சலசலப்புகளுக்கு அஞ்சாமல் நெஞ்சுறுதியுடன் வாழ்வோம்!


           அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           “சுன்னாவை உறுதியாகப் பற்றிப்பிடித்து வாழ்தல் என்பது இலேசான காரியம் அல்ல. அதில் துன்பமும் இருக்கிறது; சோதனையும் இருக்கின்றது. அங்கே சில மனிதர்கள் இருந்துகொண்டு  உன்னைப் பழிப்பார்கள்; உன்னை வேதனைப்படுத்துவார்கள்; உன்னைக் குறை கூறி  சிறுமைப்படுத்துவார்கள். *'இவன் ஒரு  கடும்போக்குக்காரன்; தீவிரப்போக்குடையன்!'* என்று என்னென்னமோ எல்லாம் சொல்வார்கள். அல்லது, சிலவேளை வார்த்தைகளோடு மட்டும் அவர்கள் போதுமாக்கிக் கொள்ளாமல் உன்னைக் கொலையும் செய்வார்கள்; அல்லது உன்னை அடிப்பார்கள்; அல்லது உன்னை சிறையிலடைப்பார்கள். என்றாலும், (மறுமையில்) 'ஹவ்ழுல் கவ்ஸர்' எனும் நீர்த்தடாகத்தில் நீரருந்துவதற்கு உனக்கு விருப்பமிருந்தால் நீ பொறுமையாக இருந்துகொள்! நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வழிமுறையை பலமாகப் பற்றிப்பிடித்து நடப்பதன் மூலம் அந்த 'ஹவ்ழுல் கவ்ஸரில்' அவர்களை நீ சந்திக்கின்ற வரைக்கும் பொறுமையாக இருந்துகொள்!”

{ நூல்: 'ஷர்ஹுத் துர்ரதில் முழிய்யா fபீ அகதி அஹ்லில் fபிரகில் மர்ழிய்யா', பக்கம்: 190 }  


         قال العلاّمة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-

         *« ولزوم السّنّة ما هو بالأمر السّهل. فيه إبتلاء وامتحان؛ هناك ناس يعيرونك، ويؤذونك، ويتنقّصونك، ويقولون: هذا متشدّد متنطّع، إلى آخره.... أو ربما أنّهم لايكتفون بالكلام! ربما أنّهم يقتلونك؛ أو يضربونك؛ أو يسجنونك. ولكن اصبر إذا كنت تريد وأن تشرب من هذا الحوض؛ إصبر على التّمسّك بسنّة رسول الله صلّى الله عليه وسلّم إلى أن تلقاه على الحوض »*.

{ شرح الدرة المضية في عقد أهل الفرق المرضية، ص - ١٩٠ }

🔵➖➖➖➖➖➖➖➖🔵

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Previous Post Next Post