யஸீத் பின் முஆவியாவைப் பற்றி அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கோட்பாடு.

யஸீத் இறைத்தூதர் ﷺ அவர்களின் தோழர்களில் ஒருவரல்ல என்பதில் சந்தேகமில்லை, மேலும் அவர் அவர்களை நல்லெண்ணத்துடன் பின்பற்றியவர்களில் ஒருவரல்ல, மேலும் அவரது கிலாஃபாவின் காலத்தில் பெரிய விபரீதங்கள் கொண்ட பல நிகழ்வுகள் நடந்தன,

 அதில்: ஹுசைன் பின் அலி ரழியல்லாஹு அன்ஹு -  அவர்கள் உபைதுல்லாஹ் பின் ஜியாத் நடத்திய இராணுவ தாக்குதலால் ஷஹீதாக்கப்பட்டார்கள் - மறுமையில் அல்லாஹ் அவர்களுக்கு நீதத்தை வழங்குவானாக- அது மிகவும் பிரபலமானதும், வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளில் மிகக் கொடூரமானதுமாகம், அல்-ஹுசைன் பின் அலி ரழியல்லாஹு அன்ஹு- மற்றும் அவரது குடும்பத்தினரையும் தண்ணீர் அருந்துவதுவதிருந்து தடுத்தது, அவர்களை கொடூரமாக கொன்றது, மேலும் அவன் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலையை யஸீத்திடம் அனுப்பினான்.

 ஈராக்கிலிருந்து ஷாம் வரை, யஸீத் ஹூசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொன்றதில் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது, பின்னர் அவர் அதற்காக வருந்தினார் என்றும் வரலாற்றில் கூறப்படுகிறது. 

அந்த பெரிய விஷயங்களில், அவர் இறைத்தூதர் ﷺ அவர்களின் நகரத்திற்கு (மதீனா) ஒரு இராணுவத்தை தயார் செய்தார், அவருடைய வீரர் ஒருவர் தலைமையில், இராணுவம் கைப்பற்றிய மூன்று நாட்களுக்குள் நகரத்தை அழிக்க உத்தரவிட்டார். 

 மேலும் பல நபித் தோழர்களும் , தாபியீன்களும் அங்கு ஷஹீதாக்கப் பட்டனர், அவர்கள் அங்கு ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்தனர்.

 மேலும் இவை அனைத்துடனும்;  அறிவார்ந்த புலனாய்வாளர்கள், உலமாக்களும் யஷீதை காஃபிர் (இறை மறுப்பாளர்) என்று அறிவிக்கவில்லை, மாறாக அவருடைய விஷயத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறார்கள்.

எனவே அவரை திட்டுவதும் சாபம் விடுவதும் நமது முன்னோர்களான நபித்தோழர்களின் வழக்கம் அல்ல.

எனவே அவரை ரழியல்லாஹு அன்ஹு என்று கூறுவது கூடாது அவர் நபித் தோழரோ தாபிஈயோ அல்லர்,

இதனாலேயே, அவர் சபிக்கவோ, நேசம் கொள்ளப்படவோ கூடாது என்பது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையாகும்  ,

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மகனார் ஸாலலிஹ் பின் அஹ்மத் பின் ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார் 

“நான் என் தந்தையிடம் சொன்னேன்: சிலர் யஸீத்தை நேசிக்கிறார்கள் என்றேன்: என் மகனே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் யாராவது யஸீதை நேசிப்பார்களா? நீங்கள் அவரை சபிக்கவில்லையா? என்று நான் கேட்டதற்கு... உன் தந்தை யாரையாவது சபித்து பார்த்திருக்கிறாயா என்று சொன்னார்.

 யஸீத் பின் முஆவியாவின் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸை எழுதுவீர்களா?  அவர் கூறினார்: இல்லை, அவர் மதீனா மக்களுக்கு பல இன்னல்களை செய்தவர் அல்லவா? என்று கூறினார்கள் என்றும் வந்துள்ளது.

 முஸ்லீம்களின் இமாம்கள் மற்றும் அறிஞர்களின் கூற்றுப்படி, மன்னர்களில் யஸீத் ஒரு மன்னர், இறை நேசர்களை போன்று அவர்களை நேசிக்க தேவையுமில்லை அவரை சபிக்கத் தேவையும் இல்லை, ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட முஸ்லிமை சபிக்க விரும்பவில்லை;  ஸஹீஹ் அல் புகாரியில் வந்திருக்கும் ஒரு அறிவிப்பு உமர் பின் அல்-கத்தாப் - ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் ,"ஒரு மனிதன் கழுதை என்று அழைக்கப்பட்டான், அவன் மது அருந்தி வந்தான், அவன் நபியவர்களிடம் கொண்டு வரப்பட்ட போதெல்லாம் மது அருந்தியதற்காக தண்டிக்கப்பட்டான், உடனே ஒருவர் அல்லாஹ் அவனை சபிப்பானாக என்றார், அல்லாஹ்வின் தூதரிடம் இதற்காக அதிகமாக அவர் வந்து போகிறார் என்றார், இறைத்தூதர் அவர்கள் அவரை சபிக்க வேண்டாம் ஏனெனில் அவர் அல்லாஹ்வின் மீதும் அவனின் தூதுவரின் மீதும் பிரியமாக இருக்கிறார் என்று கூறினார்கள்.

இமாம் தஹபி அவர்கள் ஸியர் அஃலாமின் நுபலா இந்தப் பிரசித்தி பெற்ற ரிஜால் துறையில் எழுதப்பட்ட புத்தகத்தில் யஸீத் பின் முஆவியாவை அவற்றை கூறும் பொழுது நாம் அவரை திட்டவும் மாட்டோம் விரும்பவும் மாட்டோம் என்று கூறுகிறார்கள். 

அல்லாஹ் மிகவும் அறிந்தவன். 

https://www.islamweb.net/ar/article/13341/%D9%85%D9%86-%D9%86%D8%AD%D9%86

-தமிழில் 
உஸ்தாத் SM.இஸ்மாயீல் நத்வி
Previous Post Next Post