எது நல்லதொரு வாழ்க்கை?

- அஷ்ஷைஃக் அப்துல்லாஹ் பின் உஸ்'மான் அத்'தமாரீ ஹஃபிதஹுல்லாஹ்


مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌  

ஆணாயினும், பெண்ணாயினும் ஈமான்கொண்டவராக யார் ஸாலிஹான அமல்களைச் செய்வாரோ, நிச்சயமாக நாம் அவரை நல்லதொரு வாழ்க்கையை வாழச் செய்வோம். (அல்குர்ஆன் 16:97)

சங்கைமிகு வாழ்க்கை, பாதுகாப்பான வாழ்க்கை, கண்ணியமான வாழ்க்கையை (வாழச் செய்வோம்); அதில் எவ்வித இழிவும் கிடையாது, மேலும் அதில் எவ்வித இகழ்வும் கிடையாது. மாறாக, முஃமின்களின் தலைகளை அல்லாஹ் உயர்த்துவான், இம்மையிலும் மறுமையிலும் முஃமின்களின் அந்தஸ்துகளை அல்லாஹ் உயர்த்துவான். மேலும் அவர்களை நல்லதொரு கண்ணியமான வாழ்க்கையை வாழச் செய்வான். 

ஒரு முஸ்லிம் தன்னுடைய சகோதரனான மற்றொரு முஸ்லிமுடன், அவர்கள் ஒரே உள்ளத்துடன் இருப்பது போல் வாழ்வான்; இதுவே நல்லதொரு வாழ்க்கையாகும். இதுவே நல்லதொரு வாழ்க்கையாகும்.

நல்லதொரு வாழ்க்கையென்பது, நேசமானது முஸ்லிம்களின் அணியில் மேலோங்குவதை நீ காணும் பொழுது, மேலும் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொள்வதை நீ காணும் பொழுது (இதனை நீ கண்டு கொள்வாய்). உன்னுடைய சகோதரன் உன்னை நேசிப்பான், உனக்கு உதவுவான், உன்னை ஏமாற்ற மாட்டான், உன் மீது பொய் கூற மாட்டான், உனக்கு மோசடி செய்ய மாட்டான், மேலும் உனக்கு சதி செய்ய மாட்டான். 

மாறாக, தனக்கு விரும்புவதையே உனக்கும் விரும்புவான். இதுவே நல்லதொரு வாழ்க்கையாகும். 

நல்லதொரு வாழ்க்கையென்பது, உன்னுடைய முஸ்லிமான சகோதரனானவன் உனக்கு நெறுக்கடி அளிக்க மாட்டான். உன்னுடைய வீட்டில், உன்னுடைய வியாபாரத்தில், உன்னுடைய செல்வத்தில், மேலும் உனக்கு தேவையுள்ள விடயங்களில் (உனக்கு நெறுக்கடி அளிக்க மாட்டான்). மாறாக, உன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்வதில் முயற்சிப்பான். மேலும் உனக்கு நலவுகளை முழுமைப்படுத்தி தருவதில் முயற்சிப்பான். இதுவே நல்லதொரு கண்ணியமான வாழ்க்கையாகும்.

நல்லதொரு வாழ்க்கையென்பது, நீ உன்னுடைய வீட்டில் நுழையும் பொழுது, அல்லாஹ்வுடைய பேச்சு ஓதப்படுவதை (அன்றி) வேறெதனையும் செவியுற மாட்டாய், அல்லாஹ்வுடைய திக்ர் உயர்த்தப்படுவதை அன்றி வேறெதனையும் செவியுற மாட்டாய், மேலும் நல்லதைத் தவிர வேறெதனையும் செவியுற மாட்டாய். பாவங்களைக் காண மாட்டாய், பாவமான (விடயங்களை) செவியுற மாட்டாய், மேலும் அல்லாஹ்வுடைய ஷரீஅத்திற்கு முரண்படக்கூடியவற்றை செவியுற மாட்டாய், 

இசைகளை செவியுற மாட்டாய், புறம்பேசுதலை, கோள் சொல்தலை, பொய்யை, திட்டுதலை, சபித்தலை (செவியுற மாட்டாய்). இல்லை, இல்லை (இவை எதனையும் செவியுற மாட்டாய்). அல்லாஹ் கூறினான், மேலும் (அவனுடைய) தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் என்பதைத் தவிர வேறெதனையும் செவியுற மாட்டாய். 

நல்லதொரு வாழ்க்கையென்பது, உன்னுடைய பிள்ளையை (நன்மையைக் கொண்டு) நீ ஏவும்பொழுது, அவன் உனக்கு கட்டுப்பட்டு நடப்பான். மேலும் உன்னுடைய பிள்ளை அவனது தேவையைக் குறித்து உன்னிடம் கேட்கும் பொழுது, அவனுக்கு நீ அதனைக் கொடுப்பாய். 

நல்லதொரு வாழ்க்கையென்பது, நீ உன்னுடைய மனைவியைக் கண்ணியப்படுத்தும் போது இருக்கின்றது. மேலும் நீ அவளுடன் நன்முறையில் நடந்து கொள்வதில், அழகான முறையில் நடந்து கொள்வதில், மற்றும் கண்ணியமான முறையில் நடந்து கொள்வதில் (இருக்கின்றது). அந்த உண்மையான முஃமினான பெண்ணிடத்தில் கண்ணியமான முறையில் நடந்து கொள்வதில் (இருக்கின்றது).

நல்லதொரு வாழ்க்கையென்பது, நீ உன்னுடைய மனைவியை (நன்மையைக் கொண்டு) ஏவும்பொழுது, அவள் உனக்கு கட்டுப்பட்டு நடப்பாள். மேலும் நீ அவளை (ஒன்றை விட்டுத்) தடுக்கும் பொழுது, அவள் (அதனை) விட்டு விடுவாள். 

நல்லதொரு வாழ்க்கையென்பது, உன்னுடைய மனைவியானவள் உனது செல்வம், உனது பிள்ளை, மற்றும் உனது வீடு ஆகியவற்றில் உன்னை (உன்து வரம்புகளை) பேணிப்பாதுகாப்பதில் இருக்கின்றது.

நல்லதொரு வாழ்க்கையென்பது, நீ உன்னுடைய மனைவியிடமிருந்து நல்லதையன்றி மற்றும் நல்ல பேச்சையன்றி வேறேதனையும் செவியுறாமல் இருப்பதில் இருக்கின்றது. மேலும், உன் மனைவி(யும்) உன்னிடமிருந்து நல்லதையன்றி மற்றும் நல்ல பேச்சையன்றி வேறேதனையும் செவியுறாமல் இருப்பதில் இருக்கின்றது. இதுவே கண்ணியமான வாழ்க்கையாகும். 

கண்ணியமான வாழ்க்கையென்பது, குடிமக்கள்ளானவர்கள் குர்ஆன், ஸுன்னாஹ்விற்கு ஒத்திருக்கின்ற (முஸ்லிம்) ஆட்சியாளரின் கட்டளைகளுக்கு கீழ்ப்பட்டு நடப்பதில் இருக்கின்றது. மேலும் அவர்கள் அந்த ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ச்சி செய்யாமலும், அவரை (பிறரிடத்தில்) தவறாக சித்தரிக்காமலும் இருப்பதில் இருக்கின்றது.


நல்லதொரு வாழ்க்கையென்பது, ஆட்சியாளர் உம்மத்துடன் கருணையாளராக நடந்து கொள்வதில் இருக்கின்றது; அவர்களின் வலிகளுக்காக அவரும் வலியை உணர்வார், அவர்களின் நலன்களை நிறைவு செய்வதிலும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் முயற்சிப்பார். மேலும் அவர்களை நன்மையைக் கொண்டு ஏவுவார், தீமையை விட்டும் தடுப்பார். 

இதுவே நல்லதொரு, கண்ணியமான வாழ்க்கையாகும். இதன் காரணமாகவே, அகிலத்தாரின் இறைவனானவன் நாம் ஸாலிஹான அமல்கள் செய்தால் நல்லதொரு வாழ்க்கையை வாழ வைப்பதாக நமக்கு வாக்களித்துள்ளான். 

🔗 https://youtu.be/O1VCYOd5z6Y?si=VIxUgFOOqlc8Svqa 

அரபியுடன் வாசிக்க: 
https://docs.google.com/document/d/1OBDAHgJdyd6BZ2W7WvNrNqMf1r_HcQ1DMgWFHDsupI8/pub 

மேலும் பல மொழிபெயர்ப்புகளைக் காண:
t.me/salafimaktabahmpm 

- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.

Previous Post Next Post