரிடம் கூறவில்லை. மாறாக, இறைத்தூதர் மூசா (அலைஹிஸ்ஸலாம்)  அவர்கள் விடயத்தில் தன் சமூகத்தாரிடம் அவன், *“உங்களது மார்க்கத்தை இவர் மாற்றிவிடுவார். அல்லது பூமியில் குழப்பத்தை ஏற்படுத்துவார் என்று நான் அஞ்சுகிறேன்”* (அல்குர்ஆன்,40:26) என்றும், *“நான் (சரியென்று) காண்பதையே உங்களுக்கும் காட்டுகிறேன். நேரான வழியைத் தவிர வேறு எதையும் உங்களுக்கு நான் காட்டவில்லை”*  (அல்குர்ஆன்,40:29) என்றும் கூறினான்.

          வழிகேடு மற்றும் அசத்தியத்துக்கு அழைப்பு விடுக்கின்ற பெரும்பாலானவர்களும், சத்தியத்தின் எதிரிகளும் இவ்வாறுதான்..! இவர்களில் எவனும் *'நான் கெட்டவன் என்றோ, உங்களை வழிகெடுக்க நான் விரும்புகிறேன்'* என்றோ கூறமாட்டான். மாறாக இவன், தன் தவறான நிலைப்பாட்டை அல்குர்ஆனுடனும் ஹதீஸுடனும் தொடர்புபடுத்தி நியாயப்படுத்துவான். இறைத்தூதர் மீதும் இஸ்லாத்தின் மீதும் தனக்கு அன்பு இருப்பதாகவும், உளத்தூய்மை, உண்மை, உபதேசம் ஆகியவற்றை தான் கடைப்பிடித்து நடப்பதாகவும் வாதிடுவான். இந்தச் சூழலியே தனது  தவறான சிந்தனையையும், வழிகேட்டையும், தனது நச்சுக் கருத்துக்களையும் பரப்புவான்”.

[ நூல்: 'தஹ்ரு இப்fதிராஆதி அஹ்லிஸ் ஸைகி வல்இர்தியாப்', பக்கம்: 173 ]


🖋قال الشيخ العلامة ربيع بن هادي المدخلي حفظه الله : 

        « فهذا إبليس ما قال لآدم وحواء إني ظالم فاجر ، بل *{وقاسمهما إني لكما لمن الناصحين}*، وهذا فرعون ما قال لقومه إني كافر ظالم جبار، بل يقول لهم في حق نبي الله موسى *{إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد}*، وقال لقومه: *{ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد}*.

          وهكذا جل دعاة الضلال والباطل وأعداء الحق، لا يقول أحد منهم إني فاجر وأريد أن أضلكم، بل يتعلق بالكتاب والسنة ويدعي حب الرسول والإسلام ويدعي الإخلاص والصدق والنصح، وفي هذه الأجواء ينشر باطله وضلاله وسمومه ».

📚 دحر افتراءات أهل الزيغ واﻹرتياب (ص 173)

⭕➖➖➖➖➖➖➖➖⭕

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்   N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

             

Previous Post Next Post